சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள்
சாளுக்கியர்கள்:
- இந்தியாவின் தெற்கு பகுதி, தக்காணம் (அ) தட்சிணபதம் என்றழைக்கப்படுகிறது.
- விந்திய சாத்பூர மலைத்தொடர்களும் நர்மதை தபதி ஆறுகளும், வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கிறது.
- இடைக்காலத்தில் (கி.பி 6 -9) தக்காணத்தில் ஆட்சியை ஏற்படுத்தியவர்கள் சாளுக்கியர்களும் இராஷ்டிரகூடர்களும்.
சாளுக்கியர்கள்: (கி.பி 6-12 நூற்றாண்டு) கி.பி 543 – 755
- இவர்களது ஆட்சிக் காலத்தை 3 வகையாக பிரிக்கலாம்.
1. முற்கால மேலை சாளுக்கியர்கள் கி.பி 6 – 8 நூற்றாண்டு
2.பிற்கால மேலை சாளுக்கியர்கள் கி.பி 10 – 12 நூற்றாண்டு
3. கீழை சாளுக்கியர்கள் கி.பி 7-12 நூற்றாண்டு
சான்றுகள்:
கல்வெட்டுச் சான்றுகள்:
1) மங்கசோசனின் “வாதாபி” குகைக் கல்வெட்டு
2) பட்டாடக்கல், விருபாக்ஷர் கோயில் கல்வெட்டு
3) ஐஹோல் கல்வெட்டு ரவி கீர்த்தி (சாளுக்கிய பல்லவ மோதல்களை பற்றி கூறும் கல்வெட்டு)
4) சமுத்திர குப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு
5) பரமேஸ்வர்மனின் கூரம் செப்பேடுகள்(பல்லவர்கள்)
6) 3 -ம் தந்திவர்மனின் வேலூர் பாளையம் செப்பேடுகள்
7) காஞ்சி கைலாசநாதர் கோயில் கல்வெட்டு
இலக்கியச் சான்றுகள்:
1) கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூலான – கவிராஜ மார்க்கம் (அமோக வர்ஷா)
2) பம்பா எழுதிய -1) பம்பா பாரதம்
2) விக்ரம சேன விஜயம் (விக்ரமார்ஜினவிஜயம்)
3) நன்னையா தெலுங்கு மொழியில் எழுதிய மகாபாரதம்
4) வைணவ ஆழ்வார்களின் பாடல்களின் தொகுப்பான நாலாயிர திவ்ய பிரபந்தம்.
5) தேவாரம், திருவாசகம் (மாணிக்கவாசகர்), பெரிய புராணம் (சேக்கிழார்)
6) பில்கனார் எழுதிய விக்ரமாங்க சரிதம்.
7) அரபுநாடுகளை சேர்ந்த புளியியலாளர்களான சுலைமான், அல்மசூதி, இபின்கால்கா போன்றோர்களின் பயணக்குறிப்புகள்
8) யுவான்சுவட இட்சிங் பயணக் குறிப்புகள்.
முற்கால மேலை சாளுக்கியர்கள்: (கி.பி 543-755)
- தலைநகர் வஊதாவி, தற்போது பதாமி என்றழைக்கப்படுகிறது.
- முற்கால மேலை சாளுக்கிய மரபை தொடங்கியவர் – முதலாம் புலிகேசி.
முதலாம் புலிகேசி (கி.பி 543 – 566)
- இவர் கர்நாடக மாநிலம், பிஜப்பூர் மாவட்டம். பட்டாடக்கல்லின் குறுநில மன்னராக இருந்தார்.
- கடம்பர்களின் மேலாதிக்கத்தின் கீழிருந்த அவர் தன்னை சுதந்திர அரசராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
- கி.பி 543 -ல் வாதயி் மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றினார்.
- கிருஷ்ண லுங்கபத்ரா நதிகளுக்கிடைப்பட்ட பகுதியையும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையும் கைப்பற்றினார்.
- இவர் அஸ்வமேதயாகம் (குதிரை பலியிடும் யாகம்) நடத்தினார்.
- மனுசாஸ்திரம், இதிகாசம், புராணங்களில் சிறந்து விளங்கினார்.
1-ம் கீர்த்தி வர்மன் (கி.பி 566 – 597)
- இவரை கீர்த்தி ராஜா என்றும் அழைப்பர்
- “வாதாபி” தலைநகருக்கு அடித்தளமிட்டவர்.
- கொங்கண கடற்கரை பகுதியைச் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
மங்களேசன்:
- 1-ம் கீர்த்திவர்மனின் சகோதரர் ஆவார்.
- வாதாபி குகை கல்வெட்டு இவருடைய காலத்தை சார்ந்தவை
இரண்டாம் புலிகேசி (கி.பி 610 -641)
- இவரது தந்தை 1- ம்கீர்த்ததிவர்மன்
- தனது சித்தப்பாவான மங்களேசனை தோற்கடித்து பின்னர் அரசராக பதவியேற்றுக் கொண்டார் C
- சாளுக்கிய அரசர்களில் மிகச்சிறந்தவர்.
- இவரது சாதனைகளை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு – ஐஹோலே கல்வெட்டு
ஐஹோல் கல்வெட்டு:
- இக்கல்வெட்டை தொகுத்தவர் – ரவி கீர்த்தி (சமணர்)
இவர்-ம் புலிகேசியின் அவைக்களப் புலவர் ஆவார்.
- கர்நாடகா மாநிலத்தில் மேகுதி -சமணக் கோயில் உள்ளது.
இக்கோயிலின் கிழக்கு சுவரில் 19 வரிகளைக் கொண்ட சமஸ்கிருத கல்வெட்டு உள்ளது (சகவருடம் 556, கி.பி 634 635 காலத்தைச் சார்ந்தது)
- 2 -ம் புலிகேசி இக்கல்வெட்டை சத்யஸ்ராய் (உண்மையின் உறைவிடம்) என்று குறிப்பிடுகிறார்.
2 – ம் புலிகேசி ஹர்ஷவர்தனை தோற்கடித்ததை கோடிட்டு இக்கல்வெட்டு காட்டுகிறது.
வெற்றிகள்:
- வனவாசி கடம்பர்கள், தவக்காடு (மைசூர்) கங்கர்களுக்கு எதிராக போர் தொடுத்தார்.
- கங்க அரசன் ‘’துர்விந்தன்” இவரது மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தன் மகளையும் 2-ம் புலிகேசிக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
- தெற்கு பகுதியில் பல்லவ மன்னன் 1- ம் மகேந்திரவர்மனை கி.பி 620 – ல் புல்லலூர் (காஞ்சி) என்னுமிடத்தில் தோற்கடித்து, காவிரி நதியை கடந்து சேர. சோழ பாண்டியர்களிடம் நட்பை ஏற்படுத்தினார்.
- கி.பி 624 ல் வெங்கியை (தற்கால ஆந்திரம்) கைப்பற்றி விஷ்ணு வர்தனுக்கு (கீழை சாளுக்கிய முதல் அரசர்) வழங்கினார்.
- கி.பி 637 -ல் நடைபெற்ற நர்மதை நதிக்கரை போரில் ஹர்ஷரை தோற்கடித்தார். வெற்றிக்கு பின் பின் 2 -புலிகேசி “பரமேஸ்வரன்” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
கி.பி 642 ல் மணிமங்கலம் போர்:
- 2- ம் புலிகேசிக்கும் பல்லவ அரசன் 1-ம் நரசிம்மவர்மனுக்கும் இடையே நடந்த போரில் புலிகேசி தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் வாதாபி நகரம் தீக்கரையாக்கப்பட்டது.
2-ம் புலிகேசியின் அவைக்கு வருகை புரிந்தோர்:
1) சீனப்பயணி – யுவான் சுவாங்
2) பாரசீக (ஈரான்) அரசன் # ம் குஸ்ரு தனது தூதுக்குழு ஒன்றை புலிகேசியின் அவைக்கு அனுப்பினார்.
2-ம் விக்ரமாதித்யன்:
- பல்லவ அரசர் பரமேஸ்வர்மனை தோற்கடித்தார்.
- இவர் காலத்தில் தான் விருபாக்ஷர் ஆலயம் கட்டப்பட்டது.
- இவருடைய இரண்டு அரசிகள்
1) லோகமாதேவி
2) திரைலோக்யமகாதேவி
- வாதாபி சாளுக்கிய வம்சத்தின் கடைசி அரசர் -11 -ம் கீர்த்திவர்மன்
இவரை ராட்டிடகூட வம்ச அரசர் தந்திதுர்கர் தோற்கடித்தார்.
பிற்கால மேலை சாளுக்கியர்கள்: கி.பி 10 -12
- தலைநகர் கல்யாணி (முதல் தலைநகர் மான்யகேடா)
- தோற்றுவித்தவர் -2-ம் தைலப்பா
- இவர் ராட்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தார்.
- கி.பி 973 ல் மாளவ அரசர் பரமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார்.
- ராட்டிட கூட மரபின் கடைசி அரசரான ம் கார்கா வை தோற்கடித்தார்:
சத்யாசிராயா (கி.மி 997-1008)
- 2-ம் தையப்பாவின் மகன்
- வெங்கியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போரில் ராஜராஜ சோழன் இவரைத் தோற்கடித்தார்.
1- ம் சோமேஸ்வரன் – 1042-1068
- தலைநகரை மன்யகேடாவிலிருந்து “கல்யாணிக்கு மாற்றியவர்.
- இவர் ஆட்சியின் பொழுது பேரரசு வேகமாக வளர்ச்சி பெற்றது.
6 -ம் விக்ரமாதித்யன் (கி.பி 1076-1127)
- இவர் ஆட்சி காலத்தில் வடக்கே நர்மதை ஆற்றுக்கும் தெற்கே காவிரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் வந்தது
- கடைசி அரசன் 4 – ம் சோமேஸ்வரன்
கீழை சாளுக்கியர்: கி.பி 7-12
- தலைநகர் – வெங்கி (தற்கால ஆந்திரம்)
- நிறுவியவர் – விஷ்ணுவர்தன் (11 ம் புலிகேசியின் சகோதரர்
- இவர்கள் மேலை சாளுக்கியர்களிடம் இருந்து தனித்து ஆட்சி செய்தவர்கள்.
- சோழப்பேரரசுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தவர்கள்.
- இத்திருமண உறவின் மூலம் பிறந்த வாரிசு 1ம் குலோத்துங்கசோழன்
- கீழை சாளுக்கிய நாட்டினை சோழ நாட்டுடன் இணைத்து சோழ நாட்டின் மன்னரானவர் -1ம் குலோத்துங்க சோழன்.
சாளுக்கியர் கால நிர்வாகம்
- அரசரே அனைத்து நிர்வாகத்தின் தலைவர் ஆவார்.
- அரசரின் மூத்த மகன் “யுவராஜன் ஆவார்.
- அரசரின் மகன்கள் ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் ராஜாமார்க்கராஜன், ராஜாதித்ய ராஜ பரமேஸ்வரன், மகாசமந்தா என்றும் தங்களை அழைத்துக் கொண்டனர்.
சாளுக்கிய அரசர்களின் பட்டங்கள்
1) மகாராஜன்
2) சத்யசிரயன்
3) ஸ்ரீ பிருத்தி வல்லன்
4)பக்காரன்
5) மகாராஜாதிராஜன்
- அஸ்வமேது, வாஜ்பேய, அக்னிஸ்தோம போன்ற வேள்விகளை அரசர் நடத்தினார் என்று கூறும் செப்பு பட்டயம் ஹிரகடஹள்ளி செப்புப்பட்டயம்.
- சாளுக்கியர் கால அரச முத்திரை – வராகன் (பன்றி)
அமைச்சரவை
1) பிரதான – முதல்வர்
2) மகாசந்தி விக்ரக – வெளி விவகாரத்துறை
3) அமத்யா – வருவாய் துறை
4) சமகர்த்தா – அரசு கருவூல அமைச்சர்.
அரசின் பல்வேறு பிரிவுகள்:
விஷயம் (விஷாயபதி) > ராஷ்டிரம் -> நாடு →கிராமம்
அதிகாரிகள்:
1) விசாயாபதி – அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களை கையாண்டவர்
2) சமந்தா – நில பிரபுக்கள்
3) கிராம்போகி, கிராம்புடா – கிராமஅளவிலான அதிகாரிகள்
4) மகாத்ரா – கிராமத்தின் முக்கிய பிரமுகர்.
மாகாண மாவட்ட நிர்வாகம்.
- விஷ்யாவின் தலைவர் விஷயபதி, விஷயாக்கள் புக்திகளாக பிரிக்கப்பட்டன புக்திகளின் தலைவர் – போகபதி.
கிராம நிர்வாகம்:
- கிராம சுயாட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை.
- கிராம வருவாய் அலுவவர்களாக பணியாற்றியவர் “நல கவுண்ட” ஆவார்.
- கிராம கணக்கர் – கரணா, PSவர் கிராமணி” எனவும் அழைக்கப்பட்டார்.
கிராமத்தில் செயல்பட்ட இரண்டு குழுக்கள்:
1) மகாஜனம் இக்குழுவின் கைகளில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் இருந்தது.
2) மகாபுருஷ் -கிராமத்தில் அமைதியை பாதுகாக்கும் சிறப்பு அதிகாரி
- அரசரால் நியமிக்கப்பட்ட கிராமத்தின் மையப்புள்ளி
1) காமுண்டர்
2) போகிகன்
- சிறு நகரங்களின் அதிகாரிகள்: நகரபதி, புறபதி ஆவார்.
மதம்:
- சைவம், வைணவம் ஆகிய இரு மதங்களையும் ஆதரித்தனர்.
- கங்கை பகுதிகளிலிருந்து பிராமணர்கள் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
- 2-ம் புலிகேசி, மங்களேசன், கீர்த்திவர்மன் ஆகியோர் வேள்விகளை நடத்தினர்.
அவர்கள் பரம வைஷ்யண, பரம – மஹேஸ்வர என்ற பட்டங்களையும் சூட்டிக் கொண்டனர்.
- போர் கடவுளான ‘கார்த்திகேயனை வழிபட்டனர்.
- ஆசிவக மதப்பிரிவுகளையும் ஆதரித்தனர்.
- சமண மத மையங்களுக்கு நிலங்களை வழங்கினர்.
- 2-ம் புலிகேசியின் அவைக்களபுலவர் ரவிகீர்த்தி சமணர்.
- 2 – ம் கீர்த்தி வர்மனின் ஆட்சியின் போது சமண மதத்தைச் சார்ந்த கிராம அதிகாரி ஒருவர் “அனெகரி” என்ற இடத்தில் சமண கோயிலை கட்டினர்.
- இளவரசர் கிருஷ்ணா – வின் ஆசிரியர் ‘குண பத்ரா” ஒரு சமணர்
- விஜயாதித்தனின் சமகாலத்து புலவரான புஷ்யபட்டர் ஒரு சமணர்
- “யுவான் சுவாங்” சாளுக்கிய பகுதிகளில் பல பொத்த மையங்கள் இருந்ததாகவும்.
அவற்றில் மகாயான, ஹீனயான பிரிவுகளை பின்பற்றும் 5000 பௌத்தர்கள்
வாழ்ந்ததாகவும் கூறுகிறார்
அரசகுல மகளிர்:
- 1- ம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சா வழியினர் அரச குடும்பத்தை சார்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
- விஜயபத்திரிகா எனும் சாளுக்கிய இளவரசி கல்வெட்டு ஆணைகளை பிறப்பித்துள்ளார்.
கலை, கட்டிடக்கலை:
- கட்டுமான கோயில்களை கட்டுவதற்கு ‘வேசரக் கலைப்பாணியை” பின்பற்றினர்.
- வேசர கலைப்பாணி இராஷ்டிரகூடர் (ம) ஹொய்சாளர் ஆட்சி காலத்தில் உச்சத்தை தொட்டது.
- வேசர கலைப்பாணி என்பது தென்னிந்திய (திராவிட) வட இந்திய (நாகரா) கட்டிட பாணிகளின் கலப்பு ஆகும்.
- சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களை கட்டும் தொழில் நுட்பத்தை அவர்கள் மேம்படுத்தினர்.
- கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.
- கட்டுமானக் கோயில்கள் – ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கல் குடைவரைக் கோயில்கள் – அஜந்தா, எல்லோரா, நாசிக்
வாதாபி:
- வாதாபியில் நான்கு குகைகள் உள்ளன.
- வாதாபியிலுள்ள விஷ்ணு கோயில் மங்களேசனால் கட்டப்பட்டது (578) அடி
- வாதாபியிலுள்ள குகை கோயில்கள் சேஷநாகர் மீது சாய்ந்திருக்கும் விஷ்ணுட விஷ்ணுவின் வராக, நரசிம்ம (பாதி சிங்கம், பாதி மனிதன்) வாமன (குள்ள) அவதாரங்கள் நேர்த்தியான சிற்பங்களாகும்.
ஐஹோல்
- இப்பகுதி 634 ல் உருவாக்கப்பட்டு இடைக்காலத்தில் ஐயாவொளே எனும் வணிக குழுமத்தின் தலைமையிடமக இருந்தது.
- ஐஹோலேயிலுள்ள 70 கோயில்களில் 4 மட்டும் சிறப்பானது
1) லட்கான் கோயில் தூண்களை உடைய மண்டபம்.
வட இந்திய கலைபாணியிலிருந்து வேறுபட்டது. மென்சாந்து மேற்பூச்சை கொண்ட gnoder
2) துர்க்கை கோபில் – ஒரு புத்த சைத்தியம் போல தோற்றமளிக்கும்.
3) ஹிச்சிமல்லிக்குடி கோயில் (துர்க்கை கோயில், செவ்வகவடிவத்தில் உள்ளது)
4) மெகுதி சமணக் கோயில்
விருபாக்ஷர் கோயில்:
- இக்கோயில் பட்டாடக் கல்லில் உள்ளது.
- காஞ்சி கைலாசநாதர் கோயில் போல கட்டப்பட்டது
- இக்கோயில் 2 – ம் விக்ரமாதித்தயன் மனைவி ‘லோகமாதேவி’ யின் ஆணைப்படி கட்டப்பட்டது.
- இக்கோயிலை கட்டிய கலைஞரை இக்கோயிலின் கிழக்கு வாசலிலுள்ள கன்னட கல்வெட்டு இக்கோயிலை கட்டிய கலைஞரை “திரிபுவாசாரியார்” (மூன்று உலகையும் உருவாக்கியவர்) என்று கூறிப்பிடுகிறது.
பட்டாடக்கல்
- இது பண்டைய கிரேக்க ரோமானிய காலத்திலேயே புகழ்பெற்ற தலம்.
- கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- அரச சடங்குகள் நடத்தப்படுவதற்கான இடம்
- இங்கு 10 கோயில்கள் சாளுக்கிய மன்னர்கள் கட்டினர்.
இதில் 4 வட இந்திய கலைப்பாணி, 6 – திராவிட கலைப்பாணி.
- வட இந்திய கலைப்பாணியில் புகழ்பெற்ற கோயில் பாபநாதர் கோயில்.
- பயநாதர் கோயில் விருபாகூர் கோயில் போல அடித்தள கட்டுமானத்தில் கட்டப்பட்ட கோயில்
இக்கோயிலின் கருவறையை உருவாக்கியவர் ரேவதி குவஜா என்று குறிப்பிடப்படுகிறது.
- இக்கோயிலை சுற்றி *இராமாயண கதாப்பாத்திர சிற்பங்கள்* இடம் பெற்றுள்ளன.
- இதனை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
கல்யாணி மேலை சாளக்கியர்களின் கட்டிடக்கலைகள்:
- லக்கண்டி – காசி விஸ்வேஸ்வரர் கோயில்
- குரு வட்டி – மல்லிகார்ஜீன கோயில்
- பகலி – கள்ளேஸ்வரர் கோயில்
- இட்டகி – மகாதேவா கோயில்
ஓவியக்கலை:
- வாகடக பாணியை பின்பற்றினர்.
- அஜந்தாகுகை ஓவியத்தில் பரரீதூதுக்குழுவை 2 -ம் புலிகேசி வரவேற்பது போன்ற காட்சி உள்ளது
- அரசன் மங்களோனால் கட்டப்பட்ட அரண்மனையிலுள்ள ஓவியம் பிரபலமானது. அக்காட்சி நடனநிகழ்ச்சி ஒன்றை அரசு குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் கண்டுகளிப்பதாய் அமைந்துள்ளது.
இலக்கியம்:
- வாதாமியிலுள்ள ஒரு சாளுக்கிய அரசனின் 7 ம் நூற்றாண்டு கல்வெட்டு கன்னட மொழியை உள்ளூர் பிராகிருதம்* அதாவது மக்களின் மொழியென்றும், சமஸ்கிருதத்தை பண்பாட்டின் மொழி என்றும் குறிக்கின்றது.
- ஜெயனேந்திர வியாகரணம் எனும் நூலை எழுதியவர் – புஷ்யபட்டர்.
- 2- ம் புலிகேசியின் தளபதி ஒருவன் “சப்தாவதாரம்” என்ற இலக்கண நூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்
கூரம் செப்பு பட்டயத்திலிருந்து
- கிழக்கு மலையிலிருந்து சூரியனும், சந்திரனும் எழுவதுபோல தனது இன் அரச வம்சாவழியில் தோன்றியவர் நரசிம்மவர்மன்.
- இளவரசர்களின் மகுடங்களுக்கெல்லாம் மணிமகுடம்.
- அவர் தலை எதற்கும் பணிந்தது இல்லை.
- யானைப் படையை எதிர்த்து விரட்டிய சிங்கம் நரசிம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட தோற்றமுடையவர்.
- சோழர், சேரர் களப்பிரர், பாண்டியரை மீண்டும் மீண்டும் தோற்கடித்துள்ளார்
- அவர் ஆயிரம் கரமுடையான் (ஆயிரம் கரமுடைய காத்தவராயன் போல) நூற்றுக்கணக்கான போர்களில் 1000 கரங்கள் கொண்டு போரிட்டது போல் செயல்பட்டார்.
- பரியாலா, மணிமங்கலம், சுரமாரா போர்களில், வெற்றிச் சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும், புலிகேசியின் முதுகில் பொறித்து புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.
- குடமுனி (அகத்தியர்) அரக்கன் “வாதாபியை” அழித்தது போல் வாதாபி நகரை அழித்தார்.
இராஷ்டிரகூடர்கள் (கி.பி 753 – 975)
- வட இந்தியாவில் இருந்த இரத்தோர்களின் வழிவந்தோரே இராட்டிரகூடர்கள் ஆவர்.
- தாய்மொழி – கன்னடம்
- இராஷ்டிரகூடர் எனும் சொல்லிற்கு இராட்டிரம் என்னும் (நாடு) சிறிய பகுதியை ஆளும் உரிமை பெற்றவர்கள் என பொருள்.
- இவர்கள் முற்கால மேலை சாளுக்கியர்களிடம் இராட்டிர அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள்.
- தலைநகர் “மால்கெட் (அ) மான்ய கேதம்”
- தக்காணத்தில் முதன்மை அரசை உருவாக்கியவர்கள் இராஷ்டிரகூடர்கள்.
தந்தி துர்க்கர் (கி.பி 753-756)
- இராட்டிரகூட மரபை தோற்றுவித்தவர்.
- பிராரில் ஒரு சிறிய பகுதியை ஆண்டு வந்த தந்தி துர்க்கர் – விக்ரமாதித்யனின் மறைவிற்கு பின்னர் தன் அரரை சுற்றியுள்ள பகுதிகள் மீது படையெடுத்து அவற்றை தனது அரசுடன் இணைத்துக் கொண்டார்.
- கி.பி 742- எல்லோராவைக் கைப்பற்றினார்.
- ஸ்ரீ சைலம் (கர்னூல்) நாட்டை ஆண்ட சோழர்களை அடிமைப்படுத்தினார்
- கி.பி 750 -ம் ஆண்டு மத்திய (ம) நெற்கு குஜராத் பகுதியிலும் மத்திய பிரதேசம், பிரார் ஆகிய பகுதிகளிலும் தன் ஆதிக்கத்தை நிறுவினார்.
- தந்திதுர்கர் கிபி 750 ல் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டாரி பல்லவ மன்னன் -ம் நந்திவர்மனுக்கு அவரின் மகளான ரேவா வை திருமணம் செய்து வைத்தார்.
- தான் நிறை செலுத்தி வந்த மேலை சாளுக்கிய மன்னர் 11 -ம் கீர்த்திவர்மனை தோற்கடித்து கிபி 753 – ல் தக்காணத்தில் நிலையான அரசினை ஏற்படுத்தினார்.
- இராஷ்டிரகூட பேரரசு வடக்கே நாசிக் வரை பரவி இருந்து.
- கி.பி 756-ல் தந்தி துர்கர் மரணம்.
தந்திதுர்கரின் பட்டப்பெயர்கள்:
1) மகாராஜாதிராஜ
2) பரமேஷ்வார்
3) பரமபட்டாரகள்
முதலாம் கிருஷ்ணர் (கி.பி 756 3-775)
- தந்தி துர்கரின் சித்தப்பா
- மைசூரை ஆண்ட கங்கர்களையும், வெங்கி சாளுக்கியரையும் வென்றார்.
- எல்லோராவில் பெரிய பாறையை குடைந்து ஒரே கல்லாலான கைலாச நாதர் ஆலயத்தை அமைத்தார்.
மகன்கள்
- 2 – ம் கோவிந்தன் கி.பி 775 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். கீழை சாளுக்கியர்களை தோற்கடித்தார்.
- துருவன்
துருவன் (கி.பி 780 – 794)
- தனக்கு தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
- மேலை கங்கர் அரசனை தோற்கடித்த பின்னர் பல்லவ அரசன் நந்திவர்மனை தோற்கடித்தார்.
- தெற்கில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிய பிறகு கன்னோசியை சுற்றியுள்ள பகுதிகள் மீது தன் கவனத்தை திருப்பினர்.
- “பிரதிகார வம்சத்து அரசர் வாத்சர்யர்பாலர் வம்சத்து அரசர் தர்மபாலர் என இருவரையும் தோற்கடித்தார்.
- இவரது காலத்தில் இராஷ்டிரகூட பேரரசு புகழின் உச்சத்தை அடைந்தது.
மூன்றாம் கோவிந்தன் (கி.மி 794 – 814)
- பல்லவ மன்னன் தண்டிவர்மனை தோற்கடித்தார்.
- வெங்கியை ஆண்ட விஷ்ணுவர்த்தனர். இவரது தாய் வழிப்பாட்டனாக இருந்ததால் இவரின் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. செலுத்துபவராக ஆனார். தக்காணத்தில் தனி ஆதிக்கம்
முதலாம் அமோக வர்ஷர் (கி.பி 814 – 878)
- இராட்டிட கூட அரசர்களில் தலைசிறந்தவர் -அமோக வர்ஷர்
- மூன்றாம் கோவிந்தனின் மகன்.
- முதல் 20 ஆண்டுகள் மேலை கங்கர்களுடன் போர் நீடித்தது. கங்க இளவரசர் ஒருவருக்கு அமோகவர்ஷர் தன் மகளை திருமணம் செய்து கொடுத்ததின் மூலம் அப்பகுதியில் அமைதி திரும்பியது.
- புரோச் அவர்களின் துறைமுகமானது.
- அமோக வர்ஷர் கலை இலக்கியத்திற்கு ஆதரவளித்தார்.
1) திகம்பர ஆச்சார்யரான ஜீனசேனர் (அமோகவர்ஷரின் சமயகுரு)
2) சமஸ்கிருத இலக்கண ஆசிரியரான சகடயானர்.
3) கணித மேதையான – மஹாவீராச்சார்யார் ஆகியோருக்கு ஆதரவளித்தார்.
அமோகவர்ஷரால் எழுதப்பட்ட இரண்டு நூல்கள்
1) “கவிராஜ மார்க்கம் கன்னட மொழியில் எழுதப்பட்ட முதல் கவிதையியல் நூல்.
2) ‘பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும் இயற்றினார்.
- இராஷ்டிர கூடர்களின் தலைநகரான “மால்கெட் (அ) மான்யகேதம்” என்ற நகரை நிர்மானித்தவர் இவரே.
இரண்டாம் கிருஷ்ணர் (கி.பி 880 – 912)
- கி.பி 916 ல் வல்லம் (தற்போதைய திருவல்லம், வேலூர் மாவட்டம்) போர்களத்தில் பராந்தக சோழனால் தோற்கடிக்கப்பட்டார்.
3 -ம் கிருஷ்ணர் (கி.பி 939 – 968)
- ராட்டிரகூட வம்சத்தின் திறமையான கடைசி அரசர் ஆவார்.
- தனது மைத்துனர் புதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார்.
- கி.பி 943 -ம் ஆண்டு காஞ்சிபுரம், தஞ்சாவூர் கைப்பற்றப்பட்டன.
ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலமும் இவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
தக்கோலம் போர் (கி.பி 949)
- தக்கோலம் எனும் ஊர் தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
- “திருவுறல்” என்ற பெயரும் அதற்குண்டு. (தண்ணீர் வற்றாமல் ஊற்றிக் கொண்டே இருக்கும்)
- இராட்டிர கூட மன்னர் 3 – ம் கிருஷ்ணர் Vs சோழ மன்னன் 1 – ம் பராந்தக சோழன் இடையே ‘தக்கோலப் போர்” (949)
- கி.மி 949 – ல் நடைபெற்ற இப்போரில் சோழப்படைக்கு தலைமை தாங்கிய 1 – ம் பராந்தக சோழனின் மகன் இராசதித்தனை தோற்கடித்து 3 -ம் கிருஷ்ணர் வென்றார்.
- இராஷ்டிரகூட படைத்தலைவன் “புதுகன் ராசாதித்தன் அமர்ந்திருந்த யானையின் மேல் துள்ளியேறி இராசாதித்தனை கத்தியால் குத்தி கொன்றார்.
- 3 – கிருஷ்ணன் தெற்கே இராமேஸ்வரம் வரை தம் படையை கொண்டு சென்று அங்கு “கிருஷ்னேஸ்வரர்” ஆலயத்தை கட்டினார். தக்காணம் முழுவதும் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பிறகு வடக்கே கன்னோசியை கைப்பற்றும் -ம் கிருஷ்ணரது எண்ணம் தோல்வியிலே முடிந்தது.
பட்டப்பெயர்கள்:
1) காஞ்சி கொண்டான்
2) தஞ்சை கொண்டான்
இரண்டாம் கார்கா (கி.பி 972 – 973)
- இராஷ்டிர கூடர்களின் கடைசி அரசர்.
- இவர் கல்யாணியை ஆண்ட சாளுக்கிய அரசர் “இரண்டாம் தைலப்பா” என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.
இராஷ்டிரகூடர்களின் சிறப்புகள்:
ஆட்சிமுறை:
- இராஷ்டிரகூட பேரரசு ராஷ்டிரம் (எ) மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இவற்றை “ராஷ்டிரபதிகள்”நிர்வகித்தனர்.
- ராஷ்டிரங்கள் பல விஷயங்களாக (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டது.அவற்றை விஷயபதி நிர்வகித்தார்.
- அடுத்த ஆட்சி பிரிவு “புக்தி” இதில் 50 முதல் 70 கிராமங்கள் இருந்தன. புக்தியின் ஆட்சியாளர் போகபதி ஆவார்.
சமயநிலை:
- சைவமும் வைணமும் செழித்து வளர்ந்தன.
- சமணசமயமும் எழுச்சி பெற்றிருந்தது.
- தக்காணத்தின் மக்கள் தொகையில் 1/3 சமணர்கள்.
- பிஜப்பூர் மாவட்டத்திலுள்ள “சாலடோகி” என்ற இடத்தில் ஒரு கல்லூரி செயல்பட்டது.
- ஹிரண்ய கர்பம், துலாதானம் போன்ற இந்து சமய விழாக்கள் கொண்டாடப்பட்டன.
- தந்தி துர்கர் உஜ்ஜைனியில் ஹிரண்ய கர்ப சடங்கை நடத்தினார்.
- துலாதாணம் என்பது கோயில் தெய்வங்களுக்கு தராசில் எடைக்கு எடை தங்கம் அளிப்பதாகும்.
- பௌத்த மதம் வழக்கொழிந்து விட்ட நிலையில் அதன் முக்கியமான மையம் கன்கேரி என்ற இடத்தில் மட்டுமே இருந்தது.
பொருளாதார நிலை:
- விளைநிலத்திற்கு வருவிக்கப்பட்ட வரி உத்தரங்கம்” என்றழைக்கப்பட்டது. இது விளைச்சலில் பங்கு வருவிக்கப்பட்டது.
- சுவர்ணா திரம்மா என்ற தங்க நாணயத்தையும், வெள்ளி நாணயத்தையும் வெளியிட்டனர்.
இராட்டிடகூடர்களின் கலைப்பாணி:
- இராட்டிர கூடர்களின் கலை, கட்டிடக்கலையை “எல்லோரா (ம) எலிபண்டாவில்” காணலாம்.
- கைலாசநாதர் கோயில் – எல்லோரா (மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபஅருகில்) இக்கோயிலை கட்டியவர் – முதலாம் கிருஷ்ணர்.
- ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் தக்காணப் பாறைப்படிவு எனப்படும் எரிமலை பாறை உருவாக்கங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது.
- விருபாகூர் (ம) மாமல்லபுர கடற்கரை கோயிலின் சாயிலில் கட்டப்பட்டதாகும்.
- இக்கோயில் 60,000 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது.
- கோபுரத்தின் உயரம் 90 அடியாகும்.
- திராவிடக் கட்டிடகலை கூறுகளை கொண்டுள்ளது.
சிற்பங்கள்:
1) தசாவதார பைரவர்
2) ராவணன் மலையை அசைப்பது
3) நடனமாடும் சிவன்
4) விஷணுவும், லட்சுமியும் இசையில் லயித்திருப்பது போன்ற சிற்பங்கள் சிறந்த சான்றுகளாகும்.
எலிபெண்டா தீவு
- அத்தீவின் இயற்பெயர் – ஸ்ரீ
- உள்ளூர் மக்களால் “களரபுரி” என்றழைக்கப்படுகிறது.
- எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும்.
- இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ட போர்ச்சுகீசியர் இத்தீவிற்கு
- எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர்.
- எலிபெண்டா குகையிலுள்ள திருமூர்த்தி (3 முகங்கள் கொண்டது) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும். 25 அடி கொண்ட இச்சிலை மார்பளவு கொண்டது.
- கோவிலின் நுழைவாயிலிலுள்ள துவார பாலகர்களின் சிலை நமது கண்ணை சுவர்பலை.
பட்டாக்கல்
- இங்குள்ள சமணர் நாராயணர் கோவிலும், காரி விஸ்வேஸ்வரர் கோவிலும் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது
- எல்லோராவில் 1ம் அமோக வர்ஷரின் காலத்திய 5 சமண கோயில்கள் உள்ளன.
அரச முத்திரை:
1) விஷ்ணுவின் வாகனமான கருடன்
2) யோக நிலையில் அமர்ந்த சிவன்
ஹிரண்ய கர்ப்பம்:
- தங்க கருப்பை என்று பொருள்
- சாதவாகன வம்சத்து அரசரான *கௌதமபுத்திர சதகர்ணி* சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்ய கர்ப சடங்கை நடத்தினார்.
- மதக்குருக்கள் விரிவான சடங்கை நடத்திய பின்னர் தங்கத்தாவான கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் மேலுலக ஆற்றல் கொண்ட உடலை பெற்றவரக மறுபடியும் பிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார்.
- தந்தி துர்கர் ஹிரண்ய கர்ப்ப சடங்கை “உஜ்ஜைனியில் நடத்தினா
——————————————————————–
நன்றி வணக்கம்……….