சிந்துவெளி நாகரிகம்
- வரலாற்றின் தந்தை – ஹெரடோடஸ் (கிரேக்கம்)
- வரலாறு என்ற சொல் “இஸ்டோரியா” என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்”
- நாகரிகம் என்ற வார்த்தை இலத்தீன் மொழிச்சொல்லான “சிவிஸ்” என்பதலிருந்து வந்தது. இதன் பொருள் நகரம்’ ஆகும்.
உலகின் பழமையான நான்கு நாகரிகங்கள்:
- மெசபடோமியா நாகரிகம் – கி. மு. 3500-2000
- சிந்துவெளி நாகரிகம்- கி. மு. 3300-1900
- எகிப்து (அ) நைல் நாகரிகம் – கி.மு.3100-1100
- சீன நாகரிகம் (மஞ்சள் நாகரிகம்) – கி.மு. 1700-1122
இந்நாகரிகங்கள் அனைத்தும் நதிக்கரை நாகரிகங்களாகும்.
சிந்துவெளி நாகரிகம் (அல்லது) ஹரப்பா நாகரிகம்:
- இந்தியாவின் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் – சிந்து நாகரிகம்
- இந்நாகரிகத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி ஹரப்பா என்பதால் சிந்துவெளி நாகரிகத்தை ஹரப்பா நாகரிகம் என்றும் அழைப்பர்.
கால வரையரை:
- புவி எல்லை – தெற்கு ஆசியா
- காலப்பகுதி – வெண்கலகாலம்
- காலம் – கி.மு. 3300- 1900
- பரப்பு – 13 லட்சம் சகி.மீ (அ) 15 லட்சம் ச.கி.மீ
- நகரம் – 6 பெரிய நகரங்கள்
- கிராமங்கள் – 200 க்கும் மேல்
- இந்நாகரிகம் – 4700 ஆண்டுகள் பழமையானது.
கதிரியக்க கார்பன் வயது கணிப்புமுறை:
- கார்பனின் கதிரியக்க ஐசோடோப்பு ஆன கார்பன் 14 – ஐப் பயன்படுத்தி ஒரு பொருளின் வயதைக் கண்டறியும் முறை கதிரியக்க கார்பன் முறை அல்லது கார்பன் 14 முறை என்று அழைக்கப்படுகிறது.
- கார்பன் 14 காலக் கணக்கிடும் முறையை உருவாக்கியவர் – வில்லர்ட் லிப்பி
- மரங்களின் உள்வெட்டு தோற்றத்தின் எண்ணிக்கையில் வயது கணிக்கும் முறை டெண்ட்ரோ முறையாகும்.
கால அடிப்படையில் ஹரப்பா நாகரிகத்தின் மூன்று பிரிவுகள்:
- தொடக்க கால ஹரப்பா – (கி. மு. – 3000-2600)(அ) 3300-2600)- அம்ரி- கோட்டிஜி (கிராம வாழ்க்கை)
- முதிர்ச்சி அடைந்த ஹரப்பா – (கி.மு. 2600 – 1900) – ஹரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கன் (நகர வாழ்க்கை)
- பிற்கால ஹரப்பா (கி.மு. 1900 – 1700) – லோத்தல் (அழியத் தொடங்கியது)
சிந்துவெளி நாகரிக எல்லைகள்:
- மேற்கு – பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள “சட்காஜென்டோர்* (அ) பாகிஸ்தானில் உள்ள மக்ரான் கடற்கரை
- கிழக்கு – உத்திரபிரதேசத்தில் உள்ள ஆலம்கீர் (அல்லது) காகர்-ஹாக்ரா நதிப்பள்ளதாக்கு வரை
- வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஷார்டுகை
- தெற்கு – மகாராஷ்டிரத்தில் உள்ள டைமாதபாத்
திட்டமிடப்பட்ட நகரங்கள்:
1 ) ஹரப்பா – பஞ்சாப், பாகிஸ்தான் – ராவிநதி
2) மொகஞ்சதாரோ –
சிந்து, பாகிஸ்தான் – சிந்துநதி
3) தோலவிரா – குஜராத்
4) சுர்கோட்டா – குஜராத்
5) லோத்தல் – குஜராத்
6) ராக்கிகார்கி – ஹரியானா
7) பனாவலி – ஹரியானா
8) காலிபங்கன் -ராஜஸ்தான்(காகர் நதி)
9) சாகுந்தாரோ – ராஜஸ்தான் (சரஸ்வதி நதி)
10)ரூபார் – பஞ்சாப் (சட்லஜ் நதி)
11) கோட்டிஜி – ஹரியானா 1955 இல் பசல் அகமது கண்டறிந்தார்.
நாகரிக ஆய்வுகள்
- 1826 இல் ஹரப்பாவிற்கு முதன் முதலில் வருகை புரிந்தவர் சார்லஸ் மேசன் (ஆங்கிலேயர்)
- இவர் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள செங்கல் திட்டை கண்டறிந்தார். மலைமீது உயரமான சுவர்களுடனும், கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளது என்றார்.
- 1831 இல் அம்ரி (ஹரப்பா பண்பாடோடு தொடர்புடைய இடம்) என்ற இடத்திற்கு வருகை புரிந்தவர் – அலெக்ஸாண்டர் பர்னஸ்
- 1853, 1856, 1875 இல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பா பகுதிகளை ஆய்வு செய்தார்.
- இந்திய தொல்லியல் துறையின் தந்தை – அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
- இந்திய தொல்லியல் துறை (ASI- Archaelogical Survey of India) புதுடெல்லியில் 1861 இல் தொடங்கப்பட்டது.
- 1856 – இல் லாகூர் முதல் முல்தான் (அ) கராச்சிக்கு ரமில்பாதை அமைக்கும் பணிகளில் ஹரப்பா சேதப்படுத்தப்பட்டது. இங்கு கன்னிங்ஹாம் க்கு ஒரு முத்திரை கிடைத்தது.
- ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும், அதன் நாகரிகத்தையும் உணர்ந்து அங்குஆய்வு நடத்த காரணமாக இருந்தவர் – சர்ஜான் மார்ஷல்
- 1920 – இல் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களைஆய்வு செய்யத் தொடங்கினார்.
- 1924 இல் ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்கும் இடையேயுள்ள பொதுவான அம்சங்களை கண்டறிந்தவர் – சர்ஜான் மார்ஷல்
- ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் சிறிய வேறுபாடுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
- 1950-க்கு பின் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், ஹரப்பா நாகரிகத்தையும் அதன் இயல்பையும் புரிந்து கொள்ள உதவின.
ஹரப்பா நாகரிக கால அளவு குறித்த தகவல்கள்:
1. சர்ஜான் மார்ஷல் – கி. மு. 3250-2750
2. மார்டிமர் வீலர் – கி.மு 2500-1500
3. T.P. அகர்வால் கி.மு 2300-1750
4. பேசாமல் – கி.மு 2000-1500
ஹரப்பா:
- ஹரப்பா என்ற சிந்தி மொழி சொல்லின் பொருள் – புதையுண்ட நகரம் இந்நகர் பாகிஸ்தான் நாட்டில் ராவி நதிக்கரையில் “மாண்ட்கோமாரி” எனும் இடத்தில் உள்ளது.
- இந்நகரத்தை 1921 இல் தயாரம் சகானி அகழாய்வு செய்தார்.
- ஹரப்பா என்ற வார்த்தையை உருவாக்கியவர் சர்ஜான் மார்ஷல்
- இந்நாகரிகத்தின் முதல் பழமையான நகர்.
- இரண்டாவது பெரிய நகரம் இங்கு இரு வரிசையில் உள்ள 6 தானியக்களஞ்சியங்கள் தானியக்களஞ்சியம் நாகரின் வடப்பகுதியில் உள்ளது.
- C – 37 என்ற சுடுகாடும். H- என்ற சின்னமும் கண்டறியப்பட்டது.
- நாய் மானை துரத்துவது போன்ற வெண்கல சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
மொகஞ்சதாரோ:
- மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழி சொல்லின் பொருள் இறந்தவர்கள் மேடு (அ) இடுகாட்டுமேடு.
இந்நகர் பாகிஸ்தான் நாட்டில் சிந்து நதிக்கரையில் லர்கான மாவட்டத்தில் உள்ளது.
- இந்நகரை 1922 இல் R.D. பானர்ஜி அகழாய்வு செய்தார்.
- 70-அடி உயரமுள்ள மண்மேடே மொகஞ்சதாரோ ஆகும்.
- மொகஞ்சதாரோ சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
- இந்நாகரிகத்தின் பெரிய நகரம் – மொகஞ்சதாரோவாகும்.
நகர அமைப்பின் இரண்டு வகை:
1. உயரமான கோட்டை (அ) சிட்டாடல்
2. தாழ்ந்த நகரப்பகுதி
கோட்டைப் பகுதியில் உள்ள மூன்று முக்கிய கட்டுமானங்கள்
1 பெருங்குளம்
2. தானியக்களஞ்சியம்
3. நகரமன்றம்
பெருங்குளம்:
- மொகஞ்சதாரோவில் உள்ள நீர்க்கசியாத கட்டுமானத்திற்கான பழமையான சான்று.
குளத்தின் அளவு
- நீளம் – 11.8 மீ
- அகலம்- 7.01 மீ
- ஆழம் – 2.43 மீ
- வடக்கு, தெற்கு பகுதிகளில் படிகட்டும். மூன்று புறங்களில் உடை மாற்றும் அறைகளும் உள்ளன.
- சடங்குகள் நடைபெறும் இடமாக இக்குளம் பயன்பட்டிருக்கும்.
- நீர் கசியாமல் இருக்க ஜிப்சம் அல்லது தார்பூசப்பட்ட செங்கற்கள் மூலம் கட்டப்பட்டது. குளத்தின் தரைத்தளம் நீரை உறிஞ்சாமல் இருக்க நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது.
- அருகில் உள்ள கிணற்றிலிருந்து குளத்திற்கு நீர் கொண்டுவரப்பட்டது. உபயோகித்த நீர் வெளியேறுவதற்கும் வழிசெய்யப்பட்டது.
- இங்குள்ள தானியக் களஞ்சியத்தின் அளவு 150 அடி ஆகும்.
- நகர் மன்றம் 4 வரிசையில் 20 தூண்களை கொண்ட பரந்து விரிந்த கூடம் ஆகும்.
- இந்தகர் UNESCO – புரதான சின்னங்கள் பட்டியலில் உள்ளது.
மொகஞ்சதாரோவில் கிடைத்த பொருள்கள்:
1.நடனமாடும் நாட்டிய மங்கையின் வெண்கலச்சிலை
2. கண்ணாம்புக் கல்லினால் ஆன தாடியுடன் கூடிய உருவசிலை (பூசாரி அரசன்)
3. பருத்தியினால் ஆன துணி மற்றும் நுற்புக்கதிர்
4. பசுபதி என்ற சிவனின் முத்திரை
5. வெண்கலத்தால் ஆன போர்வால்
காளிபங்கன்:
- இச்சொல்லின் பொருள் கருப்பு வளையல்.
நகர் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் கார்த் மாவட்டம் காக்ரா நதிக்கரையில் உள்ளது
- 1953-இல் கோஷ் மற்றும் பி.பி காய் கண்டறிந்தனர்.
- உழுத நிலங்களை காளிபங்கனில் காணலாம்.
- பலி பீடகங்கள் உள்ள நகரமாகும்.
கோத்தல்
- சிந்துவெளி நாகரிகத்தின் ‘துறைமுக நகரம்”
உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம் ஆகும்.
- இந்நகர் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் துணை ஆறான போகவா (பாக்குவார்) ஆற்றங்கரையில் உள்ளது
- குஜராத்தி மொழியில் லோத்தல் என்ற சொல்லின் பொருள் இறந்தவர்கள் மேடு
- 1957 -இல் எஸ்.ஆர். ராவ் என்பவர் கண்டுபிடித்தார்.
- ரங்பூர் என்ற இடத்தில் நெல்லை விளைவித்தனர்.
- செயற்கை கப்பல் தளம். இரட்டைச் சவக்குழி. சதுரங்க விளையாட்டு சான்று ஆகியவை இங்கு கிடைத்தன.
- ஹரப்பாவின் இறுதி நிலைக்கு இந்நகரம் உதாரணமாகும்.
சாகுன்தாரோ
- சரஸ்வதி நதியோரம் இராஜஸ்தானில் உள்ளது.
- உலோகத் தொழில் நகரம்.
- 1933 – இல் MG. மஜிம்தார் அகழ்வாராய்ச்சி செய்தார்.
தோலவிரா
- 1967 ல் JB ஜோசி அகழ்ழாய்வு செய்தார்.
- குஜராத் மாநிலம் கபீர் மாவட்டத்தில் உள்ளது.
- நீர் மேலாண்மை நகரம்
- சிந்துவெளி நாகரிகத்தில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட நகரம்.
- இந்தியாவின் 39 வது யுனஸ்கோ பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது
சுகர்கோட்டா (அ) கர்கோட்டா
- குஜராத் மாநிலத்தில் உள்ளது.
- 1964-ல் J.P. ஜோசி அகழ்வாராய்ச்சி செய்தார்.
- ஒட்டகம் வீட்டு விலங்காக வளர்த்ததற்கான சான்று இங்கு கிடைத்துள்ளன.
- இந்நகரில் குதிரைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஹரியானா
- பனவாலி பார்லி பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர் R.S. பிஸ்த்
- ராக்கி கார்கி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது
- இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
ரூபார்
- பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
- ஹரப்பா அல்லாத அதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது.
- 1953-இல் ஒய் டி சர்மா அகழ்வாராய்ச்சி செய்தார்.
நகர அமைப்பு:
- திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டது.
- மேற்குப் பகுதி
1. இங்கு கோட்டை அல்லது சிட்டாடல் இருந்தன.
2. நகர நிர்வாகிகள் வாழ்ந்தனர்
3. பெருங்குளமும், தானியக் களஞ்சியமும் இருந்தன.
- கிழக்குப் பகுதி – அதிக பரப்பு கொண்டது. மக்கள் வாழ்ந்த பகுதி
- நகர தெருக்கள் நேராகவும், அகலமாகவும் இருந்தன. தெருக்கள் சட்டக வடிவமைப்பிலும் செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் உள்ளன.
- பெரிய தெருக்கள், 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 12 அடி அகலமும் கொண்டதாக இருந்தன.
- நகரங்களின் வட பகுதி உயரமாகவும், குறுகலாகவும், கிழக்கு பகுதி விரிந்தும் சற்று தாழ்வாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இந்நகர் அழிந்து மீண்டும் மீண்டும் கட்டப்பட்டுள்ளன. 9 தடவை கட்டப்பட்டு இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
வீடுகள்:
- வீடுகள் கட்டுவதற்கு, சுட்ட செங்கற்களும். சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும், சுண்ணாம்பு சாந்துகளும் பயன்படுத்தப்பட்டது.
- ஓரடுக்கு முதல் ஈரடுக்கு வரை வீடுகள் கட்டப்பட்டன.
- பல அறைகள், குளியலறை, கழிவுநீர் கால்வாய். முற்றம் ஆகியவை ஒவ்வொரு வீடுகளிலும் காணப்பட்டன.
- இங்கு அரண்மனைகளோ, வழிபாட்டு தலங்களோ. இருந்ததை தீர்மானிக்கக் கூடிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
வேளாண்மை/கால்நடை வளர்ப்பு
- முதன்மை தொழில் வேளாண்மை
- கோதுமை, பார்லி மற்றும் நெல், பருத்தி, பலவித திணை வகைகளைப் பயிரிட்டார்கள்.
- இரட்டை சாகுபடி முறையைக் கையாண்டனர்.
- உழவுக்கு கலப்பையை பயன்படுத்தினர்.
- காளிபங்களில் உழுத நிலங்கள் காணப்படுகிறது.
- பாசனத்திற்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினர்
- ஆடு (செம்மறி ஆடு, வெள்ளாடு) மாடு, கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டனர்.
- ஹரப்பா மாடுகள் “ஜெபு” என்றழைக்கப்பட்டன.
- எருமை, பன்றி மான். யானை போன்ற விலங்குகளும் அறிந்திருந்தனர்.
- ஹரப்பா மக்கள் குதிரைகள் பற்றி அறியவில்லை.
தானியங்களஞ்சியம்:
- தானியக்களஞ்சியம் 168 அடிநீளமும். 135 அடி அகலமும் உடையது. தானியக்களஞ்சியத்தின் சுவர்கள் 52 அடி உயரமும், அடி கனமும் கொண்டு இருவரிசைகளாகக்கப்பட்டது. இரண்டு வரிசைகளுக்கு இடைப்பட்ட தூரம் 23 அடி.
உடைகள்:
- பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
- நூலைச் சுற்றி வைப்பதற்கான சுழல் அச்சுகள் மூலம் அவர்கள் நூற்கவும் செய்தனர்.
கைவினைத் தயாரிப்பு:
- பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு முக்கிய பகுதியாகும்.
- செம்பு, வெண்கலம் தங்கம் ஆகிய உலோகங்களாலும், கர்னிலியன் (மணி) ஜாஸ்பர்கிரிஸ்டல் (படிகல்) ஸ்டிடைட் (நுரைக்கல்) சங்கு பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன் செய்தனர்.
மட்பாண்டங்கள்
- சக்கரங்கள் பயன்படுத்தி மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.
மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகள் செய்தனர்.
சுடப்பட்ட மண்பாண்டங்கள் பயன்படுத்தினர்.
- மட்பாண்டங்களில் விலங்குகளின் உருவங்களும், அரசமர இலை, செடி கொடிகள், மீன் செதில்கள், வட்டங்கள் ஒன்றையொன்று வெட்டும்படி குறுக்குநெறுக்கமான கோடுகள், கணித வடிவியல் (ஜியோமதி) கிடைக்கோடுகள் போன்ற ஓவியங்களை கருப்பு நிறத்தில் தீட்டினர்.
- சுட்டக் கலிமண்ணால் உருவ சிலை செய்யும் கலை – “டெரஹோட்ட”
மதகுரு (பூசாரி அரசன் சிலை)
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
- இச்சிலை மாக்கல்லில் (ஸ்டிடைட்) செய்யப்பட்டது.
- நெற்றியில் தலைப்பட்டை வலது கை மேல்பகுதியில் ஒரு சிறிய அணிகலன், காதுகளில் இரு துலைகள் காணப்பட்டன. இடது தோல் பூக்களாலும் வளையல்களாலும், அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலங்கியாலும் மூடப்பட்டுள்ளன. ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்படுகிறது. தலைமுடி, தாடியும்
நடனமாடும் வெண்கல பெண்சிலை (மொகஞ்சதாரோ)
- நடனமாது என்று குறிப்பிடப்படும் இச்சிலையை சர்ஜான் மார்ஷல் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதுகிறார்
- இக்கலையை வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது. என நம்புவதற்கு கடினமாக இருந்தது என்றார்.
ஏனெனில் இது போன்ற சிவை உருவாக்கும் முறை பண்டைய மக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை என்றார்.
- இந்நாகரிக மக்கள் மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் முறையை (வாஸ்ட் வேகஸ்) அறிந்திருந்தனர்.
உலோகக் கருவிகளும் ஆயுதங்களும்
- ஹரப்பா நாகரிகம் – வெண்கல கால நாகரிகமாகும்.
- ரோர்ரி செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள் குஜராத்தின் ‘ஷிகர்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. (ரோர்ரி – பாகிஸ்தானில் உள்ளது)
- தந்தத்தில் செய்த கருவிகள், செம்பினால் செய்த பொருட்களைப் பயன்படுத்தினர்.
- கூர்முனைக் கருவிகள். உளிகள், ஊசிகள், மீன்பிடித்தலுக்கான தூண்டில், தராக குட்டுகள், அஞ்சனை கோல் போன்றவை மக்கள் பயன்படுத்தினர்
- சிந்துவெளி மக்கள் இரும்பின் பயன் அறியவில்லை.
வணிகம் போக்குவரத்து
- சிந்துவெளியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- ஆரக்கால் இல்லாத திடமான சக்கர வண்டிகளை பயன்படுத்தினர்.
- மெசபடோமியாவுடன் கடல் வாணிபம் நடைபெற்றது. (மெசபடோமியா என்பது ஈராக், குவைத், சிரியா ஆகியவகைளைக் குறிக்கும்)
- சுமேரியாவின் அக்காடிய பேராசிற்குட்பட்ட அரசன் “தாரன் சின்” சிந்துவெளி பகுதியிலுள்ள ‘மெறுக்கா எனுமிடத்தில் இருந்து “அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியுள்ளார்.
- மெசபடோமியாவிற்கும், ஹரப்பாவிற்கும் இடையேயுள்ள வணிகத் தொடர்பை கூறும் கல்வெட்டு கியூனிபார்ம் கல்வெட்டு” இக்கல்வெட்டில் காணப்படும் ‘மெலுகா” எனும் சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
- மெசபடோமியா புராணத்தில் மெலுகா” குறித்த கீழ்க்கண்ட வரிகள் உள்ளன.
உங்களது பறவை ஹஜா பறவை ஆகுக அதன்ஒலி அரண்மனையில் கேட்கட்டும் ஹஜா பறவை என்பது “மயிலையே” குறிக்கும் என்று கருதுகின்றனர்.
- ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடிகள் ஓமனில் கண்டெடுக்கப்பட்டது
- 3000 கல் தொலைவு வரை சிந்துவெளி மக்கள் வணிகம் மேற்கொண்டனர்.
மருத்துவம்:
- சிந்துவெளி மக்கள் கண், காது, தொண்டை தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளைச் செய்வதற்கு “கட்டில்” என்ற மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்.
- மான், காண்டா மிருகங்களின் எலும்புகள் பவளங்கள், வேப்பந்தழைகள் ஆகியவற்றை மகுந்தாகப் பயன்படுத்தினர்.
கடவுள்:
- பசுபதி என்ற சிவனை வழிபட்டனர்
பசுபதியை மிருகங்களின் கடவுள் என்றவர் – சர் ஜான் மார்ஷல்.
- அமர்ந்த நிலையில் உள்ள மகாயோகியின் சிலை உள்ளது. இச்சிலையில் 3 முகங்கள்
கொண்ட கடவுள் யோக நிலையில் அமர்ந்துள்ளா
சிலையின் வடப்புறம் – யானை, புவி
சிலையின் இடப்புறம் காண்டாமிருகம், எருமை உருவங்கள் இடம்பெற்றுள்ளது
- தாய் வழிபாடு இருந்தது.
- விலங்குகளின் வழிபாடும் இருத்தன.
- இயற்கை வழிபாடுகள்
1.நீர் வழிபாடு (ஆற்று வழிபாடு)
2.மர வழிபாடு (ஆண்கள் அரசமரத்தையும், பெண்கள் வேப்பமரத்தையும் வணங்கினர்
3 சூரியன், நெருப்பு வழிபாடு (காளியங்களில் நெருப்பு குண்டங்கள் காணப்படுகின்றன.
எடைகள் அளவீடுகள்:
- தரப்படுத்தப்பட்ட எடை அளவீடுகள் உருவாக்கினர்.
- கனசதுர எடைகள், தராசுகளுடன் செம்புத் தட்டுகள் கிடைத்துள்ளன.
- பொருட்களின் நீளத்தை அளவிட அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினர்.
- குஜராத் மாநிலத்தில் 1704 மி.மீ வரை சிறிய அளவீடுகள் கொண்ட தந்தத்திலான அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சமகாலத்திய அளவுகோலில் இதுதான் மிகச்சிறிய அளவு ஆகும்.
- ஈரடிமான எண்முறை (பைனரி) பற்றி தெரிந்து வைத்துள்ளனர். எடைகளின் விகிதம் 1:2: 4 : 8 : 16 : 32 என்று இரண்டிரண்டு மடங்குகளாக அதிகரித்தன. அணிகலன். உலோகங்கள் ஈரடிமான எண்முறையில் எடை போடப்பட்டது.
- 16 இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் 13.63 கிராம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
- இன்றைய அளவீட்டில் 1 இஞ்ச் 175 செமீ ஆகக் கொள்ளும் வீதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியுள்ளனர்.
எழுத்து
- சிந்துவெளி மக்களின் மொழிக்குரிய எழுத்துகளுக்கு “சித்திர எழுத்துக்கள்* (ஹரோகிளிபிக்) என்று பெயர். இவ்வெழுத்துக்களுக்கு பொருள்கள் இன்றளவும் கண்டறியப்படவில்லை
- இந்த எழுத்துக்கள் வலமிருந்து இடமாக ஒரு வரியும், இடமிருந்து வலமாக மற்றொரு வரியும் எழுதப்பட்டன. இம்முறைக்கு ‘போஸ்டிரோபிடன்” முறை என்று பெயர்.
- ஹரப்பா பகுதியிலிருந்து சுமார் 5000 எழுத்துக்களுடைய சிறு எழுத்து தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளன.
- சிந்துவெளி எழுத்து தொடர்கள் சராசரியாக 5 க்கும் குறைவான குறியீடுகளையே கொண்டுள்ளன.
- ரோசட்டா கல்லில் காணப்பட்டது போல மும்மொழிகள் பயன்படுத்தப்படவில்லை.
- கணினி மூலம் பகுப்பாய்வு செய்த ரஷ்ய அறிஞர் யூரி நோரோ சோவ் சிந்துவெளி எழுத்துகள் திராவிட குடும்பம் போன்ற வார்த்தை வரிசையை பெற்றுள்ளன என்கிறார்
- ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை காணலம் என்றவர் – ஐராவதம் மகாதேவன்
- மயிலாடு துறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடரியில் உள்ள குறியீடுகள் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்டவையில் உள்ள குறியீடுகளை ஒத்திருக்கின்றன. என்றவர் – ஐராவதம் மாகதேவன்
- மே 2007 – ம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையில் பூம்புகாருக்கு அருகில் மேலப்பெரும்பள்ளம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு போன்ற குறியீடுகள், மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினை போன்று உள்ளன.
- சிந்துவெளி எழுத்துக்களின் குறியீடுகள் திராவிட ஒற்றைக் குறிப்பு வேர்களுடன் ஒத்துப் போகின்றன என்றவர் – பர்போலா.
- சிந்துவெளி எழுத்துக்கும், திராவிட மொழி எடுத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை கண்டறிந்தவர்கள் – ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன். ஹீராஸ் பாதிரியார். அங்கோபார்போலா, ஹென்றி ஹோல்
- தமிழகத்தில் கீழ்வாலை, குளிச்சுனை, புறக்கல், ஆலம்பாடி, செத்தவளை, நேகனூர்பட்டி ஆகிய இடங்களில் காணப்படும் எழுத்துக்கள் சிந்துவெளி எழுத்துக்களோடு தொடர்புடைய தமிழ் எழுத்துக்கள் ஆகும்.
- தென்பிராமி வடபிராமி எழுத்துக்கள் சிந்துவெளி எழுத்துக்களில் இருந்து வளர்ச்சி பெற்றவைட
- முதல் எழுத்து வடிவம் “சுமேரியர்களால்” உருவாக்கப்பட்டது.
இறந்தவர்களை அடக்கம் செய்தல்:
- புதைத்தல்
- எரித்தல் (எரிந்த உடலின் எஞ்சிய பாகங்களோடு சேர்த்து அவர்கள் பயன்படுத்தி பொருட்களையும், சேர்த்து தாழிகளில் வைத்து புதைப்பது)
- இறந்த உடல்களை ஊருக்கு வெளியில் பறவை. விலங்குகள் உண்ணும்படி லைத்தனர் எஞ்சிய பாகங்களை மண் தாழிகளில் இட்டு புதைத்தனர்.
- இறந்தவர்களை வடக்கு தெற்காக புதைக்கும் பழக்கம் இருந்தது.
- உருண்டை வடிவ ஈமத்தாழிகள் சிந்து வெளியிலும் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தினர்.
- சதி என்ற உடன் கட்டையேறும் வழக்கம் இருந்தற்கான தெளிவான சான்றுகள் இல்லை.
சிந்துவெளி நாகதிகத்தின் முன்னோடி – மெஹெர்கர்
- புதிய கற்கால (தொடக்ககால) மக்கள் வாழ்ந்த ஓர் இடம்.
இது பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இங்குள்ள மக்கள் வேளாண், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர்.
- கி. பி. 7000 ஐ ஒட்டிய காலத்திலேயே நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான சான்றுகள் உள்ளன.
நாகரிகத்தின் வீழ்ச்சி:
- கி.மு. 1900 லிருந்து சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி பெறத் தொடங்கியது.
வீழ்ச்சிற்கான காரணங்கள்:
- சிந்து நதியின் வறச்சி அல்லது வெள்ளப்பெருக்கு.
- அந்நியர்கள் படையெடுப்பு.
- மெசபடோமியா உடனான வணிக வீழ்ச்சி.
- காயநிலை மாற்றம். சுற்றுச்சூழல் மாற்றம், காடுகள் அழித்தல், தொற்றுநோய் தாக்குதல்.
- நாகரிகம் வீழ்ச்சி பெற்றபின் மக்கள் தெற்கு மற்றும் கிழக்குதிசை நோக்கிச் சென்றனர்.
- சிந்துவெளி நாகரிகம் முழுவதும் வீழ்ச்சியடையவில்லை. நகர பண்பாடாக இருந்து கிராமப்பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.
அறிஞர்கள் கருத்து
1. வீலர், கோசாம்பி – ஆரிய படையெடுப்பால் அழிவு
2. வால்டர், பேச்சவர்ஸ் – சுற்றுச்சூழல் பாதிப்பினால் அழிவு
3. HT லேம்பிரிக் – சிந்துநதி போக்கில் மாற்றம் ஏற்பட்டு அழிவு
4. DP. அகர்வால் – வறட்சியால் அழிவு
5. கிருஷ்ணாரெட்டி – பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டதால் நகரை விட்டு வெளியேறினர்.
- சிந்துவெளி நாகரிகம் நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தவர் சர் மார்டிமர் வீoud (பிரிட்டன்). சிந்து வெளி நாகரிகம் எனும் நூலை எழுதியவர் – மார்டிமர் வீலர்
- சிந்துவெளி நகர மக்களின் வாழ்க்கை கூறுகளை குறிப்பிட்டவர் – ‘ஷில்டே”
- சிந்துசமவெளியினர் சுமேரியர்கள் என்றார் – கால்டன் ஷில்டே
- சிந்துசமவெளியினர் பல இனங்களைச் சார்ந்தவர்கள் என்றவர் – டாக்டர் .குகா
- சிந்து சமவெளியினர் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றவர்கள் – மார்டிமர் வீலர். R.D. பானர்ஜி
சிந்துவெளி நாகரிகமும், தமிழ் நாகரிகமும்:
- தென்னிந்திய பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளில் காணப்படும் கோட்டுருவக் குறியீடுகள் சிந்துவெளி எழுத்துக்களை சார்ந்துள்ளன.
- தமிழ்நாட்டில் பெருங்கற்கால அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சிந்துவெளி மக்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
- இரும்பு காலத்தில் சிந்துவெளியின் தொழில் நுட்பங்கள் தென்னிந்தியாவிற்கு வந்தடைந்தன
- தமிழக பண்டைய நகரங்களான கீழடி, அரிக்கமேடு உறையூர் போன்றவை இந்தியாவின் இரண்டாவது நகரமயக் காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றன.
இந்நகரங்கள் சிந்து வெளி நாகரிகத்திலிருந்து பெரிதும் மாறுபட்டன.
சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து சுமார் 1200 ஆண்டுகள் கழித்து உருவானவை.
- இடைக்காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் மக்கள் குழுக்கள் தொடர்ச்சியாக வசித்து ந்தனர்.
- தமிழ்நாட்டின் துறைமுகம் ஆறுகளின் பெயர்கள் இன்றளவும் பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பரவலாக உள்ளன.
- KVT வளாகம் குறிப்பது – கொற்கை, வஞ்சி, தொண்டி
- பாகிஸ்தானில் தமிழ் பெயரில் உள்ள இடங்கள் கொற்கை வஞ்சி. தொண்டி, மதுை உறை, கூடல்கர்.
- பாகிஸ்தானில் உள்ள ஆறுகள் – காவிரியாலா, பொருணை
- ஆப்கானிஸ்தானில் உள்ள இடங்கள் – கொற்கை, பூம்புகார்
- ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகள் – காவிரி பொருண்ஸ்
- யவணர்கள் தமிழ்நாட்டை ‘திரிமினிகே” என்றழைத்தனர்
- பல்லாய அரசன் நந்திவர்மன் தமிழ் அரசர்களை திராவிட மன்னர்கள் என்றழைத்தார்.
- கங்காதேவி எழுதிய “மதுரா விஜயம்” எனும் நூலில் தமிழ்நாட்டை – திராவிட தோம் என்றும், தமிழ் மன்னர்களை – திரமிளா ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் அந்நாளில்
- கிசா பிரமிடு பொ.ஆ.மு 2500 இல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டது.
- உர் ஜிகுராட் – மெசபடோமியா (சுமேரியர் காலம்) உர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்டது.
- அபு சிம்பல் எகிப்து அரசர் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டை கோயில்கள் உள்ள இடம்.
நன்றி வணக்கம் ………..