காந்தியடிகள் காலம்(1920 – 1947)

Share This:

காந்தியடிகள் காலம்(1920 – 1947)

  • பிறந்த ஆண்டு – அக்டோபர் 2, 1869
  • ஊர் – குஜராத்தின் போர்பந்தர்
  • தந்தை – காபா காந்தி
  • தாய் – புத்லிபாய் (வைணவ பக்தை)
  • காந்தியின் தந்தை போர்பந்தரின் திவானாகவும், பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தார்.
  • பள்ளிப் படிப்பை முடித்த பின் காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக 1888 ல் இங்கிலாந்திற்கு கடல்பயணம் மேற்கொண்டார்.
  • 1891 ஜூன் மாதம் இந்தியாவிற்கு திரும்பியவுடன் பம்பாயில் வழக்குரைஞராக பணியாற்றினார்.
  • 1893 ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்கா சென்றார்.

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக இனவெறியை எதிர்க்கொண்டார்.

  • டர்பனில் இருந்து பிரிட்டோரியாவிக்கு ரயில் பயணம் மேற்கொண்ட போது பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
  • காந்தியடிகள் டிரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்களின் குறைகளை நீக்க போராடினார்.
  • தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் 20 ஆண்டுகள் ஈடுபட்டார்.
  • கோபால கிருஷ்ண கோகவேயின் முயற்சியால் காந்தியடிகள் 1915 ஜனவரி 9 இல் இந்தியா திரும்பினார்.
  • தேசிய இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் – காந்தியடிகள்
  • காந்தியடிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்கள் டால்ஸ்டாய் – கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது.

ஜான் ரஸ்கின் – அண்டூ திஸ் லாஸ்ட்

தாரோ – சட்டமறுப்பு

  • ஜான் ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள்

1905 பீனிக்ஸ் குடியிருப்பையும்

1910 ல் டால்ஸ்டாய் பண்ணையையும் நிறுவினார்.

  • காந்தியடிகள் உண்மையின் வடிவமாக சத்யாகிரகத்தை மேற்படுத்தினார்.
  • குடியேற்றம் மற்றும் இன வேறுபாடு போன்ற அகில பிரச்சனைகளுக்காகப் போராட அவர் சத்யாகிரக சோதனைகளை மேற்கொண்டார்.
  • காந்தியின் தென்னாப்பிரிக்க போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் தே விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ் காந்தி ஒப்பந்தத்தின் படி ரத்து செய்யப்பட்டது.
  • காந்தியடிகள் இந்தியா திரும்பியவுடன் நாட்டின் நிலைமையை அறிய நாடு முழுவதும் ஓராண்டு காலம் பயணம் மேற்கொண்டார்.
  • 1916 ல் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
  • காந்தியடிகள் தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்கவில்லை.
  • காந்தியடிகள் தான் சந்தித்த கோபால கிருஷ்ண கோகலே மீது பெரும் மரியாதை கொண்டு அரசியல் குருவாக ஏற்றார்.
  • காந்தியடிகள் அரசியலில் ஈடுபடும் முன் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார்.
  • தமிழக பயணத்தின் போது தான் தமது வழக்கமான ஆடைகளை விடுத்து சாதாரண வேட்டிக்கு அவர் மாறினர்.

சம்பரான் சத்தியாகிரகம் (1917)

  • பீகாரில் உள்ள சம்பிரான் மாவட்டத்தில் தீன் காதியா முறை பின்பற்றப்பட்டது
  • சம்பரான் மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ அவுரிச்செடி) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர்.
  • இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தில் இருபதில் மூன்று பங்கு (3/20) பகுதியில் அவுரிச்செடி பயிரிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • ராஜ்குமார் சுக்லா என்ற விவசாயியின் வேண்டுகோளுக்கிணங்க காந்தியடிகள் சாம்பிரானுக்கு வருகை புரிந்தார்.
  • ராஜேந்திர பிரசாத். மகாருல் ஹக், ஆச்சர்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விசாரணை மேற்கொண்டார்.
  • காந்தியடிகளால் இந்திய மண்ணில் நடத்தப்பட்ட முதல் சத்தியாகிரகம்.
  • சத்தியாகிரகத்தின் அடிப்படை –  உண்மை, அகிம்சை
  • அஹிம்சையும். உண்மையும் கோழைகளின் ஆயுதங்கள் அல்ல, அச்சமற்றவர்களின் ஆயுதம்.
  • நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கர் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக காந்தியடிகள் கூறினார்.
  • ராஜேந்திர பிரசாத்தும், வழக்கறிஞரான பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர்.
  • பின்னர் ஆங்கில அரசு காந்தியடிகளை ஒரு உறுப்பினராக கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைப்படி நீன் காதியா முறை ரத்து செய்யப்பட்டது

  • இண்டிகோ பண்ணையாளர்கள் விவசாயிகள் மீது நடத்திய அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீன்காதியா முறை ரத்து செய்யப்பட்டது.
  • இதற்கான சம்பரான் விவசாயச் சட்டம் 1918 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.

அகமதாபாத் ஆலை போராட்டம் (1918)

  • 1918 ல் அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் 35% ஊதிய உயர்வு கோரிக்கையை ஆதரித்து காந்தியடிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இது இந்திய மண்ணில் காந்தியடிகளின் முதல் உண்ணாவிரதம்.

கேடா சத்யாகிரகம் (1918) (அ) கைரா சத்யாகிரகம்

  • 1918 ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் தொடர்ச்சியான பஞ்சத்தின் காரணமான விவசாயம் பொய்த்தது.
  • மேலும் பிளேக் நோய் பரவிய காரணத்தாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
  • ஆங்கில அரசின் பஞ்சகால விதியின்படி பயிர்சாகுபடி 25% குறைவாக இருந்தால் நிலவரி ரத்துக்கு விவசாயிகள் தகுதி பெறுவர். 
  • ஆங்கில அரசு இவ்விதியை பின்பற்றாததால், விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக உள்ள இந்திய பணியாளர் சங்கத்திடம் உதவி கோரினர்.
  • பின்னர் கேடா மாவட்ட உள்ளூர் விவசாயிகள் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.
  • காந்தியடிகள் ஆங்கில அரசைக் கண்டித்து சாகும்வரை போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தினார்.

பின்னர் இவ்வியக்கத்திற்கு காந்தியடிகள் தலைமை ஏற்றார்.

கேதா சத்யாகிரகம் காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கியது.

  • இப்போராட்டத்திற்கு வழக்கறிஞரான வல்லபாய் பட்டேலும், இந்துலால் நாயக்கும் காந்திக்கு துணை நின்றனர்.

ரௌலட் சட்டம் (1919)

  • அரசுக்கு எதிரான சதி வேலைகளை ஆய்வு செய்வதற்காக சர் சிட்னி ரொலட் என்பவரது தலைமையில் 1917 ல் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரைப்படி 1919 மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.

இச்சட்டத்தின்படி உத்தரவின்றி எவரையும் கைது செய்யவும். விசாரணையின்றி சிறையில் அடைக்கவும் ஆங்கில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

எனவே இச்சட்டம் கறுப்பு சட்டம் என அழைக்கப்பட்டது.

  • இது நாடு முழுவதும் பரவிய தொடக்ககால காலணிய எதிர்ப்பு போராட்டமாகும்.
  • இதே ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம், சத்தியாகிரக சபை தோற்றுவிக்கப்பட்டது.
  • இச்சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் 1919 ஏப்ரல் 6 ல் சத்தியாகிரகம் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.
  • காந்தியடிகளால் நிறுவப்பட்ட சத்தியாகிரக சபை இச்சட்டத்தை மீறுவது என முதன் முதலாக உறுதி ஏற்றது.
  • காந்தியடிகள் மேற்கொண்ட முதல் அகில இந்திய போராட்டம் ரௌலட் சத்தியாகிரகம், இப்போராட்டம் மூலம் காந்தியடிகள் தேசிய தலைவரானார்.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் அமிர்தசரஸ், லாகூரில் தீவிரமடைந்தது.
  • டெல்லி அருகே காந்தி கைது செய்யப்பட்டு, பஞ்சாப்பில் நுழையாமல் கைதுசெய்யப்படார். 
  • ரெலைட் சத்யாகிரகத்தின் மறியல் (ஹர்த்தால்) போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையினால் இமாலய தவறு செய்து விட்டதாக காந்தியடிகள் கருதினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919 ஏப்ரல் 13)

  • ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் மருத்துவர்களான சத்யபால், சைஃபுதீன் கிச்லு போன்ற முக்கிய தலைவர்கள் 1919 ஏப்ரல் 9 அன்று அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர்.
  • இதையடுத்து நடந்த போராட்டங்களில் சில ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டனர்.
  • உடனே படைத்துறைச் சட்டம் இயற்றப்பட்டது.
  • இதனை எதிர்த்து 1919 ஏப்ரல் 13 ல் சுமார் பத்தாயிரம் மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் பைசாகி திருநாளில் (சீக்கியர்களின் அறுவடைதிருநாள்)அமைதியாக கூடினர்.

பாக் என்றால் தோட்டம் என்பது பொருள்

  • பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவ கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர்.
  • ரெஜினால்ட் டயர் தலைமையிலான ஆங்கிலப் படை பொதுக் கூட்டத்தை நோக்கி சுட்டதில் சுமார் 379 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • பிறகு ராணுவச் சட்டம், படைத்துறைச் சட்டத்தின் மூலம் அமிர்தசரஸ் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். மக்களுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டு தெருக்களில் ஊர்ந்து செல்ல வைக்கப்பட்டனர்.
  • இப்படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை, கால்சா ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட உத்தம் சிங், 1940 மார்ச் 30ல் லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் படுகொலை செய்தார்.

பிறகு உத்தாம் சிங் லண்டனின் பெண்டோன்வில்லே (1940 ஜூலை 13) சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

  • பஞ்சாப் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் தனது நைட்வுட் (வீரத்திருமகள்) பட்டத்தை துறந்தார்.
  • காந்தியடிகள் கெய்சர் -ஹிந்த் பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்.
  • படுகொலை நடைபெற்ற இடத்தை காண காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
  • இப்படுகொலையை விசாரிக்க ஆங்கில அரசு அமைத்த குழு – ஹண்டர் குழு
  • காங்கிரஸ் அமைத்த குழு உறுப்பினர்கள் 

மோதிலால் நேரு, C.R. தாஸ், காந்தி, அப்பாஸ் தியாப்ஜி, சந்தானம்.

  • பஞ்சாப் படுகொலையை இது ஒரு படுகொலை. ஒரு கொலைகளம் என்றவர் – C.F. ஆண்ட்ரூஸ்

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (1919)

  • முதல் உலகப்போரில் இந்தியர்கள் ஆங்கிலேயருக்கு முழு ஆதரவு கொடுத்ததால் 1919 ஆண்டு ஆங்கில பாராளுமன்றம் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டத்தை இயற்றியது.
  • 1917 ஆகஸ்ட் 20 ல் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் அறிக்கையின் விளைவாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

மாண்டேகு-அரசு செயலாளர்

செம்ஸ்போர்டு – வைசிராய்

  • 1921 ம் ஆண்டு இச்சட்டம் அமலுக்கு வந்தது.
  • இச்சட்டத்தின்படி மத்திய மாகாண சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
  • இச்சட்டத்தின்படி ஆங்கிலோ இந்தியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஆகியோர்களுக்கு தனித்தனித் தொகுதிகள் வழங்கப்பட்டது.
  • மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1. மாற்றப்பட்ட துறைகள்

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து, கவர்னரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நிர்வகித்தனர்.

உதா : கல்வி, விவசாயம், பொதுப்பணிகள், சுகாதாரம், தொழிற்சாலை வளர்ச்சி

2. ஒதுக்கப்பட்ட துறைகள்

  • கவர்னரால் அவரது நிர்வாகக் குழு உறுப்பினர்களின் துணைக் கொண்டு நிர்வகிக்கப்படுகின்றன.

உதா :  காவல், நீதி, நிலவருவாய், நீர்பாசனம், பத்திரிக்கை, வனங்கள், சிறைகள், பஞ்ச நிவாரணம்

இதுவே இரட்டை ஆட்சிமுறை என அழைக்கப்பட்டது.

  • இச்சட்டத்தின்படி மாநில சட்டமன்றங்களுக்கு நேரடி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1921 ஏப்ரல் 1 முதல் சென்னை, வங்காளம், பம்பாய், ஐக்கிய மாகாணம், பஞ்சாப், பீகார். மத்திய மாகாணம், அசாம் ஆகிய 8 மாநிலங்களில் இரட்டை ஆட்சி அமல் செய்யப்பட்டது.
  • இச்சட்டம் இந்தியாவிற்கான உயர் ஆணையம் என்ற புதிய அலுவலர் பதவியை லண்டனில் ஏற்படுத்தியது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் இச்சட்டத்தை நிராகரித்தது.
  • இச்சட்டத்தை வெளியிட்டது ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுக் கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது எனவும் கூறியவர் அன்னிபெசன்ட்.
  • 1935 -ம் ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த முறை முடிவுக்கு வந்தது

கிலாபத் இயக்கம் (1919)

  • முதல் உலகப்போரில் ஜெர்மனியும், துருக்கியும் தோல்வியடைந்தன. அதன் விளைவாக ஏற்பட்ட செவெரஸ் உடன்படிக்கையின்படி துருக்கியை பிரிட்டனும் பிரான்கள் பங்கிட்டு கொண்டனர்.
  • உலக முஸ்லிம் தலைவரான துருக்கி சுல்தான் காலிப் அவமதிக்கப்பட்டதை முஸ்லிம்கள் அவமானமாக கருதினர்.
  • துருக்கியின் கலிபாவிற்கு ஆதரவாக தோற்று விக்கப்பட்ட இயக்கம்
  • கிலாபத் இயக்கத்தை இந்தியாவில் தொடங்கியவர்கள் மௌலான முகமது அலி மௌலான சவுகத் அலி (அலி சகோதரர்கள்)
  • அபுல்கலாம் ஆசாத். M.A. அன்சாரி, சைபுதீன் கிச்து, அலி சகோதரர்கள் ஆகியோர் கிலாபத் இயக்கத்திற்கு தலைமையேற்றனர்.
  • முதல் கிலாபத் மாநாடு லக்னோவில் நடைபெற்றது.
  • 1919 அக்டோபர் 19 ம் நாள் கிலாபத் தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • 1919 நவம்பர் 23 ல் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது கிலாபத் மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்.
  • முஸ்லீம் லீக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் நெருங்கிவர நல்ல சந்தர்ப்பம் என காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்.
  • அல்லாஹீ அக்பர், வந்தே மாதரம், இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஆகிய 3 முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார்.
  • 1920 ஜூன் 9 இல் அலகாபாத்தில் நடைபெற்ற கிலாபத் குழு கூட்டம் காந்தியின் அகிம்சை, ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக் கொண்டது.
  • 1920 ஆம் ஆண்டு கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்தது.

ஒத்துழையாமை இயக்கம் (கி.பி 1920-1922)

  • ரௌலட் சட்டத்தை எதிர்த்தும், ஜாலியன் வாலபாக் படுகொலையை கண்டித்தும் மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டத்தின் பயனற்ற தன்மையை உணர்த்தவும் 1920 ஆகஸ்டு 1ல் (ஆகஸ்டு 30) ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்வது என காந்தியடிகள் அறிவித்தார்.
  • 1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது (தலைமை லஜபதிராய்)
  • பின்னர் 1920 டிசம்பர் மாதம் சேலம் C. விஜயராகவாச்சாரி தலைமையில் நடைபெற்ற நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பாலகங்காதர திலகர் 1920 ஆம் ஆண்டு மறைந்ததை தொடர்ந்து காந்தியடிகள் காங்கிரஸின் தலைவரானார்.
  • காந்தியடிகள் விடுதலை போராட்டத்திற்கு மேற்கொண்ட புதிய யுக்தி – சத்தியாகிரகம்,
  • சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பங்கேற்ற முதல் மக்கள் இயக்கம்.

ஒத்துழையாமை இயக்கம் 3 கட்டங்களாக நடைபெற்றது.

1. பட்டம் பதவி, விருதுகளை துறத்தல்

  • மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.
  • காந்தியடிகள் தென்னாப்பிரிக்க அரசால் வழங்கப்பட்ட கெய்சர் – இ-பட்டத்தை துறந்தார்.

2. பள்ளி கல்லூரி, சட்டசபை, புறக்கணிப்பு,வேலைநிறுத்தம்

3. வரிகொடா இயக்கம் 

  • 1921 C.R. தாஸ் தலைமையில் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மக்கள் அரசிற்கு வரி செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 
  • 1922 பிப்ரவரி மாதம் காந்தியடிகள் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை அறிவித்தார்.

ஒத்துழையாமை இயக்கத்திற்கான பிற செயல்திட்டங்கள்

1. அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.

2. 1919 ம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.

3. குடிமைப்பணி (சிவில்) அல்லது ராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.

4. உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுதல்

5. 1919 ம் ஆண்டு சட்டப்படி நடைபெறவிருந்த தேர்தல்களை புறக்கணித்தல்

6. அரசு விழாக்களை புறக்கணித்தல்

7. நீதிமன்றங்கள், அரசு பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றை புறக்கணித்தல்

8. அயல்நாட்டுப் பொருட்களை புறக்கணித்தல்.

9. தேசிய பள்ளிகள், கல்லூரிகள், தனியார் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் போன்றவற்றை நிறுவுதல்

10 சுதேசி பொருட்களையும், கதர் துணிகளையும் மக்களிடையே பிரபலப்படுத்துதல்

  • 1921 ல் வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிக்கப்பட்டது.
  • இந்து, முஸ்லிம் ஒற்றுமையின் உச்சகட்டமாக ஒத்துழையாமை இயக்கம் விளங்கியது.
  • ஒத்துழையாமை இயக்கத்தின் போது நாடு முழுவதும் வன்முறைகள் தலைவிரித்தாடின.
  • ஒத்துழையாமை இயக்கத்தை வன்முறையற்ற வகையில் பின்பற்றினால் ஓராண்டுக்குள் சுயராஜ்ஜியத்தை பெற்றுத் தருவதாக காந்தியடிகள் கூறினார்.
  • தமிழ் நாட்டில் இராஜாஜி, சத்தியமூர்த்தி, பெரியார் போன்ற தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்

மாப்ளா கிளர்ச்சி (1921)

  • கி.பி. 7 ம் நூற்றாண்டில் மலபார் பகுதியில் குடியேறிய அரேபிய வியாபாரிகளின் வழித்தோன்றல்களே மலபார் மாப்பிள்ளைகள்.

கிலாபத் இயக்கத்தின் ஒரு பகுதியாக இவர்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.

  • மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் கேரள விவசாயிகள், இந்து ஜமீன்தார்கள். ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.
  • மலபார் மாவட்ட மாநாடு நடைபெற்ற ஆண்டு 1920 ஏப்ரல்
  • 1921 ஆகஸ்ட் மாதம் மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • 1921 டிசம்பர் மாதம் மாப்ளா கலகம் அடக்கப்பட்டு 2337 பேர் கொல்லப்பட்டனர்.

சௌரிசௌரா நிகழ்ச்சி (1922 பிப்ரவரி 5)

  • 1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
  • சௌரிசௌரா நிகழ்ச்சிக்கு முன் ஆந்திராவின் ராம்பா பகுதியில் அல்லூரி சீதாராம ராஜ் தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி நடைபெற்றது.
  • 1922 பிப்ரவரி 5 ல் உத்திரபிரேதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம், சௌரிசௌரா கிராமத்தில் 3000 பேர் கலந்துகொண்ட ஒத்துழையாமை இயக்க நிகழ்வின் போது ஏற்பட்ட வன்முறையில் 22 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
  • இச்சம்பவத்தை தொடர்ந்து 1922 பிப்ரவரி 11 ல் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை இடையிலே நிறுத்தினார்

காந்தியின் இந்த முடிவை பரதோலியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது.

  • காந்தியை பற்றி சுபாஷ் சந்திர போஸிம், ஜவஹர்லால் நேருவும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
  • விடுதலையானபின் காந்தியடிகள் சில ஆண்டு காலம் இந்து -முஸ்லீம் ஒற்றுமை தீண்டாமை ஒழிப்பு. பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றிற்காக பாடுபட்டார்.
  • இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜ்யத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள் என்று காந்தியடிகள், காங்கிரசுக்கு அறிவுறுத்தினார்.
  • உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள். கதர், இந்து முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன செய்திகளை பற்றி பரப்புங்கள்”
  • இந்து -முஸ்லிம் ஒற்றுமையின் மூலமாகவே சுயராஜ்யம் பெற முடியும் என காந்தியும். முகமது அலி ஜின்னாவும் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
  • இந்து -முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தியடிகள் 1924 இல் 21 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
  • ஆனால் இச்சமயத்தில் இந்து மகாசபை மதன் மோகன் மாளவியா தலைமையிலும், முஸ்லிம் லீக் அலி சகோதரர்கள் தலைமையிலும் பிரபலம் அடைந்தது.

சுயராஜ்ய கட்சி (1923-1925)

  • காலணி அரசின் உண்மையான இயல்பை அவர்கள் வெளிகொணர்ந்தனர்.
  • தேசியவாதத் கருத்துக்களை முன்னெடுத்து செல்ல சட்ட பேரவையை மேடையாக பயன்படுத்தினர்
  • சட்டப்பேரவையில் பங்கேற்று பணியாற்றுவதன்மூலம் மட்டுமே தேச நலன்கள் மேம்படும். என்று வாதிட்டன.
  • 1922 ல் C.R. தாஸ் தலைமையில் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் சட்டமன்ற

நுழைவு தீர்மானத்தை C.R. தாஸ் கொண்டு வந்தார்.

  • இத்தீர்மானம் தோல்வியுற்றதால் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது.

1. மாற்றத்தை விரும்பாதோர் – காந்தியை பின்பற்றுவோர் 

இராஜாஜி வல்லபாய் பட்டேல், இராஜேந்திர பிரசாத் ஆகியோர், காந்தியின் கொள்கையை பின்பற்றினர்.

2. மாற்றத்தை விரும்புவோர் – சுயராஜ்ஜியத்தை விரும்பியவர்கள் 

C.R. தாஸ், மோதிலால் நேரு. சத்யமூர்த்தி ஆகியோர்

  • 1923 ஜனவரி 1ல் C.R. தாஸ், மோதிலால் நேரு இருவரும் இணைந்து சுயராஜ்ய கட்சியை துவக்கினார்.

சுயராஜ்ய கட்சிக்கான திட்டம் அலிப்பூர் சிறையில் உருவானது.

  • 1923 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ய கட்சி பெரும் வெற்றி பெற்றது. மத்திய சட்டமன்றத்தில் மோதிலால் நேரு கட்சித் தலைவராகவும், வங்காள சட்டமன்றத்தில் C.R. தாஸ் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • மாநிலங்களுக்கு சுய ஆட்சி கோரிக்கையை சுயராஜ்ய ஆட்சி வலியுறுத்தியது.
  • அலெக்ஸாண்டர் முட்டிமான் இரட்டையாட்சி முறையை போற்றி புகழ்ந்த போது, மத்திய சட்டசபையில் அதற்கு எதிரான தீர்மானத்தை சுயராஜ்ய கட்சி கொண்டு வந்தது.
  • சைமன் குழு அமைக்கப்படுவதற்கு உடனடி காரணமாக அமைந்தது.
  • காந்தி கைதிற்கு பிறகு சுதந்திர போராட்டத்தை தலைமையேற்று நடத்தியது
  • காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் தீடீரென நிறுத்தப்பட்டதால் தோன்றிய சுயராஜ்ய கட்சி 1925 ல் C.R. தாஸ் மறைவிற்கு பிறகு பலவீனமடைந்தது.
  • 1926 இல் சட்டப்பேரவைகளில் இருந்து சுயராஜ்ஜிய கட்சி விலக்கி கொண்டது.

சைமன் தூதுக்குழு (1927 – 1928)

  • 1919 ம் ஆண்டு சட்டத்தின் பயனை ஆராயவும், இந்திய நிர்வாகத்தை விரிவுபடுத்த ஆலோசனை வழங்கவும். 1927 நவம்பர் 8 ம் நாள் பிரிட்டிஷ் அரசாங்கம் சர் ஜான் சைமன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
  • இக்குழுவில் அனைவரும் வெள்ளையர்களாக இருந்தனர்.
  • இக்குழுவில் இந்தியர் யாரும் இடம்பெறாத காரணத்தால், 1927 மதராஸில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இக்குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்தியா பிரிவுகளும் சைமன் குழுவை புறக்கணித்தன.
  • 1928 பிப்ரவரி 3 ல் இக்குழு பம்பாயிக்கு வருகை புரிந்தது. நாடு முழுவதும் சைமனே திரும்பிப்போ என்ற வாசகம் எழுப்பப்பட்டது.
  • 1928 அக்டோபர் 30 ல் லாகூரில் நடைபெற்ற சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்தின் போது காலாலஜபதிராய் சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியால் தாக்கப்பட்டு 1928 நவம்பர் 17 ல் உயிரிழந்தார்.
  • இந்து மகா சபையும், முஸ்லீம் லீக்கும் சைமன் குழு எதிர்ப்பிற்கு முழு ஆதரவை தந்தன.
  • 1930 மே மாதம் சைமன் குழு தனது அறிக்கையை வெளியிட்டது.
  • இக்குழு இரட்டை ஆட்சிக்கு பதிலாக மாநில சுய ஆட்சியை பரிந்துரைத்தது.

மோதிலால் நேரு அறிக்கை 

  • இங்கிலாந்தின் அயலுறவுச் செயலாளராக பீர்கன் ஹெட் பிரபு இந்தியர்கள் தங்களுக்கு என ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்க முடியுமா என சவால் விடுத்தார்.
  • 1928 மே 19 ம் நாள் பம்பாயில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு மோதிலால் நேருவின் கீழ் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவிடம் வழங்கப்பட்டது.
  • 1928 ஆகஸ்டு 10 ம் நாள் நேரு தனது அறிக்கையை வெளியிட்டார்.

1. டொமினியன் அந்தஸ்து உடனடி குறிக்கோளாகவும். பூரண சுயராஜ்யம் இறுதி இலட்சியமாகவும் இருக்க வேண்டுமென அந்த அறிக்கை கூறியது.

2. மேலும் மாகாண சுயாட்சி

3. மத்திய மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகார பகிர்வு

4. மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்

5. முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு

6. இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இட ஒதுக்கீடு

7. பொது வாக்களிப்பு முறை

8 அடிப்படை உரிமைகள் வழங்கப்படுதல்

  • நேருவின் அறிக்கையை முகமது அலி ஜின்னா ஏற்கமறுத்து முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.
  • ஜின்னாவின் கருத்தை தேஜ் பஹதூர் சாப்ரூ அதரித்தார்.
  • பின்னர் முகமது அலி ஜின்னா முஸ்லீம்கள் சார்பாசு 14 அம்ச கோரிக்கையை வெளியிட்டார்.
  • ஆங்கில அரசு நேரு அறிக்கை, ஜின்னாவின் கோரிக்கை என இரண்டையும் நிராகரித்தது.
  • இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் தூதராக கருதப்பட்ட ஜின்னா பின்னர் முஸ்லீம்களுக்கு தனிநாடு கோரி வலியுறுத்தினார்.
  • 1928 ல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகிதஇந்து– மோதிலால் நேரு
  • இம்மாநாட்டில் 1929 இல் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைவராக இருப்பார் என முன் கூட்டியே அறிவிக்கப்பட்டது.

பர்தோலி சத்தியாகிரகம் (1929-30)

  • 1928 ல் 30% அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது. அதனால் பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
  • விவசாயிகள் உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12. 1928 ல் வரிகொடா இயக்கத்தை தொடங்கினர்.
  • இதில் பல பெண்கள் கலந்து கொண்டனர்.
  • 1930 ல் பர்தோலியில் வரி செலுத்த மறுத்த விவசாயிகளின் நிலத்தை ஏலத்தில் விற்றது.
  • 1937 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது விவசாயிகளின் நிலங்கள் அவர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டன.

லாகூர் மாநாடு (அ) பூரண சுயராஜ்யம் (1929)

  • 1929 ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் லாகூரின் ராவி ஆற்றங்கரையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
  • முழுமையான சுதந்திரம் பெறுவது இந்திய தேசிய காங்கிரஸின் நோக்கம் என அறிவிக்கப்பட்டது.
  • வரிகொடா இயக்கம் உள்ளிட்ட சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும், வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
  • சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும். வட்டமேசை மாநாட்டை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
  • மேலும் சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகள் தலைமையில் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ம் நாளை சுதந்திர தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
  • 1930 ஜனவரி 26 ம் நாள் நாடெங்கிலும் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது.
  • ஜனவரி 26 ம் நாளை நினைவு கூறும் விதமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 ம் நாள் நடைமுறைக்கு வந்தது.
  • இம்மாநாட்டில் 1929 டிசம்பர் 31 நள்ளிரவில் வந்தே மாதரம் பாடலுக்கிடையில் ராவி நதிக்கரையில் மூவர்ண கொடியை ஜவஹர்லால் நேரு பறக்க விட்டார்.

சட்டமறுப்பு இயக்கம் (அ) உப்பு சத்தியாகிரகம் (1930) 90000 பேர் கைது

  • முக்கிய நோக்கம் – முழு சுதந்திரம் பெறுவது
  • 1930 ஜனவரி 31 க்குள் சில கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என இர்வின் பிரபுவிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கை மனுவிற்கு அரசுப்பிரதிநிதி பதில் தெரிவிக்கததால், சட்டமறுப்பு இயக்கம் தொடக்கம்

கோரிக்கைகள்:

1. ராணுவ செலவுகளை 50% வரை குறைப்பது.

2. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது

3. நிலவருவாயை 50% சத்வீதமாக குறைப்பது.

4. நிலவருவாயை ரத்து செய்வது.

5.  முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது

6. உப்பு வரி ரத்து

  • சட்டமறுப்பு இயக்கத்தின் தொடக்கமாக காந்தியடிகள் உப்பு சட்டத்தை மீற முடிவெடுத்தார்.
  • 1930 மார்ச் 12 ம் தேதி காந்தியடிகள் தனது 61 வது வயதில் சரோஜினி நாயுடு உட்பட தனது 78 ஆதரவாளர்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் (அகமதாபாத்) இருந்து புறப்பட்டு 400 கி.மீ (241 மைல் 24 நாள்) தொலைவில் உள்ள தண்டி என்னும் இடத்தை ஏப்ரல் 5 ம் தேதி அடைந்தார்.

தண்டி -அவுசாரி மாவட்டம் (குஜராத்)

  • ஏப்ரல் 6 தேதி தண்டியில் உப்பு எடுத்து காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார்.
  • காந்தியடிகள் கைது செய்யப்பட்டு பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
  • காந்தி கைதிற்கு பின் சத்யாகிரகத்திற்கு தலைமையேற்றவர் -ஒரு அப்பாஸ் தியாப்ஜி
  • காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை தேநீர்க் கிண்ணத்தில் எழுந்த புயல் எனக் கூறியவர் – இர்வின் பிரபு
  • சூரத் மாவட்டத்தில் தர்சனா என்ற இடத்தில் இருந்த உப்புக்கிடங்கு சரோஜினி நாயுடு தலைமையின் கீழ் தாக்கப்பட்டது.
  • வடமேற்கு எல்லை மாகாணத்தில் எல்லைகாந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் காபர்கான் போராட்டத்தை வழி நடத்தினார்.

இவரி நடத்திய இயக்கம் – செஞ்சட்டை /இயக்கம் (குடைகிட்மட்கர்) (குதய்கிதமந்திர்)

  • 1930 ஏப்ரல் 1 முதல் 28 வரை ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் கடற்கரை பகுதியில் உள்ள வேதாரண்யம் சென்று உப்பு சத்யாகிரகம் நடத்தப்பட்டது (150 மைல்)

தஞ்சை ஆட்சியர் JA. தாரின் நடைபயன் சத்யாகிரகிகளுக்கு அடைக்கலம் தர கூடாது என்றார்.

  • T. பிரகாசமும், நாகேஷ்வரராவும் மெரினா கடற்கரையில் உப்பு காய்ச்சினர்.

ஆந்திர கேசரி – T.பிரகாசம்

  • கேரளாவில் கேளப்பன் தலைமையில் கோழிக்கோட்டில் இருந்து பையனூர் வரை போராட்டம் நடைபெற்றது.
  • சத்யாகிரகிகள் மீது தாக்குதல் நடத்த கட்வாலி படையணியின் வீரர்கள் மறுத்துவிட்டனர்.

நன்றி வணக்கம்……… 

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top