தாவரங்களின் உலகம்

Share This:

தூதுவளை:

சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும். உடல் பலம் தரும்.

கீழாநெல்லி:

மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்.

வேம்பு:

கிருமி நாசினி, குளிர்ச்சி தரும், வயிற்றுப் பூச்சிகளை நீக்கும்.

நெல்லி:

வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும்.

துளசி:

சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

கற்பூரவல்லி:

வியர்வை பெருக்கும். கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

வசம்பு:

வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும்

மஞ்சள்:

 கிருமி நாசினி, அழகுபடுத்தல்.

பிரண்டை:

பசியைத் தூண்டும். செரிமானமின்மையை நீக்கும்.

இஞ்சி:

செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்.

மிளகு:

தொண்டைக் கரகரப்பை நீக்கும்.

* இந்தியாவில் நறுமணப் பொருள்களின் தோட்டம் – கேரளா

* தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

தண்டு நார்கள்: (உதா) வாழை நார், சணல் நார்

இலை நூர்கள்:(உதா) கற்றாழை, அன்னாசி

மேற்புற நார்கள்: (உதா) பருத்தி, தேங்காய். இலவம் பஞ்சு.

சணல்:

* சணல் தாவரம் இன்றைய உலகில் நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகாளுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.

* இத்தாவரத்தில் 85% செல்லுலோஸ் உள்ளதால், இது உயிரி நெகிழி  தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. 

உயிரி நெகிழி மண்ணில் மக்கும் தன்மையுடையது.

யூகலிப்டஸ்:

தைலம், காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.

இலவம்:

* தீப்பெட்டி, தீக்குச்சி, சிறு பொம்மைகள், பஞ்சு மெத்தை, தலையணை தயாரிக்கப் பயன்படுகிறது.

வில்லோ:

விளையாட்டுப் பொருள்கள், கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படுகிறது.

கருவேலம்:

மாட்டு வண்டியின் பாகங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

மல்பரி:

டென்னிஸ், ஹாக்கி மட்டைகள் தயாரிப்பில் பயன்படுகிறது.

பைன்

* இரயில் படுக்கைகள், படகுகள் தயாரிப்பில் பயன்படுகிறது.

1. தென் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள போபாப் மரத்தின் 47 மீட்டர் சுற்றளவுள்ள தண்டுப்பகுதி 1,20,000 லிட்டர் தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் திறன் உடையது.

2. பழ மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். இது 400 ஆண்டுகளுக்கு ஆரஞ்சு பழங்களைத் தருகிறது.

3. மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம் ராஃப்லேசியா. இதன் பூவின் விட்டம் ஒரு மீட்டர்.

4. செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரங்கள் 115 மீட்டர் உயரம் வரை வளரும்.

5. ஒரு தர்ப்பூசணிப்பழம் இருந்தால், அதிலிருந்து 6,00,000 தர்ப்பூசணிச்செடிகளைப் பயிர்செய்து, 180டன் எடையுள்ள தர்ப்பூசணிகளைப் பெறலாம்

நீர்த்தாவரங்களின் தகவமைப்புகள்:

1. வேலம்பாசியில் காணப்படுவது போல் வேர்கள் நன்கு வளர்ச்சியடையாமலோ அல்லது உல்பியாவில் காணப்படுவது போல் வேர்கள் இல்லாமலோ காணப்படும்.

2. நீரினுள் மூழ்கிய இலைகள் குறுகியதாகவோ அல்லது நுண்ணியதாக பிளவுற்றோ காணப்படும் (எ.கா) வேலம்பாசி 

3. மிதக்கும் இலைகள் நீளமான இலைக்காம்புடன் நீரின் அளவிற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் வகையில் காணப்படும் (எ.கா) தாமரை

4. சில தாவரங்களில் காணப்படும் காற்றறைப் பைகள் அவற்றிற்கு மிதப்புத் தன்மையையும். உறுதித் தன்மையையும் தருகின்றன. (எ.கா) ஆகாயத்தாமரை

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்.

* இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்த நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. (எ.கா) எருக்கு.

* சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன. (எ.கா) சப்பாத்திக் கள்ளி சோற்றுக் கற்றாழை

*சில தாவரங்களின் இலைகள் முட்களாவும் மாறி உள்ளன. (எ.கா) சப்பாத்திக்கள்ளி

* மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும் (எ.கா) கருவேலமரம்.

வௌவாலின் தகவமைப்புகள்:

* வௌவால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகளாகும்

நைட்ரஜன் சுழற்சியில் பங்குபெறும் உயிரிகள்:

நைட்ரஜன் நிலைப்படுத்தப்படுதல் – ரைசோபியம். அஸோட்டோபாக்டர் நாஸ்டாக்

* அம்மோனியாவதால் – அம்மோனியாவாக்கும் பாக்டீரியங்கள், பூஞ்சைகள்

* நைட்ரேட்டாதல் – நைட்ரோசோமனாஸ், நைட்ரோபாக்டர்

* நைட்ரஜன் வெளியேற்றம் – சூடோமோனாஸ்.

அடிமையாதலும், நலவாழ்வும்

* உலகம் முழுவதிலும் ஆண்டு ஒன்றுக்கு கல்லீரல் அழற்சியினால் ஏறக்குறைய 27,000 இறப்புகள் நிகழ்கின்றன.

* மதுப்பழக்கத்திலிருந்து விடுபட பயன்படுத்தப்படும் மருந்துகள்:

பென்சோடை, யோஸ்பைன், வைட்டமின் B. மனச்சோர்வு நீக்கும் மருந்து பினோதயோசின்.

* புகையிலையில் காணப்படும் மிக முக்கியமான அடிமையாக்கும் பொருள் நிக்கோடின்.

* மீனின் உடலில் இரத்தம் உறைதலைத் தடை செய்யும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் இருப்பதினால் வாரம் இரு முறை மீனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நைட்ரஜன் ஆக்ஸைடு:

வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகையில் அதிகளவு காணப்படுகின்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் காற்று செம்பழுப்பு நிறமாக மாறக் காரணமாகின்றன.

* இவை இதயம், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

* இது அமில மழை உண்டாவதற்கும் காரணியாகின்றன.

மீத்தேன்

* குப்பைகளில் காணப்படும் கரிமக் கழிவுகள் அழுகும்போதும் கால்நடைகளின் உணவுப்பொருள்கள் செரிக்கும் போதும்,மீத்தேன் வாபு உற்பத்தியாகிறது.

* இயற்கை வாயு என்பது 90% க்கு அதிகமான மீத்தேனும், சிறிதளவு ஈத்தேனும், புரோப்பேனும் கொண்ட ஒரு கூட்டுப் பொருள் ஆகும்.

தார் பந்துகள்:

* எண்ணெய்க் கசிவினால் கடல் நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய்ச்

சிதறல்கள் தார்பந்துகள் எனப்படும்.

இவை கடல்நீர் மாசு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது.

எண்ணெய்க்கசிவு:

* கடல் நீரில் கலந்துள்ள எண்ணெய்யை அமிலம் உட்கொள்ளும் பாக்டீரியா மூலமும் தூய்மைப்படுத்த முடியும்.

இவ்வகைச் செயலுக்கு உயிரியல் தீர்வுமுறை என்றுபெயர்.

* எண்ணெய்க் கசிவை அகற்றப் பயன்படும் பாக்டீரியா சூடோமோனாஸ் பாக்டீரியா

* டாக்டர் ஆனந்த் மோகன் சக்ரபர்த்தி என்பவர் சூடோமோனாஸ் பாக்டீரியாவை மரபுப் பொறியியல் மூலம் மாற்றி எண்ணெய்க் கசிவை அகற்றுவதற்கும் பயன்படுத்த முடியும் எனக் கண்டறிந்தார்.

மும்பை எண்ணெய்க்கசிவு (ஆகஸ்டு 2010)

2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மும்பைக் கடல் பகுதியில் MSV சித்ரா மற்றும் MV கலீஜியா என்னும் இரண்டும் எண்ணெய்க் கப்பல்களும் மோதியதனால் சுமார் 400 டன் அளவிற்குக் கச்சா எண்ணெய் அரபிக்கடலில் கொட்டப்பட்டது.

மினாமிட்டா நோய்:

* ஜப்பானில் மினாமிட்டாய் பகுதியில் 1952 இல் மினாமிட்டா நோய் என்னும் ஒருவித நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியெற்றப்பட்ட பாதரசம் பாக்டீரியாக்களால் மீத்தைல் மெர்குரி என்ற நச்சாக மாறுவதே இதை உண்ட மீன்களை மனிதன் உண்ணும்போது கை, கால்கள், உதடு, மார்பு ஆகிய பகுதிகள் உணர்ச்சியற்றுப் போயின. 

செவிட்டுத்தன்மையும், பார்வைக்குறைபாடும், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது. இதற்கு மினாமிட்டா நோய் என்று பெயர்.

போபால் விசவாயு,

1984 டிசம்பர் 2, 3 ஆகிய நாள்களில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு கம்பெனியின் உரத்தொழிற்சாலையிலிருந்து வெளியான நச்சுத்தன்மை மிகுந்த மீத்தைல் ஐசோசயனேட்டு (MIC) என்ற வாயு, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியது

இன்னும் ஏராளமானோர் சுவாச நரம்புக் கோளாறுகளாலும், இதயக் கோளாறுகளாலும் பிறவிக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செர்னோபில் அணு உலை விபத்து.

* உக்ரைனின் செர்னோபில் அணு உலையின் விபத்து, உலக அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய அணு உலை விபத்து 

இறப்பை உண்டாக்கக் கூடிய அணுக்கதிர்கள் வெளியீட்டால் வளிமண்டலத்தைப் பாதித்தது.

* செர்னோபில் பகுதியில் வாழ்ந்த மக்கள், ஜப்பானின் ஹிரோஷிமா பகுதி மக்களைவிட அதிக அளவு பாதிக்கப்பட்டனர். புதிதாகப் பிறந்த உடல் குழந்தைகள் உறுப்பு குறைகளுடன் பிறந்தன. 

பலர் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

நிலக்கரி

* நிலக்கரியில் இருந்து மட்டுமே அதிக அளவில் கார்பன்-டை ஆக்ஸைடு வெளிவருகிறது.

* பெட்ரோலியம், இயற்கை வாயுக்களை எரிப்பதன் மூலம் வெளியேறும் கார்பன் டை-ஆக்ஸைடு அளவை விட நிலக்கரியில் இருந்து இரண்டு பங்கு கார்பன்- டை-ஆக்ஸைடு வெளியேறுகிறது.

* பெட்ரோலியம் நச்சுத்தன்மை கொண்ட தீப்பற்றி எரியக்கூடிய ஹைட்ரோ கார்பன்கள், சில கரிமப்பொருள்களால் ஆன ஒரு கலவை

தமிழ்நாட்டில் உள்ள வனஉயரிச் சரணாலயங்கள்

1. இந்திராகாந்தி வன சரணாலயம் உயிரிச்–மேற்குத் தொடர்ச்சி மலை

2. களக்காடு  வன வயிரிச் சரணாலயம்

திருநெல்வேலி மாவட்டம்

3.ஸ்ரீவில்லிபுத்தூர்  அணில் சரணாலயம்

விருதுநகர் மாவட்டம்

4. வேடந்தாங்கல்  பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டம்

5.முதுமலை  வன் உயிரி சரணாலயம்-நீலகிரி மலை

6.விராலிமலை சரணாலயம் மயில்-திருச்சி மாவட்டம்

7.மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா – இராமநாதபுரம் தூத்துக்குடி .மற்றும் மாவட்டம்க் கடலோரப் பகுதி

8. முண்டந்துறை வன உயிரிச் சரணாலயம் – திருநெல்வேலி மாவட்டம்

9. வல்லநாடு கறுப்பு மான் சரணாலயம்

தூத்துக்குடி மாவட்டம்

10. அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா –வண்டலூர் காஞ்சிபுரம் மாவட்டம்

11. முக்குருத்தி தேசியப் பூங்கா புலி

சரணாலயம் – நீலகிரி மலை

12 . கோடியக்கரை வன உயிரிச்சரணாலயம்

– நாகப்பட்டினம் மாவட்டம்

13. ஆனை மலை வன உயிரிச்  சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி  

மலையின் சரிவுகள்

தேசிய பூங்காக்கள்

1. பந்திப்பூர் தேசியப் பூங்கா (இது புலி பாதுகாப்புப் பகுதி)  கர்நாடக மாநிலம

2. கார்பெட் தேசியப் பூங்கா (இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா மற்றும புலி பாதுகாப்புப் பகுதி)

உத்தராஞ்சல்

3. கிர் தேசியப் பூங்கா (ஆசிய சிங்கம்)

குஜராத்

4. கன்ஹா தேசியப் பூங்கா (புலி பாதுகாப்புப் பகுதி)  மத்தியப் பிரதேசம்

5. பரத்பூர் பறவைகள் சரணாலயம்

இராஜஸ்தான்

6. மானஸ் வன உயிரிச் சரணாலயம் (புலி பாதுகாப்புப் பகுதி) – அசாம்

7. சுந்தர்வன தேசியப் பூங்கா (புலி பாதுகாப்புப் பகுதி) (வங்காளப் புலி)

மேற்கு வங்காளம்

புவி வெப்பமயமாதல்:

* உலகளவில் அதிக வெப்பமான நாளாக 1998 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தைக் கூறுகின்றனர்.

கடந்த 50 ஆண்டுக் காலத்தில் இந்தியாவின் வெப்பநிலை மிக அதிகமாக உணரப்பட்டதும் 1998-ம் ஆண்டுதான்.

* நீர் பாதுகாப்பு சட்டம் – 1974

* வனச்சட்டம் – 1980

* காற்று பாதுகாப்புச் சட்ம் – 1981

* சுற்றுபுறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986

* மோட்டார் வாகன சட்டம் – 1988

கியூட்டோ ஒப்பந்தம்:

* பல நாடுகள் குறைந்த பசுமையக வாயுவை வெளிவிடும் நோக்கில் பெட்ரோலியத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

* தட்ப வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் புவி வெப்பமடைதலை எதிர்க்கும் ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தக் கூட்டமைப்பு

பசுமை வேதியியல் கொள்கை

* பசுமை வேதியியல்  கொள்கையானது 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பசுமை வேதியியல் நிறுவனங்கள் தற்போது உருவாக்கப்பட்டுத் தலைமைப் பசுமை வேதியியல் சாதனைச் பரிசுகள் 1999 ம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன.

* புவி மின்னணுக் கிராமம் என்ற சொல் ஓர் எல்லையற்ற கிராமத்தைக் குறிக்கிறது. இஃது உலக மக்களைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இணைக்கிறது.

புவிக் கிராமம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மார்ஸல் மாக்லூகான்

ஹைட்ரஜன்

* ஓரலகு எடை கொண்ட ஹைட்ரஜன்,

பெட்ரோலியம் பொருள்களின் எரிதல் வெப்பத்தைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமாகவும்,

எத்தனாலைவிட 4.5 மடங்கு அதிகமாகவும்.

மெத்தனாலைவிட 6 மடங்கு அதிகமாகவும் ஆற்றலை அளிக்கிறது.

* இதன் வெப்ப இயக்க ஆற்றல் மாற்றும் திறன் (30 – 35%) பெட்ரோலை (கேஸோலின்) விட 20 -25% அதிகமாக உள்ளது. 

காற்றாலை

* டென்மார்க் ‘காற்றுகளின் நாடு” என்று அழைக்கப்படுகிறது இந்நாட்டின் மின் தேவையில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் காற்றாலைகளின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

* காற்றாலைகளின் மூலம் பெறப்படும் மொத்த மின் உற்பத்தியில் ஜெர்மனி முதன்மை இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

* இந்தியாவில் உள்ள முழுமையான காற்றுத்திறனைப் பயன்படுத்தினால் சுமார் 45000 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும் எனக்

கணக்கிடப்படுகிறது.

* தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகில் 380 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யக்கூடிய மிகப்பெரிய காற்றாலைப் பண்ணை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயோ ஆல்கஹால் (உயிரி எரிசாராயம்)

* தாவரங்களின் சர்க்கரைப் பொருள்களை நொதிக்கச் செய்து பயோ எத்தனால் (உயிரி எரிசாராயம்) தயாரிக்கப்படுகிறது.

* தூய்மையான உயிரி எரிசாராயம் வாகனங்களுக்கு எரி பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

உயிரி டீசல் (பயோ டீசல்):

* தாவர எண்ணெய்,  விலங்குகளின் கொழுப்பிலிருந்து உயிரி டீசல் பெறப்படுகிறது. இது தூய நிலையில் வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுகிறது.

குறிப்பு

* துர்க்மேனிஸ்தான் நாட்டிலுள்ள காராகும்  எனப்படும் விவசாய பாசனத்திற்கு பயன்படும் கால்வாய்தான் உலகிலேயே மிகவும் நீளமான பாசனக் கால்வாய் இது சுமார் 1300 கி.மீ நீளமுடையது.

* நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரம்பிகுளம் ஆழியாறு நீர்த்தேக்கமாகும்.

உலகிலுள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

* இந்திரா காந்தி கால்வாய் இது இந்தியாவிலுள்ள பெரிய கால்வாய்களுள் ஒன்று. சுல்தான்பூர் என்னும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ் என்னுமிடத்திலிருந்து இது துவங்குகின்றது. 

* களைக்கொல்லிகள் (உ.தா) டாலபேன். மெட்டாக்ளோர்.

2.4-டைகுளோரா பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் (2-4-D)

* உலகம் முழுவதும் பயிர் அறுவடை செய்யப்படும் நாள் மிகவும் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்க பொங்கல் (தமிழ்நாடு) பிகு(அஸ்ஸாம்) நகன்யா, ஹோலி, ஓணம் (கேரளா)

* மாநிலத் தானிய சேமிப்பு நிறுவனம் என்னும் அமைப்பு விவசாயப் பொருள்கள், உரம் போன்றவை சேமிக்கப்படுவதை உறுதி செய்கின்றது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம்தஞ்சாவூர்

* 20 நிமிட இடி மின்னலுடன் கூடிய புயலில் 1,25,000,000 காலன்கள் நீரை கீழே அனுப்பும். (1 காலன் என்பது 4.5 லிட்டருக்கு சமம்)

* நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்கள், அங்குள்ள கார்பன் துகள்களைச் சுவாசிப்பதனால் கருப்பு நுரையீரல் புற்றுநோய் எற்படுகிறது.

* புற்றுநோயை உண்டாக்கும் பென்சோ பைரின் என்ற நச்சு வாயு புகைப்பிடிப்பதனால் காற்றில் கலக்கின்றன.

இது புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களையும் பாதிக்கிறது.எனவே பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.  

* D.D.T பறவைகளின் அண்ட நாளங்களில் முட்டை உருவாதற்கு காரணமான கால்சியம் கார்பனேட் உற்பத்தியைத் தடை செய்கிறது.

* ஸ்ட்ரான்சியம்-90 எலும்புகளில் படிந்து எலும்புப் புற்றுநோயைத் உண்டாக்குகிறது.

* அயோடின்-131 எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், நிண நீர்முடிச் போன்றவற்றைத் தாக்கி இரத்தப் புற்றுநோய்க்குக் காரணமாகிறது.

* C.P.R – C.P இராமசாமி சுற்றுச்சுழல் கல்வி மையம் – சென்னை

* MSSRF (MS. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்)

* 2015 ஆம் ஆண்டின் உடற்செயலியல் / மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு “உருளைப்புழு – ஒட்டுண்ணி மூலம் ஏற்படும் தொற்றுநோய்க்கான சிகிச்சை முறை ஆராய்ச்சிக்காக வில்லியம்டரில் சி.கேம்பேல் சடோஸி ஒமியூரா ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசுத் தொகையின் ஒரு பகுதியும், மலேரியா தொற்றுநோய் சிகிச்சை முறை ஆராய்ச்சிக்காக யூயூ டோ என்ற அறிஞருக்கு நோபல் பரிசுத் தொகையின் மற்றோரு பகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

* காகித கழிவுத்தாளை 54% மறுபடியும் பயன்படுத்தலாம்.

* கண்ணாடியை 20% மறுபடியும் பயன்படுத்தலாம்.

* ஜெட் ஆகாய விமானம் – 145 db

* நகரப் போக்குவரத்து – 90 db

* மின் துடைப்பான் – 85 db

* குளிரூட்டி / பேசுதல் – 60 db

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top