சூழ்நிலை மண்டலம்

Share This:

உணவுச்சங்கிலி:

  • ஓர் உயிரியிலுள்ள உணவு ஆற்றல், மற்றொரு உயிரிக்கு அதனை உண்பதன் மூலமாக ஒரே திசையில் கடத்தப்படுகின்ற சங்கிலித்தொடர் உணவுச்சங்கிலி எனப்படும்.

புல்வெளியில் உணவுச் சங்கிலி

நெல். – எலி – பாம்பு – கழுகு 

காடுகளில் உணவுச் சங்கிலி:

புல் – மான் – புலி 

குளத்தில் உணவுச் சங்கிலி

தாவர மிதவை உயிரி – பூச்சி – சிறிய மீன்- பெரிய மீன் – மனிதன்.

  • உணவுச் சங்கிலியில் ஓர் உறவு உடைந்தாலும், அதன் முடிவு ஓர் உயிரினத்தின் அழிவையே உருவாக்கும்.

3R முறை:

  •  பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce) மீண்டும் பயன்படுத்துதல் (Reuse) மறுசூழற்சி செய்தல் (Recycle) ஆகியவை சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய மூன்று வழிமுறைகள் ஆகும். இவற்றை நாம் 3R என்று அழைக்கிறோம்.

4R முறை

  • கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு 4R முறை ஏற்றதாகும்.

Reduce – குறைத்தல்

Reuse – மறுபயன்பாடு

Recovery- மீட்டெடுத்தல்

Recycle – மறுசுழற்சி

படைப்பாக்க மறுபயன்பாடு:

  • படைப்பாக்க மறுபயன்பாடு அல்லது உயர்சுழற்சி என்பது கழிவுப்பொருள்கள் அல்லது தேவையற்ற பொருள்களை உயர்தரமான மற்றும் சூற்றுச்சூழல் மதிப்புடைய பொருள்களாக மாற்றிப் பயன்படுத்துதல் ஆகும்.

வன மகோற்சவம்

  • இந்தியாவில் வருடம் தோறும் ஜூலை மாதத்தில் மரம் நடும் விழாக் கொண்டாடப்படுகிறது. 

காடுகளில் மரங்களைப் பாதுகாப்பதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

நீர்

  • பூமியில் 70% நீர் உள்ளது. இதில் 3% மட்டும் தான் நன்னீர் உள்ளது.
  • உலக நீர் தினம் –  மார்ச் 22.
  • ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க. சமைக்க, உடல் நலன் பேண எனக் குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. 

முக்கிய தினங்கள்

உலக சதுப்புநில தினம் – பிப்ரவரி 2

உலகக் காடுகள் தினம் -மார்ச் 21

புவி தினம் – ஏப்ரல் 22

உலகச் சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 6

இயற்கை வள தினம் அக்டோபர் 5

இயற்கை பாதுகாப்பு தினம் நவம்பர் 25

  • உலக வங்கியின் ஆய்வு ஒன்று “உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியா.

இதனால் இந்தியாவில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் குறைந்து கொண்டு வருகிறது” என்று கூறுகிறது

  • உலகின் மழைப்பொழிவில் நான்கு சதவீதத்தை இந்தியா பெறுகிறது. ஓர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்கு கிடைக்கும் நீர் அளவில் இந்தியா 133 வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மீண்டும் புதுப்பிக்கக்கூடிய நீர் வளம் ஓராண்டில் 1897 ச.கிமீ அளவு உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

  • 2025-இல் கடுமையான நீர்ப்பற்றாக்குறை இந்தியாவின் பெரும்பகுதியில் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடல்நீரைக் குடிநீராக்குதல்:

மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்:

  • இந்தியாவில் கடல்நீரைக் குடிநீராக்கும் மிகப்பெரிய திட்டம் ஆகும்.
  • சென்னையில் இருந்து வடக்கே 35 கி.மீ தொலைவில் உள்ள மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 600 கோடி ரூபாய் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.
  • மீகுசூர் திட்டம் நாளொன்றுக்கு சென்னைக்கு 100 மில்லியன் லிட்டர் நன்னீர் தருகிறது.
  • சுமார் 5 லட்சம் மக்களுக்குத் தேவையான குடிநீரை அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நெமிலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்:

  • மீஞ்சூர் திட்டத்தை அடுத்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் நெமிலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் நன்னீரைக் கடல்நீரில் இருந்து பிரித்து எடுக்க இயலும்

  • சென்னை மக்களின் நன்னீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நெமிலி திட்டத்தில் இருந்து குடிநீர் 40 கி.மீ தூரம் கொண்டுவரப்படுகிறது.
  • மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.

பூமியின் இனிப்பு நீர்

  • 2006 இல் மும்பையின் மாகிம் என்ற பகுதியில் கடல்நீர் திடீரென இனிப்பாக மாறியதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறினர். 

மாகில் வளைகுடா என்பது மிகவும் மாசுபட்ட வளைகுடாவாகும் ஏனெனில் இங்கு ஒரு நாளில் ஆயிரக்கணக்கான டன்களில் மூலக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் வந்து சேர்கின்றன.

  • மிக அதிக உப்புத்தன்மையைக் கொண்ட கடல் ‘சாக்கடல்” 

இந்தக் கடல் உயிரற்றது. ஏனெனில் இதில் உள்ள அதிக உப்புத்தன்மை காரணமாக நீர் வாழ் உயிரினம் உயிர்வாழ முடியாதவாறு உள்ளது.

ஒரு லிட்டர் தண்ணீரில் 300 கிராம் உப்பு கரைந்துள்ளது. ஒரு மனிதனுக்கு நீந்தத் தெரியவில்லை என்றாலும் கூட இந்த சாக்கடலில் விழுந்தால் அவன் நீரில் மூழ்க மாட்டான் பதிலாக நீரின் மேல் மிதப்பான்.

திடக்கழிவு மேலாண்மை

  • ஒவ்வொரு வீட்டிலும் திடக்கழிவுகளை உயிரினச்சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகள் உயிரினச்சிதைவுக்கு உள்ளாகாத கழிவுகள் மற்றும் வீட்டு உபயோக ஆபத்தான கழிவுகள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அதற்குரிய குப்பைக் கூடைகளில் வைத்திருந்து, உள்ளாட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பவரிடமோ, தூய்மைப்பணி மேற்கொள்பவரிடமோ ஒப்படைக்க வேண்டும்.
  • இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு 0.45 கிலோ கிராம். தூரத்தைக் கணக்கிட்டால், அது 2800 கிலோ மீட்டரைத் தாண்டும். இது கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை உள்ள இடைவிடாத தூரத்தைக் குறிக்கிறது.
  • ஒவ்வொரு நாளும் 532 மில்லியன் கிலோ திடக்கழிவுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாசுபாட்டின் முக்கிய நான்கு வகைகள்:

1. காற்று மாசுபாடு

2. நீர் மாசுபாடு

3. நில மாசுபாடு

4. ஒலி மாசுபாடு

  • இயற்கையானது தன்னைத்தானே புத்துணர்வுடன் புதுப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்றவர் – ஹெலன் கெல்லர்

நைட்ரஜன் சுழற்சி

  • நைட்ரஜன் என்பது அனைத்து உயிரினங்களும் உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல்நிலை ஊட்டச்சத்தாகும். 

இது பச்சையம், மரபுப்பொருள் (DNA) மற்றும் புரதத்தில் அவசியமான பகுதிப் பொருளாக இருக்கின்றது. வளிமண்டலமானது 78% நைட்ரஜனைக் கொண்ட பெரிய மூலமாக உள்ளது. வளிமண்டவத்தில் வாயுநிலையில் உள்ள நைட்ரஜனை தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நேரடியாக பயன்படுத்த இயலாது. நைட்ரஜனானது அம்மோனியாவாகவோ, அமினோ அமிலங்களாகவோ அல்லது நைட்ரேட் உப்புக்கள் வடிவிலோ இருந்தால் மட்டுமே உயிரினங்கள் அவற்றைப் பயன்படுத்திட முடியும்.

நிலை நிறுத்தம்

  • செயல்படா நிலையில் இருக்கும் வளி மண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டுப்பொள்களாக மாற்றும் நிகழ்வு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இம்மாற்றம் எண்ணற்ற பாக்டீரியாக்கள் மற்றும் நீலப்பச்சைப் பாசிகளால் (சையனோபாக்டீரியா) ஏற்படுகின்றது.

லெகுமினஸ் தாவரங்களான பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்றவை நைட்ரஜனை நிலைநிறுத்தும் ரைசோபியம் பாக்டீரியாவுடன் ஒரு கூட்டுயிரி வாழ்க்கையைக் கொண்டுள்ளன.

இந்த வகை பாக்டீரியாக்களானவை, (ரைசோபியங்கள்) லெகூம் தாவரங்களின் வேர் முண்டுகளில் தோன்றி, நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன.

உட்கிரகித்தல் / தன்மயமாதல்:

  • தாவரங்கள் நைட்ரஜனை, நைட்ரேட் அயனிகளாக உறிஞ்சி, கரிமப் பொருள்காளன புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்துகின்றன. தாவர உண்ணிகள் அவற்றிலுள்ள புரதங்களை விலங்குப் புரதங்களாக மாற்றிக் கொள்கின்றன. 

விலங்குண்ணிகள் அவை உட்கொள்ளும் உணவிலிருந்த புரதங்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.

அம்மோனியாவாதல்:

  • நைட்ரஜன் கழிவுப் பொருள்களை கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அமோனியச் சேர்மங்களாக சிதைவுறச் செய்யும் நிகழ்வு அம்மோனியாவாதல் என அழைக்கப்படுகிறது.
  • விலங்குப் புரதங்களானவை யூரியா, யூரிக் அமிலம் அல்லது அம்மோனியா வடிவில் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
  • கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை விலங்குப் புரதங்கள் இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை சிதைவுறச் செய்து அம்மோனியச் சேர்மங்களாக மாற்றுகின்றன.

நைட்ரேட்டாதல்

  • அம்மோனியாவாதல் நிகழ்வின் மூலம் உருவான அம்மோனிய சேர்மங்கள் ஆக்சிஜனேற்ற செயல்முறை மூலம் கரையக்கூடிய நைட்ரேட் உப்புகளாக மாற்றப்படுகின்றன. இந்த செயல்முறை நைட்ரேட்டாதல் என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்கு காரணமாக உள்ள பாக்டீரியங்கள் நைட்ரேட்டாக்கும் பாக்டீரியங்கள் எனப்படுகின்றன.

நைட்ரேட் வெளியேற்றம்:

  • நைட்ரேட்டாதல் செயல்முறையில் உருவாக்கப்பட்ட நைட்ரேட் அயனிகள் மண்ணிலிருந்து ஒடுக்கமடைந்து வாயுநிலைக்கு மாறி வளிமண்டலத்தை அடையும் முறை நைட்ரேட் வெளியேற்றம் எனப்படுகிறது.

தனித்து மண்ணில் வாழக்கூடிய பாக்டீரியங்களான சூடோமோனாஸ் சிற்றினங்களால் இந்த செயல்முறை நடைபெறுகின்றது.

கார்பன்

  • கார்பன் பல்வேறு வடிவங்களில் பூமியின் மீது கிடைக்கின்றது
  • கரி, வைரம் மற்றும் கிராபைட் போன்றவை கார்பனின் எளிய வடிவங்களாகும்.
  • கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்ஸைடு, கார்பனேட் உப்பு போன்றவை கார்பனின் கூட்டுப்பொருள்களாகும்.

குளிர்கால உறக்கம் (Hibernation)

  • குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும்.
  • வெளவால்கள் குளிர் இரத்த விலங்குகளானாலும், மற்ற குளிர் இரத்த பாலூட்டிகள் போல் அல்லாமல் ஓய்வு குறைத்துக்கொள்கின்றன. நேரத்தில் அவற்றின் உள்வெப்பநிலையைக் இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைத் தக்கவைத்துக் கொள்கின்றன.

எதிரொலித்து இடம் கண்டறிதல் (Echolocation)

  • வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவு நேரங்களில் பறந்து தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு. பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன(மீயொலி அலைகள் (Ultrasonic sound)

இவ்வமைப்பிற்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர்.

  • இந்த அலைகள் அவற்றின் இரையின் மீது (prey) பட்டு எதிரொலித்து, மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இரையின் இடத்தினைக் கண்டறியப்பயன்படுகிறது.

கோடைக்கால உறக்கம்:

  • கோடைக்காலத்தில் அதிக வெப்பநிலையும், வறண்ட சூழ்நிலையும் காணப்படுவதால் மண்புழுவானது செயலற்ற நிலையை உருவாக்கிக்கொண்டு கோடைக்கால உறக்கம் என்ற செயல் நிலைக்குச் செல்கிறது.

இவற்றிற்கு ஏற்ற சரியான வெப்பநிலை 60-80F

  • மண்புழுக்கள் உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றன.
  • கரிமப்பொருள்களை செரிமானம் செய்தபின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் (Vermicasting) எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.

IUCN

  • இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியம் (IUCN)

நோக்கம்

  • இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம் என்பதே இதன் நோக்கமாகும்.

உலக அளவில் கண்டறியப்பட்ட உயிரியல் பல்வகைத்தன்மை கொண்ட மிக முக்கிய 34 இடங்களில் 4 இடங்கள் இந்தியாவில் உள்ளன.

அவை:

இமயமலை

மேற்கு தொடர்ச்சி மலைகள் 

வடகிழக்குப் பகுதிகள்

நிக்கோபர் தீவுகள்

  • காடுகள். தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூலம் இந்தியா 1969 முதல் ஐயூ.சி என் – இல் உறுப்பினராக இருந்து விடுகின்றது.
  • சுவிட்சர்லாந்து நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஐயூ.சீ.என் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

சிப்கோ இயக்கம்

  • 1973 ஆம் ஆண்டில் அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக துவக்கப்பட்ட இயக்கம்
  • சிப்கோ” என்னும் வார்த்தைக்கு பொருள் தழுவுதல் என்பதாகும்.

மரங்களை வெட்ட விடாமல் கிராம மக்கள் அவற்றை வட்டமாக சூழ்ந்துகொண்டு கட்டித் தழுவியபடி நின்றதால் இப்பெயர் அமைந்தது.

  • உத்திரப்பிரதேச (தற்போதைய உத்தரகாண்ட்) மாநிலத்தில் உள்ள சாமோலி என்னும் வாரில் இவ்வியக்கம் தோன்றியது.
  • இமயமலைப் பகுதிகளில் உள்ள காடுகளை 15 ஆண்டுகள் அழிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை பெற்று 1980 ஆம் ஆண்டு இவ்வியக்கம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.

காடுகளைப் பாதுகாத்தல்

  • இந்தியாவின் 752.3 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் காப்புக் காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 215.1 இலட்ச ஹெக்டேர் பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது.

  • வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, 1936 ம் ஆண்டு உத்தராகான்ட் மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா. இந்தியாவில் தற்போது 15 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
  • தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி. ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பக பகுதியாகும்.
  • தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் வெங்கடாச்சலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா ராமசாமி என்பவர் இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர்” என்று சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார்.

இவர் பறவை இனங்களை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இவரது புகைப்படத் தொகுப்பு “வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள்* என்னும் தலைப்பில் நவம்பர் 2014 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வன உயிரி பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்

  • புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973

யானைகள் பாதுகாப்புத் திட்டம் 1992ம் ஆண்டிலும் துவங்கப்பட்டது

  • 1976 ம் ஆண்டில் முதலை பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது.
  • 1999 ம் ஆண்டிடஆமைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது.
  • அசாம் மாநிலத்திலுள்ள காண்டாமிருகங்களை பாதுகாக்க ‘இந்திய காண்டாமிருக்கங்கள் பாதுகாப்பு 2020’ என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைந்த பட்சம் 3000 ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகங்களையானது 2020 ஆம் ஆண்டுக்குள் பாதுகாத்திட குறிக்கோள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூரிய மின்கலன்கள்

  • சூரிய மின்கலன்கள் (போட்டோ வோல்டாயிக் கருவிகள்) சிலிக்கானால் உற்பத்தி செய்யப்பட்டு சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டவை.
  • 100 சூரிய வெப்ப சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 1500 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

தாஜ்மஹால்

  • உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இது வெண்மை நிற பளிங்கக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாஜ்மஹாலுக்கு அருகில் அமைந்துள்ளது.
  • இதிலிருந்து உற்பத்தியாகும் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் இப்பகுதியில் உள்ள தாஜ்மஹாலின் வெண்ணிற பளிங்கு கற்களில் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிமாக மாற்றியுள்ளது.
  • தாஜ்மகாலை சிதைவிலிருந்து பாதுகாக்க தற்போது இந்திய அரசானது வெளியேற்றும் புகைகளுக்கு குறிப்பிட்ட வரையறை அளவினை விதித்தள்ளது.

உயிரி வாயு:

  • உயிரி வாயு என்பது மீத்தேன் (75%), ஹைட்ரஜன் சல்பைட் கார்பன் ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்த கலவையாகும்.

இவ்வாயு விலங்குகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும் -போது (சிதைவடையும் போது) உருவாகிறது. பொதுவாக இவை ‘கோபர் கேஸ்” (கோபர் (ஹிந்தி) = மாட்டுச் சாணம்) என்றும் அழைக்கப்படுகிறது

ஷேல் வாயு:

  • ஷேல் எனப்படுவது பூமியின் அடிப்புறத்தில் அமைந்துள்ள சேறு மற்றும் தாதுக்கள் (குவார்ட்ஸ் மற்றும் கால்சைட்) அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளைக் குறிப்பதாகும்.
  • ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் ஆறு பகுதிகள் கண்டறியஅழைக்கப்படுகிறது. 

அவை கேம்பே (குஜராத்) அஸ்ஸாம் அரக்கான் (வட கிழக்குப் பகுதி), கோண்ட்வானா (மத்திய இந்தியா). கிருஷ்ண கோதாவரி (கிழக்கு கடற்கரைப் பகுதி). காவேரி மற்றும் இந்தோ – கங்கைப் வடிநிலப் பகுதி.

மின்னணுக் கழிவுகளால் ஆரோக்கியத்திற்கு உண்டாகம் பாதிப்புகள்:

ஈயம்:

  • மனிதரில் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளின் முளை வளர்ச்சியை பாதிக்கிறது.

குரோமியம்:

  • மூச்சுத்திணறல் ஆஸ்துமா

கேட்மியம்:

  • சிறுநீரகம், மற்றும் கல்லீரலில் படிந்து அதன் பணிகளை பாதிக்கிறது. நரம்புகளை பாதிக்கின்றது.

பாதரசம்:

  • மூளை மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.

பாலிவினைல் குளோரைடு (PVC) உள்ளிட்ட நெகிழிகள்:

  • நெகிழிகளை எரிப்பதால் உண்டாகும் டையாக்சின்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியையும், பணியையும் பாதிக்கிறது.

மின்னணுக் கழிவுகள்

  • கணினிப் பொருட்களை 60%
  • தொலைத்தொடர்பு சாதனங்கள் 12%
  • மின்னணு சாதனங்கள் – 5%
  • உயிரி மருத்துவ சாதனங்கள் -7%
  • பிற சாதனங்கள் / உபகரணங்கள் – 6%

குறிப்பு

  • அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்.
  • சூரியனிலிருந்து ஒளி ஆற்றல் ஏறக்குறைய பாதியளவே (47%) பூமியின் மேற்பரப்பை வந்து அடைகிறது.
  • உலகின் மிக உயரமானதும், மிகப் பெரியதுமான காற்றாலை ஹவாய் பகுதியில் அமைந்துள்ளது.
  • ஒரு காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை 300 வீடுகள் பயன்படுத்த முடியும்.
  • 2-ம் நூற்றாண்டில் சோழ வம்சத்தைச் சேர்ந்த கரிகால் சோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லணையானது மிகவும் பழமையானது. இது உலகின் நான்காவது பழமையான அணையாகும். இந்த அணை இன்றும் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இவ்வணை திருச்சிராப்பள்ளி நகருக்கு 20 கி.மீ. அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கால்மோடுலின்

  • கால்மோடுலின் என்பது கால்சியத்தின் அளவை மாற்றியமைக்கும் புரதம். இது யுகேரியோட்டிக் செல்களில் கால்சியத்தை இணைக்க உதவுகிறது.
  • இது வெப்பத்தைத் தாங்கும் மற்றும் நுண்ணிய வளர்சிதை மாற்ற ஒழுங்கமைவில் பங்குபெறும் புரதம்.

அக்வாபோரின் கண்டுபிடிப்பு

  • இரத்த சிவப்பணுவில் (RBC) நீர்த்துளை எனப்படும் அக்வாபோரின், பீட்டர் ஆகரே என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்காக வேதியலுக்கான நோபல் பரிசை 2003 ல் இவர் பெற்றார்.

லைக்கன்கள்:

  • சல்பரிடைஆக்ஸைடு (SO,) காற்று மாசுபடுதலை காட்டும் மாசு காட்டியாக உள்ளது. வறள் தாவரபடிநிலை வளர்ச்சியில் முதல் தோன்றும் முன்னோடி தாவரமாக லைக்கன்கள் உள்ளன.

பாலக்கீரை

  • மூட்டு முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். 

இந்த நோய்க்கான மருந்தினை பாலக்கீரையிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன (CORI Central Drug Research Institute Lucknow)விஞ்ஞானிகள் நானோ உருவாக்கத்தின் (nano formulation) மூலம் உருவாக்கியுள்ளனர்.

விதை வங்கி

  • விதை வங்கிகள் உலர்ந்த விதைகளை மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கின்றன.

உலகின் மிகப்பெரிய விதை வங்கி இங்கிலாந்தில் உள்ள மில்லினியம் விதை வங்கி ஆகும்.

குளிர் விதை வங்கி

  • இது மிகக் குறைந்த வெப்பநிலையில் ஒரு விதை அல்லது கருவைப் பாதுகாக்கும் தொழில் நுட்பமாகும்.

இது பொதுவாக திரவ நைட்ரஜனில் 196 o C வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது. அழிவை எதிர்கொள்ளும் சிற்றினங்களைப் பாதுகாப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

+ அமெரிக்காவில் அமைந்திருக்கின்ற டெக்சாஸ் A&M பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முனைவர் க. சகிலாபானு எனும் அறிவியல் விஞ்ஞானி குரோமியம் உலோகத்தால் நீர் மாசுபாடு அடைவதன் காரணமாக பெண் உயிரினங்களில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும். அது மனிதர்களின் நஞ்சுக்கொடியில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால் கண்டறிந்துள்ளார். குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்றும்

இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதுப்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ப்ளூ கிராஸ்

ப்ளூ கிராஸ் என்பது ‘நமது வாயில்லா நண்பர்களின் கூட்டிணைவு’ என்ற பெயரில் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு நிறுவனமாகும். இது 1897 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஒவ்வொரு செல்லப் பிராணியும் ஆரோக்கியமான வாழக்கையை மகிழ்ச்சியான இல்லங்களில் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரின் தெருக்களில் காணப்பட்ட குதிரைகளைப் பராமரிப்பதற்காக ப்ளூ கிராஸ் நிறுவப்பட்டது.

1906 ஆம் ஆண்டு, மே 15 அன்று லண்டன் மாநகரின் விக்டோரியா எனும் இடத்தில் முதலாவது விலங்கு மருத்துவமனை திறக்கப்பட்டது.

கேப்டன் வி. சுந்தரம் என்பவர் 1959 ஆம் ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான ‘இந்திய புளூ கிராஸ்’ என்ற அமைப்பை சென்னையில் நிறுவினார்.

CPCSEA

CPCSEA என்பது ‘விலங்குகள் மீதான சோதனைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்யும் குழு’ என்பதைக் குறிக்கிறது. இது விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுக்கும் சட்டம், 1960 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான குழுவாகும். விலங்குகள் மீதான சோதனைகளின்போது அவை தேவையற்ற துன்பங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 1999 ஆம் ஆண்ட முதல் இது செயல்பட்டுவருகிறது.

நமது நாட்டில் மூன்று வகையான பயிர்கள் வளர்கப்படுகின்றன.

காறிப் பயிர்கள்:

* மழைக்காலங்களில்(ஜூன் முதல் செப்டம்பர் வரை) வளர்க்கப்படும் பயிர்கள் காரிப் பயிர்கள் எனப்படும்.

நெல், சோளம், சோயா மொச்சை, நிலக்கடலை, பருத்தி ஆகியவை காரிப் பயிர்களாகும்.

ரபி பயிர்கள்

குளிர் காலங்களில் வளர்க்கப்படும் பயிர்கள் ரபி பயிர்கள் எனப்படும். கோதுமை, பருப்பு, பட்டாணி, கடுகு,ஆளி விதை போன்றவை ரபி பயிர்களாகும்.

சயாடு பயிர்கள்

* கோடை காலங்களில் வளர்க்கப்படும் பயிர்கள் சயாடு பயிர்கள் எனப்படும். முலாம்பழம். தர்பூசணி, வெள்ளரி போன்றவை கோடைகாலப் பயிர்களாகும்.

விதைப் பந்துகள்

விதைப்பந்துகள் எனப்படுபவை மண், மட்கிய குப்பை மற்றும் தாவர விதைகளின் கலவையாகும்.

இந்த விதைப் பந்துகள் நிலப் பரப்புகளில் வீசப்படுகின்றன. வீசப்பட்ட விதைப்பந்துகள் மழைக்காலத்தில் நாற்றுக்களாக முளைக்கின்றன. விதைப் பந்துகளை உருவாக்குதல் இயற்கையான சூழ்நிலை மண்டலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு படிநிலையாகும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI)

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி. பயிற்றுவித்தல்

மற்றும் விரிவாக்கத்திற்கான ஒரு தேசிய நிறுவனம் ஆகும்.

IAPI நிறுவனம் பூசா நிறுவனம் என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இதற்கு நிதியளித்து இதனை நிர்வகிக்கிறது.

*இந்தியாவில் 1970 ஆம் ஆண்டில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட ஆராய்ச்சிக்கு இதுவே காரணமாக இருந்தது.

க்ரிஷி விஞ்ஞான் கேந்த்ரா (KVK)

க்ரிஷி விஞ்ஞான் கேந்த்ரா ஒரு வேளாண் அறிவியல் நிலையமாகும். வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்புகளை உள்ளூர்களில் நடைமுறைப் படுத்துதல் இவற்றின் நோக்கமாகும்.

முதல் KVK 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் நிறுவப்பட்டது.

இலையில் தெளிப்பு

இலையில் தெளிப்பு எனப்படுவது திரவ நிலை உரங்களை தாவர இலைகளில் நேரடியாகச் செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் தொழில்நுட்பம் ஆகும்.

+ வேரின் மூலம் தாவரங்களுக்கு உணவளிக்க ஊட்டமளித்தல் பயனுள்ளதாக உள்ளது. முடியாதபோது இலைவழி

பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா என்பது வளர்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு கரைசலாகும். இது பசுவிலிருந்து பெறப்பட்ட மாட்டுச் சாணம், மாட்டின் சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டது. இந்த ஐந்து பொருள்களும் பஞ்சகய்யா என அழைக்கப்படுகின்றன.

வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் நோய்களைத் தடுக்கும் திறனை பஞ்சகவ்யா கொண்டுள்ளது.

இது பூச்சிகளைத் தடுத்து விளைச்சலை அதிகரிக்கிறது.

உயிரி கொன்றுண்ணிகள்

தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளைத் தங்களது உணவாகவும்.தாங்கள் பெருகுவதற்கான ஊடகமாகவும் பயன்படுத்தக்கூடிய, இயற்கையில் காணப்படும் பூச்சிகள் உயிரி கொன்றுண்ணிகள் எனப்படும்.

கரும் பொறிவண்டு பழ மரங்களில் காணப்படும் ஒரு வகைப் பூச்சியாகும். இது. அம்மரத்தில் காணப்படும் சிவப்பு சிலந்திப் பூச்சிகளை உண்கிறது. ஒரு ஆண்டில் ன்கிறது. ஆயிரத்திற்கும் அதிகமான பூச்சிகளை இது உண்கிறது. ES

பூஞ்சை உயிரி -பூச்சிக்கொல்லிகள்

ட்ரைகோடெர்மாவிரைடு என்பது உயிரியல் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் ஒரு பூஞ்சையாகும்.

பூஞ்சைகளால் ஏற்படும் வாடல், இலைத் துரு நோய் மற்றும் வேர் நோய் போன்ற பலவகை நோய்களைக் கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.

பாக்டீரியா உயிரி பூச்சிக்கொல்லிகள்

பருத்தி மற்றும் சோளத் தாவரங்களைப் பாதிக்கும் லெபிடாப்டீரா பூச்சிகளைத் திறன்பட கட்டுப்படுத்த பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ் பாக்டீரியா வளர்ப்பு பயன்படுகிறது.

பஞ்சகவ்யா மற்றும் சிர தாவர இலைகளின் வடிகட்டிய திரவம் ஆகியவை உயிரி பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுகின்றன.

உயிரி உரங்கள்

+ மண்ணின் ஊட்டச் சத்தினை அதிகரிக்கும் உயிரினங்கள் உயிரி உரங்களாக்கும்.

சையனோபாக்டீரியா மற்றும் சில பூஞ்சைகள் உயிரி உரங்களின் முக்கிய வளங்களாகும்.

தனித்து வாழும் சையனோபாக்டீரியா ஒளிச்சேர்க்கை மற்றும் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகிறது. எ.கா. அனபீனா, நாஸ்டாக்.

கூட்டுயிர் வாழ் பாக்ட்டீரியாக்களும் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன. எ.கா. ரைசோபியம்

பட்டாணி போன்ற லெகூம் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ரைசோபியம் பாக்டீரியா வாழ்கிறது

காடு அழிப்பு

காடுகள் முக்கியமான புதுப்பிக்கத்தக்க வளங்கள் ஆகும். அவை உலகின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 30 சதவீதம் நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளன.

சிப்கோ இயக்கம் முக்கியமாக ஒரு வனப் பாதுகாப்பு இயக்கமாகும். ‘சிப்கோ’ என்ற சொல்லுக்கு ‘ஒட்டிக் கொள்வது’ அல்லது ‘கட்டிப் பிடிப்பது’ என்றுபொருள்.

இந்த இயக்கத்தின் நிறுவனர் சுந்தர்லால் பகுகுணா ஆவார்- மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் காடுகள் அழிந்துவிடாமல் அவற்றைப் பராமரித்தல் போன்ற நோக்கங்களுடன் இது 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

காடு அழிப்பின் விளைவுகள்

ஆண்டுதோறும் 1.1 கோடி ஹெக்டேர் பரப்பிலான காடுகள் உலகமெங்கும் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் வெட்டப்படுகின்றன.

சிற்றினங்களின் அழிவு

உலகிலுள்ள சிற்றினங்களுள் 80% சிற்றினங்கள் வெப்பமண்டல மழைக் காடுகளில் காணப்படுகின்றன.

விலங்குகளின் வாழ்விடம் அழிக்கப்படுவதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 50-100 வகையான விலங்குகள் அழிக்கப்படுகின்றன என்று அறிக்கைகள் கூறுகின்றன.

* கடுமையான சுற்றுச்சூழலிருந்து தப்பித்துக் கொள்ள பறவைகள் நீண்ட தூரம் பயணம் செய்வது இடம்பெயர்வு எனப்படும்.

சைபீரியாவில் நிலவும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து, சாதகமான சூழ்நிலை மற்றும் உணவைப் பெறுவதற்காக சைபீரிய கிரேன் பறவைகள் குளிர்காலத்தில் சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 200 மைல்கள் பயணிக்கின்றன.

அமேசான் காடு உலகின் மிகப் பெரிய மழைக்காடு ஆகும். 1இது பிரேசிலில்

அமைந்துள்ளது.

இதன் பரப்பளவு 60.00.000 சதுர கி.மீ. ஆகும்.

இது CO,வாயுவை சமன்செய்வதன் மூலம் பூமியின் கால நிலையை நிலைப்படுத்தவும்.

புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், உலகின் 20% ஆக்சிஜனை

இது உற்பத்தி செய்கிறது.

இங்கு சுமார் 300 பில்லியன் மரங்கள் உள்ளன.

இது பூமியின் நுரையீரல் எனப்படுகிறது.

சமூக வனவியல் என்ற சொல் முதன் முதலில் 1976 ஆம் ஆண்டில் அப்போதைய தேசிய விவசாய ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அமலுக்கு வந்தது.

சமூக மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் நோக்கத்துடன் காடுகளை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் தரிசு நிலங்களில் காடுகளை வளர்த்தல் ஆகியன இதன் நோக்கமாகும்.

ஏற்கனவே உள்ள காடுகளோடு சேர்த்து, புதிதான காடுகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

* 1977 ஆம் ஆண்டில் கென்யாவில் ‘பச்சை வளைய இயக்கம்’ என்ற அமைப்பை வாங்கரி மாதாய் நிறுவினார். இந்த இயக்கம் 51 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை கென்யாவில் நட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் – ஜூன் 28

ஓசோன் தினம் செப்டம்பர் 16

ஒவ்வொரு ஆண்டும். மே 22 ஆம் நாள் உலக உயிரிகளின் பன்முகத்தன்மை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பன்முகத்தன்மை என்பது பல்வேறு தாவரங்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள். நுண்ணுயிரிகள், பூச்சிகள், வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு போன்றவற்றை விவரிக்கப் பயன்படும் சொல்,

அழியும் தருவாயிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள்

தாவரங்கள்

விலங்கு

குடை மரம்

பனிச் சிறுத்தை

மலபார் லில்லி

ஆசிய சிங்கம்

ராஃப்லீசியர் மலர்

சிங்க வால் குரங்கு

இந்திய மல்லோ

இந்திய காண்டாமிருகம்

முஸ்லி தாவரம்

நீலகிரி வரையாடு

+ ஏமன் பட்டாம்பூச்சி தமிழகத்தின் மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இனம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 32 பட்டாம்பூச்சி இனங்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஒரு காலத்தில் டைனோசர், ஃபெரணிகள் மற்றும் சில ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமியில் பரவலாகக் காணப்பட்டன.

இடம் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ அவை பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன.

புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்பது ஒரு வனவிலங்கு பாதுகாப்புத் திட்டமாகும்.

இது 1972 ஆம் ஆண்டு இந்தியாவில் வங்கப் புலிகளைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.

இத்திட்டம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று செயல்படுத்தப்பட்டது

புலிகள்

பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா கார்பெட்

தேசியப் பூங்கா ஆகும்.

புலிகள் திட்டம்’ காரணமாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2006 ல் 1,400 ஆக இருந்து 2018 ல் 2907 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர பின்வரும் சட்டங்களையும் அரசு இயற்றியுள்ளது.

1. மெட்ராஸ் வனவிலங்குச் சட்டம். 1873.

2 அகில இந்திய யானை பாதுகாப்புச் சட்டம், 1879.

3. வனப் பறவை மற்றும் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம். 1912.

4. வங்கக் காண்டாமிருகச் சட்டம், 1932

5. அகில இந்திய வனவிலங்குபாதுகாப்புச் சட்டம். 1972

6. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986.

சிவப்பு தரவு புத்தகம்

> சிவப்பு தரவு புத்தகம் என்பது அரிதான மற்றும் அழியும் தருவாயிலுள்ள உயிரினங்களான விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளைப் பதிவு செய்வதற்கான கோப்பாகும்.

சிவப்பு தரவு புத்தகத்தை ‘இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம்’ என்ற அமைப்பு பராமரிக்கிறது.

இதுவரை பூமியில் மீது வாழந்த ஒவ்வொரு உயிரினங்களின் முழுமையான பதிலைப் பராமரிக்கும் நோக்கத்துடன் 1964 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.

UCN- -இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் .

WWF-உலக வனவிலங்குநிதி

ZSI -இந்திய விலங்கியல் ஆய்வு

BRP-உயிர்க்கோள பாதுகாப்புத் திட்டம்

CE

CPCB – மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் காலநிலை மாற்று அமைச்சகத்தின் (MOEFCC) மூலம் 1969 ஆம் ஆண்டில் இந்தியா ஐயூசி.என் என்ற அமைப்பின் மாநில உறுப்பினரானது. ஐயூசிஎன் அமைப்பின் இந்திய அலுவலகம் 2007 ஆம் ஆண்டு புதுதில்லியில் நிறுவப்பட்டது.

பாதுகாத்தல்

WWF (உலக வனவிலங்கு நிதியம்) அமைப்பின் தகவலின்படி, கடந்த 40 ஆண்டுகளில் விலங்குகள், பறவைகள், மீன், ஊர்வன மற்றும் நீர்வாழ்வினங்களின் எண்ணிக்கை 60% குறைத்துள்ளது.

குறிப்பு

பாலைவன வெட்டுக் கிளிப்பூச்சிகள் பெருந்திரள்

கூட்டமாக (ஒரு பெருந்திரள்

கூட்டத்தில் சுமார் 50,000 மில்லியன் இருக்கும்) இடம்பெயரும்போது ஒரு நாளைக்கு

3,000 டன்கள் தாவரங்களை உண்கின்றன.

சால்மன் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகக் கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1,500 மைல்கள் (2,400கி.மீ) வரையிலும் பயணிக்கின்றன. முற்றிலும் ஆற்றலிழந்த

நிலையில் இனப்பெருக்கத்திற்குப்பின் மீன்கள் பல இறந்து விடுகின்றன.

பிரேசில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக எட்டு வாரங்களில் 1,250 மைல்கள் (2.000கி.மீ) பயணிக்கின்றன.

வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3.700 மைல்களுக்கும் (5000 கி.மீ) மேலாகப் பயணிக்கின்றன. இதுவே, பாலூட்டிகளில் நீண்ட தூரம் இடம் பெயரும்

வருடாந்திர வலசைபோதலாகும்.

சிறுத்தை 1950 இல் இருந்து அழிந்த இனமாக உள்ளது

புகழ்வாய்ந்த ஆலிவர் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்க இடம் ஒடிஸா கடற்கரையில் உள்ளது.

பருந்து அலகு ஆமைகளின் இனப்பெருக்க இடம் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ளது.

+ பசுமை அமைதி அமைப்பு திமிங்கிலங்களை வேட்டையாடுவதைத் தடை செய்யக் காரணமாக இருந்தது.

சுந்தர்லால் பகுகுணாவினால் தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் இமயமலையின் சில பகுதிகளில் மரங்கள் வெட்டி சாய்ப்பதைத் தடுத்து நிறுத்தியது.

விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் மூன்று மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியவை. நன்கு வளர்ச்சியடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோகிராம் எடை அல்லது அதற்கு இணையான ஒருவரைத் தாங்கும் திறன் கொண்டது.

+தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் (Air Spaces) அவை நீரில் மிதக்க உதவுகின்றன.

+ பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது.

உலகில் மிக நீளமான நதி நைல் நதியாகும். இது 6,650 கி.மீ. நீளம் உடையது இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும். இதன் நீளம் 2.525 கிமீ

+ 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவாழ்த் தாவரங்கள், மால்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகும்.

தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் மலைக் காடுகள், உலகிற்கான ஆக்ஸிஜன் தேவையில் பாதியை உற்பத்தி செய்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது.

மணல் குன்றுகளால் ஆன மிகப் பெரிய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது.

இதன் ஒரு பகுதி வடமேற்கு இந்தியாவிலுள்ள ராஜஸ்தானிலும், மற்றொரு பகுதி கிழக்கு பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்திலும் காணப்படுகிறது.

உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

உலக உணவு தினம் அக்டோபர் 16.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சத்துணவின் தேவையையும் வலியுத்தி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளை கொண்டாடுகிறது. மையமாகக் கொண்டு இத்தினத்தினைக்

அமேசான் அல்லி தாவரத்தின் இலையின் விட்டம் 7 அடி. அதன் மலர் 12 முதல் 16 அங்குலம் உடையது.

J.C. போஸ். இந்திய தாவரவியல் வல்லுநர்.

J.C. போஸ் கண்டுபிடித்த கிரைசோகிராப் கருவி மூலம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பது தெரியவந்தது.

தாவரங்கள் பகலில் ஒளிச்சேர்க்கையின் போது கரியமிலவாயுவை உள்ளே எடுத்துக்கொண்டு உயிர்வளியை வெளிவிடுகின்றன. அனைத்து நேரங்களிலும் சுவாசித்தலின்போது உயிர்வளியை உள்ளே எடுத்துக்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடுகின்றன.

எனவே, இரவில் மரத்தடியில் உறங்கக் கூடாது.

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டும் மற்றும் ஈடுசெய்யும் நிகழ்வுகளாகும்.

÷ 2009 ஆம் ஆண்டு மூன்று அறிவியல் அறிஞர்கள் ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றனர்.

இதில் குறிப்பாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இந்தியாவில் பிறந்த, அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஆவார்.

மற்றவர்கள். தாமஸ் ஸ்டெய்ஸ் (அமெரிக்கா) அடாயத் (இஸ்ரேல்) ஆவர்.

நார்களின் வகைகள்

நெசவு நார்கள் (துணி நெய்ய உதவும் நார்கள்) (எ.கா) பருத்தி

S

கயிறு நார்கள் (கயிறு தயாரிக்க உதவும் நார்கள்) (எ.கா) தென்னை

நிரப்பும் நார்கள் (மெத்தைகள் தயாக்க உதவும் நார்கள்) (எ.கா) இலவம் பஞ்சு

கிடைக்கப்பெறும் தாவர பாகங்களின் அடிப்படையில்

1. விதைகளின் மேற்புறத்தூவி நார்கள் (எ.கா) பருத்தி

2. தண்டு அல்லது தண்டி ழை நார்கள் (எ.கா) ஆளி. சணல்

3. இலை நார்கள் (எ.கா) கற்றாழை

4. உரிமட்டை நார்கள் (எ.கா) தேங்காய்

இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம். ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம். திரிபுரா

மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகின்றது. மேற்கு வங்காளம் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில், 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.

+ மரக்கட்டைகளிலிருந்து மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய

வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே

ஒட்டுப்பலகை (Plywood) ஆகும்.

+ வேப்ப எண்ணெய் உருவாக்கியுள்ளனர். பூசப்பட்ட யூரியாவினை இந்திய விஞ்ஞானிகள்

இது நைட்ரஜனை மெதுவாக வெளியிடுவதால் தாவரங்கள் அதிக அளவு நைட்ரஜனை எடுத்துக் கொள்கின்றன.

இது யூரியாவினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது.

அலங்காரத் தாவரங்கள்

நிலத்தில் இயற்கை அழகுத் தோட்டங்களை மேம்படுத்த இவை வளர்க்கப்படுகின்றன. எ.கா. குரோட்டன்யூபோர்பியா

வாழை மற்றும் மாங்கனி உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. கோதுமை, மற்றும் நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மண் வளம் என்ற சொல், பயிர்த் தாவரங்களுக்குத் தேவையான அளவு ஊட்டப்பொருள்களை உகந்த விகிதத்தில் அளிக்கவல்ல மண்ணிற்கே உரிய திறனைக் குறிக்கிறது.

2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், நன்னீர் வளத்தில் 70 விழுக்காடு விவசாயத்திற்கே பயன்படுகிறது. எனவே சொட்டு நீர்ப்பாசனமே இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலகெங்கும் 30,000 க்கும் மேற்பட்ட களை வகைகள் காணப்படுகின்றன.

அவற்றுள் 8000 வகைகள் பயிர்களுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இந்திய உணவுக் கழகம் (FCI) 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் பொது விநியோகக் திட்டத்தின் (POS) கீழ் உணவு தானியங்களை நிர்வகித்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.

தற்போது இதன் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது.

* லெகுமினோஸ் தாவரங்கள் தமது வேர் முடிச்சுகளில் காணப்படும் ரைசோபியம் பாக்டீரியாக்களுடன் கூட்டுயிர் வாழ்க்கை வாழ்கின்றன. இந்தத் தாவரங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் திறன் பெற்றவை. குதிரை மசால், லுப்பின்ஸ். காரோப் சோயா, வேர்க்கடலை போன்றவை இவற்றிற்கு உதாரணமாகும். இந்த வகைத் தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனின் அளவை அதிகரிப்பதற்காக பயிர்ச் சுழற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

கொல்கத்தாவில் அமைந்துள்ள அரசு தாவரவியல் தோட்டம் முதன்முறையாக விதை வங்கிக்காக விதைகளைச் சேமிக்கத் தொடங்கியது.

உள்ளுர் ரக விதைகளைச் சேமிப்பதற்காக இவை தோற்றுவிக்கப்பட்டன.

+ புதுடில்லியில் அமைந்துள்ள நவதானிய விதை வங்கி எனப்படும் அரசு சாரா நிறுவனம், தாவர இனங்களின் பாதுகாப்பானை முதன்மையாகக்கொண்டு ஏறத்தாழ 50000 பயிர் ரகங்களைப் பாதுகாக்கிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஸ் சந்திர போஸ் இந்திய தாவரவியல்

தோட்டம் ஆரம்பத்தில் ராயல் தாவரவியல் தோட்டம் என்று அழைக்கப்பட்டது.

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top