*சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் கிரேக்க நாட்டின் மெக்னீசியா (ஆசிய மைனர்) என்ற வஊரில் மேக்னஸ் என்ற சிறுவனால் காந்தங்கள் கண்டெடுக்கப்பட்டது.
* கி.பி 1200 இல் காந்தத்தினை திசைக் காட்டியாகப் பயன்படுத்தி நீண்ட தூர கடல் பயணத்தினை செய்துள்ளனர்.
* காந்தர்கள் திசையினை அறியப் பயன்படுவதால் “வழிகாட்டும் கற்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
* காந்தங்கள் மனிதர்களை ஈர்க்கக்கூடிய பொருட்களாக உள்ளன எனக் கூறியவர் – ஐன்ஸ்டீன்
* காந்தவியல் எனும் அறிவியல் பிரிவு உருவாக காரணமானவர் வில்லியம் கில்பர்ட்
(1544 ஆம் ஆண்டு, மே மாதம் 24 பிறந்தார்.)
பூமி மிகப்பெரிய காந்தம் என்பதனை வலியுறுத்தினார்.
முதன்முதலில் காந்தக் கல் (காந்தத்தின் இரும்புத் தாது) குறித்த முறையான ஆய்வினை. மேற்கொண்டார்.
தனது கண்டுபிடிப்புகளை ‘தி மேக்னடைம்’ எனும் நூலில்
வெளியிட்டார்.
* காந்தத்தால் ஈர்க்கப்படக் கூடிய பொருள்கள் காந்தத் தன்மைமயுள்ள பொருள்கள் ஆகும். (எ.கா) இரும்பு, கோபால்ட், நிக்கல்
* காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் காந்தத் தன்மையற்ற பொருள்கள் எனப்படுகின்றன. (எ.கா) காகிதம், நெகிழி.
* காந்தத்தின் எந்தப் பகுதியில் இரும்புத் துகள்கள் அதிகம் ஒட்டியுள்ளனவோ அந்தப் பகுதியே காந்தத்தின் துருவங்கள் ஆகும்.
* தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வரும்.
காந்தங்களின் வகைகள்:
இரண்டு வகை
1. இயற்கைக் காந்தங்கள்
2. செயற்கைக் காந்தங்கள்
1. இயற்கைக் காந்தங்கள்:
* இயற்கையில் கிடைக்கும் காந்தங்கள் ஆகும்.
* ஒரு போதும் காந்தத் திறனை இழக்காமல் இருப்பதால் அவை “நிலையான காந்தங்கள்” ஆகும்.
*இவை புவியில் வெல்வேறு இடங்களில் மணலோடு படிந்து காணப்படுகின்றன.
* இரும்பின் தாது மேக்னடைட் (இரும்பு ஆக்ஸைடு) எனப்படும் காந்த கல்லே வலிமையான இயற்கைக் காந்தமாகும்.
(எ.கா)
1. பைரோடைட் (இரும்பு சல்பைடு)
2. பெர்ரைட்
3. கூலும் பைட்
இரும்பின் தாதுக்கள் மூன்று வகை:
1. ஹேமடைட் (இரும்பு 69%)
2. மேக்னடைட் (இரும்பு 72.4%)
3. சிடரைட் (இரும்பு 48:2%)
* மேக்னடைட் இரும்பின் ஒரு ஆக்ஸைடு தாது ஆகும்.
* மேக்னடைட் (Fe3,O4.) அதிகமான காந்தப்பண்பைப் பெற்றுள்ளது.
2. செயற்கைக் காந்தங்கள்:
* ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தங்கள் செயற்கைக் காந்தங்கள் ஆகும்.
* இயற்கைக் காந்தங்களை விட செயற்கைக் காந்தங்கள் வலிமையானவை.
* புறக் காந்தப்புலத்தில் ஒரு பொருளினை வைத்து, அதனை நிலையான அல்லது தற்காலிகக் காந்தமாக உருவாக்கும் முறையே காந்தமாக்கல் எனப்படும்.
இது செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளுள் ஒன்றாகும்.
* செயற்கைக் காந்தங்களை உருவாக்கப் பயன்படும் பொருள்கள் இரும்பு, நிக்கல், கோபால்ட், எஃகு.
* உலோகக் கலவையான நியோடினியம் மற்றும் சமாரியம் ஆகியவற்றின் உலோகக் கலவையைப் பயன்படுத்தி செயற்கைக் காந்தங்கள் உருவாக்க இயலும்.
* பொதுவாக இரும்பு (அ) எஃகு உலோக கலவைகளை மின்முறையில் காந்தமாக்கி தயாரிக்கின்றன.
* மேலும் மேகன்டைட் (அ) செயற்கைக் காந்தங்கள் கொண்டு காந்தப் பொருள்களை அடிக்கும் போது செயற்கைக் காந்தங்கள் தயாரிக்கப்படுகின்றன.
* செயற்கைக் காந்தங்களை வெவ்வேறு வடிவங்களில் உருவாக்க முடியும்.
(எ.கா)
1. சட்டக் காந்தங்கள்
2. U- வடிவ காந்தங்கள்
3. குதிரை லாட வடிவ காந்தங்கள்
4. உருளை வடிவ காந்தங்கள்
5. வட்டு வடிவ காந்தங்கள்
6. வளைய வடிவ காந்தங்கள்
7. மின் காந்தங்கள்
* காந்தப் பண்புகளை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தின் அடிப்படையில் இரண்டு வகை.
1. தற்காலிக காந்தங்கள்
2. நிலையான காந்தங்கள்
1. தற்காலிக காந்தங்கள்
* தேனிரும்பை பயன்படுத்தி தற்காலிக காந்தம் தயாரிக்கப்படுகிறது.
* தேனிரும்பானது, மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருளால் உருவாகும் புறக் காந்தப்புலத்தால் காந்தமாகச் செயல்படுகிறது.
* மின்சுற்றில் மின்னோட்டம் நிறுத்தப்பட்ட உடனே தற்காலிக காந்தங்கள் காந்த பண்புகளை இழந்துவிடும்.
பயன்பாடு:
* மின்சாரமணி.
* சுமைத்தூக்கிகள்.
2. நிலையான காந்தங்கள்
* புறக்காந்தப்புலம் இல்லாத போதும், தொடர்ந்து காந்தப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் செயற்கைக் காந்தங்களை நிலையான காந்தங்கள்’ ஆகும்.
* எஃகு மற்றும் சில உலோக கலவைப் பொருட்களைப் பயன்படுத்தி நிலையான காந்தங்கள் தயாரிக்கப்படுகிறது.
* பொதுவாக பெரும்பாலும் நிலையான காந்தங்கள் (அல் நிக்கோ ALNICO, அலுமினியம், நிக்கல், மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் உலோகக் கலவை)
உலோகக் கலவையால் தயாரிக்கப்படுகின்றன.
பயன்பாடு.
1. குளிர்பதனி
2 சட்டக்காந்தம்
3. ஒலிப்பெருக்கி
4. காந்த ஊசி
* “நியோடிமியம் (Neidynium)” காந்தங்கள் பூமியில் காணப்படும் வலிமையான திறன் மிகுந்த காந்தங்களாகும்.
காந்தப் பண்புகள்:
ஒரு காந்தத்தின் பண்புகளை கீழ்க்கண்ட தலைப்புகளில் விளக்க இயலும்
1. கவரும் பண்பு
2. விலக்கும் பண்பு.
3. திசைக் காட்டும் பண்பு
1. சுவரும் பண்பு
* ஒரு காந்தமானது எப்பொழுதும் இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற பொருள்களைக் கவரக்கூடியது.
* ஒரு சட்டக் காந்தமானது இரு துண்டுகளாக உடையும் போது உடைந்த பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தனி சட்டக் காந்தமாக மாறும்.
* ஒரு காந்தத்தை செங்குத்தாகப் பிளக்கும்போது, காந்தத்தின் நீளத்தில் மாற்றம் ஏற்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஒரு காந்தமாக மாறும் அதேபோல் ஒரு காந்தத்தை கிடைமட்டமாகப் பிளக்கும்போது புதிய பகுதிகளின்
துருவங்களும், அவற்றின் நீளமும் மாறாமல் இருக்கும்.
இவ்விரு நிகழ்வுகளிலும் காந்தத்தின் வலிமையானது குறைகின்றது.
2. விலக்கும் பண்பு
* காந்தத்தின் ஒரின முனைகள் ஒன்றையொன்று விலக்கும்.
3. திசைகாட்டும் பண்பு
* காந்த திசைகாட்டும் கருவி என்பது திசையறிய உதவும் ஒரு காந்த ஊசிப்பெட்டி ஆகும்.
* ஒரு காந்தத்தின் வடமுனை, புவியின் வடதிசையிலும், தென்முனை புவியின் தென்திசையிலும் வந்து நிற்கும்.
* கப்பல்கள் மற்றும் விமானங்களில் காந்த திசைகாட்டும் கருவி பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. மலையேறுபவர்கள் தாங்கள் திசைமாறி வேறு இடத்திற்குச் செல்லாமலிருக்க இதை அவசியம் எடுத்துச்செல்கின்றனர்.
* ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் காந்த கற்களைக் கட்டி தொங்கவிட்டால், அவை வடக்கு – தெற்கு திசையிலேயே ஓய்வுநிலைக்கு வருவதைக் கண்டறிந்தனர்.
* காந்தத்தன்மையுடைய கற்களைக் கொண்டு திசைகாட்டும் கருவிகள் செய்து பயன்படுத்தினர்.
* சீன மாலுமிகள் தங்கள் படகுகளிலும் கப்பல்களிலும் இத்தகைய கற்களைக் கொண்டு, புல்காலங்களிலும், மூடுபனி காலங்களிலும் திசையையறிந்து பாதுகாப்பான கடல் பயணங்களை மேற்கொண்டனர்.
காந்தப்புலம்
* காந்தத்தினைச் சுற்றி காந்த விளைவு அல்லது காந்த விசை உணரும் பகுதி
காந்தப்புலம் ஆகும்.
* காந்தப்புலத்திற்கான அலகு – டெஸ்லா
ஒரு டெஸ்லா =10000 காஸ்
* காந்தபுலமானது காற்றில் மட்டுமல்ல, அனைத்து வகையான பொருட்களிலும் ஊடுருவிச் செல்லும்,
பூமி அதன் காந்தப்புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது. இது சூரியனின் சூரியக் காற்றிலிருந்து பூமியின் ஓசோன் அடுக்கைப் பாதுகாக்கின்றது மற்றும் திசைகாட்டி மூலம் கடல் வழிப் பயணத்திற்கும் அவசியமாகிறது.
* சில கடல் ஆமைகள் (லாஜெர்ஹெட் கடல் ஆமை) அவை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன.
* ஒரு ஆராய்ச்சியில், ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய புவிக்காந்த உருப்பதித்தல் என்னும் முறையைக் கையாளுகின்றன என்று கூறப்படுகிறது.
இந்த ஆமைகள், புவியின் பல்வேறு இடங்களிலுள்ள காந்தப்புல வலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை. இந்த நினைவாற்றல் அவை தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறது.
காந்தப்பாயம்
* ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாகக் கடந்து வரும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை ஆகும்.
* காந்தப் பாயத்தின் அலகு -வெபர் (Wb)
காந்தப் பாய அடர்த்தி (B)
* காந்தவிசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பைக் கடந்து செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி ஆகும்.
* காந்தப்பாய அடர்த்தியின் அலகு – வெபர் / மீ²(Wb/m²)
காந்தவிசைக் கோடுகளின் பண்புகள்:
* காந்தத்தைச் சுற்றியுள்ள வளைந்த கோடுகள் காந்தவிசைக் கோடுகள் ஆகும்.
* காந்தத்தின் வடதுருவத்தில் துவங்கி தென்துருவத்தில் முடிவடையும் ஒரு போதும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
* இவை காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் அதிகமாக இருக்கும்.
* வளைகோட்டின் எந்தவொரு புள்ளியிலும் வரையப்படும் தொடுகோடானது காந்தப்புலத்தின் திசையைக் காட்டுகிறது.
* காந்தப் பொருட்களை (காந்தப்புலத்தால் கவரப்படும் பொருட்கள்) இரண்டு வகை
1. மென்காந்தப் பொருட்கள்:
காந்தப் பொருட்களை எளிதாகக் காந்தப்படுகின்றன.
2 வன்காந்தப் பொருட்கள்:
காந்தப் பொருட்களை காந்தமாக்க வலிமையான காந்தப்புலம் தேவைப்படுகிறது.
* காந்தப்புலத்தில் வைக்கப்படும் போது அவை வெளிப்படுத்தும் பண்பை அடிப்படையாகக் கொண்டு மூன்று முறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. டயா காந்தப்பொருள்
2. பாரா காந்தப்பொருள்
3. ஃபெர்ரோ காந்தப்பொருள்
டயா காந்தப்பொருள்
* காந்தப் புலத்திற்கு எதிரான திசையில் காந்தமாகும்
(எ.கா)
* பிஸ்மத், தாமிரம், பாதரசம், தங்கம், நீர், ஆல்கஹால், காற்று, மற்றும் ஹைட்ரஜன்.
* வெப்பத்தினால் இவ்வகைப் பொருட்களின் காந்தப் பண்புகள் மாற்றமடைவதில்லை.
பாரா காந்தப்பொருள்
காந்தப் புலத்தின் திசையில் காந்தமாகும்.
(எ.கா)
* அலுமினியம், பிளாட்டினம் குரோமியம், ஆக்ஸிஜன், மாங்கனீஸ், போன்ற உலோகங்களும், நிக்கல் மற்றும் இரும்பின் உப்புக் கரைசல்களும் பாரா காந்தப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இவ்வகைப் பொருள்களின் காந்தப் பண்புகள் வெப்பத்தினால் மாற்றமடைகின்றன.
ஃபெர்ரோ காந்தப்பொருள்
* காந்தப்புலத்தின் திசையில் வலிமையான காந்தமாகும்.
(எ.கா)
* இரும்பு, கோபால்ட், நிக்கல், எஃகு மற்றும் இவற்றின் உலோகக் கலவைகள் ஆகியவை பெர்ரோ காந்தப் பொருள்கள் ஆகும்.
* வெப்பத்தினால் இவ்வகைப் பொருட்களின் காந்தப் பண்புகள் மாற்றமடையும்.
*பெர்ரோ காந்தப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது பாரா காந்தப் பொருட்களாக மாற்றமடையும்.
* எந்த ஒரு வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப் பொருட்கள் பாரா காந்தப் பொருட்களாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை “கியூரி வெப்பநிலை” எனப்படும்.
ஒரு காந்தத்தின் காந்தப் பண்புகளை கீழ்க்காணும் வழிகளில் நீக்கலாம்
* காந்தப் பொருட்களைத் தொடர்ந்து அடித்தல்
* உயரமான பகுதிகளிலிருந்து காந்தத்தினை கீழே போடுதல்
* ஒரு காந்தத்தினை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்துதல்.
* காந்தத்தினை சுற்றியுள்ள கம்பிச் சுருளில் வேறுபட்ட மின்னோட்டத்திசை பாயச் செய்தல்.
* புறக்காந்தப்புலத்தால் ஒரு பொருளின் நிலையான (அ) தற்காலிக காந்தமாக உருவாக்கும் முறையே காந்தமாக்கம் ஆகும்.
* கைப்பேசி, குறுந்தகடு, கணினி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத் தன்மையை இழந்துவிடும்.
காந்தங்களைப் பாதுகாத்தல்:
* இரண்டு சட்டக்காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது
போல் இணையாக வைத்து ஒரு மரக்கட்டையை வைத்து பாதுகாக்க வேண்டும்.
* இரண்டு தேனிரும்புத் துண்டுகளை காந்தங்களின் முனைகளுக்கு குறுக்கே வைத்து சட்டக்காந்தம் பாதுகாக்க வேண்டும்.
* லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்கு குறுக்கே ஒரு தேனிரும்புத் துண்டை வைத்து பாதுகாக்க வேண்டும்.
புவிக்காந்தம்:
புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென்முனை ஆனது, புவியில் வட முனைக்கு அருகிலும், புவிகாந்தத்தின் வடமுனை ஆனது புவியியல் தென் முனைக்கு அருகிலும் அமைந்துள்ளது.
* காந்தங்களின் துருவங்களை இணைக்கும் நேர்கோடானது காந்த அச்சு என அழைக்கப்படுகிறது.
* காந்த அச்சு மற்றும் புவியின் அச்சு (சுழல் அச்சு) ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதில்லை.
* புவியின் அச்சிற்கு 10 முதல் 15 வரை காந்த அச்சிற்கு சாய்வாக உள்ளது.
* குளிர்பதனிகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தைவிட புவிக்காந்தமானது 20 மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.
புவியின் காந்தத் தன்மைக்குக் காரணம்:
1. புவியில் உள்ள காந்தப் பொருள்களின் நிறை
2. சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகள்
3. நிலவின் செயல்திறன்
* இருப்பினும் புவியின் ஆரம் 6400 km உடன் ஒப்பிடும் போது, புவியின் உட்பரப்பில் சுமார் 3500 km வரை உள்ளகப் பகுதியில் உருகிய நிலையில் உலோகப் பாய் பொருட்கள் இருப்பதனால் புவி காந்தப்புலம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
* காந்தப்புல வலிமையின் எண் மதிப்பானது. புவிப்பரப்பின் நெடுக்கத்தில் 25 லிருந்து 65 மைக்ரோ டெஸ்லா ஆக இருக்கும்.
காந்தத்தின் பயன்கள்:
* பழங்காலத்தில் கடலில் பயணம் செய்வோருக்கு திசையினை அறிவதற்கான திசைக்காட்டும் கல்லாக காந்தம் பயன்பட்டது.
* தற்காலத்தில் டைனமோக்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பாற்கு காந்தங்கள் பயன்படுகின்றன.
* மின்சார மணிகளிலும், மின் மோட்டார்களிலும் காந்தங்கள் பயன்படுகின்றன.
* ஒலிப்பெருக்கிகளிலும், நுண் பேசிகளிலும் (micro phones) காந்தங்கள் பயன்படுகின்றன.
* வங்கிகளில் காசோலைகள் மீது அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்துக் கொள்வதற்கு கணினிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தங்கள் பயன்படுகின்றன.
* காந்தங்கள் கணினியில் அதன் சேமிக்கும் சாதனங்களில் நிலைவட்டுக்களாகப் (HARD DISE) பயன்படுகிறது.
*திறகு ஆணி குறடுகளில் (Screw Drivers) அதன் முனைகளில் காணப்படும் சிறிய அளவிலான காந்தப்பண்பு திருகு ஆணிகளைப் பிடிக்க உதவுகிறது.
* மருத்துவமனைகளில் வலிமையான மின்காந்தங்களைப் பயன்படுத்தி MRI (Magnetic Resonance Imaging) (காந்த ஒத்ததிர்வு) மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பின் நிழலுருக்களை உருவாக்கிட உதவுகிறது.
* காந்தப் பொருள்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக் பொருள்களைப் பிரித்தெடுப்பதற்கு தொழிற்சாலைகளில் ‘காந்தக் கடத்துப் பட்டைகள் (Conveyor belts) பயன்படுகின்றன.
பறக்கும் இரயில்:
* காந்தங்களின் விலக்கு விசையைக் கொண்டு பறக்கும் இரயில் இயக்கப்படுகிறது.
* மின்காந்தத் தொடர் வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
* தொடர்வண்டியின் அடியிலும், தண்ட வாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதன் காரணமாக இத்தொடர் வண்டிகள் தண்ட வாளத்திலிருந்து 10cm உயரத்தில் அந்தரத்தில் நிலைநிறுத்தப்படுகின்றன.
* சக்கரம் இல்லாததால் உராய்வு விசை கிடையாது சத்தம் உருவாக்குவதில்லை.
* குறைந்த மின்சாரம் பயன்படுவதால் கற்றுச் சூழலுக்கு உகந்தவை.
* இதன் வேகம் மணிக்கு 300km வேகத்திற்கு மேல் எளிதாகச் செல்லலாம் ஆனால் 600km வேகம் கூட செல்லும் திறன் உடையவை.
* சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் தற்போது நடைமுறையில் பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது.
* மின்காந்த தொடர்வண்டியை மிதக்கும் தொடர்வண்டி என்பார்கள். ஆனால் பிரான்ஸ் நாட்டில் பறக்கும் தொடர்வண்டி எனக் கூறுவர்.
* ஜப்பான் நாட்டில் 320km / மணி என்ற வேகத்தில் பயணிக்கிறது. (அதிகபட்சமாக 603 km / மணி) இதன் பெயர் – Scmasler
சீனா நாட்டில் 350 km / மணி என்ற வேகத்தில் பயணிக்கிறது. (அதிகபட்சமாக 501 km /மணி). இதன் பெயர் Shangai maslev train
தென்கொரியா நாட்டில் 300 km / மணி என்ற வேகத்தில் பயணிக்கிறது (அதிகபட்சமாக 421 km / மணி) இதன் பெயர் KTX
இந்தியாவில்
1. மும்பை -டெல்லி
2. மும்பை -நாக்பூர்
3. சென்னை, பெங்களூரு, மைசூரு போன்ற வழித்தடங்களில் இயக்குவதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் பரிசீலக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பு:
மெக்லிவ் (maglev) தொடர் வண்டிக்கு (காந்த விலக்கத் தொடர்வண்டி) சக்கரங்கள் கிடையாது.
கணினி வழி கட்டுப்படுத்தும் மின்காந்தங்கள் மூலம் வலிமையான காந்த விசையானது கொடுக்கப்படுவதால் தண்டவாளங்களுக்கு மேலே இது மிதந்து செல்லும்.
இது உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டியாகும். இது தோராயமாக 500 கி.மீ / மணி. வேகத்தில் செல்லக்கூடியது.
* கடன் / அட்டை பற்று அட்டைகளின் பின்புறத்தில் உள்ள ஒரு காந்தவரி அட்டை இது பெரும்பாலும் “மாக்ஸ்ட்ரைப்” என்று அழைக்கப்படுகிறது.
மாகஸ்ட்ரைப் என்பது இரும்புக் காந்தத் துகள்களால் ஆன மெல்லிய நெகிழிப் படலம் ஆகும்.
* உண்மையில் ஒவ்வொரு துகளும் ஒரு அங்குல நீளத்தில் 20 மில்லியனில் ஒரு பங்கு கொண்ட சிறிய சட்டக்காந்தமாகும்.
* கால்நடைகள் புல் மேயும்போது கூர்மையான இரும்புக்கம்பி மற்றும் பிற இரும்புப் பொருள்களையும் உண்பதால் செரிமானப் பகுதி காயமடைகிறது. அல்நிக்கோ எனப்படும் பசுக்காந்தங்கள் இத்தகைய பொருள்களைக் கவர்ந்திழுத்து கால்நடைகளைப் பாதுகாக்கின்றன.
* பால்வழி விண்மீன் திரளில் அமைந்துள்ள மேக்னிட்டார் என்று அழைக்கப்படும் காந்த நீயூட்ரான் விண்மீனே நடைமுறையில் காணப்படும் அதிக திறன் மிகுந்த காந்தமாகும்.
மேக்னிட்டார். 20 கிலோ மீட்டர் விட்டமும், சூரியனைப்போன்று 2 அல்லது 3 மடங்கு நிறையும் கொண்டது. இதன் மிக அதிக காந்தப்புலம் ஊறு விளைவிக்கக் கூடியது.
அதன் நிலையிலிருந்து ஓர் உயிரி 1000 கி.மீ தூரத்தில் இருந்தாலும் கூடி அந்த உயிரியின் இரத்த ஓட்டத்திலுள்ள அனைத்து இரும்பு அணுக்களையும் (ஹீமோகுளோபின்) உறிஞ்சும் திறன் கொண்டது.
* புவி காந்தப்புலத்தைப் பயன்படுத்தி திசை அறிவதற்காக பெரும்பான்மையான பறவைகளும், விலங்குகளும் அவற்றின் கண்களில் காந்த நுண் உணர்வுகளைப் பெற்றுள்ளன.
ஜீப்ராபின்ச் என்ற பறவை. அதன் விழித்திரையில் உள்ள கிரிப்டோகுரோம்ஸ் என்ற புரதத்தைக் கொண்டு, புவிகாந்தப்புலத்தை உணர்ந்து அது பறக்கும் திசையை அறிந்துகொள்கிறது.
* புறாக்களுக்கு அசாதரணமான நீண்ட தூரம் பயணித்து திரும்பும் திறன் இருக்கிறது.
இதுவரை பார்க்காத பகுதிகளில் கொண்டு விட்டாலும் புவியின் காந்தப்புலத்தினை அறிந்திடும் மேக்னடைட் என்னும் காந்தப்பண்பு போதுமான அளவிற்கு அவற்றின் அலகுகளில் இருப்பதால் புவியின் காந்தப் புலத்தை அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
அத்தகைய காந்த உணர்வினை (Magnetro – reception) ‘காந்த ஏற்கும் பண்பு” என்றழைக்கப்படுகிறது
* ஜெயன்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
——————————————————————–
நன்றி வணக்கம்…………