வங்கப் பிரிவினை

Share This:

கர்சன் பிரபு

  • 1899 ஜனவரி 6 இல் கர்சன் பிரபு புதிய தலைமை ஆளுநராகவும், இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் நியமனம் செய்யப்பட்டார்.

அச்சமயத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள், பிாேக் நோய் ஆகியவற்றின் காரணமாக ஆங்கிலேயர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது.

  • கற்றறிந்த இந்திய மக்கள் பிரிவினரின் கருத்துகளை மாற்றுவதற்கு, கர்சன் சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டார்.
  • 1899 இல் கல்கத்தா மாநகராட்சி சட்டத்தின் மூலம் மாநகராட்சி குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தார்.
  • 1899 இல் ரூபாய் நோட்டுகள் சட்டத்தை இயற்றினார்.
  • 1901 ம் ஆண்டு இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க பேரரசு இளைஞர் படை அமைக்கப்பட்டது
  • 1902 15ல் சர் ஆண்ட்ரூ பிரேசர் தலைமையில் காவல்துறை குழு அமைக்கப்பட்டது.
  • 1902 ல் சர் தாமஸ் ராலே தலைமையில் பல்கலைகழக குழு அமைக்கப்பட்டது. இக்குழு உயர்கல்வியை மேம்படுத்த பரிந்துரைத்தது.
  • 1904 ல் கூட்டுறவு கடன் சங்கங்கள் சட்டம் நிறைவேற்றபட்டது.
  • பூசா என்னுமிடத்தில் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.
  • 1904 ம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • தொல்பொருள் கல்வெட்டியல் துறை (ஆர்க்கியாலஜி) உருவாக்கப்பட்டது.
  • 1904 ம் ஆண்டு இந்திய பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

  • 1904 ம் ஆண்டு இந்திய பத்திரிக்கைகளின் தேசியவாத தன்மையை குறைப்பதற்காக, அலுவலக ரகசியச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
  • கர்சன் பிரபு காலத்தில் அதிக அளவு இரயில் பாதை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தியர்களை பொய் கூறுபவர்கள், தகுதியற்றவர்கள் என அறிவித்தார்.
  • 1905 ம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாக பிரித்தார்.

வங்கப் பிரிவினை

  • 1860 ம் ஆண்டு வங்கப்பிரிவினைக்கான முதல் விவாதம் நடைபெற்றது.
  • கர்சன் பிரபுவிடம் அசாமில் வாழும் ஐரோப்பிய பண்ணையாளர்கள், தங்களுக்கு கல்கத்தாவிற்கு அருகே ஒரு கடல் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். 
  • இதை அடிப்படையாகக் கொண்டு 1903 டிசம்பர் ல் கர்சன் பிரபு வங்கத்தை பிரிப்பதற்கான ரிஸ்லி அறிக்கையை வெளியிட்டார்.
  • இந்த அறிக்கை பிரிவினைக்கு ஆதரவாக 2 காரணங்களை கூறியது.

   1. வங்காளத்திற்கு சுமை குறைவு

   2. அசாமின் முன்னேற்றம்

  • ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி இந்து முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதே கர்சன் பிரபுவின் நோக்கம்.
  • வங்கப் பிரிவினை மூலம் வங்காள மொழி பேசும் மக்களை ஒரு மொழி பேசும் சிறுபான்மையினர் என்ற தகுதிக்கு குறைத்தார்.
  • வங்க பிரிவினை மூலம் வங்காள ஒற்றுமை என்னும் வலுவான எண்ணம் வளர்ந்து விட்டது.
  • 1904 பிப்ரவரியில் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்ற புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள் என கர்சன் பிரபு டாக்காவில் உறுதியளித்தார்.
  • வங்கப் பிரிவினை வங்காள மக்களை, மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஒன்றுபடுத்தியது.
  • ரவீந்தரநாத் தாகூரை மையமாக கொண்டு வங்க மொழி இலக்கிய மதிப்பை பெற்றுவிட்டது.
  • 1905 ஜூலை 17 ல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் ஆங்கிலப் பொருட்களையும், நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என சுரேந்திரநாத் பானர்ஜி கூறினார்.
  • 1905 ஜூலை 19 ம் நாள் அங்கப்பிரிவினைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கர்சன் பிரபு வெளியிட்டார்.
  • 1905 அக்டோபர் 16 ம் நாள் வங்கப்பிரிவினை நடைமுறைக்கு வந்தது. இந்நாள் வங்கத்தில் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலை பாடிக் கொண்டு கல்கத்தா சாலைகளில் சென்றனர்.
  • நிர்வாக வசதிக்காக வங்காளத்தை கிழக்கு வங்காளம் மற்றும் அசாமை இணைத்து ஒரு மாகாணமாகவும், மேற்கு வங்காளம் பீகாரை இணைத்து மற்றொரு மாகாணமாகவும் அறிவித்தார்.
  • மிதவாதிகளும், தீவிரவாதிகளும் வங்கப்பிரிவினையை பிரித்தாளும் கொள்கையின் அறிமுகம் என்று கருதினர்.
  • இந்து-முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்த வங்கப் பிரிவினை மேற்கொள்ளப்பட்டதாக இந்தியர்கள் கருதினர்.
  • சுதேசி இயக்கத்தின் விளைவாக 1911 டிசம்பர் 15 ல் வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்டது.
  • இந்திய தேசியத்தில் தீவிரவாதம் தோன்ற வங்கப்பிரிவினை ஒரு தீப்பொறியாக அமைந்தது
  • பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதல் தர முன் உதாரணம் வங்கப்பிரிவினை எனக் கூறியவர் – R.B. குரோனின்
  • வங்கப்பிரிவினையை முடிந்த முடிவு எனக் கூறியவர் மார்லின் பிரபு
  • வங்கப்பிரிவினை திட்டம் முதன் முதலில் மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது.
  • புவியியல் அடிப்படையில் பாகீரதி ஆறு இயற்கையாகவே வங்காளத்தைப் பிரிப்பதாக அமைந்திருந்தது. 

சுதேசி இயக்கம் (1905 – 1911)

  • வங்கப்பிரிவினையை எதிர்த்து நோன்றிய இயக்கம்

இது ஒரு அரசியல் பொருளாதார இயக்கம்

  • 1905 ஆகஸ்டு 7 ல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் சுதேசி இயக்கம் முறையாக பிரகடணம் செய்யப்பட்டது.
  • சுதேசி பொருட்களை பயன்படுத்தவும். விதேசி பொருட்களை புறக்கணிக்கவும் இந்த இயக்கம் தோன்றியது.

சுதேசி – சொந்த நாடு

விதேசி – வெளி நாடு

  • சுதேசி இயக்கமும், புறக்கணிப்பும் இந்தியாவை தற்சார்பு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டது
  • 1872 இல் புனேவில் மகாதேவ் கோவிந்த ரானடேவால் சுதேசி என்னும் தொடர், சொற்பொழிவின் மூலம் பிரபலமடைந்தது.
  • துணிகள், கைத்தறி ஆடைகள் சவக்காரம் (சோப்புகள்) மண்பாண்டங்கள், தீப்பெட்டி. தோல்பொருட்கள் சுதேசி கடைகளில் விற்கப்பட்டன.

சுதேசி இயக்கத்தின் குறிக்கோள்

1. G.சுப்ரமணியம் கூற்று

  • தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி எனக் கூறினார்.

2 . கோபால கிருஷ்கா கோகலேயின் கூற்று

  • சுதேசி இயக்கமானது நம்முடையத் தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல. நமது தேசிய வாழ்வைச் சார்ந்த அனைத்து துறைகளின் மேம்பாட்டிற்கானது என கூறினார்.

3. ஆக்கபூர்வ திட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுய உதவியையே வலியுறுத்தின.

4. ஆங்கிலேய ஆட்சியின் கட்டுப்பாட்டில் சிக்காமல் சுந்திரமாகச் செயல்படக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளை மாற்றாக உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தியது.

5. மக்களை சுயமாக வலுவாக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியது.

இரவீந்திரநாத் தாகூர்

  • இரவீந்திரநாத் தாகூரின் பாடங்களும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரமும், சுதேசி இயக்கத்தின் போது காங்கிரசாரால் பாடப்பட்டன.
  • இரவீந்திரநாத் தாகூரின் யோசனைப்படி ஆண்களும் பெண்களும் ரக்ஷா பந்தன் கட்டிக் கொண்டனர்.
  • தாகூர் சுய பொருளாதார வளர்ச்சிக்குத் அழைப்பு விடுத்தார்.
  • கல்வியானது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டுமென வற்புறுத்தினார்.
  • சுய உதவி (ஆத்ம சக்தி) என்னும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் என்னும் திருவிழாக்களை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.
  • கதேசி இயக்கத்தின் போது மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
  • துர்காபூஜை போன்ற மதவிழாக்கள். புறக்கணிப்பு பற்றி வேண்டுகோள் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டன.
  • சுதேசி இயக்கத்தின் தீவிரவாத மையமாக பஞ்சாப் (லாலா லஜபதிராய்) மகாராஷ்டிரா (திலகர்) வங்காளம் (விபின் சந்திர பால்) ஆகியவை காணப்பட்டன.
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை நிறுவி தூத்துக்குடி இலங்கை இடையில் வணிகம் மேற்கொண்டார்.

கப்பல் -ஸ்காவியா, லாவோ

கதேசி இயக்கத்தின் போது 4 முக்கிய போக்குகள் காணப்பட்டன.

1. மிதவாதப் போக்கு

2. ஆக்கப்பூர்வ சுதேசி

3. தீவிர தேசியவாதம்

4. புரட்சிகர தேசியவாதம்

1906 சுதேசி இயக்கத்தின் 4 அம்சங்கள்

1. அந்நியப் பொருட்களை புறக்கணிப்பது

2. அரசுப்பள்ளிகள், கல்லூரிகளைப் புறக்கணிப்பது

3. நீதிமன்றங்கள், பட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை புறக்கணிப்பது.

4. அதேசி தொழிற்சாலைகளை மேம்படுத்துவது.

  • வட்டார மொழியில் கல்வி எனும் கருத்து சுதேசி இயக்கத்திற்கு முன்னரே, 1902 இல் சதீஷ் சந்திராவால் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) உருவாக்கப்பட்டது. விடிவெள்ளி கழகம் வட்டார மொழியில் கல்வி என்னும் கருத்தை வலியுறுத்தியது.
  • 1905 நவம்பர் 5 ல் விடிவெள்ளி கழகத்தின் முயற்சியால் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது.
  • 1906 ஆகஸ்டில் வங்காள தேசியக் கல்லூரியும். பள்ளியும் நிறுவப்பட்டன.
  • அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி மாணவர்களுக்கு சதீஷ் சந்திரா அழைப்பு விடுத்தார்.
  • மக்களை ஒன்று திரட்ட சமிதிகள் (தொண்டர் படைகளை) என்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  • இதன் நோக்கம் அமைதிவழி போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் இருத்தல்.
  • காந்தியின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கியமான கட்டம் – சுதேசி இயக்கம்
  • சுதேசி இயக்கத்தின் போது தமிழ்நாட்டில் சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் கோரி. வங்காளத்தில் யுகந்தர் ஆகிய பத்திரிக்கைகள் முக்கிய பங்கு வகித்தன.
  • 1906 ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நௌரௌஜி சுயராஜ்யம் குறித்து பேசினார்

மேலும் மாநாட்டில் சுயராஜ்ஜியமே முக்கிய குறிக்கோள், பொருட்களுக்குத் தடை ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்னிய

  • சுதேசி இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது.
  • சுயராஜ்ஜியம் என்பது முழுமையான தன்னாட்சி, அந்நிய ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவது என திலகர் கூறினார்.
  • வ.உ.சி சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி சுதேரி இயக்கத்தின் மிக முக்கிய தளமாக விளங்கியது.
  • சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கில அரசு இயற்றிய சட்டங்கள்

1. பொதுக்கூட்டங்கள் சட்டம் -1907

2. வெடிமருந்து சட்டம் -1908

3 செய்தித்தாள் சட்டம் – 1908

4. தூண்டுதல் குற்றச் சட்டம் – 1908

5. இந்திய பத்திரிக்கைச் சட்டம்-  1910

  • சுதேசி இயக்கத்தின் விளைவாக 1911 டிசம்பர் 15 ல் வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்டது.

முஸ்லிம் லீக் தோற்றம் (1906)

காரணம்:

  • இந்திய தேசிய காங்கிரஸின் நடவடிக்கைகள் முஸ்லிம்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியது
  • 1906 டிசம்பர் 30 ம் நாள் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி, டாக்கா நகரைச் சார்ந்த நவாப் சலிமுல்லா கான் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது.

நோக்கம்

  • முஸ்லீம்கள் உரிமையை பாதுகாப்பது.
  • காங்கிரஸிலிருந்து அவர்களை தனியாக பிரிப்பது
  • ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக நடந்து தனித்தொகுதி பெறுவது.
  • முதல் முஸ்லீம் லீக் மாநாடு 1907 ல் அமிர்தசரஸில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் தலைவர் சர் சையது அலி இமாம்.

  • இம்மாநாட்டில் முஸ்லீம் லீக்கின் நிரந்தர தலைவராக ஆஹாகான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • முஸ்லீம் லீக்கின் முதல் வெற்றி – 1909 மிண்டோ மார்லி சீர்திருத்தம்.
  • மிண்டோ மார்லி சீர்திருத்தம் மூலம் தனித்தொகுதியை பெற்றனர்.
  • முஸ்லிம் லீக்கின் துவக்க காலத்தில் முகமது அலி ஜின்னா முஸ்லீம் லீக்கை ஆதரிக்கவில்லை.

சூரத் பிளவு (1907)

  • 1906 இல் மிண்டோ பிரபு அரசப் பிரதிநிதியாக பதவி ஏற்றதில் இருந்து மிதவாதிகள், தீவிரவாதிகள் இடையேயான வேற்றுமை அதிகரித்தது.
  • 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நெளரோஜி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.
  • பெரோஸ்ஷா மேத்தாவின் தலைமையிலான தோற்கடிக்கப்பட்டனர். மிதவாதிகள் தேர்தலில்
  • சுதேசி புறக்கணிப்பு. தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களை தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர்.
  • காங்கிரஸின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெற இருந்தது.
  • அச்சம் கொண்ட மிதவாத தேசியவாதிகள், மாநாடு நடைபெறும் இடத்தை சூரத் நகருக்கு மாற்றினர்.
  • 1907 டிசம்பர் 26 ல் சூரத் நகரில் INC மாநாடு நடைபெற்றது.
  • மிதவாதிகள் இம்மாநாட்டின் தலைவராக ராஷ்பிகாரி கோஷின் பெயரை முன்மொழிந்தனர்.

ஆனால் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர்.

  • 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட 4 தீர்மானங்களை பெரோஷா மேத்தா தலைமையிலான மிதவாதிகள் நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
  • மிதவாதிகள் போக்கை ஏற்காத தீவிரவாதிகள் திலகரின் தலைமையில் இம்மாநாட்டிற்கு

பிறகு பிரிந்து செயல்பட்டனர். 

  • மிதவாதிகள் கோகவே தலைமையில் செயல்பட்டனர்.

தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் மேத்தா காங்கிரஸ் என அழைக்கப்பட்டது.

  • 1908 ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
  • சூரத் பிளவிற்கு பிறகு காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கட்சி வலுவிலந்து போனது.

லக்னோ இணைவு (அ) காங்கிரஸ் லீக் ஒப்பந்தம் (1916)

  • 1916 டிசம்பர் மாதம் அம்பிகா சரண் மஜீம்தார் தலைமையில் நடைபெற்ற லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்தனர்.

இந்த இணைவிற்கு அன்னிபெசன்ட் அம்மையார் முக்கிய பங்காற்றினார்.

  • இம்மாநாட்டில் முஸ்லீம் லீக்கிற்கும் காங்கிரஸிற்கும் இடையே லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தானது.

லக்னோ ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முக்கிய பங்கு வகித்தவர் -பாலகங்காதர திலகர் இம்மாநாட்டில் காந்தியும். ஜவஹர்லால் நேருவும் முதன் முதலாக சந்தித்தனர்.

  • லக்னோ ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டது.

இதற்கு பதிலாக முஸ்லீம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது.

  • 1913 ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முகமது அலி ஜின்னா முஸ்லீம் லீக்கில் இணைந்தார்.
  • லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பியான ஜின்னாவை இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
  • இந்து -முஸ்லிம் ஒற்றுமை கிலாஃபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது உச்சத்தை அடைந்தது.

1909 மிண்டோ மார்லி சட்டம்.

மிண்டோ – வைசிராய், மார்லி அரசுச் செயலாளர்

  • காங்கிரஸ் மிதவாதிகளை திருப்திபடுத்த கொண்டு வரப்பட்டது.
  • முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தந்தை – மிண்டோ பிரபு
  • தனி இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்தனர்.
  • கவர்னர் ஜெனரல் நிர்வாக குழுவில் முதன் முதலில் இந்தியருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது

முதல் இந்தியர்- சத்தியேந்தர சின்ஹா

  • இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரண்டாவது நபர் – சத்யேந்திர சின்ஹா

முதல் நபர் தாதாபாய் நௌரோஜி

  • மத்திய சட்டமன்ற கவுன்சிலில் நேரடி தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
  • பாராளுமன்ற தேர்தல் சட்டபூர்வமாக்கப்பட்டது.

முதல் உலகப்போர் (1914-1918)

  • 1905 ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது.
  • 1908 ல் துருக்கியும்

1911 ல் சீனாவும் சுதந்திரம் அடைந்தது.

  • முதல் உலகப்போரில் பிரிட்டன், பிரான்ஸ், இரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து போரிட்டன.
  • ஆங்கிலேயர்களின் சார்பில் இந்தியர்கள் இப்போரில் தீவிரமாக பங்கு பெற்றதால். ஆங்கிலேயர்கள் தங்களுக்கு பொறுப்பாட்சி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு ஏற்பட்டது.
  • வற்புறுத்தலின் காரணமாக இந்தியா 367 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை போர்ச்செலவுகளைச் சமாளிக்க கடனாக வழங்கியது.

கதார் கட்சி (1913)

  • உருது மொழியில் கதார் என்றால் கிளர்ச்சி என்று பொருள்.

நிறுவனர் – லாலா ஹர்தயாள், (சான்பிரான்சிஸ்கோ)

  • சோஹன் சிங் பக்னாவை தலைவராக கொண்ட பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை வாலா ஹர்தயாள் நிறுவினார்.

இதுவே பின் கதார் கட்சி எனப்பட்டது.

  • அமெரிக்கா,கனடாவில் வாழ்ந்த சீக்கியர்கள் பெருமளவில் ஈடுபட்டனர்.

தன்னாட்சி இயக்கம் (1916) (அ) ஹோம் ரூல் இயக்கம்

  • அன்னிபெசன்ட் அம்மையார் பிறந்த ஊர் –  அயர்லாந்து.
  • அன்னிபெசன்ட் பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம். ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டார்.
  • பிரம்ம ஞான சபையின் உறுப்பினராக (தியாசாபிகல் சொசைட்டி) அன்னிபொன்ட் 1893 ல் இந்தியாவிற்கு வந்தார்.
  • பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்து கல்லூரியை நிறுவினார். 1916 ல் இந்த கல்லூரி மதன்மோகன் மாளவியா மூலமாக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
  • 1907 ல் H.S ஆல்காட் மறைவிற்கு பிறகு பிரம்மஞான சயையின் உலக அளவிலான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பிரம்ம ஞான சபையின் தலைமையிடமான சென்னை அடையாறில் இருந்து தீவிர பிரச்சாரம் செய்தார்.
  • 1914 ல் தி காமன்வீல் என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார்.

இந்த பத்திரிக்கை சமய சுதந்திரம். கல்வி, பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தது.

  • 1915 இல் How India Wrought for Freedom” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • 1915 ஜூலை 14 இல் நியூ இந்தியா என்ற தினசரி பத்திரிக்கையைத் தொடங்கினார்.
  • இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என முழக்கமிட்டார்.
  • “நான் ஒரு இந்தியா டமாரம் எனக் கூறினார்.
  • பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியக் கட்சி” ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி கண்டார்.
  • 1915 பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில். 1916 செப்டம்பர் மாதத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தை துவங்குமாறு காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொண்டார்.
  • முதல் உலகப்போரும். இந்தியா அந்தப் போரில் பங்கேற்றதும் தான் தன்னாட்சி இயக்கத்துக்கான பின்னணியாகும்.
  • ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி தரும் புதிய மக்கள் இயக்கத்துக்கான அழைப்பாக இது உருவெடுத்தது.
  • 1916 லக்னோ காங்கிரஸ் மாநாடு 2 முக்கிய விவாதங்களுடன் தொடங்கியது.

1. 1915 ல் கோகலே, ஃபிரோஸ் ஷா மேத்தா மறைவு

2. அன்னிபெசன்டின் அதிகரித்து வரும் புகழ்.

  • தன்னாட்சி இயக்கம் இரண்டு குறிக்கோள்கள் கொண்டது.

1. பிரிட்டிஸ் பேரரசுக்கு உள்ளேயே இந்தியாவிற்கு தன்னாட்சி அந்தஸ்தைப் பெறுதல்.

2. தாய்நாடு பற்றிய பெருமையை இந்திய மக்களிடையே ஏற்படுத்துதல்.

3. தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது.

4. இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.

  • இந்தியாவின் தன்னாட்சி இயக்கத்தின் கொள்கைகள், 1880 ல் அபர்லாந்தில் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்க கொள்கையில் இருந்து பெறப்பட்டவை.
  • 1920 ல் வட அபர்லாந்தின் 6 நாடுகள் தன்னாட்சி பெற்றது.
  • 1921 ல் ஆங்கிலோ அயர்லாந்து ஒப்பந்தத்தின் கீழ் 26 நாடுகள் தன்னாட்சி பெற்றன.
  • இந்தியாவில் 2 தன்னாட்சி இயக்கங்கள் 1916 ல் ஆரம்பிக்கப்பட்டன.

1) திலகரின் தன்னாட்சி இயக்கம்:

  • 1916 ஏப்ரலில் பெல்காமில் நடைபெற்ற பம்பாய் மாகாண மாநாட்டில் நிறுவப்பட்டது.
  • பம்பாய் நகரம் உட்பட்ட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்படும்.
  • திலகரின் இயக்கத்திற்கு 6 கிளைகள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய இந்தியப் பகுதிகள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஒதுக்கப்பட்டன.
  • தன்னாட்சி இயக்கத்தை பரப்பியதற்காக 1916 ஜூலை 23 இல் தமது 60 வது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.
  • 1918 இல் 32,000 உறுப்பினர்கள் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர்.

2) அன்னிபெசன்டின் தன்னாட்சி இயக்கம்

  • 1916 செப்டம்பர் மாதம். சென்னை அடையாறில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தார்.
  • கான்பூர், அலகாபாத். பணரஸ்(காசி) மதுரா, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களில் கிளைகள் செயல்பட்டன.
  • அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் துவங்கப்படும் என 1915 செப்டம்பர் 28 ல் அறிவித்தார்.
  • இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அறிவித்தார்.
  • காங்கிரஸ் கட்சியில் இருந்த பலர் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர்.
  • ஜவஹர்லால் நேரு. முகம்மதுஅலி ஜின்னா, பி.சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி. சத்தியமூர்த்தி, கலிக்குஸ்மான் ஆகியோர் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர்.
  • மோதிலால் நேருவும், C.R.தாஸ் ஆகிய இருவரும் தன்னாட்சி இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தனர்.
  • அன்னிபெசன்ட் தன் பேச்சாலும், எழுத்தாலும் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதால்,அவரின் நியூ இந்தியா பத்திரிக்கையை ஆங்கில அரசு தடை செய்தது.
  • 1917 ஜூன் மாதம் ஜார்ஜ் அருண்டேல், அன்னிபொண்ட், பிபி. வாடியா ஆகியோர் ஊட்டியில் கைது செய்யப்பட்டனர்.
  • அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஆதரவாக S சுப்ரமணியம் தனது அரசப் பட்டத்தை (நைட்வுட்) துறந்தார்.
  • ஆரம்பத்தில் இந்த இயக்கத்தில் இணையாத மதன்மோகன் மாளவியா, சுரேந்தரநாத் பானர்ஜி ஆகியோர் பின்னர் தீவிரமாக இணைந்து கொண்டனர்.
  • காந்தியடிகளின் உத்தரவின் பேரில் ஜம்னாதாஸ், துவாரகாதாஸ். ஷங்கர்லால் பன்கர் ஆகியோர் அன்னிபெசன்ட்டை விடுதலை செய்யக்கோரி 1000 நபர்களிடம் கையெழுத்தை பெற்று பேரணி சென்றனர். பெறும் எதிர்ப்புக்கு பிறகு ஆங்கில அரசு தலைவர்களை விடுதலை செய்தது
  • 1917 ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அன்னிபெசன்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • காங்கிரஸ் முஸ்லிம் லீக், பிரம்ம ஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என

ஆகஸ்டு அறிக்கை (1917)

  • 1917 ஆகஸ்ட் 20 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அயலுறவு அமைச்சர் மாண்டேகு ஆகஸ்டு அறிக்கை வெளியிட்டார்.
  • இந்த ஆக்ஸ்டு அறிக்கையின் படி நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் இந்தியர்களை அதிகப்படியாக பங்கேற்க வைத்து படிப்படியாக சுயாட்சி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி

  • வேலண்டைன் சிரோலி எழுதிய Indian Unrest என்ற புத்தகத்தின் அவதூறு வழக்கிற்காக. 1918 செப்டம்பர் 18 ல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றார்.
  • மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை அன்னிபெசன்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ந்தது.
  • சுயராஜ்ஜியத்திற்கான கோரிக்கையை திலகரும். அன்னிபெசன்ட் அம்மையாரும் வலியுறுத்தியதால் பிரிட்டிஷ் அரசு அவர்களை தனிமைப்படுத்தியது.
  • பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா தன்னாட்சி (டொமினியன்) அந்தஸ்து பெறுவதற்கு
  • பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக தன்னாட்சி இயக்கம். இந்திய காமன்வெல்த் லீக் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் 1929 இல் இந்திய லீக்கென V.K. கிருஷ்ணமேன்ன் பெயர் மாற்றம் செய்தார்.

மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம்

  • இந்தியர்கள் உதவியினால் முதல் உலகப்போரில் வென்ற இங்கிலாந்து ஆங்கில பாராளுமன்றத்தில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டத்தை இயற்றியது.
  • இச்சட்டத்தின் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக முன்னேற உறுதி கூறப்பட்டது.
  • இந்திய தேசியவாதிகள் இடையே இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பேரிடியாக, தன்னிச்சையான கைது மற்றும் கடும் தண்டனைகளுடன் கூடிய ரௌலட் சட்டத்தை அரசு இயற்றியது.

இதன்படி

  • மத்திய, மாகாண சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
  • மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஆங்கிலோ – இந்தியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்களுக்கு தனித்தனித் தொகுதிகள் வழங்கப்பட்டன.
  • INC இச்சட்டத்தை நிராகரித்தது.

இச்சட்டத்தை வெளியிட்டது ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும். அதனை ஏற்றுக் கொள்வது இந்தியருக்கு மதிப்புடையாகாது அன்னிபெசன்ட்

நன்றி வணக்கம்……….

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top