- பொருளியல் என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் (OIKONOMIKOS) என்னும் பழமையா கிரேக்கச் சொல்லிருந்து வந்தது ஆய்க்கோஸ்(oikos) – இல்லங்கள்
நேமமோஸ் (nomos) – நிர்வாகம், வழக்கம் அல்லது விதி.
- ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இல்லியல் 19 – ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருளியல் என்று ஆஃபிரட் மார்ஷால் பெயர் மாற்றப்பட்டது.
- தொண்மை காலத்தை உணர்த்துவது “ஆடம்ஸ்மித் செல்ல இலக்கணம்
புதிய தொன்மை காலத்தை உணர்த்துவது மார்ஷல்*நல இலக்கணம்
புதிய யுகத்தை உணர்த்துவது “ராபின்ஸ் – பற்றாக்குறை இலக்கணம்
நவீன யுகத்தை உணர்த்துவது ‘சாமுவேல்சன்*வளர்ச்சி இலக்கணம்.
- ஆடம் ஸ்மித் (1723-1700) – செல்வ இயக்கணம்
- பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய ஒர் அறிவியல்
- ஒவ்வொரு மனிதனும் சுய ஆர்வத்தால் தூண்டப்படுவதாக கூறுகிறார்.
- உற்பத்தியின் அளவை அதிகரிக்க வேலை பகுப்பு முறையை (Division of Labour) ஆதரித்தார்.
- ஆடம்ஸ்மித்தின் நூலான “நாடுகளின் செல்வம்” எனும் நூல் 1776 ல் வெளியான பின் பொருளியல் ஒரு தனி இயலாக உருவானது.
- தலையிடாக் கொள்கையை பின்பற்றினார்.
- பொருள் சாரி செல்வத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்
2. ஆல்ஃபிரட் மார்ஷல் (1842-1924) – நல இலக்கணம்
- பொருளியல் கோட்பாடுகள் (1990) என்ற நூல் “அரசியல் பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும். பொருள்சார் நலனை அடைவதும். ஆகும் என கூறுகிறது
- ஒரு புறம் செல்வத்தைப் பற்றியும் முக்கியமாக மற்றொருபுறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது.
- பொருள்சார் நலனுக்கு முக்கியத்துவம்.
- பொருளியல் சாதாரண மனிதனின் நடத்தையைப் பற்றியதே அந்தச் சாதாரண மனிதர்கள் அன்பினால் கட்டுப்பட்டவர்களேயன்றி, உச்ச பட்சபணம் பெறுவதை நோக்கிச்செல்பவர்கள் அல்லர்
3. இலயனல் ராபின்ஸ் – பற்றாக்குறை கணம்
- 1932 ல் இவர் எழுதிய நூல் -பொருளியல் அறிவியலின் தன்மையும் அதன் சிறப்பும்
- “பொருளியல் என்பது விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில்
பயன்படய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியல்” என கூறுகிறது
- பொருளியல் என்பது தேவைகளைத் தேர்வு செய்யும் அறிவியுங் பற்றாக்குறையான வளங்கள் மாற்று வழிகளில் பயன்தரக் கூடியவையாக உள்ளன.
எனவே, மனிதன் தன் தேவைகளை வரிசைப்படுத்தி, முதலில் மிகுந்த அவசரத் தேவையை பூர்த்தி செய்கிறான்.
எனவே இராயின்ஸ் கூற்றுப்படி பொருளியல் என்பது தேவைகளைத் தேர்வு செய்யும் அறிவியலாகும்.
4. சாமுவேல்சன் – வளர்ச்சி இலக்கணம்
- பொருவியவை ஒரு சமூக அறிவியலாகக் கருதினார். ஆனால்பின்ஸ்
- பொருளியலை தனிமனிதனின் நடத்தை பற்றிய அறிவியலாகக் கருதினார்.
இவரின் இலக்கணம் பணம் பயன்படுத்தப்படாத பண்டமாற்று பொருளாதாரத்திற்கு பொருத்தக்கூடியது.
- சாமுவேல்சனின் இலக்கணம், உற்பத்தி, பகிர்வு மற்றும் நுகர்வு போன்ற பல கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
பிற பொருளியல் அறிஞர்கள்
மால்தஸ்
- உலகின் முதல் மக்கள் தொகை ஆராய்ச்சியாளர்.
- மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்.
- நாட்டின் செழுமை. வறுமை பற்றி ஆராய ஆர்வம் கொண்டவர்.
காரல் மார்க்ஸ்
- பொருளியலில் அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்.
- “வர்க்க போராட்டமே வரலாறு” என்பது சமதர்ம தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.
J.M. கீன்ஸ்
- நவீன பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்
- அரசு துணிகரமான நிதி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்றார்.
- அமெரிக்கா இவரின் கொள்கையை பின்பற்றியது.
மேயர் பால்டு:
- வளர்ச்சி குன்றிய நாடுகளின் 6 வகையான இயல்பினை விளக்கினார்.
1. முதன்மை துறை – வேளாண்மை
2. மக்கள் தொகை அடர்த்தி அதிகம்
3.இயற்கை வளங்கள் சரியாக பயன்படுத்தாமை
4. பின்தங்கிய மக்கள் தொை
5. மூலதன திரட்சி குறைவு
6. அயல்நாட்டு வாணிபத்தை சார்ந்த நிலை
ரோஸ்டோவ்
- ஒவ்வொரு நாடும் முன்னேற்றம் குறைந்த நிலையிலிருந்து, பொருளாதார வளர்ச்சி நிலைக்கு முன் 5 கட்டங்களை கடந்தாக வேண்டும் என்றார்.
1. பழமையான பொருளாதாரம்
2. மாறும் நிலையில் உள்ள பொருளாதாரம்
3. பொருளாதார மேலெழு நிலை
4. பொருளாதார முயற்சிக்கான செயலாக்கம்
5. மக்களின் பேரளவு நுகர்ச்சிக்காலம்.
குறிப்புகள்
- வாரகோட்பாட்டை கூறியவர் – டேவிட் ரிக்கார்டோ
- லாப லார கோட்பாட்டை கூறியவர் – வாக்கர்
- வளரும் நாடுகளின் இயல்பை கூறியவர் – சைமன் குஸ்ரெவ்
- இந்திய கூட்டுறவின் தந்தை – பிடரெரிக் நிக்கல்சன்
- உலக கூட்டுறவின் தந்தை இராபர்ட் ஒவன்
- உலக நுகர்வோர் இயக்க தந்தை – ரால்ப் நடார்
- இந்திய நுகர்வோர் இயக்க தந்தை – மகாத்மா காந்தியடிகள்
- உலக பசுமைபுநட்சியின் தந்தை – நார்மன் போர்க்
- இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை -M.S. சுவாமிநாதன்
- வெண்மை புரட்சியின் தந்தை – வர்கிஸ் குரியன்
- பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித் (வேலைப்பகுப்பு முறை தலையிடாக் கொள்கை)
- புதிய பொருளாதாரத்தின் தந்தை -J.M. கீன்ஸ்
- பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் -அமர்த்தியா குமார சென் (1998 நல பொருளாதாரம்)
- பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் – வாக்கர்
- இந்திய திட்டமிடுதலின் தந்தை – ஜவஹர்லால் நேரு
- நில சீர்திருத்ததிற்கான பூமிதான இயக்கத்தை கொண்டு வந்தவர் ஆச்சார்ய வினோபாபாவே
- பொருளியலில் அறிவியல் முறைகள்
1. இயல்புரை அறிவியல்
2. நெறியுரை அறிவியல்
இயல்புரை அறிவியல்,
- இயங்புரை அறிவியல், உள்ளதை உள்ளவாறு கூறுகிறது.
- அதாவது பிரச்சினையை உண்மையின் அடிப்படையில், அதன் காரணங்களின் மூலம் ஆய்வு செய்கிறது
இயல்புரைப் பொருளியலின் பண்புகள்
அ) பண அளிப்பு அதிகரிப்புபொருளாதாரத்தில் விலை ஏற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆ) நீர்ப்பாசன வசதி மற்றும் இரசாயன உரங்களின் விரிவாக்கத்திற்கேற்ப உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கிறது.
இ) பிறப்பு வீத அதிகரிப்பும், இறப்பு வீதக் குறைவும் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தில் பிரதிபலிக்கின்றன
எடுத்துக்காட்டா
விலை ஏற்றத்தின்போது. அதற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன.
நெறியுரை அறிவியல்,
- எதுவாக இருக்கவேண்டும் என்ற வினாவிற்கு விடையளிப்பதாக உள்ளது இங்கு முடிவுகள் உண்மையின் அடிப்படையில் அமைவதில்லை.
- ஆனால் சமூக பண்பாடு, அரசியல், சமயம் சார்ந்த வெவ்வேறான கருத்துக்களின் அடிப்படையில் அமைகிறது. இது அடிப்படையில் உள்ளுணர்வு சார்ந்ததாக இருக்கிறது.
நெறியுரை பொருளியல் பண்புகள்
அ) பணவாட்டத்தை விட பணவீக்கமே மேலானது.
ஆ வளர்ச்சி குறைந்த நாட்டில் ஆடம்பரப் பண்டங்களை அதிகமாக உற்பத்தி செய்வது
நல்லதல்ல.
இ) செல்வம் மற்றும் வருமானப் பகிர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகள்குறைக்கப்பட வேண்டும்
பொருளியல் ஆய்வு முறைகள்
- மற்ற அறிவியலைப் போன்று பொருளியலும் அதற்குரிய விதிகளைக் கொண்டுள்ளது. இந்த விதிகள் நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் பகிர்வு ஆகியவற்றோடு தொடர்புடையவை.
- தர்க்க ரீதியாக ஒரு விதியை அடைவதும் அல்லது அறிவியல் ரீதியாக பொதுமைப்படுத்தும் ஆய்வு முறை எனப்படும்.
பொருளியலில் இருவகையான ஆய்கமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
1. பகுத்தாய்வு முறை
- பகுத்தறியும் முறை என்றும் கருத்தியலான முறை என்றும் கூறுவதுண்டு.
- பகுத்தாய்வு முறை என்பது முழுமை தொகுதியினை பற்றிய கருத்தின் அடிப்படையில் அதன் தனி அலகு ஒன்றினைப் பற்றி கருத்து கூறுவதாகும்.
- புகழ்பெற்ற தொன்மை மற்றும் புதிய தொன்மை பொருளியல் அறிஞர்களான. ஜே.எஸ்மில், மால்தஸ். மார்ஷல், பிகு ஆகியோர் தமது பொருளியல் ஆய்வில் இம்முறையை பெரிதும் பயன்படுத்தினர்.
பகுத்தாய்வு முறையின் படிகள்
படி 1: எந்த பிரச்சினையை ஆராய்கிறோம் என்பதை துல்லியமாகவும், தெளிவாகவும் ஆராய்ச்சியாளர் அறிந்திருக்க வேண்டும்.
படி 2 ஆய்வில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருத்துக்களை தெளிவாக ஆய்வாளர் வரையறுக்க வேண்டும். மேலும் கோட்பாட்டின் எடுகோள்கள் சுருக்கமாக கூறப்படவேண்டும்
படி 3:அனுமானங்களின் (Assumptions) வாயிலாக கருதுகோள்களை (Hypothesis) உருவாக்க வேண்டும்.
டி 4: கருதுகோள்கள் எதார்த்த உலகில் நேரடி உற்றுநோக்கல் மூலமாகவும், புள்ளியியல் ஆய்வுமுறைகள் மூலமாகவும் சரிபார்க்கப்பட வேண்டும். (உம்) ஒரு பண்டத்தின் விலைக்கும் அப்பண்டம் தேவைப்படும் அளவிற்கும் தலைகீழ் உறவு உள்ளது.
2. தொகுத்தாய்வு முறை
- செயலறி முறை என்றும் அழைக்கப்படுகிறது.
- இம்முறை தனிக் கருத்திலிருந்து பொதுக்கருத்தை பெறுவதாகும். கீழ்க்காணும் முறைகளின் அடிப்படையில் பொருளியல் பொதுமைகள்பெறப்படுகின்றன.
(I) பரிசோதனைகள்
(i) உற்று நோக்குதல்
(iii) புள்ளியியல் முறைகள்
படி1: ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை சேகரித்து, அவைகளை முறையாக ஒழுங்குபடுத்தி அவற்றிலிருந்து பொது முடிவுக்கு வருவதாகும்.
படி 2 விவரங்களை உற்று நோக்குவதன் மூலம் முடிவுக்கு வருவது எளிது.
படி3: விவரங்களைப் பொதுமைப்படுத்தி கருதுகோள்கள் உருவாக்குதல்,
படி 4: கருதுகோள்களை சரிபார்த்தல்(உம்.) ஏங்கலின் விதி.
- ஏங்கலின் விதியின்படி.
“உணவுப் பண்டங்களுக்காக செலவிடப்படும் செலவின் சதவீதம், மொத்த செலவு (வருமான உயர்வின் போது ) அதிகரிக்கும்போது குறையும்.
- ஆல்ஃபிரட் மார்ஷலின் கூற்றுப்படி
“நடப்பதற்கு வலது காலும், இடது காலும் எவ்வாறு அவசியமோ அதுபோல பகுத்தாய்வு முறையும், தொகுத்தாய்வு முறையும் அறிவியல் ஆய்வுக்கு அவசியமாகும்”
பொருளியலின் உட்பிரிவுகள்:
1.நுகர்வு:
- மனித விருப்பங்களை நிறைவு செய்யும், பொருளாதார நடவடிக்கையின் துவக்கப்புள்ளியாக விளங்குகிறது.
2. உற்பத்தி:
- உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும். காரணிகள்: நிலம். உழைப்பு, மூலதன்,தொழிலமைப்பு
3. பரிமாற்றம்
அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கின்ற போது தான் நுகர்வு சாத்தியமாகிறது.
4. பகிர்வு
உற்பத்தி செய்யப்பட்ட பகிர்ந்தளிக்கப்படுகின்றன. செல்வங்கள் உற்பத்தி காரணிகளுக்கு
பொருளியலின் வகைகள்
- நுண்பொருளியல் மற்றும் பேரியல் பொருளியல் என்ற சொற்களை முதன்முதலில் 1933 ஆம் ஆண்டு நார்வே நாட்டு பொருளியலறிஞரான பேராசிரியர் ராக்னர்ஃபிரிஷ் பயன்படுத்தினார்.
- பின்பு ஜே.எம்.கின்சு 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக் கோட்பாடு என்ற நூலின் மூலம் இந்த இரண்டு சொற்களுக்கான வேறுபாடுகளை தெளிவாக வெளிப்படுத்த இந்த சொற்களை பிரபலமடையச் செய்தார்.
1. நுண்ணியல் பொருளியல் (விலைக்கோட்பாடு)
- தனிப்பட்ட பொருளாதார முகவர்களான உற்பத்தியாளர், நுகர்வோர் எடுக்கும். பொருளாதார முடிவுகளை விளக்குகிறது.
- பொருளாதாரத்தின் சிறு பகுதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
- ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது
நுண்ணிய பொருளியலின் முக்கியத்துவம்
- பொருளாதாரக் கொள்கைக்கான கருவிகளைத் தருகிறது.
- பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
- வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
- பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
- பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
- வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
- முன் கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
- விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
2. பேரியல் பொருளியல் (வருவாய் கோட்பாடு)
- இந்த பிரிவு முழுப் பொருளாதாரத்தின் முழுத் தொகுதியையும் ஆராயும் பகுதிகள் கொண்டது
எ.கா மொத்த உற்பத்தி, தேசிய வருவாய், மொத்த சேமிப்பு, முதலீடு,
- நாட்டு உற்பத்தி, பண வீக்கம், வேலையின்மை மற்றும் வரி போன்ற அனைத்தையும் விளக்குகிறது
- கீன்சின். -வேலைவாய்ப்பு வட்டி, பணம் பற்றிய பொதுக் கோட்பாடு என்ற நூல்
தற்கால பேரியல் பொருளாதாரத்திற்குஅடிப்படையாக விளங்குகிறது.
- நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
பன்னாட்டுப் பொருளாதாரம்
- நவீன உலகில் எந்த ஒரு நாடும் தனிப்பட்ட நிலையில் வளர்ச்சி அடைய இயலாது என்று கருதப்படுகிறது.
- வெளிநாட்டு மூலதனம். முதலீடு (வெளிநாட்டு நேரடி முதலீடு) மற்றும் பன்னாட்டு வாணிபத்தின் மூலம் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளோடு தொடர்பு கொண்டுள்ளன. இவற்றை பன்னாட்டுப் பொருளியல் விளக்குகிறது.
பொதுநிதிப் பொருளாதாரம்
- பொதுநிதி என்பது வருமானம் அல்லது வருவாயை அதிகரிக்க, பொது அதிகார அமைப்புகள் ஒன்றோடொன்று இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையை விளக்குகிறது.
- பொதுச் செலவு பொதுவருவாய், பொதுக் கடன் மற்றும் நிதிநிர்வாகம் போன்றவை பொதுநிதியின் எல்லைகளாகும்.
வளர்ச்சிப் பொருளாதாரம்
- தவா வருமானம், மனித மேம்பாட்டு குறியீடு, மகிழ்ச்சி குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள். பின்தங்கிய நாடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
- வளர்ச்சிப் பொருளாதாரமானது வளர்ந்த நாடுகளின் இயல்புகள், வளர்ச்சிக்கானத் தடைகள், வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரக்காரணிகள் மற்றும் பொருளாதாரம் சாரா காரணிகள், பல்வேறு வளர்ச்சி மாதிரிகள் மற்றும் வளர்ச்சிக்கான உத்திகள் போன்றவற்றை விளக்குகிறது.
சுகாதாரப் பொருளாதாரம்
- சுகாதாரப் பொருளாதாரம் என்பது செயல்முறை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும்.
- இது சுகாதாரக் குறியீடுகள்,நோய் தடுப்பு மற்றும் நோய் நீக்கும் நடவடிக்கைகள் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்மி கிராமப்புற சுகாதாரப் பணிமருந்து விை கட்டுப்பாடு. பிரசவத்திற்கு பின்னரான தொடர்பான பாதுகாப்பு, மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதாரம், சுகாதாரத்திற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
சுற்றுச் சூழல் பொருளாதாரம்
- இயற்கை வளங்களின் இருப்பை சுரண்டுதல் மற்றும் சுற்றுக்குழல் மாசு ஆகியன விரைவான பொருளாதார முன்னேற்றத்தின் விளைவான தீயவிளைவுகளாகும்.
- எனவே பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள உறவை ஆராயும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தை படிப்பதும் அவசியமாகும்.
- சுற்றுச்சூழல் பொருளியலில் சூழலியல் (Ecology), பொருளியல், சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்புடைய பிரச்சினைகளைப் பற்றி விளக்குகிறது.
நுகர்வு
- பொருளியல் நடவடிக்கையின் ஒரே நோக்கம் நுகர்வே என கூறியவர் -J.M. இன்ஸ்
- நுகர்வின் தன்மை அடிப்படையில் மக்களின் வாழ்க்கைத்தரம் தீர்மானிக்கப்படுகிறது.
- பண்டங்கள் மற்றும் பணிகளை பயன்படுத்துவதின் மூலம் விருப்பங்கள் நிறைவடையும்.
- நுகர்வு இல்லையெனில் உற்பத்தியோ, பரிமாற்றமோ, பகிர்வோ சாத்தியமில்லை.
மனித விருப்பங்களின் பண்புகள்
- விருப்பங்கள் எண்ணற்றவை
- விருப்பங்கள் பழக்க வழக்கங்களாக மாறும் உதாரணம் நளிதழ் படித்தல்
- விருப்பங்கள் நிறைவேறக் கூடியவை
- விருப்பங்கள் மாற்றுப் பொருளால் நிறைவு பெறுபவை எ.கா இட்லி, தோசை
- விருப்பங்கள் போட்டியிடுபவை
- விருப்பங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. எ.கா பேனா-மை, பெட்ரோல் – கார்
- விருப்பங்கள் மீளத் தோன்றுபவை உணவு உண்ணுதல்
பண்டங்கள்
- பண்டங்கள் மற்றும் பணிகள் ஆகிய இரண்டும் மனித விருப்பங்களை பூர்த்தி செய்கின்றன.
- பொருளியலில் பண்டங்கள் என்பது குறிப்பிட்டு சொல்லப்படாத வரை, பணிகளையும் சேர்த்தே பண்டங்கள்” என்ற சொல் குறிக்கும்
பண்டங்களின் பண்புகள்
அ) தொட்டுணரக் கூடியலை
ஆ)உருவ வடிவ முடையவை. அவற்றின் வடிவத் தன்மைகள் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படும்;
இ) அதன் உரிமையாளரிடமிருந்து தனித்துக் காணப்படும்:
ஈ) சில நபர்களுக்குச் சொந்தமானவை.
உ) மாற்றக் கூடியவை:
ஊ) பரிமாற்ற மதிப்பு உடையை
வகைகள்
1. இன்றியமையாத பண்டங்கள் தவிர்க்க முடியாத பண்டங்கள் (உணவு)
2. வசதிப் பண்டங்கள் வசதியாக வைத்துக்கொள்ள பயன்படக் கூடியவை.
3. ஆடம்பரப் பண்டங்கள் மிக முக்கியமானவை அல்ல, ஆனால் விலை உயர்ந்தவை
எ. கா) நகைகள், வைரங்கள்
பண்டங்களின் பயன்பாடு
1. குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி:
- அறிமுகப்படுத்தியவர் – H.H. காசன் (ஆஸ்திரிய பொருளியல் வல்லுநர் 1854)
- “குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதியை காசனின் முதல் நுகர்வு விதி” என ஜெயான்ஸ் அழைத்தார். இதை மார்கடில் புகழடையச் செய்தார்.
- ஒருணிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்ற பொழுது, ஒவ்வொரு கூடுதல் அபகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு குறைகிறது என மார்ஷல் இவ்விதியை வரையறை செய்கிறார்.
2. சம இறுதிநிலை பயன்பாட்டு விதி:
- எண்ணற்ற பண்டங்களை நுகரும் சூழலில், குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதியானது விரிவாக்கப்பட்டு சம இறுதி நிலை பயன்பாட்டு விதியாக உருவானது. இவ்விதி பதிலீட்டு விதி” என அழைக்கப்படுகிறது.
- “நுகரவோரின் சமநிலை விதி”, “காசனின் இரண்டாம் விதி” “உச்சபட்ச திருப்தி விதி” எனவும் அழைக்கப்படுகிறது.
நுகர்வோர் உபரி (எச்சம்)
- அறிமுகப்படுத்தியவர்கள் ஜில் டுபூட் ஜீவன்ஸ் (தொன்மைப் பொருளியல் அறிஞர்கள்)
ஜீவன்ஸ் -1884 ல் இக்கருத்தில் மாற்றம் கொண்டு வந்தார்
- நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை சீர்படுத்தி வழங்கியவர் மார்ஷல்
- இறுதிநிலை பயன்பாட்டு விதியை அடிப்படையாக கொண்டது.
மார்ஷலின் நுகர்வோர் எச்ச இலக்கணம்:
- ஒரு பொருளை வாங்காமல் இருப்பதை விட வாங்குவதே மேல் என முடிவு செய்து. கொடுக்க நினைத்த விலைக்கும், நுகர்வோர் உண்மையில் கொடுத்த விலைக்கும் உள்ள வித்தியாசம் நுகர்வோர் எச்சம் எனப்படும்.
நுகர்வோர் உரிமைகள்
- நுகர்வோரி சுரண்டப்படுதல் மற்றும் இன்னல்களின் விளைவே நுகர்வோர் இயக்கம் தோன்ற காரணம்.
- நுகர்வோர் இயக்க தந்தை ராய்ட் நாடர்
- இந்தியாவில் நுகர்வோர் உரிமைகள் பற்றி வலியுறுத்தியவர் – மகாத்மா காந்தி,
- நுகர்வோர்கள் பொருட்களின் விலை, தரம், சுத்தம் ஆக்கத்தன்மை அளவுத்தன்மை பற்றி அறிய
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986
- இச்சட்த்தின் மூலம் நுகர்வோரை பாதுகாப்பதற்காக நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
- 1986 – நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பொதுத்துறை. நிதித்துறை மற்றும் கூட்டுறவு மருத்துவ சேவைக்கும் பொருந்தும்
- 15.4.1987 அமலுக்கு வந்தது Act root இது 1993 ல் மேலும் திருத்தப்பட்டு -கோப்ரா” (COPRA) Consumer Protection
- உலக நுகர்வோர் தினம் மார்ச்-15
- தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24
தேவை
- பொருளியலில் தேவை என்பது பண்டத்தை வாங்கும் திறனுடன் கூடிய விருப்பத்தை குறிக்கிறது – ஸ்டோனியர் மற்றும் ஹேக்
தேவையின் பண்புகள்:
- விலை -தேவை எப்போதும் விலையுடன் சார்ந்துள்ளது.
- காலம் தேவை எப்பொழுதும், நாள், மாதம், வாரம், வருடம் என ஒரு பொருளுக்காக குறிப்பிடப்படும்.
- சந்தை – விற்பவர், வாங்குபவர்கள் கூடிய சந்தையைச் சார்ந்துள்ளது.
- அளவு – தேவை என்பது எப்பொழுதும் நுகர்வோர் வாங்க விரும்பும் அளவாகும்
தேவைச்சார்பு
- தேவை விலையைச் சார்ந்துள்ளது.
அதாவது ஒரு பண்டத்தின் தேவையானது அந்தப்பண்டத்தின் விலையோடு தொடர்புடையது.
தேவை விதி
- தேவை விதியை சீர்படுத்தி விரிவாக்கியவர் ஆல்ஃப்ரட் மார்ஷல்
- விலை குறையும் போது தேவையின் அளவு அதிகரிக்கிறது. விலை அதிகரிக்கும் போது தேவையின் அளவு குறைகிறது என மார்ஷல் வரையறுக்கிறார்.
- மற்றவை மாறாமல் இருக்கும் போது ஒரு பொருளுக்கான விலை குறையும் போது மக்கள் அப்பொருளை அதிகம் வாங்குவர், விலை ஏறும்போது குறைவாக வாங்குவர் சாமுவேல்சன்.
தேவையைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- சுவையிலும், நாகரிகத்திலும் ஏற்படும் மாற்றம்.
- காலநிலையில் மாற்றம்
- வரி மற்றும் மானியம்
- எதிர்பார்ப்புகளில் மாற்றம் (தங்கம்)
- சேமிப்பில் மாற்றம் (சேமிப்பும் தேவையும் எதிர்மறையான உறவைக் கொண்டவை)
- வணிக நிலை செழுமை – தேவை உயரும்
- வணிக நிலை மந்த நிலை – தேவை வீழ்ச்சி
- விளம்பரம்
- வருமானத்தில் மாற்றம்
1.கிஃபன் முரண்பாடு
தாழ்ந்த ரக பண்டங்களின் விலை குறையும் போது ஏழைகள் அவற்றை குறைவாக வாங்குவர். விவை கூடும் போது அதிகம் வாங்குவர்.
2.வெப்ளன் விளைவு அல்லது பகட்டு விளைவு
பணக்காரர்கள் போல் காட்டிக் கொள்பவர்கள் விலை உயர்வாக இருந்தாலும் சில பண்டங்களை சமூக அந்தஸ்திற்காக அதிகமாக வாங்குகின்றனர்.
எ.கா வைரம்.
3. அறியாை
விலை அதிகம் என்றால் தரம் அதிகம் என எண்ணி வாங்குவது.
4. ஊக விளைவு
பண்டத்தின் விலை உயரும் போது எதிர்காலத்தில் உயரும் என வாங்குவது எ.கா தங்கம்
5. பற்றாக்குறை பயம்
போர்காலங்கள், இக்கட்டான சூழல்களில் விலை ஏறுவது.
அளிப்பு
அளிப்பு விதி:
- அளிப்பு விதி விலைக்கும். அளிப்புக்கும் உள்ள நேரடியான தொடர்பினை விளக்குகிறது.
- மற்றவை மாறாதிருக்கும் போது ஒரு பொருளின் விலை அதிகரிக்கும்போது அப்பொருளின் அளிப்பும் அதிகரிக்கும்.
மேலும் ஒரு பொருளின் விலை குறையும் போது பொருளின் அளிப்பும் குறையும்.
அளிப்பு சார்பு:
- ஒரு பொருளின் அளிப்பு. பொருளின் விலை, உழைப்பின் விலை, மூலதனத்தின் விலை. தொழில்நுட்பம் நிறுவனங்களின் எண்ணிக்கை, பதிவிட்டு பண்டங்களின் விலை, எதிர்காலத்தின் விலை பற்றிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை பொறுத்து அமையும்.
நாட்டு வருமானம்
- நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பின் அளவே ஆகும். நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி- (GNP – Gross National Produet) என்றும் அழைக்கப்படுகிறது.
- நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டின் மொத்த வருமானத்தைக் குறிக்கும்.
- பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள். இரயில் என்ஜின்கள் போன்றவற்றை குறிக்கிறது.
பணிகள்
பண்டங்களோடு சேர்ந்து பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படுகின்றன.
பணிகளின் பண்புகள்
அ.புலவாகாதவை
புலாைகளப் பொருட்களுக்கு உருவ அடையாளம் இல்லை.
ஆ.பலதரப்பட்டவை:
பணிகள்பல்வேறு இடங்கள் மற்றும் கலாச்சாரப் பின்னணியில் வேறுபடுகின்றன. தரத்தின் அடிப்படையில் அசுவ வகைப் படுத்தப்படுகின்றன ஒரேவிதமான பணி பலதரப்பட்ட அனுபவங்களை தருகின்றது.
எ. கா) இசை மற்றும் மருத்துவர் சேவை
இ. பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது
பணிகள் அவற்றை செயல்படுத்துபவருக்கே உரியலை உதாரணமாக உழைப்பாளரிடமிருந்து உழைப்பை பிரிக்க இயலாது
ஈ) அழியக் அய்யவை:
- பண்டங்களை போன்று பணிகளை சேமித்து வைக்க உதாரணமாக மட்டை பந்து விளையாட்டைண வாங்கப்பட்ட கட்டண வில்லை. விளையாட்டு முடிந்தபிறகு பயன் தராது; அதன் பயனைப் பாதுகாக்க இயலாது அதற்கு பரிமாற்ற மதிப்பு இல்லை
- பணிகளின் இயல்புகள் என்பது மருத்துவர் பொறியாளர். ஆசிரியர். கைவினைஞர்கள் போன்றவர்களின் பணிகளாகும்.
நாட்டு வருமானம் அடிப்படைக் கருத்துக்கள்
1. மொத்த நாடு உற்பத்தி) (GNP)
ஒரு நட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்பும். அந்நாட்டு மக்கள் ஓராண்டில் ஈட்டிய வருமானமும், வெளிநாட்டு முதலீட்டின் மூலம் கிடைக்கும் பாபமும் சேர்ந்ததே மொத்த நாட்டு உற்பத்தியாகும்.
2. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
- ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் ஓர் ஆண்டில் அந்தாட்டிற்கு சொந்தமான உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பைக் குறிக்கும்.
3. நிகரநாட்டு உற்பத்தி
- மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானச் செலயை கழித்த பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
- திகரநாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி தேய்மானச் செலவு
- உற்பத்தியில் மூலதனப் பொருட்களில் (இயந்திரங்கள்) பழுதை சரி செய்ய மேற்கொள்ளப்படும் செலவினங்கள் தேய்மானர் செலவு என்றழைக்கப்படுகிறது.
4. நிகர உள்நாட்டு உற்பத்தி(NDP)
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானச் செலவை கழித்தால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தி
- NDP = GNP -தேய்மானச் செலவு
5. தலா வருமானம்
- நாட்டு வருமானத்தை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைக்கும் ஈவு தலா வருமானம் என்றழைக்கப்படுகிறது.
- மக்களின் வாழ்க்கை தரத்தை அளக்க பயன்படும் கருவியி தலா வருமானம்.
- தலா வருமானம் உயர்ந்தால் மக்ககளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் கருதப்படும்.
- தலா வருமானம் நாட்டு வருமானம்/மக்கள் தொகை
நன்றி வணக்கம்… ……