பெரியாரும் சமூக நல சிந்தனைகளும்

Share This:
  • பெரியார் பிறந்த ஆண்டு – 1879 செப்டம்பர் 17
  • இடம் – ஈரோடு
  • பெற்றோர் வெங்கட நாயக்கர், சின்னத்தாய்
    அண்ணன் – கிருஷ்ணசாமி.
    சகோதரி – கண்ணம்மாள்
  • இயற்பெயர் – இராமசாமி
  • பெரியாருக்கு 19 வயதாகும் போது 13 வயதான நாகம்மையாரோடு திருமணம் நடந்தது.
  • தனது 25 வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி காசிக்கு சென்றார்.
  • காசியில் பார்ப்பனர்கள் மற்ற இனத்தவர்களை இழிவுபடுத்துவதை கடுமையாக கண்டித்தார்.
  • வீடு திரும்பிய பெரியார் சிறிது காலம் வணிகத்தை கவனித்து கொண்டார்
  • பெரியாரின் தந்தை 1911 ல் இறந்தார்.
  • 1918 ல் ஈரோட்டின் நகரமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    அப்போது சேலம் நகரமன்ற தலைவராக ராஜகோபாலாச்சாரி பதவியில் இருந்தார்.
  • அப்போது ஈரோட்டில் பிளேக் நோய் பரவியது. அப்போது இவருடைய சமுதாய பணிக்காக ராவ் பகதூர் பட்டம் பரிந்துரை செய்யப்பட்டது.
  • பெரியாரும், நாகம்மையாரும் இணைந்து நாடு முழுவதும் குடும்ப கட்டுப்பாட்டை பரப்பினர்.
  • பெரியார் குடும்ப கட்டுப்பாடு பற்றி கர்ப்ப ஆட்சி என்ற நூலை எழுதினார்.
  • 1933 ல் நாகம்மையார் காலமானார்.
  • 1933 ல் ஜோலார்பேட்டையில் நடந்த பொது கூட்டத்தின் போது நாகம்மை இறந்த செய்தி பெரியாருக்கு தெரிவிக்கப்பட்டது.
  • நாகம்மையார் வாழ்ந்ததும். வாழ நினைத்ததும் எனக்காகவே அன்றி தனக்காக அல்ல என பெரியார் கூறினார்.
  • பெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து, பொதுசொத்தை கவனமாக பார்த்து கொள்ளவேண்டும் என்றவர் – மணியம்மை.
  • பெரியார் மணியம்மை திருமணம் நடைபெற்ற ஆண்டு – 1949. மணியம்மையின
    இயற்பெயர் – காந்திமதி
    சிறப்பு பெயர் -அரசியல்மணி
  • பர்மாவில் நடைபெற்ற உலக புத்த மாநாட்டில் பெரியார்,அம்பேத்கர், மணியம்மை ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • தம் பிறந்தநாளை கொள்கை விளக்க நாட்களாக கொண்டாட அனுமதி வழங்கினார்.
  • தம் வாழ்நாளில் 8600 நாள், 1312000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணி நேரம் மக்களுக்காக உரையாற்றி, சமுதாய தொண்டு ஆற்றியுள்ளார்.
  • மக்களுக்காக போராடி 88 முறைகள் சிறைக்கு சென்றுள்ளார்.
    *19-12-1973 ல் சென்னை தியாகராய நகரில் இறுதி சொற்பொழிவை நிகழ்த்தினார்.
  • 24-12-1973 ல் வேலூர் CMC மருத்துவமனையில் காலமானார்.
    பெரியாருக்கு பின் பெரியார் இயக்கத்திற்கு தலைமையேற்றவர் மணியம்மையார்.
  • 1974 ல் சென்னையில் மணியம்மை தலைமையில் ராவணலீலா நடைபெற்றது.
  • மணியம்மை இறந்த ஆண்டு 1878 மார்ச் 16
  • பெரியார் அனைவரையும் தோழர் என அழைக்க வேண்டும் என்றார்.
    அதன்படி பெரியாரை தோழர் என அழைத்த முதல் பெண் – நாகம்மையார்.
  • காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது, நாடெங்கும் கலவரம் நிகழ்ந்த போது, பெரியாரின் போதனைகளால் தமிழகம் அமைதியாக இருந்தது.
  • இந்தியாவிற்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் என்றார் பெரியார்.
  • 1918 ல் ஈரோடு நகரசபை தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1919 ம் ஆண்டு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் முறையினை ஈரோட்டில் செயல்படுத்தினார்.
    இந்திய நகராட்சி நிர்வாக வரலாற்றில் இத்திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியவர் -பெரியார்.
  • அப்போது சேலம் நகரசபை தலைவராக இருந்த, ராஜாஜி அவர்களின் முயற்சியில் 1919 ல் காங்கிரஸில் இணைந்தார்.
  • நீதிக்கட்சியின் செல்வாக்கை குறைக்க, பெரியார் 1919 ம் ஆண்டில் ஈரோட்டில் நடத்திய மாநாடு சென்னை மாகாண சங்க மாநாடு.
  • தமிழ்நாட்டில் கதர் இயக்கம் பலமடைய செய்தவர் பெரியார்.
    *தந்தை பெரியார் அவர்கள், தங்கள் கை வீங்கும் அளவிற்கு நூல் நூற்றதால்,
    காந்தியடிகள் இனி நீங்கள் இராட்டினத்தை பயன்படுத்த வேண்டாம் உங்களுக்கு
    விதிவிலக்கு அளிக்கிறேன். என்று கூறினார்.
  • பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட திருச்செங்கோடு கதர் அங்காடியில் பணியாற்றிய எழுத்தாளர் – கல்கி.
  • 1920 ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார்.
    ஒத்துழையாமை இயக்கத்தின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் சேலம் விஜயராகவாச்சாரியார்.
  • பஞ்சாப் படுகொலையை கண்டித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்த தமிழ் தலைவர் பெரியார்.

காங்கிரஸ் கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1921):

  • ஈரோட்டில் பெரியார் வீட்டில் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து, பின் கள்ளுக்கடை மறியல் குறித்து முடிவு செய்தனர்.
  • கள்ளுக்கடை மறியல் செய்ய முதன் முதலாக தேர்வு செய்யப்பட்ட இடம் – ஈரோடு.
  • 1921 ல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலுக்கு பெரியார் தலைமை தாங்கினார்.
  • போராட்டத்தின் போது காந்தியடிகள் கள்ளுக்கு உதவும் மரங்களையெல்லாம் வெட்டிவிட வேண்டும் என கட்டளையிட்டார்.
    அதன்படி தனது 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார்.
  • மறியல் செய்ததற்காக 1921 நவம்பரில் பெரியார் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
    அதன் பின் நாகம்மையாரும். பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் மறியலில் ஈடுபட்டனர்.
  • பண்டிட் மாளவியா, சங்கரன் நாயர் அவர்கள் மறியலை நிறுத்திவிடலாம் என காந்தியிடம் கூறிய போது, அதற்கு காந்தி மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கைகளில் உள்ளது என்றார்.
  • 1922 முதல் 24 வரை 30 மாணவர்களுக்கு ஹிந்தி கற்பிக்கும் பள்ளியினை தம் சொந்த செலவில் நடத்தி வந்தார்.
  • 1922 ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (1922 – 1924 வரை தலைவர்)
    இதை எதிர்த்தவர் – வ.வே.சு.ஐயர்,
  • 1922 திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் ஆலய பிரவேச தீர்மானத்தை கொண்டு வந்தார். (அரசுபணி, கல்வி இட ஒதுக்கீடு)
    இதை எதிர்த்தவர்கள்
  • C.R.தாஸ் உருவாக்கிய சுயராஜ்ஜிய கட்சியினை பெரியார், ராஜாஜி, காந்தி ஆகியோர் எதிர்த்தனர்.
  • பெரியார் காங்கிரஸ் கட்சி செயலாளராக இருந்த ஆண்டு – 1925

வைக்கம் போராட்டம் (1924-1925)

  • திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட, வைக்கம் என்னும் ஊரில் உள்ள வைக்கத்தப்பன் கோயிலை சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள். ஈழவர்கள் செல்ல அனுமதி இல்லை.
  • 1924 இல் இதை எதிர்த்து, கேரள சீர்திருத்தவாதியான நாராயண குருவின் இயக்கத்தை சார்ந்த கேரளா காங்கிரஸ் கமிட்டி தலைவரான கேசவ மேனன், மதுரை ஜார்ஜ்ஜோசப் உட்பட பலர் போராடியதால் கைது செய்யப்பட்டனர்.
  • சிறையில் இருந்த ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் இருவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பெரியாரை, வைக்கத்தில் போராட்டம் நடத்தும்படி கேட்டுக் கொண்டனர்.
    *பெரியார் காங்கிரஸ் தலைமை பொறுப்பை தற்காலிகமாக ராஜாஜியிடம் ஒப்படைத்து விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • போராட்டத்தில் பெரியாரும், கோவை அய்யாமுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் (22.4.1924)
  • பெரியார் அருவிக்குத்தி சிறையில் 1 மாதம் அடைக்கப்பட்டார்.
    பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் போராட்டத்தை நடத்தினார்கள்.
  • விடுதலையான பெரியார் வைக்கத்தை விட்டு வெளியேற மறுத்தார். எழுச்சியூட்டும் விதமாக பேசியதால் மீண்டும் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார் (சிறை – திருவிதாங்கூர் சிறை
  • வைக்கம் சத்தியாகிரகத்திற்கு ஜார்ஜ் ஜோசப் தலைமை தாங்க கூடாது காந்தியடிகள் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதினார்
  • பெரியார் சிறையிலிருந்து வரும்வரை போராட்ட குழு பொறுப்பாளராக சிவதாணுப் பிள்ளை நியமிக்கப்பட்டார்.
  • போராட்டம் வழுவிழந்த போது கேரள சீர்திருத்த வாதியான நாராயண குரு போராட்டத்தில் பங்கு கொண்டார்
    இவர் பங்கெடுத்த ஒரே போராட்டம் இதுவாகும்
  • இறுதியாக சமாதானம் பேச காந்தியடிகள் திருவிதாங்கூர் அழைக்கப்பட்டார்.
    காந்தி, பெரியார், திருவிதாங்கூர் இராணி ஆகியோரிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை மூலம், 1925 ஜூன் மாதம் வைக்கம் கோயிலின் 40 சாலைகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
  • அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தியும், போராட்டகுழு சார்பில் ராஜாஜியும் கையெழுத்திட்டனர்.
  • வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்காக தந்தை பெரியார் அவர்களுக்கு வைக்கம் வீரர் என்ற பட்டத்தை, திரு வி.க. நவசக்தி இதழ் மூலம் அறிவித்தார்.
  • பெரியார் விடுதலையாகி ஈரோடு திரும்பியபோது, கதர் விற்பனையை முன்னேற்றுவது குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.
    வைக்கம் போராட்ட பொன்விழா நடைபெற்ற நாள் – 26-4-1975
    இதில் கலந்து கொண்டவர்கள் இந்திரா காந்தி, மணியம்மையார், கீ. வீரமணி
  • பெரியாரின் வைக்கம் போராட்டத்தை, கூட்டத்தில் இருந்து வேடிக்கை பார்த்த தொண்டன் நான் என்றவர் – காமராசர்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்:

  • வ.வே.சுப்ரமணிய அய்யர், பரத்வாஜ் அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் ஒரு தேசிய கல்வி நிறுவனம் 1923 ல் உருவாக்கப்பட்டது.
    அதன் பெயர் – தமிழ் குருகுல வித்யாலயா.
  • இந்நிறுவனம் காங்கிரசிடமிருந்து நிதியை பெற்றது.
  • அதன் வளர்ச்சிக்காக பெரியார், திருவிக, வரதராஜீலு ஆகியோர் கடுமையாக பாடுபட்டனர்.
  • குருகுலத்தின் நோக்கம் மாறுபட்டு. மாணவர்கள் சாதியின் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டனர்.
  • பிராமன மாணவர்களுக்கும், பிராமணர் அல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியே உணவு பரிமாறப்பட்டது.
    இதனை பெரியார், வரதராஜீலு, திரு விசு ஆகியோர் எதிர்த்தனர்.
  • திரு ராமநாதன் அவர்களின் வீட்டில் குருகுலந்தை எதிர்க்க முடிவு செய்யப்பட்டது.
    *பெரியார்.வரதராஜீலுவை தலைவராக கொண்டு போராட்டம் நடைபெற்றது.
  • பார்ப்பனர் அல்லாத மக்கள் நிதி உதவியை நிறுத்தியதால் குருகுலம் செயலிழந்து போனது.
  • வ.வே சுப்ரமணிய அய்யர், குருகுலத்தின் தலைமை பதவியை விட்டு விலகியவுடன், அடுத்த தலைவராக மகாதேவ அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு

  • 1924 திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டு தலைவர் – பெரியார்.
  • 1925 நவம்பர் 21 இல் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
    இம்மாநாட்டின் தலைவர் – திரு.வி.க
  • இக்காலகட்டத்தில் பெரியார் காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்டிருந்தார். அது பிராமணர்களின் நலன்களை மட்டுமே மேம்படுத்துவதாக உணர்ந்தார்.
    மேலும் இம்மாநாட்டில் அவர் சட்டசபையில் பிராமணரல்லாதோருக்கு பிரதிநித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தார்.
  • அம்மாநாட்டில் பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டது.
    அப்போது தந்தை பெரியார் காங்கிரசால் பார்ப்பனரல்லாதோர் நன்மைபெற முடியாது. காங்கிரஸை ஒழிப்பதே இனி எனது வேலை என்று கூறி மாநாட்டிலிருந்து வெளியேறினார்.
  • காஞ்சி மாநாட்டின் போது அங்கேயே பெரியாரின் முயற்ச்சியால் ஒரு பார்ப்பனரல்லாதோர் மாநாடு கூட்டப்பட்டது.

சுயமரியாதை இயக்கம்

  • பெரியார் 1925 ல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.
    இந்நிலையில் தனது நோக்கங்களை நிறைவேற்ற சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.
  • இதற்காக குடியரசு என்ற வார இதழை ஈரோட்டில் தொடங்கினார். இதன் பதிப்பாளராக நாகம்மையார் பொறுப்பேற்றார்.
  • இதன் அச்சகத்திற்கு உண்மை விளக்க அச்சகம் எனப் பெயரிட்டார்.
  • 1925 திருப்பாதிரிபுலியூரில், திருமடத்தின் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி, குடியரசு இதழை வெளியிட்டார்.

நோக்கம்

  • பெண் விடுதலை கோருநல்
  • மூடநம்பிக்கைகளை நீக்குதல்
  • பகுத்தறிவை வலியுறுத்துதல்
  • சுயமரியதை இயக்க சொற்பொழிவின் மையப்பொருள் – இனம்
  • சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமில்லாமல், இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது.
  • சமூக பிரச்சனை குறித்த கருத்துக்களை கட்டுரையாக, சித்திரப்புத்திரன் எனும் புனைப்பெயரில் எழுதினார்.
  • மேலும் சுயமரியாதை திருமணங்களை ஆதரித்தது.
  • முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்ற ஆண்டு – 1928
    இடம் – சுக்கிலநத்தம்
  • 1927 ல் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி தலைமையில், தென் இந்திய இரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
  • சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய பின், நீதிக்கட்சியின் செயல்பாடுகளை கவனித்து அவர்களின் செயல்பாடுகளை ஆதரித்தார்.
  • 1930 ல் நீதிகட்சி வெற்றிக்கு காரணம் – பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
  • சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்த பத்திரிக்கை – தமிழ்நாடு, தேசபந்து,
  • முதல் சுயமரியாதை மாநாடு 1929 பிப்ரவரியில் செங்கற்பட்டில் நடைபெற்றது.
    இம்மாநாட்டின் தலைவர் – சவுந்தர பாண்டியனார்.
    இம்மாநாட்டில் மூடநம்பிக்கையை எதிர்த்து பேசிய 7 வயது சிறுமி -திருவண்ணாமலை லலிதா
    இம்மாநாட்டில் மூவலூர் ராமமிர்தம்மையார், குத்தூசி குருசாமி போன்றோர் கலந்து கொண்டனர்.
  • சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன் என்றவர் – திருவிக
  • முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புதிதாக கோயில் கட்ட கூடாது
    விதவை மறுமணம் செய்துகொள்ள உதவ வேண்டும்.
    ஆசிரியர் பணிக்கு பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
    கல்வி நிறுவனங்களில் தாய்மொழி தவிர, வேறு மொழிக்காக பொதுப்பணம் செலவழிக்ககூடாது.
  • 2 வது சுயமரியாதை மாநாடு 1930 ல் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் இளைஞர் மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு அனைத்தும் சேர்த்து நடைபெற்றது. தலைவர் – எம்.ஆர் ஜெயகர்
    தீர்மானம் – சுயமரியாதை (ம) கலப்பு திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்தல்.
  • 3 வது சுயமரியாதை மாநாடு 1932 ல் விருதுநகரில் நடைபெற்றது.
    இம்மாநாட்டு தலைவர் – சண்முகம்.
  • இம்மாநாட்டில் பெண்கள் காவல் துறை. இராணுவத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
  • பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் எனும் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்ட இடம் – புத்தூர் (திருச்சி)
    இதன் தலைவர் -பெரியார்
    முதல் ஆயுள் செயலாளர் – மணியம்மை

பெரியார் நடத்திய இதழ்கள்

  • 1925 ல் குடியரசு இதழை தொடங்கினார்.
    இதில் பாரதமாதா படம் முகப்பில் போடப்பட்டிருந்தது.
    சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழ் – குடியரசு
  • 1926 ல் திராவிடன் பத்திரிக்கையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
  • 1928 ல் பெரியார் தொடங்கிய இதழ் – ரிவோல்ட் துவக்கி வைத்தவர் சவுந்தரபாண்டியனார்.
  • பெரியார் நடத்திய புரட்சி (1933) எனும் ஏடு அடக்குமுறைக்கு ஆளான போது அதை நிறுத்திவிட்டு, உடனே பகுத்தறிவு (1934) எனும் ஏட்டினை தொடங்கினார்.
  • 1935 ல் விடுதலை இதழை தொடங்கினார்.
  • 1970ல் உண்மை எனும் பகுத்தறிவு இதழை திருச்சியில் தொடங்கினார்.
  • பெரியாரின் குடியரசு இதழை மலேசியா, சிங்கப்பூரில் பரப்பியவர் – காளியப்பன்.

பெரியாரின் வெளிநாட்டு பயணம்

  • மலேசியா, சிங்கப்பூர் (1929, 1930, 1954)
  • 1931, 1932 ரஷ்யா, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்
  • 1954 இல் புத்தரின் 2500 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பர்மா சென்றார்.
    தாய்நாடு திரும்பியவுடன் 14 அம்ச கோரிக்கைகளை வெளியிட்டார்.
  • பொதுவுடைமைவாதியன சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.
  • இக்கால கட்டத்தில் 1925 ல் உருவாக்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சி, தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து பரப்புரை செய்தது.
  • சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர். ஈரோடு திட்டத்தின் மூலம் இணைந்து செயல்பட்டார்.
  • அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு எனும் நூலை, அந்நூல் வெளிவந்தவுடன் 1936 ல் தமிழில் பதிப்பித்தார்.
  • அம்பேத்கர் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதி கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.

பெரியாரின் இந்தி எதிர்ப்பு போராட்டம் (1937 – 1939)

  • 1937 சென்னை மாகாண தேர்தலில் இராஜாஜி வெற்றி பெற்று முதமைச்சரானார்.
  • அவர் மதுவிலக்கு, ஜமீன்தாரி முறை ஒழிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார்.
  • ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவிற்கு இருக்கும் தடையை நீக்க சட்டம் கொண்டு வந்தார்.
  • இந்தி மொழியை கட்டாயமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்.
  • பெரியார், மறைமலை அடிகள்(தமிழ்கடல்) உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
  • பெரியார் உள்ளிட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • 1938 ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்ற நடராசன், தாளமுத்து இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
  • 1938 இல் இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சியிலிருந்து புறப்பட்ட பிரச்சார படையில் மூவலூர் இராமமிர்தம்மையார், நாவலர் சோம சுந்தர பாதிரியார் இடம் பெற்றிருந்தனர்.
  • இந்தி படித்து தேர்ச்சி பெறாவிட்டால், அவன் படிப்பறிவு உள்ளவனாகருதப்படமாட்டான் என்றவர் – விஜயராகவாச்சாரி
  • பெரியார் சிறையில் இருந்த போதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார் என்பதால் சிறைப்பறவை என அழைக்கப்படுகிறார்.
  • பின்னர் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தது.
  • 1944 ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், பெரியாரின் தளபதியான அண்ணாதுரை நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார்.
  • பெரியார் 1952 ல் தொடர்வண்டி நிலைய பெயர் பலகையில், இந்தி எழுத்துக்களை அளிக்கும் போராட்டத்தை நடத்தினார்
  • பெரியார் திராவிட நாடு மாநாட்டைக் கூட்டி, திராவிடர்களுக்கு தனி திராவிட நாடு கோரினார்.
    மேலும் திராவிட நாடு திராவிடருக்கே என்று முழக்கமிட்டார்.
  • நவம்பர் 13, 1938 ல் சென்னையில் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
    பட்டம் வழங்கியவர் – மீனாம்பாள்.
  • மேலும் இவர் தமிழ் எழுந்து சீர்திருத்தங்களைச் கொண்டு வந்தார்.
  • மேலும் எளிமையான கல்வி கற்க ரோமானிய எழுத்து முறையை பின்பற்றவும் அறிவுறுத்தினார்.
    இதன் மூலம் தமிழ் எழுத்துக்களில் 14 எழுத்துக்களை குறைத்தார்.
  • பெரியாரின் எழுத்து சீர்திருத்தங்களை தமிழக அரசு 1978 ல் ஏற்றுக்கொண்டது.

குலக்கல்வி எதிர்ப்பு

  • சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952 1954) பள்ளி குழந்தைகளுக்கு தொழில்கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • இது தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது.
  • இதை பெரியார் குலக்கல்வி திட்டம் (சாதியை அடிப்படையாக கொண்ட கல்வி) என எதிர்த்தார்
  • இதற்கு எதிரான வழிநடை படைக்கு பெரியாரால் தலைவராக நியமிக்கப்பட்டவர் – இலக்குவனார்
  • பெரியார் மேற்கொண்ட போராட்டங்களால், இராஜாஜி பதவி விலகி காமராஜர் அடுத்த முதல்வரானார்.

பெண் விடுதலைச் சிந்தனைகள்

  • 2 வகை
  1. அடிப்படை தேவைகள் – பெண்கல்வி, பெண்ணுரிமை, அரசுப்பணி, சொத்துரிமை.
  2. அகற்றபட வேண்டியவை – குழந்தை திருமணம், மணக்கொடை கைம்மை வாழ்வு
  • ஆணுக்கு பெண் இளைப்பில்லை என சிந்தித்தவர் – பெரியார்.
  • பெண்கள் அடிமையானதற்கு முதல் காரணம் சொத்துரிமை மறுக்கப்பட்டதாகும்.
  • சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என குழந்தை திருமணத்தை கூறுகிறார்.
  • தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் – மணக்கொடை.
  • தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடையே வளர வேண்டும் என்கிறார் பெரியார்.
  • பெண்களுக்கு நகையோ அழகான உளடகளோ முக்கியம் இல்லை. அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் என்றார்.
  • பெண் விடுதலையின் முதல்படி பெண்கல்வி என்கிறார் பெரியார்.
  • குழந்தை திருமணத்தையும், தேவதாசி முறையையும் கண்டணம் செய்தார்.
  • 1989 ல் தமிழக அரசு, தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
    இதன் மூலம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது வேண்டும்.
  • மக்கள் தங்கள் உயிருக்கு நிகராக சுயமரியாதையை கருத வேண்டும் என்கிறார் – பெரியார்.
  • பெரியார் மரியாதையையும், சுயமரியாதையையும் இரு கண்களாக கருதினார்.
  • 1970 ம் ஆண்டு சமூக சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்பட்டது.
  • நடுவண் அரசு 1978 ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
  • 1930 ஜனவரியில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி புத்தகத்தை வெளியிட்டு இந்தியாவிலேயே முதன் முதலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • 1957 ல் சாதியை ஒழிக்க கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழியும் இயக்கத்தை நடத்தினார்.
  • 1970 ல் அனைவரும் அர்ச்சகராகும் போராட்டத்தை நடத்தினார்

பெரியாரின் சிறப்புப் பெயர்கள்

  • 1973 ல் யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய பட்டங்க புத்துலக தொலைநோக்காளர்
    தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்
    சமூக சீர்திருத்த இயக்கத்தின் – தந்தை
    அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற பழக்கவழக்கங்களின் எதிரி
  • பெரியாரை தமிழ்நாட்டின் ரூசோ என்றவர் – இராமசாமி முதலியார்.
    *பெரியாரை எனது நாத்திக ஆசான் என்றவர் -M.N.ராய்
    *பெரியாரை என் தலைவன் என்றவர் – வ.உ.சி
  • பெரியாரை இயற்கையின் புதல்வர், மண்ணை மணந்த மணாளர் என்றவர் – வ.ரா
  • சுறுசுறுப்பின் மறுபெயர் ஈ.வெ.ரா. என்றவர் – இராசமாணிக்கனார்.
  • பெரியாரை முற்றும் உணர்ந்த பேராசிரியர் என்றவர் – கல்கி
    *பெரியாரை கருப்புடை போர்த்த சிவப்பு ஞாயிறு என்றவர் – புலவர் புதுமைபித்தன்
  • தலைகீழாக இருந்த சமுதாயத்தை நேராக இருக்கச் செய்தவர் பெரியார் என்றவர் – ஜி.டி நாயுடு.
  • நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவன், அவர் பெரியார் எனக் கூறியவர் – அறிஞர் அண்ணா
  • உண்மையை அஞ்சாது உரைக்கும் உரமுடைய நெஞ்சம் உடையவர் பெரியார் என்றவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.
  • பாமர மக்களிடையே பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பியதில் பெரியாருக்கு இணை ஆசியாவிலேயே எவரும் இல்லை என்றவர் – எடிசன் ராஜா
  • உயர் எண்ணங்கள் மலரும் சோலை, பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்கிறார் -பாரதிதாசன்
    • பெரியார் எழுதிய நூல்கள்
  • என்னை பெற்ற ஏழைகள் (பெற்றோரை பற்றியது)
  • இராமாயணப் பாத்திரங்கள் (ஆராய்ச்சி நூல்)
  • ஈ.வெராவுக்கு தோன்றியது (சுயசரிதை) நீதி கெட்டது யாரால்
  • இந்து மத பண்டிகைகள்
  • இந்து மதமும் தமிழர்களும்
  • இனிவரும் உலகம். பெண் ஏன் அடிமையானாள்
  • திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த பெரியார். திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கை துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டினார்.
  • கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே – ஆசிரியர் மணியம்மையார்.
    இதற்கு உரை எழுதியவர் – பெரியார்.
  • பெரியாரின் இறுதிப் பேரூரை மரண சாசனம் எனும் பெயரில் வெளிவந்துள்ளது.
  • பெரியாரின் பொன்மொழிகள் என்ற நூல் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
    தந்தை பெரியார் – ஆசிரியர் கருணானந்தம்
    தமிழர் தலைவர் ஆசிரியர் – சிதம்பரனார்
    பெரியார் ஒரு முழு புரட்சியாளர் – இராமநாதன்
    நான் கண்ட பெரியார் ஆசிரியர் – கோவை அய்யாமுத்து
  • விபச்சாரத்தில் தொடங்கி கற்பில் வளர்ந்து முட்டாள்தனத்தில் முடிந்த கதைதான் சிலப்பதிகாரம் என்றவர் – பெரியார்.
  • திருக்குறள், புத்தர் கொள்கைகளை பரப்பினார்.
  • மனிதனுக்கு அடக்க ஒடுக்கமே அழகு என்கிறார் பெரியார்.
  • 1925 இல் இசை வேளாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • சைமன் கமிஷனை வரவேற்க வேண்டும் என சுப்பராயன் அமைச்சரவைக்கு அறிவுரை வழங்கினார்
  • 1928 ல் தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டு தலைவராக பெரியார் பெயரை முன்மொழிந்தவர் – பனகல் அரசர்
  • பெரியார் 1930 ல் மலேசிய சுற்று பயண முடிவில் தாடியுடன் காட்சியளித்தார்.
    தந்தை பெரியாரோடு வெளிநாடுகளுக்கு பயணம் சென்றவர் – S. இராமநாதன்
  • பெரியார்.ரஷ்யா சென்றபோது ரஷ்ய அரசு பெரியாருக்கு கவுரவ குடியுரிமை வழங்கியது.
  • தேவதாசி ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் பேசிய காங்கிரஸ் தலைவர் – S. சத்தியமூர்த்தி
  • சாரதா சட்டத்தை டில்லி மத்திய சட்டசபையில் எதிர்த்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் – M.K. ஆச்சாரி
  • சாரதா சட்டத்தை எதிர்த்த நீதிக்கட்சி அமைச்சர் – பாத்ரோ
  • இந்தியை எதிர்த்து 1930 இல் நன்னில சுயமரியாதை மாநாட்டில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1948 திராவிடர் கழக மாநாடு நடைபெற்ற இடம் – தூத்துக்குடி
  • வகுப்பு வாரி இடஒதுக்கீட்டிற்காக முதல் அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்ற கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் – பெரியார்.
    முதல் அரசியல் சட்டதிருத்த மசோதாவை சமர்பித்தவர் – இராஜாஜி
  • 1953 ல் பெரியார் விநாயகர் சிலையை உடைக்கும் போராட்டத்தை நடத்தினார்.
  • 1956 ல் இராமன் படத்தை கொளுத்தி போராட்டம் நடத்தினார்.
    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் – இராஜாஜி
  • 1957 ல் பெரியார் நடத்திய சாதி ஒழிப்பு போரில் மணல்மேடு வெள்ளைச்சாமி இராமசாமி உட்பட 16 பேர் இருந்தனர்.
  • 1967 ல் விடையபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமது கடவுள் மறுப்பு வாசகங்களை வெளியிட்டார்
  • 1970 ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து சாதியினரும் அரச்சகராகும் சட்டம் திறைவேற்றப்பட்டது.
  • இந்திய விடுதலை குறித்து பெரியார், வெள்ளிப்பூண் பூட்டிய பழைய அடிமை விலங்கு மாற்றப்பட்டு, தங்கப்பூண் பூட்டிய புதுவிலங்கு பூட்டப்பட்டுள்ளது என்றார்.
    நீங்கள் இருக்க வேண்டிய முதலமைச்சர் பதவியில் நான் இருக்க நேரிட்டது என பெரியாரிடம் கூறிய முதல்வர் – ஓமந்தூர் இராமசாமி
  • அறிஞர் அண்ணா, பெரியாரை முதன்முதலில் சந்தித்த ஊர் – திருப்பூர் (1938)
  • இந்த அரசே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார்.
  • காமராசர் முதல்வர் பதவியை விட்டு விலகுவது தமிழருக்கும். தமிழ் நாட்டுக்கும். காமராசருக்கும் தற்கொலையாக முடியும் என பெரியார் கூறினார்.
  • நமக்காகவே வாழ்கிறார் பெரியார் என்றவர் – MGR.
  • என்னால் பெரியாரின் ஒருவரின் பேச்சை மட்டும்தான் 3 மணி நேரத்திற்கு மேல் கேட்க முடியும் என்றவர் -கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி
  • மக்களை பகுத்தறிவாளராக மாற்றும் பணியில் மற்ற நடிகர்களுக்கு வழிகாட்டியவர் என பெரியாரால் பாராட்டப்பட்டவர் – நடிகவேள் MR. ராதா
  • பெரியார், அண்ணா கலந்து கொண்ட கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டு தலைவர் – ஜி.டி. நாயுடு
  • ஹோம்ரூல் இயக்கத்தை எதிர்த்து, பெரியாரை துணைத் தலைவராக கொண்டு துவங்கப்பட்ட சங்கம் -அதிதீவிரவாதிகள் சங்கம்.
  • காந்தியார் சாந்தி அடைக என்ற நூலின் ஆசிரியர் – ஆசைத்தம்பி.
  • தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும். அதே போல் தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும் என்றவர் – காமராசர்.
  • பெரியார் இல்லத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்தவர் – மணியம்மையார்
  • பெரியார் வாழ்ந்த ஈரோடு இல்லத்திற்கு – அண்ணா நினைவகம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியது
  • 1974 ல் ஈரோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • 1979 பெரியார் – மணியம்மை இலவச மருத்துவமனை தொடக்கம்
  • உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி தஞ்சை வல்லத்தில் 1988 ல் தொடங்கப்பட்டது.
  • 49 நாட்டு தலைவர்கள் பெரியாருக்கு சிலை திறந்த இடம் – வல்லம் (தஞ்சை)
  • சமூக நீதிக்கான பெரியார் விருது முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
  • முதல் சமூகநீதி விருது பெற்றவர் – கி. வீரமணி
  • 1994 ல் வைக்கத்தில் பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் – நாவலர் நெடுஞ்செழியன்
  • கி.வீரமணி சமூகநிதி விருதை முதலில் பெற்றவர் வி.பி.சிங்
  • பெரியார் பல்கலைக்கழகம் – சேலம்
  • சென்னை -திராவிடர் கழக தலைமையிடம்உள்ள இடம்

நன்றி வணக்கம்…….

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top