பாண்டியர்கள்
- பாண்டிய பேரரசு இன்றைய மதுரை, திருநெல்வேலி, திருச்சி (ம) திருவாங்கூரின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
பாண்டிய பேரரசு:
- முற்காலப் பாண்டியர்கள் (கி.மு 3- கி.பி. 3)
- முதலாம் பாண்டிய பேரரசு (கிமி 7 கி.மி)
- முதலாம் பாண்டிய பேராசு
பாண்டியர் பற்றி அறிந்துக் கொள்ளக்கூடிய சான்றுகள்:
1. மெகஸ்தனிஸ் (கிரேக்கம்)–இண்டிகா (இந்தியாவைப் பற்றிய நூல்)
2. பிளினி (ரேம்) – இயற்கை வரலாறு (இலத்தீன் மொழி)
- இந்நூலில் கேரளக் கடற்கரையில் உள்ள “பக்காரே” துறைமுகம் பாண்டியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது என்ற குறிப்பு உள்ளது.
- வடகிழக்கு ஆப்பிரிக்கா அருகே உள்ள “நாலில்” துறைமுகத்திலிருந்து தென்மேற்கு பருவக்காற்று வீசினால் 40 நாளில் இந்தியாவை அடையலாம் என்ற குறிப்பும் உள்ளது
3. கௌடில்யர் (சாணக்கியர்) – அர்த்த சாஸ்த்திரம்
- இந்நூலில் “பாண்டிய காவாடகா” என்ற சொல் உள்ளது. அதன் பொருள் பாண்டிய நாட்டில் கிடைத்த முத்து கடற்பொருள்களைக் குறிப்பதாக உள்ளது.
4. எரித்தியக் கடலின் பெரிப்ளஸ்” என்ற நூலில் கொற்கையை “கொல்கொய்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (பெரிப்ளஸ் என்றால் கடல் வழிப்பயணக் கையேடு என்று பொருள்)
5. மார்க்கோபோலோ 1288, 1293 இல் காயல்பட்டினம் (தூத்துக்குடி) துறைமுகத்திற்கு வருகை புரிந்தார்.
6.இபின் பதூதா (மொராக்கோ) – இவரின் பயணங்கள் பற்றிய நூல் ரிக்கா பயணங்கள்
7. யுவான் சுவாங் (சீனா) -சி-யு -கி
8. வாப் – பாண்டியர் கால குதிரை வணிகம் பற்றி குறிப்பிடுகிறார்.
முற்காலப் பாண்டிய பேரரசு
- முத்துக் குளித்தலோடு தொடர்புடைய ‘கொற்கை” தொடக்கக் காலத்தில் அவர்களின் நுறைமுகமாகவும், தலைநகரமாகவும் விளங்கியது. பின்னர்அவர்களின் தலைநகரம் மதுரையானது
- புலிமான் கோம்பை என்ற கிராமத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் “கூடல்” என்னும் வார்த்தை உள்ளது.
- பட்டிணப்பாலையிலும், மதுரைகாஞ்சியிலும் கூடல் பாண்டியர் தலைநகர் என்று குறிப்பிடப்பட்டள்ளது.
பூ – வேப்பம் பூ
சின்னம் – மீன்
நாணயம் – ஒருபுறம் யானை மறுபுறம் மீன் உருவம் கொண்ட நாணயம்.
சிறந்த அரசர்கள்:
1. ஆரியப்படை கட்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் (சிலப்பதிகார காப்பியத்தில் வரும் அரசன்) இவரின் மனைவி கோப்பெருந்தேவி
2. தலையாணங்கானத்து செருவென்ற பாண்டியன் தலையாணங்கானத்து என்ற இடத்தில்
சேர அரசன் – மாந்தரஞ்சேரல்
சோழ அரசன் – பெருநற்கிள்ளி
5 வேளிர்களான திதியன், எழியன். எருமையூரான். கடுங்கோ வேண்மான், பொருநன் ஆகியோரைத் தோற்கடித்தார்.
முதலாம் பாண்டிய பேரரசு (கி.பி 550 – 950)
- பாண்டிய அரசர் “கடுங்கோன்” தென்தமிழகத்தில் களப்பிரர்களை வென்று கி.பி 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி அமைத்தார்.
- இவருக்கு அடுத்து சேந்தன் என்பவர் அரசரானார். இவர் போர் முறையில் சிறந்தவராவார். சேரரை வென்றதால் ‘வானவன்” என்னும் பட்டம் பெற்றார்.
அரிகேசரி மாறவர்மன்:
- இவர் 642 இவ் பதவியேற்றார். என்பதை வைகை ஆற்றுப்பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன.
- இவரை கூன்பாண்டியன் மற்றும் நின்றசீர் நெடுமாறன் எனவும் அழைப்பர்.
இவரின் கூனை சரிசெய்தவர் திருஞானசம்மந்தர்,
- அரிகேசரி மாறவர்மன் தொடக்கத்தில் சமணத்திலிருந்தார்.
இவரை சைவத்திற்கு மாற்றியவர் திருஞானசம்பந்தரே
மதம் மாறிய பின்னர் இவர் 8000 சமணர்களை கழுவேற்றினார்.
- பல்லவ மன்னன் 1 ம் நரசிம்ம வர்மனிடம் சங்க மரங்கை என்னுமிடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்தார்.
- இவருக்குப் பின் வந்த அரசர்கள்.
கோச்சடையான்
இரணதீரன்
1-ம் மாறவர்மன்
ராஜசிம்மன்
- 1ம் வரகுணன் இவரை ஜடில பராந்தக நெடுஞ்செழியன் என்று அழைப்பர்.
வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி” இவரே ஆவார்.
- சேரர்.பல்லவர்களை வென்றார்.
- பல விஷ்ணு கோவில்களைக் கட்டினார்.
ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன்:
- இலங்கை மீது படையெடுத்து தன் அதிகாரத்தை நிலை நிறுத்தினார்
- தொள்ளாறு போரில் (846) பல்லவ அரசன் III ம் நந்திவர்மனிடம் தோல்வி அடைந்தார்.
2 ஆம் வரகுணன்.
- திருப்புறம்பியம் போரில் (885) பல்லவ மன்னன் அபராஜித வர்மனிடம் தோல்வியடைந்தார்.
2 – ஆம் ராஜசம்மன்
- சோழ அரசன்ம் பராந்தக சோழனிடம் தோல்வியடைந்து கி.பி 920 – இல் மதுரையை விட்டு வெளியேறினார்.
- பாண்டியன் கடுக்கோனால் தொடங்கப்பட்ட 1-ம் பாண்டிய பேரரசு ராஜசிம்மனால் முடிவடைந்தது. S
இரண்டாம் பாண்டியப் பேரரசு (1190-1310)
- சோழ அரசன் அதிராஜேந்திரன் மறைவுக்கு பின் பாண்டியர் மீண்டும் எழுச்சி பெற்றனர்.
- 2 – ம் ராசராசசோழன் ஆட்சிக்காலத்தில் நடந்த போரில் ஸ்ரீ வல்லப பாண்டியன் தன் மகனைப் போரில் பறிகொடுத்தார்.
பின்னர் 5 பாண்டியர்கள் ஒன்றாக இணைந்து 1 ம் குலோத்துங்கனுக்கு எதிராக போரிட்டனர். பாண்டியர் தோல்வி அடைந்தார்.
- 1190 இல் சடையவர்ம ஸ்ரீ வல்லபன் 1 ம் குலோத்துங்கனின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சியைத் துவக்கினார். இவர் மதுரையில் அரசராக மூடிசூடி செங்கோல் ஏந்தி அரியணை ஏறினார்.
- அந்நினைவாக சுந்தரசோழபுரம் என்ற வேளாண் குடியிருப்புப் பகுதியைச் சுந்தர சோழ சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றி இறைவியாக பிராமணர்களுக்கு வழங்கினார்.
- கி.பி 13 ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் சோழர்களின் தலைமையில் இருந்து விடுபட்டு தனியரசை நிறுவினர்.
1 – ம் மாறவர்ம சுந்தர பாண்டியன் (கி.பி 1216-1238)
- கி.பி 1219-ல் 3- ம் குலோத்துங்க சோழனை வென்றார்
- ஹொய்சாளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் வென்ற சோழநாட்டை III-ம் குலோத்துங்கனிடமே வழங்கினார்.
இதனால் சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன்” என பட்டப்பெயர் பெற்றார்
1- சடையவர்ம சுந்தர பாண்டியன் (ஜடாவர்ம சுந்தர பாண்டியன்) (கி.பி 1251-1268)
- இவர் பாண்டிய அரசராக “ஸ்ரீ ரங்கம்* கோவிலில் பட்டமேற்றார். அதன் நினைவாக அக்கோவிலுக்கு ஒரு விஷ்ணு சிலையை நன்கொடையாக கொடுத்தார்.
- இவர் காலத்தில் பேரரசு வடக்கே நெல்லூர் கடப்பா முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது.
- மலைநாட்டு தலைவரான சேர அரசன் இவருக்கு கப்பம் கட்டினார்.
- ஹொய்சாளர்களை கட்டுக்குள் வைத்திருந்தார்.
- மாளவப்பகுதியை ஆட்சி செய்த போஜ அரசன் வீரசோமேஸ்வரர்க்கும் ஜடாவர்மனுக்கும் இடையே கண்ணனூர் என்ற இடத்தில் நடந்த போரில் மாளவ அரசரை தோற்கடித்தார்.
- வடதமிழகத்தில் கடலூர்(காடவர்கள்) காஞ்சிபுரம் மேற்கு தமிழகத்தில் ஆற்காடு, சேலம், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறுநில தலைவர்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவினார்.
- இவரது கோயில் திருப்பணிகளை விளக்கும் வகையில் கோயில்லொழுகு என்ற நூல் வெளியிடப்பட்டது.
- இவர் காலத்தில் பாண்டிய அரசு, பாண்டிய பேரரசாக மாறியது.
பட்டப் பெயர்கள்:
- எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டியன்
- திருபுவனச் சக்கரவர்த்தி (சோழர்களை வென்றதால்)
- மகாராஜாதி ராஜா, ஸ்ரீ பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமான்.
- இவர் தனி ஒருவராக ஆட்சி செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
- சுந்தர பாண்டியன் தன்னுடைய தரப்பிலான விக்கிரம பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய இருவருடன் சேர்ந்து ஆட்சி செய்தார்.
- விக்கிரம பாண்டியன் ஈழம், கொங்கு, சோழநாடு ஆகியவற்றை வெற்றிக் கொண்டதாக அவர் குறித்த ஓர் ஆவணம் கூறுகிறது.
மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி 1269 -1312)
- முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மகன்
- அமைதியையும். செழிப்பையும் நல்கிய அரசர்.
- இவர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- சீன அரசன் குப்ளாய் கானுடன் நட்புறவு கொண்டிருந்தார்.
- வெனிஸ் பயணி மார்க்கோபோலோ இவரின் அவைக்கு வருகை புரிந்தார்.
- இவர் இலங்கையின் மீது படையெடுத்து “சுபகிரி” கோட்டையைக் கைப்பற்றி. அக்கோட்டையில் இருந்து பெரும் செவ்வம் மற்றும் புத்தரின் சின்னமான பற்களையும் மதுரைக்கு கொண்டு வந்தார்.
- சேரர்களிடமிருந்து “கொல்லம்” பகுதியை வென்றார். இதனால் ‘கொல்லம் கொண்ட பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
- கி.பி 1279-இல் சோழ அரசன் 3 ம் இராஜேந்திர சோழனை தோற்கடித்தார்.
- இவருடன் சேர்ந்து நான்கு பாண்டிய அரசர்கள் ஆட்சி செய்தனர். அவ்வரசர்களில் ஒருவரான 2 – ம் சடையவர்ம சுந்தர பாண்டியன், சோழ அரசன் 3 – ம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்தார்.
- 1302 – இல் வீரபாண்டியனுக்கு முடிசூட்டப்பட்டது.
பாண்டிய பேரரசின் வீழ்ச்சி:
- 1 ம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்கள் சுந்தர பாண்டியன் (Vs)வீரபாண்டியன் இடையே வாரிசுரிமைப் போர்.
- சுந்தர பாண்டியன் துவார சமுத்திரத்தில் இருந்த அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூரின் உதவியை நாடுதல்.
- மாலிக்காபூரின் உதவியோடு சுந்தரப் பாண்டியன் வெற்றியடைந்தார்.
- கில்ஜி மரபிற்கு பின் துக்ளக் மரபும் தென்னிந்தியாவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தின.
- துக்ளக் மரபு வீழ்ச்சிக்கு பின் ஜலாலுதீன் அலன் ஷா 1333 (அ) 1335 -ல் மதுரையை சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டார்.
ஆட்சியமைப்பும் அதிகாரமும்:
- பாண்டிய அரசர்களின் தலைநகரம் மதுரை
- மதுரை பொது மக்களால் “கூடல்” என்று போற்றப்பட்டது இச்சொல்லுக்கு கூடுகை என்று பொருள்.
- பாண்டிய மன்னர்கள் கூடங்கோன். கூடல்காவலன், மரபுரபரமேஸ்வரன் என மதிக்கப்பட்டனர்.
தொடக்ககால பாண்டியரின் பட்டங்கள்:
1) பாண்டிய அதியரசன்
2) பாமகராசன்
3) மன்னர் மன்னர்
4) அவனிப சேகரன்
5) ஏகவீரன்
6) சகலபுவன சக்கரவர்த்தி
பிற்கால பாண்டியர்களின் சமஸ்கிருதப் பெயர்கள்
1) கோதண்ட ராமன்
2) கோலாகலன்
3) புவனே கவீரன்
(4) கலியுக ராமன்
தூய தமிழ் பட்டங்கள்
1) செம்பியன்
2) வானவன்
3) தென்னவன்
- அரசர்கள் தங்கள் கட்டளைகளை வாய்மொழி வழியாக பிறப்பித்தார்கள். அவை “திருமந்தி ஓலை” என்றழைக்கப்பட்டன.
- பாண்டியர் அரண்மனை திருமாளிகை, மனபரணன் திருமாளிகை என்றழைக்கப்பட்டன.
- பாண்டியர் அறியணை – முன்னைய தரையன், பாண்டிய தரையன், கலிங்க தரையன் என்றழைக்கப்பட்டன.
- அரசர் மனுசாஸ்திரத்தின் படிதான் ஆட்சி செய்தார்.
ஆட்சிப்பகுதி:
- பாண்டியர்களின் ஆட்சிப்பகுதி பாண்டிய மண்டலம், தென் மண்டலம், பாண்டி நாடு என்றழைக்கப்பட்டன.
- வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளால் வளம்பெறும் பகுதியாக இருந்தது.
எல்லைகள்:
- புதுக்கோட்டை வழியே ஓடும் வெள்ளாறு – வட எல்லை
- இந்திய பெருங்கடல் -தென் எல்லை
- மேற்குத் தொடர்ச்சி மலைகள் – மேற்கு எல்லை
- வங்களை விரிகுடா – கிழக்கு எல்லை
அரச அதிகாரிகள்:
- அரச தலைமைச் செயலகம் “எழுத்து மண்டபம்” என அழைக்கப்பட்டது.
- பிரதம மந்திரி “உத்தர மந்திரி” என அழைக்கப்பட்டார்.
- மாணிக்க வாசகர். குலச்சிறையார், மாறன் கரி ஆகியோர் பாண்டியர் கால அமைச்சர்களாவர்.
- பல அரண்மனை பணிகளை கண்காணித்தவர்கள் – அகபாரிவரமுதலி, திருவாசல் முதலி
- வரி வசூல் செய்வதற்கு புறவு வரி திணைகளத்து முகவெட்டி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார்.
- வரியசூல் செய்யும் தலைமை அதிகாரி – திணைகள் நாயகம்
- வரி நிர்ணயம் செய்வேர் நாடுவகை செய்வேர் எனவும் அழைக்கப்பட்டர்
- வரி தண்டல் செய்த அதிகாரி முதலி எனவும் அழைக்கப்பட்டர்
- மாறன் எயினன், சாத்தன் கணபதி, ஏனாதி சாத்தன், திற திறன், மூர்த்தி எயினன் ஆகியோர் உயர் அதிகாரிகளாவர்.
படைப்பிரிவு:
- குதிரைப்படை தேர்ப்படை காலாட்படை, யானைப்படை ஆகிய 4 வகை படைகள் இருந்தன.
- படைப்பாசறையை கண்காணிக்கும் அதிகாரி *ஆராய்ச்சி நாயகம்’ எனப்பட்டார்.
- படைத்தளபதி சேனாதிபாதி எனப்பட்டார்.
படைத்தளபதி பட்டங்கள்:
- அனைத்து படைகளுக்கும் பொதுவான தலைவர் மகாசமந்தன்
1) பள்ளி வேலன்
2) பராந்தகன் பள்ளி வேலன்
3) மாறன் – ஆதித்தன்
4) தென்னவன் – தமிழ்வேல்
- அவசர காலத்தில் உதவும் படைப்பிரிவுகள் தென்னவன், முனையெதிர் மோகர்.
- பிற்கால பாண்டியர்களின் நீதித்துறை தருமாசனம் என்றழைக்கப்பட்டது.
நிர்வாகப் பரிவுகள்:
- பாண்டிய நாடு — மண்டலம் வளநாடு — நாடு— கூற்றங்கள்
- நாடுகளும் கூற்றங்களும் மங்கலம், நகரம். குடி. ஊர் எனும் குடியிருப்புகளைக் கொண்டிருந்தன.
- நாடுகளை நிர்வகித்தோர் நாட்டார் ஆவார்.
- பாண்டிய மண்டலத்தில் குளக்கீழ் என்ற தனி அரசியல் பிரிவு இருந்தது.
குளக்கீழ் என்றால் பாசன ஏரிக்கு கீழிருக்கும் பகுதி என்று பொருள். (எ.கா)மடக் குளக்கீழ் மதுரை என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
கிராம நிர்வாகம்:
- 800 ஐச் சேர்ந்த மானுர் கல்வெட்டு (திருநெல்வேலி) பாண்டியர்களின் கிராம நிர்வாகத்தைப் பற்றி கூறுகிறது.
- சிவில், இராணுவ அதிகாரம் இரண்டும் ஒரே நபரிடம் வழங்கப்பட்டது
- சோழர்களின் உள்ளாட்சி முறை போலவே நிர்வாகம் காணப்படுகிறது.
நிலம்:
- நில உரிமையளர் “பூமி புத்திரர் (அ) வேளாளர் எனப்பட்டனர்.
- இவர்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் “நாட்டு மக்கள்” என குறிப்பிடுகின்றனர்.
- இச்சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் “சித்திரமேழி பெரிய நாட்டார்”
- இதர தொழில் செய்வோர் “இரதகாரர்கள்” எனப்பட்டனர்.
- நில அளவீடுகளின் போது 14 (ம) 24 அடி நீளமுள்ள கழிகளைப் பயன்படுத்தினர்.
- நீளங்கள் முறையாக அளக்க ‘குடிதாங்கி, அருள்நீதி ஊர்கோல் என்ற அளவுகோல்கள் பயன்பட்டன.
- ஏர் உழவர்கள் மேழிச் செல்வம் எனப்பட்டனர்.
நன்கொடை நிலங்கள்:
1) சால போகம் – பிராமணர்களுக்கு
2) தட்டர்கானி – இரும்பு உலோக வேலை செய்தவர்களுக்கு
3) தச்சர்மானியம்
மரவேலை செய்வோருக்கு
4) பட்ட விருத்தி கல்வி கற்பிக்கும் பிராமண குழுவிற்கு
நிலவரி:
- நிலவரியே நாட்டின் முக்கிய வருவாய்
- மொத்த வருவாயில் 1/6 பங்கு வரியாக வசூல் செய்யப்பட்டது.
வரிகள்:
1) இளஞ்சினைப்பேறு
2) உழுதுக்குடி
3) பாடிகாவல்
(4) தட்டாரப்பாட்டம்
5) இடைவெளி
6) பொன்வரி
7) தளிக்கிறை – நெசவாளர்கள்
8) பஞ்சுலிே – நெசவாளர்கள்
9) செக்கிறை
10)கடமை, காணிகடன்.
நீர்பாசனம்
- பாண்டியர்கள் பெரும் எண்ணிக்கையிலான பாசன ஏரிகளை உருவாக்கியுள்ளனர்.
- சேந்தன், மாறன் காலகட்டத்தைச் சேர்ந்த வைகை ஆற்றுப்படுகை கல்வெட்டுகள். அவரால் நிறுவப்பட்ட ஆற்று மதகு பற்றி குறிப்பிடுகிறது.
- ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் வெட்டிய ஒரு பெரிய ஏரி இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
- பிற்கால பாண்டியர் காலத்தில் (ஏறத்தாழ 1212) திருவண்ணாமலைக் கோயில் நிலங்கள் பாசன வசதிபெற பெண்ணையாற்றிலிருந்து வாய்க்கால் அமைத்து தந்துள்ளனர்.
- ராமநாத புரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன.
#”இருப்பைக் குடி கிழவன்” என்ற உள்ளூர் தலைவன் பல எரிகளை வெட்டியதுடன் அவற்றைப் பழுதுபார்க்கும் வேலையிலும் ஈடுபட்டார்.
- புதுக்கோட்டை பகுதியில் நெய்வாசல் எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பிஸ் மதகு பாண்டியர் காலத்தவை ஆகும்.
- ஆறு ஏரி. குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற பயன்படும். அமைப்பு மதகு ஆகும்.
- கல்வெட்டுகளில் மடை குமிழி, மதகு என அழைக்கப்படுகிறது
- பழுது நீக்கும் பணிகள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன.
வணிகம்:
- ஏழாம் நூற்றாண்டு முதல் மேற்கு கடற்கரையில் அராபிய வணிக குடியிருப்புகள் உருவாகிவிட்டன.
- இதன் மூலம் கிழக்கு கடற்கரையிலிருந்து தமிழர்களுடன் வணிகத்தை விரிவுபடுத்தினர்.
- அராபிய வணிகர்களுக்கு சுங்க வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டது.
- கல்வெட்டுகள் வணிகர்களை
1) நிகமத்தோர்
2) நானா தேவி
3) திசை ஆயிரத்து ஐநூற்றுவர்
4)ஐநூற்றுவர்
5) மணிக்கிராமத்தர்
6) பதிணென் விஷயத்தார்.
7) அஞ்சு வண்ணத்தார் என்று குறிப்பிடுகிறது.
ஐந்து வண்ண பொருள்களை விற்பனை செய்தவர்கள்
பாண்டியர் நாட்டில் –தீதாண்டதான புரத்திலும்
சோழர் நாட்டில் நாகப்பட்டினத்திலும் வாணிபம் செய்தனர்.
- இவர்களின் வணிகக் குழு கொடும்பாளூர், பெரியகுளம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன.
- பாண்டியர்காய முக்கிய துறைமுகம், காயல்பட்டினம் (தூத்துக்குடி)
- வணிக பரிமாற்றத்திற்கு ஊடகமாக தங்கம் விளங்கியது.
தங்க நாணயங்கள்: காசு. பழங்காசு, அன்றாடப் பழங்காசு. கனம், கழஞ்சு. பொன் தனபாலன் குளிகை, புதுக்களிகைப் பணம் என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
- வணிகர்களின் குடியிருப்புப் பகுதி’தெரு’ எனப்பட்டது
- சீரான கால இடைவெளியில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகள் “தவனம்” எனப்பட்டன.
குதிரை வணிகம்:
- 13,14-ஆம் நூற்றாண்டில் குதிரை வணிகம் அதிகரித்தது.
- சம்பிரதாய விழாக்களுக்கும், போர்புரியவும் குதிரைகள் தேவைப்பட்டதால் அரசர்கள் குதிரைகளுக்காக முதலீடு செய்தனர் என மார்க்கோபோலோ, வாசப் குறிப்பிடுகிறார்கள்.
குதிரை வணிகம் பற்றி வாசப் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்:
- காயல் (ம) பிற இந்திய துறைமுகங்களில் ஏறத்தாழ 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
அவற்றில் 1400 குதிரைகள் ஜமாலுதினுக்கு சொந்தமானவையாகும்
- ஒரு குதிரையின் சராசரி விலை 220 செம்பொன் தினார்கள் (அ) தங்கத்திலான 200 திணர்கள்
- குதிரை வணிகர்கள் குதிரை செட்டி எனப்பட்டனர்.
- இந்தியாவின் கடல்சார்ந்த வரலாறு, பாண்டியர்களின் வரலாறின்றி முழுமையாகாது.
கடல் வணிக மையங்கள்:
1) சிந்தாமணி
2) மயிலாப்பூர்
3) திருவொற்றிய
4) திருவாடனை
5) மகாபலிபுரம்
மதம்:
- பாண்டியர்கள் தொடக்கத்தில் சமணர்களாக இருந்து சைவமதத்திற்கு மாறினர்.
- பாண்டியர் சைவம், வைணவத்தை சமமாகவே கருதினர்.
- அரசர். அஸ்வமேதயாகம், ஹிரண்யகர்பம், வாஜ்பேய வேள்வி போன்ற வேள்விகை நடத்தினார்.
- தீவிர மத மோதல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
கோயில்கள்:
பாண்டியர் கால் கோயில்கள்
1) கல்லறை கோயில்கள் (சுந்தர பாண்டி சுவரம்)
2) குடைவரைக் கோவில்கள் மிகச் சிறந்த எ.கா கழுகுமலை வெட்டுவான் கோயில் (தமிழகத்தின் எல்லோரா)
3) கட்டமைப்புக் கோவில்கள் ஆகும்.
- இடைக்கால, பிற்கால பாண்டியர் புதிதாக கோயில்கள் கட்டவில்லை.
- பண்டையக் கால பாண்டியர்கள் உருவாக்கிய குடைவரைக் கோயில்கள்
1) பிள்ளையார்பட்டி
இக்கோவிலிலல் நுழைவாயிலை
பார்த்தபடி கணேசனின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
“தேசிவிநாயகம் என குகைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளை கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலப்புறமாக திரும்பியுள்ளது.
2) திருமயம்
3) குன்றக்குடி
4) திருச்செந்தூர்
5) கழுகுமலை
6)கன்னியாகுமரி
7) சித்தன்ன வாசல்
- சித்தன்ன வாசல் குகைக் கோயிலை புதுப்பித்தவர் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் இக்குகைக் கோயிலில் காணப்படும் 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு இளம் கௌதமனர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இலக்கியம்:
- சங்கம் என்ற சொல் கழைக்கழகம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ள நூல் இறையனார் அகப்பொருள்.
- திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் நூல்களிலும் சங்கம் என்ற சொல் கழைக்கழகம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.
- தமிழை வளர்க்கவும். மகாபாரத்த்தை மொழிபெயர்க்கவும் ஒரு கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக ஒரு செப்பேடு கூறுகிறது.
மாணிக்க வாசகர் – திருவாசகம்
ஆண்டாள் – திருப்பாவை
பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு
வில்லிபுத்தூரார் – மகாபாரதம்
அதிவீர ராம பாண்டியன் – நைடதம்
ஸ்ரீ கவிராயர் – சேயூர் முருகன் உலா, இரத்தினகிரி
- ஸ்ரீ வல்லய பெருஞ்சாலை என்ற உயர் கல்விக்கூடம் கன்னியாகுமரி, காந்தளூர் சாலையிலும் நிறுவப்பட்டன.
- பாண்டியர் காலத்தில் இருந்த நூல்கள் “சரஸ்வதி பண்பரங்கள் அழைக்கப்பட்டன.
- சிதம்பரம், சேரமான்தேவி போன்ற இடங்களிலும் நூலகங்கள் இருந்தன.
- வேத பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பட்ட விருத்தி என்ற விருதும், சாலபோகம் என்ற மானியம் வழங்கப்பட்டது.
- அந்தணர் நடத்திய பாடசாலைகள் கடிகை, வித்யாஸ்தானம் என்றழைக்கப்பட்டன.
- சைவசித்தாந்த வல்லுநர்கள் சிவகங்கை, திருப்பத்தூரில் தங்கி பாடம் கற்பித்தனர்.
நாடகக்கலை:
- நாடகக்கலையை போற்றி வளர்த்தனர்.
- நாடகத்தில் நடிப்போருக்கு ‘கூத்துக்காணி” என்ற பட்டம் வழங்கப்பட்டன.
- ஆடல் மகளிருக்கு ‘தலைக்கோல்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- ஆத்தூர் கோயில் கல்வெட்டில் இருவகை கூத்துகள் பற்றி உள்ளன.
1) சாந்திக் கூத்து
2) மினோதக் கூத்து
- பாண்டியர் கால நாடக அரங்கம், அழகிய பாண்டியர் கூடம் என அழைக்கப்பட்டது.
- பாண்டியல் கால நடன கலைக்கு எடுத்துக்காட்டு சிதம்பரம் (ம) திருபரங்குன்றத்தில் உள்ளநாடரஜன் சதுரத்தாண்டவ திருக்கோம்.
1311 – இல் மாலிகபூர் படையெடுப்பு அமிர்குஸ்ரு கணிப்பின்படி மதுரையிலிருந்து 512 யானைகள், 5000 குதிரைகள், 500 மூட்டைகளில் வைரம், முத்து, மரகதம், மாணிக்கநகைகள் மாலிக்பூரால் எடுத்து செல்லப்பட்டன.
- மாலிக்காபூர் சொக்கநாதர் கோயிலை இடித்து பெருந் செல்வங்களை எடுத்து சென்றார்.
பாண்டியர்கள் பற்றிய மார்கோபோலோ குறிப்புகள்:
- மார்க்கோபோலோ 1288, 1293-ல் காயல்பட்டினம் (தூத்துக்குடி) துறைமுகத்திற்கு வருகை புரிந்தார்.
- இவர் பாண்டிய அரசு செல்வசெழிப்புமிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்.
- இலங்கையோடு சேர்ந்து உலகில் காணப்படும் பெரும்பாலான முத்துக்களையும். மாணிக்க கற்களையும் உற்பத்தி செய்கிறது.
- சதி உடன்கட்டை பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.
- காயல் துறைமுகம் முழுவதும் அரபிய, சீன கப்பல்கள் நிறைந்திருத்ததாகவும் காயல் நகரில் வணிகம் முழுவீச்சில் நடைபெற்றதாகவும் கூறுகிறது.
குறிப்புகள்:
பிரான்சிஸ் சேவியர் என்பவர் தூத்துக்குடி பகுதியில் வாழும் பரதவர் எனும் மீன் பிடிக்கும் சமூகம் கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு கருவியாக இருந்தார். மற்றொருவர் மதுரையில் இருந்த ராபர்ட் நொபிலி ஆவார்.
நன்றி வணக்கம்………..