- பல்லவர்கள் ஆட்சி செய்வதற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள் ஆவார். கி.பி 3 – கி.மி 6 களப்பிரர்காலம் ஆகும்.
- தமிழக வரலாற்றில் களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம்” என அழைக்கிறோம்.
- களப்பிரர்கள் சமணம் (பிராகிருதம்) மற்றும் பௌத்த (பாலி) மதத்தை ஆதரித்தனர்.
- யாப்பெருங்கலம் கூறும் களப்பிர மன்னர் “அச்சுத காப்பாளன்” இவரது தலைநகர் “உறையூர்” ஆகும்.
- யாப்பெருங்கலம் நூலின் ஆசிரியர் அமிர்தசாகரர்.
- சர்வ நந்தி, வஜ்ஜிர நந்தி என்ற சமண அறிஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தனர்.
சர்வ நந்தி – லோக வியாபகம் என்னும் சமணநூலை எழுதினார்
- கி.பி 470-இல் பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வஜ்ஜிரநந்தி மதுரையில் ‘திராவிட சங்கம்” ஒன்றை நிறுவினார்.
சமணக் கொள்கையை பரப்புவது இச்சங்கத்தின் நோக்கம் ஆகும்.
களப்பிரர் கால இலக்கியம்:
- பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளும், நாலடியாரும் தவிர மற்ற 16 நூல்களும் இக்காலத்தில் இயற்றப்பட்டது.
- திருமூலர் -திருமந்திரம் (பத்தாம் திருமுறை)
- காரைக்கால் அம்மையார் (இயற்பெயர் புனிதவதி) எழுதிய நூல்கள்
1) திரு இரட்டை மணிமாலை
2) அற்புதத் திருவந்தாதி
3) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
- பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவர்
1) பொய்கை ஆழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார். களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பல்லவர்கள்:
- பல்லவர்கள் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துகள்:
1) பார்த்தியர் (பாரசீகம்) எனும் அரச மரபின் மற்றொரு பெயரான பஹல்வ என்ற சொல்லின் திரிபே பல்லவ ஆகும்.
2) வாகடகர்கள் (பிராமணர்)
3) சாதாவாகணர்களின்(ஆந்திர அரசு) படைத் தளபதியாக இருந்தவர்கள்.
4) சோழ அரசனுக்கும் – மணிபல்லவத்தீவின் நாக கண்ணிகைக்கும் மகனாக பிறந்தவர்கள் பல்லவர்கள்
5) அசோகரின் 13 ம் பாறைக் கல்வெட்டு பல்லவர்களை “புலிந்தர்கள் என்று குறிப்பிடுகிறது.
6) இறுதியாக தொண்டை மண்டலத்தை தாயகமாக கொண்டவர்கள் தான் பல்லவர்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- தொண்டை மண்டலம் என்பது வடபெண்ணை ஆற்றுக்கும். வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி ஆகும்.
- பல்லவர்களின் முதல் தலைநகர் – காஞ்சிபுரம். இரண்டாவது தலைநகர் -மாமல்லபுரம்
காஞ்சியின் சிறப்புகள்:
1) ஏரிகளின் மாவட்டம்
2) ஏழு புனிதத்தலங்களுள் ஒன்று என்றவர் – யுவான் சுவாங்
3) கல்வி மாநகர்
4) ஆயிரம் கோயில்களின் நகரம்.
கல்வெட்டு சான்றுகள்:
- கூரம் செப்பேட்டு | ம்நரசிம்மவர்மன் (அ) 1 ம் பரமேஸ்வர்மன்
- 2 ம் நந்திவர்மன் –
1) காசக்குடி செப்பேடு
2) உதேயந்திரபட்டயம்
- 3 ம் நந்திவர்மன் –
1) வேலூர்பாளையம் செப்பேடு
2) செந்தலைக் கல்வெட்டு
பல்லவர்கள்
- முற்கால பல்லவர்கள் (கி. பி 250-350)
- இடைக்கால பல்லவர்கள் (கி. பி 350-550)
- பிற்காலப் பல்லவர்கள் (கி. பி 575-970)
முற்காலப் பல்லவர்கள்:
- சிம்ம வர்மன் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி பல்லவ ஆட்சியை ஏற்படுத்தினார்.
- சிம்ம வர்மனின் மகன் சிவஸ் கந்த வர்மன் (பிராகிருத மொழி பட்டயம்)
- முற்காலப் பல்லவர்கள் “பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
இடைக்காலப் பல்லவர்கள்
- இடைக்கால பல்லவர்களில் மிகச்சிறந்த அரசன் விஷ்ணுகோபாலன் (சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டவர்)
- இடைக்காலப் பல்லவர்கள் “சமஸ்கிருத” மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்
பிற்காலப் பல்லவர்கள்:
சிம்ம விஷ்ணு (கி.பி 575 – 600)
- 2 ம் சிம்மவர்மனின் மகன்
- வட தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பிற்கால பல்லவ மரபை தொடங்கியவர்.
- சோழர்களை வென்று காவிரி நதியை கடந்து பல்லவ ஆட்சியை விரிவுபடுத்தினார் என கூறும் செப்பேடு காசக்குடி செப்பேடு
- வடக்கே ஆந்திராவின் விஷ்ணுகுண்டு முதல் தெற்கே காவிரி வரை பரந்த பேரரசாக மாற்றினார்.
- எனவே அவனி சிம்மன்” (உலகின் சிங்கம் (அ) பூமியின் சிங்கம்) எனப் பட்டப்பெயர் பெற்றார்.
- இவரின் அரசவைப் புலவர் பாராவி கிர்தார்ஜினியம் (வடமொழி) என்ற நூலை இயற்றினார்.
- இவர் பின்பற்றிய சமயம் வைணவம் ஆகும்.
- இவரின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகாசனம் என்னும் நூலில் இவரைப்பற்றிய குறிப்பு உள்ளது.
- இவரின் சமகால பாண்டிய மன்னன் கடுங்கோன். தென் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்.
முதலாம் மகேந்திர வர்மன் கி.பி 600 – கி.பி 630
- சிம்ம விஷ்ணுவின் மகன்
- தமிழகத்தில் முதன் முதலில் குடைவரைக் கோயில்களை கட்டி பெயர் பெற்றவர்
- இரண்டாம் புலிகேசியின் சமகாலத்தவர்
- இவருடைய காலத்தில் சாளுக்கியர்களுடன் பகைமை கொண்டிருந்தார்
சிறப்பு பெயர்கள்.
- சித்திரகாரப் புலி – ஓவியக்கலை
- வாத்திய வித்யாதரன் – இசை
- சங்கீரண ஜாதி – இசை
- சேத்தக்காரி கோயில் கட்டுபவன்
- சத்ரு மல்லன் -போர் திறமை
- களகப் பிரியன் – போர் திறமை
- விசித்திரசித்தன் இலக்கியத் தொண்டு
- மத்த விலாசன் – இலக்கியத் தொண்டு
- குணபரன் – தாராள குணம்
- மகேந்திர விக்ரமன்
- மகேந்திர போத்தராசா
- சத்ய சந்தன்
- போத்தரையன்
- புருஷோத்தமன்
- லலிதாங்குரன்
- அவனி பாஜனன் – பூமியில் தன் புகழை நிரப்புபவன்.
படையெடுப்பு:
- கி.பி. 620ல் புள்ளலூர் போரில் 1ம் புலிகேசி வெற்றி பெற்றார் என ஐஹோல் கல்வெட்டு கூறுகிறது.
வெற்றி பெற்ற ம் புலிகேசி தெற்கே காவிரிவரை சென்று சோழர்களுடன் நட்பை ஏற்படுத்தினார்.
சமயப்பணி:
- முதலில் சமண சமயத்தை பின்பற்றினார்.
- இவரை சைவ சமயத்திற்கு மாற்றியவர் அப்பர் (அ) திருநாவுக்கரசர் என பெரியபுராணம் கூறுகிறது
- மகேந்திரவர்மன் சைவத்திற்கு மாறியதைக் கூறும் கல்வெட்டு திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டு.
- திருநாவுக்கரசர் சமணத்திலிருந்தபோது “தருமசேனர்* என்றழைக்கப்பட்டார்.
- கல்வி கரையிலாத காஞ்சி என்றவர் – திருநாவுக்கரசர்
- நகரங்களில் சிறந்தது காஞ்சி என்றவர் காளிதாசர்
- சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய பின்னர் சமணர்களை கொடுமைப் படுத்தினார்.
- திருப்பாதிரிப்புலியூரில் (கடலூர்) இருந்த சமணப்பள்ளியை அழித்தார்.
- திருவதிகையில் (கடலூர்) “குணபர ஈஸ்வரம்” என்ற சிவன் கோயிலை கட்டினார்.
- தமிழ்நாட்டில் “குடைவரைக் கோயில்களை* முதலில் குடைந்தவர்.
- செங்கல், மரம், சுண்ணாம்பு, உலோகம் பயன்படுத்தாமல் பிரம்மா, விஷ்ணு சிவனுக்கு. கோயில் அமைத்ததை பெருமையுடன் “மண்டகப்பட்டு (விழுப்புரம்) கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
- இதுவே இவர் உருவாக்கிய முதல் குடைவரை கோயில்
- இக்கல்வெட்டில் இவர் விசித்திர சித்தன் என்றழைக்கப்படுகிறார்.
- சமணக்கோயில் – சித்தன்ன வாசல். (புதுக்கோட்டை)
- காடுவெட்டி என்பது பல்லவர்கால பரம்பரை பெயர். (வேளாண்மையில் அவர்கள் காட்டிய ஆர்வத்தால்
- ஏரிகள்
மகேந்திரவாடி (வேலூர்).
மாமண்டூரில் அமைத்த ஏரியின் பெயர் சித்திரமேக தடாகம் (திருவண்ணாமலை). தளவானூர் (விழுப்புரம்).
- காஞ்சிபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார்.
கலைபணி:
- திராவிட கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார். அது ‘மகேந்திரபாணி” என குறிப்பிடுகிறது.
- முதலாம் மகேந்திரவர்மனின் இசை ஆர்வத்தை “குடுமியான் மலை கல்வெட்டு” (புதுக்கோட்டை) மூலம் அறியலாம்.
- இக்கல்வெட்டு “சித்தம் நமச்சிவாய” என தொடங்குகிறது.
- இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்er இசைக் கலைஞர் உருத்திராச்சாரியார் மகேந்திரவர்மனின் சமகாலத்தவர்.
- 1ம் மகேந்திரவர்மன் “பரிவாதினி” என்ற வீணை வாசிப்பதில் வல்லவர் என குடுமியான் மலைக் கல்வெட்டு கூறுகிறது
- சித்தன்னா வாசலில் நடனமாதர் ஓவியம். தாமரை தடாகம் போன்ற சிறப்பான ஓவியங்களை வரைந்தார்.
- தட்சிண சித்திரம்” என்ற ஓவிய நூலை தொகுத்தார். இந்நூல் தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடு.
- மத்த விலாச பிரகாசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி)
இந்நூல் 1 ம் மகேந்திரவர்மன் சமணத்தில் இருக்கும் பொழுது பௌத்தத்தை இழவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்டது.
- பாகவத வியூகம் போன்ற வடமொழி நூல்களை எழுதினார்.
- பாகவத அஜிக்கியம் என்னும் நூலை 1 ம் மகேந்திரவர்மன் அல்லது போதயனாட் எழுதியுள்ளார்.
குடைவரைக் கோயில்கள்:
- மண்டகப்பட்டு இலச்சிதயானக் குடைவரைக்கோயில்
- பல்லாவரம் – பஞ்ச பாண்டவர் குடைவரைக்கோயில்
- வல்லம் வசுந்தேசுவரர் மண்டபம்
- மகேந்திர வாடி – மகேந்திர விஷ்ணு கிரகம்
மகேந்திரவர்மனின் குடைவரைக் கோயில்கள் மண்டப பாணியில் தூண்களைக் கொண்ட Se மண்டபத்தைக் கொண்டிருக்கும் அல்லது முதலில் ஒரு மண்டபத்தையும், அதன் பின்புறமோ, பக்கவாட்டிலோ ஒரு கருவறையைக் கொண்டிருக்கும்.
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630-668)
- 1- ம் மகேந்திரவர்மனின் மகன்
- மாமல்லன் (மற்போரில் சிறந்தவன்) என அழைக்கப்பட்டார்
- மாமல்லபுரத்தை நிறுவியவர் இவரே ஆவார்.
- இவர் காலத்தில் கி.பி 640 இல் சீனப்பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை புரிந்தார்.
- படைத்தளபதி “பரஞ்ஜோதி” பின்னாளில் போர் ஆடைத் தவிர்த்து, காவி ஆடை அணிந்து சிறு தொண்ட நாயனார் ஆனார்.
- கி.பி 650 இல் கடுமையான பஞ்சம் மக்கள் துயரைப் போக்க சைவ நாயன்மார்களான சம்பந்தரும், அப்பரும் ஈடுபட்டனர்.
சிறப்பு பெயர்கள்:
- மாமல்லன்
- வாதாபி கொண்டான்
- ஸ்ரீ பரன்
- ஸ்ரீ மேகன்
- ஸ்ரீ நதி
- அமேயமாயன்
- இரணஜெயன்
- நயநாங்குரன்
படையெடுப்புகள்: (இலங்கை அரியணைப் போர்)
- 1ம் நரசிம்ம வர்மனின் நண்பன் மானவர்மன்
- இலங்கை பட்டத்து இளவரசர் மானவர்மன் (மற்றும்) அட்டதத்தன் இடையே போர் நடைபெற்றது.
- முதல் போரில் மானவர்மன் தோல்வி
- கி.பி 631 இல் 1 வது போரில் முதலாம் நரசிம்மவர்மன், மானவர்மனுக்காக இலங்கை அரியணையை மீட்டுத் தந்தார் என காசக்குடி பட்டயம் கூறுகிறது.
- நரசிம்மவர்மனின் இலங்கை வெற்றி ‘ராமாயணக் கதாநாயகன்” ராமனின் வெற்றியுடன் ஒட்பிட்டுக் கூறுப்படுகிறது.
பல்லவ – பாண்டிய போர்:
- 1-ம் நரசிம்மவர்மன் Vs பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குசன் (எ) நின்ற சீர் நெடுமாறன் பாண்டியன்
- பாண்டிய நாட்டின் எல்லையை விரிவுபடுத்த பல்லவ அரசுடன் போர்.
- சங்க மரங்கை” என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் படைத்தலைவர் பரஞ்சோதி பாண்டிய மன்னனை தோற்கடித்தார்.
பல்லவ – சாளுக்கிய போர்: (மணிமங்கலம் போர் கி.பி 642)
- காஞ்சிக்கு அருகில் உள்ள மணிமங்கலம் எனும் இடத்தில் 2- ம் புலிகேசிக்கும். 1-ம் நரசிம்ம வர்மனுக்கும் இடையே போர் (642) நடைபெற்றது.
- 1-ம் நரசிம்ம வர்மன் வெற்றி பற்றி காஞ்சி கூரம் செப்பேடு கூறுகிறது.
- சாளுக்கிய தலைநகர் வாதாபியை தீக்கரையாக்கியதால் 1 ம் நரசிம்மன் வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
- படைத்தளபதி பரஞ்ஜோதி வாதாபி கணபதி என அழைக்கப்பட்டார். இவர் வெற்றிக்கு பின் மனமாற்றம் பெற்று சிவபக்தரானர் என்ற செய்தியை கூறும் நுல் – பெரிய புராணம்.
யுவான் சுவாங் வருகை:
- பயணிகளின் இளவரசர்
- 1- ம் நரசிம்மன் காலத்தில் கி.பி 640 – ல் காஞ்சிக்கு வருகைபுரிந்தார்.
- காஞ்சி 6 மைல் சுற்றளவு கொண்டது.
- 100 புத்த சமய மடாலயங்கள் இருந்தன.
- 10000 புத்த சமய துறவிகள் வாழ்ந்தனர்.
- 80 சைவ, வைணவ, சமண கோயில்கள் இருந்தன.
- பல்லவ நாட்டு மக்கள் அஞ்சா நெஞ்சத்தினர்.
- உண்மைக்கு உறைவிட மானவர்கள்.
- கற்றவர்களை மதிப்பவர்கள்
- கல்விக்கு புகழ்பெற்றது “காஞ்சி நகர்”
- நாளந்தா பல்கலைக் கழக ஆசிரியர் ‘தருமபாலர்” காஞ்சி புரத்தைச் சார்ந்தவர்.
சமயப்பணி:
- சிவ பக்தர்
- 1-ம் நரசிம்மவர்மன் சமய சகிப்பு தன்மை மிக்கவர் என கூறியவார் யுவான் சுவாங்
கலைப்பணி:
- மாமல்லபுரத்தை நிறுவியவர் -1- ம் நரசிம்மன்.
- மாமல்லபுரத்தில் பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப்படும் ஒற்றைக்கால் ரதங்களை உருவாக்கியவர் – 1-ம் நரசிம்மவர்மன்.
- காஞ்சிபுரத்தில் தன் தந்தைக்கட்டிய கோட்டையை புதுப்பித்தார்.
- முதலாம் மகேந்திரவர்மனை போல குடைவரைக் கோயில்களை உருவாக்கினார்.
- முதலாம் நரசிம்மவர்மனின் கட்டிடக் கலையில் மிகவும் முக்கியமானது திறந்தவெளி சிற்பங்கள்.
- உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப்பெரிய சிற்பம் – பெருந்தவ சிற்பம்.
முதலாம் நரசிம்ம வர்மனின் குடைவரைக் கோயில்கள்:
- மகிஷாகர மார்த்தினி மண்டபம்
- வராக மண்டபம்
- கோனேரி மண்டபம்
- ராமானுஜர் மண்டபம்
- 1983-ல் எல்லோரா UNESCO பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- 1984 -ல் மாமல்லபுரம் UNESCO பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது.
பஞ்ச பாண்டவர் ரதங்கள்:
1. திரௌபதிரதம்
2.அர்ச்சுணரதம்-100 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்டது.
3. பீமரதம்
4 தர்மராஜரதம்
5. நகுல சகாதேவரதம்
II -ம் மகேந்திரவர்மன் (கி.பி 668 -670)
- 1- ம் நரசிம்மவர்மனின் மகன்
- கல்வி, சமயம் ஆகியவற்றிற்குத் தொண்டு புரிந்தார்.
- சாளுக்கிய மன்னன் 1 ம் விக்கிரமாதித்தனால் இவர் கொலை செய்யப்பட்டார்.
1-ம் பரமேஸ்வரன் (கி.பி 670 -691)
- 2-ம் மகேந்திரவர்மனின் மகன்
- கி.பி 674 இல் சாளுக்கிய மன்னன் 1 – ம் விக்கிரமாதித்தன் இவரை தோற்கடித்தார் என கடவால் செப்பேடு கூறுகிறது.
- அடுத்து நடந்த போரில் 1 – ம் பரமேஸ்வரன் வெற்றி என கூரம் செப்பேடு கூறுகிறது.
- சிறந்த சிவபக்தர்
- காஞ்சி அருகே “கூரம்” என்ற இடத்தில் சிவன் கோயிலை கட்டினார்.
- அக்கோயிலுக்கு பரமேஸ்வரமங்கலம் என்ற சிற்றூரை தானமாக வழங்கினார்.
(தமிழகத்தில் கற்களால் கட்டப்பட்ட முதல் கோயில்)
2-ம் நரசிம்மவர்மன் (அ) ராஜசிம்மன் (கி.பி 691 – 728)
- இயற்பெயர் ராஜசிம்மன்.
- 1-ம் பரமேஸ்வரனின் மகன்
- இவர் அமைதிக் கொள்கையை கடைப்பிடித்தார்.
- காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை (ராஜசிம்மேஸ்வரம்) கட்டினார் இக்கோயில் அதியந்த காமபல்லேஸ்வரக்ரம்” என அழைக்கப்படுகிறது.
- தென்னிந்திய கட்டிடக் கலையின் மணிமகுடம் என்ற சிறப்பு கொண்டது. பல்லவர்கால ஓவியங்களை இக்கோயிலில் காணலாம் இக்கோயிலில் ராஜசிம்மனின் மனைவி ரங்கபாதகாவின் உருவம்” உள்ளது.
- மாமல்லபுர கடற்கரைக் கோயில் பனைமலையில் (5 அடுக்குகள் கொண்ட கோயில்) தாளகிரிசுவரர் கோயில் போன்ற கோயில்களை கட்டினார்.
- தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமான கோயில் கோயில் மாமல்லபுர கடற்கரை
மாமல்லபுர கடற்கரைகோயில்கள் ஏழு கோயில்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
- தண்டி தமிழில் அணி இலக்கணம் என்ற நூலை வடமொழியில் தண்டியலங்காரம்” என மொழி பெயர்த்தார்.
- தண்டி எழுதிய வேறு நூல்கள்
1. தாச குமார சரிதம்
2 அவந்தி சுந்தரி கதாசாரம்
3. காவிய தர்ஷா
- இவர் காலத்தில் சீனாவுடன் வணிக உறவு கொண்டிருந்தார்.
- இவர் சீன அரசன் வேண்டுகோளுக்கிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பொத்த கோயிலை கட்டினார்
- இந்த பௌத்த மடத்துக்கு வருகை புரிந்த சீன துறவி – வு – கிங்.
- தன் கடற்படை வலிமையில் “இலட்சத் தீவை” வென்றார்.
- இவருக்கு ராஜசிம்மன். வாத்யவித்யாதரன், சங்கரபத்ரன் ஆதோத்யதம்புரு. சிவசூடாமணி என 250 விருதுப்பெயர்கள் உண்டு. ஆகம்பிரியன், இவர் ஆதோத்ய என்ற வீணை வாசிப்பதில் வல்லவர்.
- 2-ம் நரசிம்மவர்மனின் இரு மகன்கள்
1. III-ம் மகேந்திரவர்மன்
2. 11-ம் பரமேஸ்வரன்
2-ம் பரமேஸ்வரன் (கி.பி 728 – 731)
- 2-ம் நரசிம்மவர்மனின் மகன்
- 2-ம் விக்ரமாதித்யனால் தோற்கடிக்கப்பட்டார்.
- “விளந்தை” என்ற இடத்தில் நடந்த போரில் கங்க அரசன் ஸ்ரீ புருஷன் இவரைக் கொன்றார்.
- இவருக்குப் பின்பு இவரது மகன்கள் ஆட்சிக்கு வராத காரணத்தால் சிம்ம விஷ்ணுவால் தொடங்கப்பட்ட பிற்கால பல்லவ பேரரசு இவருடன் முடிவடைந்தது
II-ம் நந்திவர்மன் (கி.பி 731 – 796)
- சிம்ம விஷ்ணுவின் தம்பியான இரண்ய வர்மனின் மகன் ஆவார்.
- விஷ்ணு பக்தர்
- காஞ்சியில் வைகுந்த பெருமாள் கோயிலை கட்டியவர். பல்லவர்களின் கட்டுமானக் கலையின் இறுதி நிலைக்கு உதாரணமான கோயில்
இக்கோயிலை சுற்றி பல்லவ படைகள் ஒரு கோட்டையை தாக்குவது போன்ற போர்களக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன.
- திருமங்கை ஆழ்வார் இவரின் சமகாலத்தவர் திருமங்கை ஆழ்வார் -திருவாலி திருநகரியில் பிறந்தார்” இவரை பரகாலன் (எதிரிகளுக்கு எமன்) என்று அழைப்பர்.
- நந்திவர்மன் மீது சாளுக்கிய மன்னன் 2 – ம் விக்கிரமாதித்யன் படையெடுத்தார்.
- நந்திவர்மனுக்கு ஆதவரவாக ராட்டிட கூட இளவரசர் தந்தி தூர்கர் செயல்பட்டார்.
தந்திதூர்கர் மகள் ரேவாவை” நந்திவர்மனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
- பாரதம் பாடிய பெருந்தேவனாரை ஆதாரித்தார். இவர் மகாபாரதத்தை வெண்பா என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
தந்திவர்மன் (கி.பி 796-846)
- 2-ம் நந்திவர்மனுக்கும். இராட்டிட கூட இளவரசி ரேவாவிற்கும் மகனாக பிறந்தார்.
- இவரின் காலத்தில் பல்லவர்கள் வலிமை குன்ற ஆரம்பித்தனர்.
மூன்றாம் நந்திவர்மன் (கி.பி 846- 869)
- நந்திக் கலம்பகத்துடன் தொடர்புடையவர்.
- தந்திவர்மன்,கதம்ப குலத்தைச் சார்ந்த அக்கள நிமடி தம்பதியினரின் மகன்
- கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் என்று இவரைப் பாடியவர் சுந்தரர்.
- கி.பி 846 இல் பாண்டிய மன்னன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனை “தெள்ளாறு போரில் (வந்தவாசி அருகே) வெற்றி கொண்டவர்.
பட்டப் பெயர்கள்:
1) தெள்ளாறு எரிந்தநந்தி
2) காவிரி நாடன்
3) அவனி நாராயணன்
4) கழல் நத்தி
5) சுழற்சிங்கன்
- 3 ம் – நந்திவர்மனின் மனைவி “சங்கா (ராட்டிட கூட இளவரசி)
- +1-ம் நந்திவர்மனின் வாரிசுகள்
1) நிருபதுங்க வர்மன்
2) அபராஜித வர்மன்
நிருபதுங்க வர்மன்(கி.பி 869-885)
- இவர் அரிசில் போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனை தோற்கடித்தார்.
- 2 ம் வரகுணப் பாண்டியருடன் (ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனின் மகன்) நட்பு கொண்டிருந்தார்.
- அபராஜிதவர்மனுடன் வாரிசுரிமைப் போர்.
அபராஜித வர்மன்.
- பல்லவ பேரரசு மறைவுக்கு காரணமான போர் கி.பி 885 இல் நடைபெற்ற திருப்புறம்பியம் போர் (கும்பகோணம் அருகில்)
நிருபதுங்க வர்மன் Vs அபராஜிதவர்மன்
நிருபதுங்க வர்மனுக்கு போரில் உதவியவர் 2 ம் வரகுணன்.
அயராஜிதவர்மனுக்கு போரில் உதவியவர் பிரிதிவிபதி (கங்க அரசன்)
- அடுத்து கி.பி 901 இல் அபராஜிதவர்மன்” Vs சோழ மன்னன் விஜயாலய சோழன் மகன் 1- ஆதித்ய சோழன்* இடையே போர்.
இப்போரில் அபராஜித வர்மன் கொல்லப்பட்டார்.
- பல்லவ அரசின் கடைசி அரசர் *அபராஜிதவர்மன்”
- சோழர்கள் எழுச்சியால் பல்லவ வம்சம் வீழ்ச்சி அடைந்தது.
பல்லவர்களின் நிர்வாகம்
அரசர்:
- பல்லவ கால அரசப் பதவியானது தெய்வீக உரிமையென்றும் அவ்வுரிமை வம்சாவளியாகத் தொடர்வது என்றும் கருதப்பட்டது.
அரசர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்:
1) மகாராஜாதிராஜா (வட இந்திய மரபிலிருந்து பெறப்பட்டது)
2) தர்மத்தின் தலைவன்
3) தங்களின் பெயர்களோடு வர்மன்” என்ற அடைமொழியை சேர்க்கும் வழக்கம் இருந்தது.
அமைச்சர்குழு (மந்திரி மண்டலம்)
1) அமத்யா – தலைமை அமைச்சர் (ஆலோசகர்)
2) ரகஸ்யதிகிரதா – அரசரின் அந்தரங்க செயலர்
3) மாணிக்கபண்டாரம் – கருவூலத்தை காப்பவர்.
4 ) கொடுக்கா பிள்ளை – நன்கொடைகளுக்கான அதிகாரி
5) கோச -அதியக்ஷா – மாணிக்கப் பண்டாரம் காப்பாளர்களை மேற்பார்வையிடுபவர்.
6) தர்மாதிகாரி – நீதிபதிகள்
7) அதிகர்ண மண்டபம்- நீதி மன்றம்
- 2ம் நந்திவர்மனின் காசக்குடி செப்பேடுகளில் நீதிமன்ற அபராதங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.
- அமைச்சர்களுக்கு, பிரம்மராஜன், பேரரையன், உத்தமசீலன் போன்ற விருதுப்பெயர்கள் வழங்கப்பட்டன.
- மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதம் அதிகர்ண தண்டம்
- கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதம் அதிகரண தண்டம்.
மற்ற தொழிலாளர்கள்.
1) ஆணிறையை காப்பவர் – கேவல்லர்
2) ஊர்காப்பாளர் – கிராம போசகர்
3) குளங்களில் காவல் காப்பவர் -குமிகர்
4) பொற்கொல்லர் – மாதேவி பட்டர்
5) காவலர் – அறதிகலர்
6) கிராம அதிகாரிகள் – துதிகர், நெய்கர். நஞ்சாநாதர்.
ஆட்சி முறை:
- பல்லவ நாடு ராஷ்டிரம் (எ) மண்டலம் விஷயங்கள் (கோட்டம்)>நாடுகள் கிராமம் (ஊர்
- நிர்வாகத்தின் அடிப்படை அலகு – கிராமம்
- கிராமத்தை நிர்வகிக்க 2 அவை இருந்தது.
1)சபை -நிர்வாக முறையைச்சார்ந்தது.
2)ஊரார் -நிர்வாக முறை சாராத மக்கள் மன்றம்.
- கிராம வளர்ச்சிக்கு வாரியங்கள் இருந்தன.
- தொண்டை மண்டலங்கள் 24 கோட்டங்களாக இருந்தன.
- சிற்றூர்களை “ஆழ்வார்” எனப்பட்ட அவையினர் ஆட்சி செய்தனர்.
- மன்னர் அறிவிக்கும் ஆணைகளை பொதுமக்களுக்கு அறிவிப்பது நாட்டார்களின் முக்கிய பணி.
- இவ்வாணை “அறை ஓலை” எனப்பட்டது.
நிலம்:
- நில உடைமை உரிமை அனைத்தும் அரசரிடமே இருந்தது.
- உழவர் பயிரிடப்படும் நிலம் படாகம்.
- அரசருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் அடைநிலம்
- மகேந்திர தடாகம் – மகேந்திரவாடி
- சித்திரமேக தடாகம் – மாமண்டூர்
- வைரமேகத் தடாகம் – உத்திரமேரூர்
- நிலங்கள் உழவு. நிபர்தனம். பட்டிகா, ஹாலா, கலப்பை என்ற அளவுகோலால் அளக்கப்பட்டது
- ஆலயங்களுக்கு அரசர் அளித்த நன்கொடை – தேவதானம்.
- பிராமணர்க்கு அரசர் அளித்த நன்கொடை – பிரம்மதேயம்
வருவாய்:
- நில வருவாய் முக்கிய வருவாய்,
- நடைமுறையில் இருவகையான வரிவிதிப்பு முறைகள் இருந்தன.
- புரவு வரி – விளைச்சலில் 1/6 முதல் 1/10 பங்கு வரை வசூலிப்பர்.
- வரியை வசூலிப்பவர் திணைகளத்தார்.
- மருந்து செடி பயிரிட விதிக்கப்படும் வரிகள்
1) இளம்பூட்சி
2) குசக்காணம்
3) குவளைக்காணம்
4) பாறைக்காணம்
பல்லவப்படைகள்:
- காலாட்படை குதிரைப் படை, சிறிய அளவிலான யானைப்படை, கடற்படை தேர்ப்படை இருந்தன.
- மாமல்லபுரத்திலும், நாகபட்டினத்திலும் கப்பல் தளங்களைத் கட்டினர்.
- பல்லவர்களின் போர்முறை. படைவலிமை பற்றி ‘கூரம் செப்புப் பட்டயம் தெரிவிக்கிறது.
- பல்லவர்களின் போர்க் கருவிகள் பற்றி வேலூர் பட்டயம்’ கூறுகிறது.
வணிகம்:
- பல்லவர் காலத்தில் முக்கிய வணிக மையமாக ‘காஞ்சிபுரம்” இருந்தது.
- வணிகர் தங்கள் பொருளை சந்தைப்படுத்துவதற்கு அரசரிடம் உரிமம் பெற வேண்டும்.
- பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது.
- தங்கம் (ம) வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர்.
தங்கத்தின் எடையை கழஞ்சு, மஞ்சாடி என்று குறிப்பிட்டனர்.
- உள்ளூர் வணிகர்கள் “மணிக்கிராமத்தார்” என்றும் வெளிநாட்டு வணிகர்கள் நானா தேசிகன் என்றும் அழைக்கப்பட்டனர்
- வணிகர்களின் தனிக்குழுக்கள் சுதேசி, ஐந்நூற்றவர், நானதேசிகன் என்ற பெயரில் அமைத்துக் கொண்டனர்.
அவர்களின் முக்கிய அமைப்பு ஐஹோல் நகரினை மையமாகக் கொண்டு செயல்பட்டது.
- நானா தேசிகன் என்ற அமைப்பு, தனக்கென தனிக்கொடியை கொண்டிருந்தனர் அதன் மையத்தில் காளையின் வடிவம் இருந்தது.
இவ்வமைப்பு வீரசாசனம் என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையையும் பெற்றிருந்தது.
இதன் தலைவர், பட்டன்சாமி, பட்டணக்கிழார். தண்ட நாயகன் என்ற பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்னர்.
- இதன் உறுப்பினர்கள். ஐஹோல் பரமேஸ்வரியார் ஆவார்.
- பல்லவர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்தனர்.
1) காம்போஜா (கம்போடியா)
2) சம்பா (ஆனம்)
3) ஸ்ரீ விஜய (தெற்கு மலேயே தீபகற்பம்)
4) இலங்கை
5) சீனா
6) சுமத்ரா, ஜவா, அசேபிய நாடுகளுடனும் வணிகம் செய்தனர்.
சமூகநிலை:
- பல்லவர் காலத்தில் தான் பக்தி இயக்கம் தோன்றி வளர்ந்தது.
- சமுதாயம், பிராமணர், ஷத்திரியர், வைசிரியர், சூத்திரர் என்ற 4 வகை சாதி பிரிவுகளைக் கொண்டிருந்தது.
- சூத்திரர்களை புலையர் என்றும் சண்டாளர் என்றும் குறிப்பிடுவார்கள்.
சமயம்:
- சைவம், வைணவம் வளர்ச்சி
- 4 வகையான கடவுள் வழிபாடு
1) கானபத்தியம் – கணபதி வழிபாடு
2) கௌமாரம் முருகன் வழிபாடு (அ) குமரன் வழிபாடு(தமிழ் கடவுள்)
3) சௌரம் -சூரியன் வழிபாடு
4)சாக்டர் சக்தி வழிபாடு
- பல்லவர் காலத்தில் “கணபதி வழிபாடு* தமிழகத்தில் அறிமுகம்.
- பல்லவர்களின் அரச முத்திரை *சிவபெருமானின் வாகனமான காளை (நந்தி)
கட்டிடக்கலை:
- பாறைகளைக் குடைந்து கோயில் கட்டும் கலையை தொடங்கி வைத்தனர்.
- திராவிடக் கலைப்பாணி பல்லவர் காலம் முதற்கொண்டே வளரத் தொடங்கியது.
கட்டிடக்கலையின் நான்கு பிரிவுகள்:
1. பாறைக் குடைவு கோயில்கள் |ம் மகேந்திரவர்மன் (எ.கா) மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், சீயமங்கலம், திருச்சி. திருக்கழுகுன்றம்.
2. ஒற்றைக்கல் ரதங்கள் மண்டபங்கள் 1ம் நரசிம்மவர்மன் (எ.கா) மாமல்லபுரம்.
3. கட்டுமானக் கோயில்கள், || ம் நரசிம்மன் (எ) இராஜசிம்மன்
- மணல் பாறைகளை கொண்டு கட்டப்பட்டது. (எ.கா) மாமல்லபுர கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில்,
4. பிற்காலப் பல்லவர்கள் அமைத்த கட்டுமானக் கோயில்கள்
எ.கா) காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், முக்தீஸ்வரர் ஆலயம், மதங்கீஸ்வரர் ஆலயம்.
- தக்காண பாணியிலான ஒப்புமைகளைக் காணலாம். சிற்பங்களில், குப்தர் கலையோடு கொண்டிருந்த
அரசர்களும் படைத் தளபதிகளும்:
- 1-ம் நரசிம்ம வர்மன் – பரஞ்சோதி
- 2 -ம் நந்திவர்மன் – உதயசந்திரன்
3) III -ம் நந்திவர்மன் – பதப்பிக்கர கேசரி
கல்வி
- பல்லவர்கள் கற்றோரை ஆதரித்தனர்.
- காஞ்சி கல்வி (ம) வணிக நகரம்
- கதம்ப குல நிறுவனர் மயூரசர்மன் காஞ்சியில் வேதம் கற்றார்.
- திங்கா நாதர் என்ற புத்த அறிஞர் காஞ்சியில் கல்வி கற்றார்.
- காஞ்சியில் பல்கலைக்கழகம் செயல்பட்டது.
வேறு சில சமஸ்கிருத கல்லூரிகளும் செயல்பட்டு வந்தன.
இலக்கியங்கள்:
- “சமஸ்கிருதம்” அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழியாகவும் அரச சபையின் அலுவலக மொழியாகவும் இருந்தது.
- தமிழ் இலக்கியங்கள் இக்காலத்தில் வளர்ச்சி பெற்றது.
- நாயன்மார்கள் (63), ஆழ்வார்கள் (12) பக்தி பாடல்களை தமிழில் இயற்றினர்.
நாயன்மார்கள் – தேவாரம்
ஆழ்வார்கள் -நாலாயிர திவ்ய பிரபந்தம்
- வாத்ஸ்யாயர் நியாயபாஷ்யா என்ற நூலை எழுதினார் (காஞ்சி கடிகையின் ஆசிரியர்)
- கல்லாடனார் – கல்லாடம்
சேரமான் பெருமாள் நாயனார்
1) பொன் வண்ணத்து அந்தாதி
2) ஞானவுலா
3) மும்மணிக் கோவை
- கங்கநாட்டு மன்னன் கொங்குவேளிர்- கொங்குவேளிர் மாக்கதை (பெருங்கதை)
- III -ம் சிம்மவர்மன் – சிவத்தளி வெண்பா
- தோலா மொழித்தேவர் சூளாமணி
- முத்தொள்ளாயிரம் (மூவேந்தர்களைப் பற்றியது)
- இலக்கண நூல்களான “சங்கயாப்பு பாட்டியல்” நூல்
- மாபுராணம் போன்றவை இக்காலத்தைச் சார்ந்தவை.
- தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க இரு சமஸ்கிருத
நூல்கள்
1) கிர்தார்ஜீனியம் (பாரவி)
2) தசகுமார சரிதம் (தண்டி)
- புதுச்சேரிக்கு அருகே உருக்காட்டுக் கோட்டம் என்னுமிடத்தில் 1879 இல் இருபுறமும் இணைக்கப்பட்ட லிங்கம், நந்தி (பல்லவர்களின் முத்திரை) பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட 11 செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- நந்திவர்மனின் 22 வது ஆட்சிக்காலத்தில் மானியமாக, கிராமம் தரப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது.
- இதன் உள்ளடக்கம்: அரசரைப் பற்றிய சமஸ்கிருத மொழியில் புகழ்வதில் தொடங்கி மானியத்தை பற்றிய விவரங்களைத் தமிழில் கூறி இறுதியில் சமஸ்கிருத செய்யுளோடு முடிவடைகிறது.