பணக்கொள்கை, நிதிக்கொள்கை

Share This:

பணம்:

  • பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திரும்ப செலுத்துவதற்கும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு கருவியே பணம்.
  • பணம் என்ற வார்த்தை ரோம்’ வார்த்தையான மொனேட்டா ஜீனோ விலிருந்து பெறப்பட்டது.

மொனேட்டா ஜீனோ என்பது ரோமின் பெண் கடவுள் பெயரும் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணத்தின் பெயருமாகும்.

  • இந்தியாவில் ‘ரூபாய்” என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ரூபியா” என்றால் வெள்ளி நாணயம் என்று பொருள்.
  • பணம் எதைச் செய்கிறதோ அது தான் பணம் – வாக்கர்

பணத்தின் பரிணாம வளர்ச்சி:

1. பண்டமாற்று முறை (Barter System)

  • கி.மு 6000 -ல் இம்முறை துவங்கியது.
  • மெசபடோமியா பழங்குடியினரால் பின்பற்றப்பட்டது.

பொது இடையீட்டுக் கருவிகள்:

  • விலங்கின் தோல், உரோமம். உப்பு, அரிசி, கோதுமை

2. உலோகப் பணத்திட்டம்:

  • தங்கம், வெள்ளி வெண்கலம் போன்ற விலை மதிப்புள்ள உலோகங்கள் உலோக பணமாக பயன்படுத்தப்பட்டன.
  • தங்கம், வெள்ளி ஆகியவை முத்திரையுடன் பரிமாற்ற கருவியாக செயல்பட்டது.
  • 1525  – ல் முகலாய சாம்ராஜ்யம் முழு சாம்ராஜ்யத்திற்கான பணவியல் முறையை ஒருங்கிணைத்தது.
  • செர்சா சூரி 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார்.

அது ரூபியா என்றழைக்கப்பட்டது.

3. காகித பணம்:

  • தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல சிரமம் மற்றும் ஆபத்தாக இருந்ததால் காகித பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • தங்கத்தை சேமிப்பதன் அடிப்படையில் காகித பணத்தின் வளர்ச்சி அடங்கியது.
  • இது “பொற்கொல்லர் ரசீது” என அழைக்கப்பட்டது.
  • “பொற்கொல்லர்கள் ரசீது பணத்தின் பதிலியாகவும், காகித பணமாகவும் மாறியது.

4. கடன் பணம் அல்லது வங்கிப் பணம்:

  • காகித பணமும் கடன் பணமும் ஒரே நேரத்தில் வளர்ந்தது.
  • மக்கள் தங்கள் பணத்தின் ஒரு பகுதியை வங்கியில் வைப்பு தொகையாக வைத்து, அந்த தொகையை வசதியாக காசோலை மூலம் திரும்ப பெறலாம் இதுவே கடன் பணம் அல்லது வங்கிப்பணம்” என அழைக்கப்படுகிறது.

5. நெகிழிப் பணம்:

  • நிதிப்பொருட்களின் வரிசையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • நெகிழிப் பணம் நடைமுறையிலுள்ள காகிதப் பணத்திற்கு ஒரு மாற்றாகும்.

எ.கா: ரொக்க அட்டை கடன் அட்டை பற்று அட்டை, முன்கூட்டியே பணம் (Store card), (Forex card), (Smart card)

6. மெய்நிகர் பணம்

  • மைய வங்கியை சாராமல் பண பெருக்கத்தை சீர் செய்தல் மற்றும் மாற்றத்தை சரிபார்த்தல் போன்ற சுதந்திரம் கொண்ட டிஜிட்டல் நாணயங்கள் மெய்நிகர் பணமாகும்.

எ. கா: Crypto Currency, Bitcoin

7. நிகர் பணம்:

  • உண்டியல் கருவூல பட்டியல், பத்திரம், கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவை நிகர் பணங்கள் என அழைக்கப்படகின்றன.

பணத்தின் சமீபத்திய வடிவங்கள்.

1. மின்னனு பணம்

2. நிகழ்நிலை வங்கி (இணைய வங்கி) (RTGS – Real Time Gross Settlement)

3. மின் வங்கி (Internet Banking)

4. தேசிய மின்னனு நிதி பரிமாற்றம் (NEFT – National Electronic Fund Transaction)

பணத்தின் பணிகள்:

  1. முதன்மை பணிகள்
  • பரிமாற்ற கருவி
  • மதிப்பின் அளவுகோல்
  • வருங்கால செலுத்துதலுக்கான அடிப்படையாக பணம் உள்ளது
  1. இரண்டாம் நிலை பணிகள்
  • மதிப்பின் நிலைகலன்
  • மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி

பண அளிப்பு

  • ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்தப் பண அளவே பண அளிப்பு ஆகும்.
  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பதே பண அளிப்பாரும்
  • வட்டி விகிதம், விலைவாசி போன்றவற்றை நிர்ணயிப்பதில் பண அளிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

பண அளிப்பின் பொருள்:

  • இந்தியாவில் காகிதப் பணங்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிலும், நாணயங்கள் மத்திய அரசின் நிதித்துறையாலும் வெளியிடப்படுகின்றது.
  • பொது மக்களால் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வித கணக்குகளில் உள்ள இருப்புத் தொகைகளும் பணமாக கருதப்படுகிறது.

பணக்குறியீடு ₹

  • தமிழ்நாட்டை சேர்ந்த திரு. D. உதயகுமாரால் பணத்தின் குறியீடு வடிவமைக்கப்பட்டது.
  • ஜூலை 15, 2010 ல் இக்குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • தேவநாகரி எழுத்து “ரா” வும், ரோமன் எழுத்து ‘R’ இல் செங்குத்துக்கோடு இல்லாமலும் உள்ள வடிவமைப்பே இந்தியாவின் பணக்குறியீடு ஆகும்.

பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள்.

1. ரொக்க வைப்பு விகிதம் (CDR Cash Depot Ratio)

  • பொதுமக்கள் கையில் உள்ள பணம்
  • வங்கி வைப்புகளில் உள்ள பணம்

2. ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (RDR Reserve Deposer Ratio)

  • வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு, மொத்த வைப்புகளே ரொக்க இருப்பு வைப்பு வீதம் ஆகும்.

3. ரொக்க இருப்பு விகிதம் (CRR)

  • வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மையவங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்புகள்.

4. சட்டபூர்வ நீர்மை விகிதம் (SLR -Statutory Liquidity)

  • ‘‘வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்”

நிதிப்பொருளியல்,

  • நிதிப்பொருளியல் என்பது பொதுநிதி ஆகும்.
  • அரசு கருவூலத்தின் நிதி செயல்பாடுகள் பற்றி விவாதிக்கிறது.
  • ‘பிசிகல்’ என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான ‘கூடை’ என்று பொருள்படும். இது பொதுவான பை” என்பதை குறிக்கிறது.
  •  “அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும் கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்.

எனவே பொதுநிதி என்பது “நிதிப்பொருளியல்” என அழைக்கப்படுகிறது.

பொது நிதியியலின் துணை பிரிவுகள்:

1. பொது வருவாய் – வரி மற்றும் வரியில்லா வருமானங்கள், வரிகொள்க்ஷை வரியின் பளு, வரியின் தாக்கம், விளைவுகள் பற்றி குறிப்பிடுகிறது.

2. பொது செலவு  –  அரசின் செலவு, பொது செலவு விளைவுகள், செலவைக் கட்டுப்படுத்துதலை குறிக்கும்

3. பொதுக்கடன் –  உள்நாட்டு, வெளிநாட்டு கடன்கள், பொதுகடன்களின் சுமை, விளைவுகள் திரும்ப செலுத்தும் முறை ஆகியவற்றை குறிக்கும்.

4. நிதி நிர்வாகம்  –  அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி குறிப்பிடுகிறது.

5. நிதி கொள்கை  –  வரிகள், மானியங்கள். பொதுக்கடன், பொது செலவு பற்றி குறிப்பிடுகிறது

1. பொது நிதி

  • பொது நிதி என்பது அரசின் வருவாய் செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது.
  • தனியார் நிதி, தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செல். கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் பற்றி பொது நிதி குறிப்பிடுகிறது.

2. பொதுச்செலவு:

  • மக்களின் சமூகத்தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினமே பொதுச்செலவாகும்

பொதுச்செலவின் வகைபாடு:

(i) நன்மை அடிப்படையிலான பாகுபாடு:

(ii) ராணுவம், கல்வி, பொதுச்சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றிற்கான செலவு

(iii) ஓய்வூதியம், வேலையின்மைக்கான நிவாரணம்.

(iv) தொழிலுக்கான மானியம்,

பணவீக்கம் (Inflation)

  • பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும்படியான பொது விலைமட்ட அதிகரிப்பு ஆகும்.
  • பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும் அதன் விளைவாக வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது.
  • “குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை பணவீக்கம் என கூறியவர் – கோல்பர்ன்

பணவீக்கத்தின் வகைகள்:

1. தவழும் பணவீக்கம் (Mid Inflation)

  • மிக குறைவான வேகத்தில் விலை உயருவது
  • விலைவாசி உயர்வதை எளிதில் மக்களால் உணர முடியாது.

2. நடக்கும் பணவீக்கம் (Trolling Inflation)

  • மிதமான வேகத்தில் உயரும்
  • 3% முதல் 9% வரை உயரும்

3. ஓடும் பணவீக்கம்

  • ஆண்டு பணவீக்க விகிதம்
  • 10% முதல் 20% அதிகரிக்கும்

4. தாவும் பணவீக்கம்:

  • சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவிகிதத்தில் உள்ள பணவீக்கம் 20% முதல் 100% வரை இருக்கும்.

எ. கா : 21 ம் நூற்றாண்டில் முதல் உயர் பணவீக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவாக ஜிம்பாப்வே நாட்டில் ஆண்டிற்கு 3714% ஏப்ரல் 2007 இறுதியில் உயர்ந்தது.

5. தேவை – இழுப்பு பணவீக்கம்

6. செலவு உந்து பணவீக்கம் (மூலப்பொருள் விலை உயரும் பொழுது)

7. கூலி – விலை சூழல்

8. காகிதப்பண பண வீக்கம்

9. கடன் பண பணவீக்கம்

10. இலாப தூண்டல் பணவீக்கம்

11 பொருள் பற்றாக்குறை தூண்டல்

12. வரி தூண்டல் பணவீக்கம்.

பணவீக்கத்திற்கான காரணங்கள்:

1. பண அளிப்பு உயர்வு

2. செலவிடத் தகுந்த வருவாயில் உயர்வு (மக்களின் வருவாய் உயரும் பொழுது),

3. உயர்ந்து வரும் பொது செலவு(வளர்ச்சி திட்டங்கள் அதிகரிப்பால்)

4. நுகர்வோர் செலவு அதிகரித்தல்.

5. மலிவு பணக்கொள்கை அமைய வங்கியின் மலிவுப் பணக்கொள்கை பொருளாதாரத்தில் கடன் அளவை அதிகப்படுத்தும்)

6. பற்றாக்குறை நிதியாக்கம்

7. கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், நடவடிக்கைகள் மற்றும் கறுப்புப்பணம்.

8 ஏற்றுமதி உயர்வு (உள்நாட்டில் பொருள் அளிப்பு குறைந்து விலைவாசி உயரும்)

பணவீக்கத்தின் விளைவுகள்:

1. உற்பத்தியின் மீதான விளைவு:

  • மிதமான பணவீக்கம் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு ஒரு ஊக்க காரணியாக செயல்படும்.
  • உற்பத்தி, வணிகத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும்.
  • உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினை குறைப்பதன் மூலம் மக்களின் சேமிப்பை குறைக்கும்.
  • பணத்தின் அளவு குறைவதால் வெளிநாட்டு மூலதனங்கள் திருப்பி செல்லும்.
  • பதுக்கல்காரர்களும், நுகர்வோரும் பொருட்களை பதுக்கி வைக்க பணவீக்கம் காரணமாக அமைகிறது.

2. பகிர்வின் மீதான விளைவுகள்:

(1) கடன் பெற்றோர் கடன் வழங்கியோர்:

  • கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர்.

எ.கா. கடன் வாங்கிய பொழுது பண மதிப்பு அதிகம்.

(II) நிலையான வருவாய் பிரிவினர் மாதசம்பளம், ஓய்வூதியம் பெறுவோர்

(iii) உற்பத்தியாளர், வணிகர் என்று தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும் அவர்களுக்கு பணவீக்கம் ஒரு வரமாகும்.

(iv) முதலீட்டாளர்கள் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தோருக்கு நிலையான வட்டியை பெறுவதால் பணவீக்க காலத்தில் இழப்பினை சந்திப்பார்கள். பங்கு முதலிட்டாளர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் முறைகள்:

1. பணவியல் முறைகள்

நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் முறையாகும். 

(I) வங்கி விகிதத்தை உயர்த்துதல்.

(II) வெளிசந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்

(III) ரொக்க இருப்பு வீதம், நீர்மை வீதத்தை உயர்த்துதல்.

(iv). நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்,

(V) கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்

(Vi) மீள் வாங்கல் விகிதம் (Repo rate) மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் (Reverse repa rate) ஆகியவற்றை உயர்த்துதல்.

II.பணி அடிப்படையிலான வகைபாடு

  • பாதுகாத்தல் பணிகள்
  • வணிக பணிகள்

பொது செலவு அதிகரிப்பிற்கான காரணங்கள்:

1. மக்கள் தொகை வளர்ச்சி

2. பாதுகாப்பு செலவு

3. அரசு மானியங்கள்

4. கடன் சேவைகள்

5 வளர்ச்சித் திட்டங்கள்

6. நகரமயமாதல்

7. தொழில் மயமாக்கல்

பொது வருவாய்:

  • பொது வருவாய் அல்லது பொது வருமானம் என்பது அனைத்து மூலங்களின் வழிய அரசு பெரும் வருமானத்தை குறிக்கும்.

பொது வருவாய் வழிகள்

வரி வருவாய்

வரியற்ற வருவாய்

வரி சாரா வருவாய்:

  • வரியல்லாத ஆதராங்களிலிருந்து அரசினால் பெறப்படுகின்ற வருவாய் வரிசாரா வருவா என அழைக்கப்படுகிறது.

வரிசாரா வருவாயின் ஆதாரங்கள்:

1 பொது நிர்வாகத்தில் செய்யும் சேவைக்காக ‘கட்டணம்’ விதிக்கப்படுகிறது. எ.கா: பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வசூலிக்கப்படுவது.

2. தண்டத்தொகை – சட்டத்தை மீறுவோர் மீது சுமத்தப்படுவது.

3. பொது துறை நிறுவனங்களின் லாபம்

4. அன்பளிப்புகள், மான்யங்கள் மற்றும் உதவிகள்.

5. மரண தீர்வை

ஒருவர் வாரிசு இல்லாமலோ அல்லது உயில் ஏற்படுத்தாமல் மரணமடைந்தால் அவ

மரணத்திற்குப் பிறகு விட்டுச் சென்ற உடைமைகளை அரசு எடுத்துகொள்ளும்.

பொதுகடன்

  • கடன் என்பது அரசு கருவூலத்தால் கடன் வழங்கியவர்களுக்கு வட்டியும், அசலும் கொடுப்பதற்கான உத்தரவாதம் ஆகும்.
  • நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காக திரட்டப்படும் நிதி ஆகும். பொது கடனின் வகைகள்

1. உள்நாட்டு கடன்

2. வெளிநாட்டு கடன்

1. உள்நாட்டு பொதுகடன்

  • ஒரு நாட்டிற்குள் குடிமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அரசினால் பெறப்படும் கடன்

II . நிதியியல் நடவடிக்கைகள்

  • அரசு செலவினங்களை குறைப்பது. பொது மக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரிவிதிப்புகளை விரிவாக்குவது.

III குறுகியகால நடவடிக்கைகள்:

  • பொது விடுயோக முறையின் கீழ் நியாய விலை கடைகளில் பொருட்களை பங்கீடு செய்தல்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பொழுது இம்முறை பின்பற்றப்படும்.

IV. நீண்டகால நடவடிக்கை:

  • பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது.
  • சேமிப்பு முதலீடுகளை ஊக்குவிப்பது.

பணவாட்டம் (Deflation)

  • விலைவாசி குறைதல்
  • குறைந்த பண அளிப்பு
  • வேலைவாய்ப்பின்மை

மீள்பணவீக்கம் 

  • வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தாமலும், உற்பத்தி அளவுகள் குறையாமலும் பணவீக்கத்தை திருப்பும் செயல்முறையையே மீள் பணவீக்கம் ஆகும்.

தேக்க வீக்கம் 

  • தேக்கவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியில் தேக்கநிலையும். வேலைவாய்ப்பின்மையும், அதிக அளவிலான பணவீக்கமும் ஒன்றிணைந்த நிலையே தேக்கவீக்கம் ஆகும்.

வணிக சுழற்சி 

  • வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருமானம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையே வணிக சுழற்சி ஆகும்.
  • உயர்கின்ற நல்ல விலைகளையும், குறைந்த வேலையற்றோர் சதவிகிதத்தையும் கொண்ட நல்ல வாணிபக் காலங்களையும், குறைகின்ற விலைகளையும், அதிகமாகும் வேலையில்லாத் திண்டாட்ட சதவிகிதத்தையும் கொண்ட கெட்ட வாணிபக் காலங்களையும் கொண்டது” வாணிபச் சுழல் என கூறியவர் –  J.M. கீன்ஸ்

வாணிப சுழற்சியின் நான்கு கட்டங்கள்

  1. பூரிப்பு கட்டம் (Boom) – நீண்டகால இயல்பான வளர்ச்சி பொருளாதாரத்தில் நிலையை குறிக்கும்.

II பின்னிறக்கம் (Recessio) வளர்ச்சியிலிருந்து பின்னடைவு அடையும் நிலையை குறிக்கும்

III மந்தம் – இயல்புநிலைக்கு கீழ் வாணிபம் தீவிரமாக குறைவதை குறிக்கம்.

v. மீட்சி (Recovery or Revival) இயல்புநிலைக்கு மீள வாணிபம் திரும்புவதை குறிக்கும்.

வரவு செலவு திட்டம் (Budget)

  • பட்ஜெட் என்ற பதம் பொளஜெட் என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் “சிறிய தோல் பை” 
  • வரவு செலவு திட்டம் என்பது எதிர்நோக்குகிற நிதி ஆண்டிற்குரிய அரசின்

மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றைக் காட்டும் வருடாந்திர நிதி அறிக்கை ஆகும். 

  • சரத்து 112 ன் படி மத்திய வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்திலும், சரத்து 202 ன் படி ஒவ்வொரு மாநில அரசும் சட்டமன்றத்திலும் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.

வரவு செலவு திட்டத்தின் வகைகள்:

1. வருவாய் வரவு செலவு திட்டம்

  • வருவாய் வரவுகள் மற்றும் வருவாய் செலவினங்களை கொண்டது.

2. மூலதன பட்ஜெட் 

  • மூலதன வரவுகள் மற்றும் மூலதனச் செலவுகளை உள்ளடக்கியதாகும்

3. துணை வரவு செலவு திட்டம் 

  • போர் மற்றும் பேரிடர் காலங்களை சமாளிப்பதற்காக

4. நிதிக்கு வாக் கெடுப்பு வரவு செலவு திட்டம் (நொண்டி வாத்து வரவு செலவு திட்டம்)

5. பூஜ்ய வரவு செலவு திட்டம்:

  • 1987 – 88-ல் அறிமுகம்.
  • ஒவ்வொரு செலவினமும் புதியதாகக் கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் அரசு பட்ஜெட்டில் புதிய செலவு மதிப்பீட்டை கொண்டுள்ளது

6. செயல்திறன் வரவு செலவு திட்டம்:

  • USA – வில் அறிமுகம்.
  • என்ன செய்தோம்” எவ்வளவு செய்தோம்” என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • இந்தியாவில் செயல்திறன் வரவு செலவுத்திட்டம் “சாதனை திட்டம் அழைக்கப்படுகிறது.

7. சமநிலை வரவு செலவு திட்டம்

  • அரசின் திட்டமிட்ட வருவாய் அரசின் எதிர்நோக்கும் செலவுகள்.

8. சமநிலையில்லா வரவு செலவு திட்டம்

  • அரசு எதிர்பார்க்கிற வருவாயும், திட்டமிடப்பட்டுள்ள செல்வும் சமமாக இல்லாது இருந்தால் அது சமநிலையில்லா வரவு செலவுத்திட்டமாகும்.

(I)  உபரி வரவு செலவு திட்டம் -திட்டமிட்ட செலவை விட வருவாய் அதிகம்.

(ii) பற்றாக்குறை வரவு செலவு திட்டம் அரசு எதிர்பார்க்கிற வருவாயை விட செலவு அதிகம். 

உள்நாட்டு பொது கடனின் முக்கிய ஆதாரங்கள்:

  • அரசு பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை தனி நபர்கள் வாங்குதல்
  • அரசிடமிருந்து பத்திரங்களை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெறுதல்.
  • அரசு பத்திரங்களை நிதிசாரா நிறுவனங்களாகிய UTI, LIC, GIC போன்றவைகள் மூலம் பெறுதல்.

II. வெளிநாட்டு பொதுகடன்.

  • பன்னாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கடன். அயல்நாட்டு கடன் என அழைக்கப்படுகிறது.
  • எ. கா

IMF,  உலக வங்கி, IDA, ADB போன்ற அமைப்புகளிடமும், வெளிநாட்டு அரசுகளிடம் கடன் பெறுவது.

பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள்.

1. போர் மற்றும் போர்கால ஆயத்தம்.

2. சமுதாய தேவைகளை (பொது சுகாதாரம், தூய்மை, கல்வி காப்பீடு, போக்குவரத்து) மக்களுக்கு வழங்க

3. பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதி பற்றாக்குறை.

4. வேலைவாய்ப்பு

5. புழகத்தில் உள்ள பணத்தை அரசு திரும்ப பெற பொதுக்கடன் வழிறையை கையாளுகிறது. இதனால் விலை ஏற்றத்தை தடுக்கிறது.

6. மந்த காலத்தில் சமாளிக்க

வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் வழிமுறைகள்

1. நிதி அமைச்சகம் வரவு செலவு திட்ட மதிப்பீட்டை தயார் செய்யும்.

2. பல்வேறு துறைகள் வருமானம் மற்றும் செலவு மதிப்பீடுகளை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பும்

3. வரவு செலவுத்திட்டம் தயாராகும்.

4. மந்திரி சபை ஒப்புதலுக்கு நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்

5. பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கும்

இந்திய அரசு கணக்கு பராமரிக்கும் முறைகள்

1. தொகுப்பு நிதி

2. அவசர நிதி

3. பொதுக்கணக்கு

  • வரவு செலவு திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள்.

1. பொதுக்கணக்கு குழு

2. மதிப்பீட்டுக்குழு

  • இந்த குழுக்கள் எந்த அமைச்சகமும், துறையும். அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கும்.

கூட்டமைப்பு நிதி

  • கூட்டாச்சி நிதி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் வளங்களை ஒதுக்கீடு குறித்து வரையறுக்கும் நிதி ஆகும்.
  • மத்திய பட்டியல் பாதுகாப்பு, ரயில்வே, தபால் மற்றும் தந்தி முதலிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 100 இனங்களை கொண்டுள்ளது.
  • மாநில பட்டியல் பொதுநலன், காவல் போன்ற 61 இனங்களை கொண்டுள்ளது.
  • இணைப்புப் பட்டியலில் 52 இனங்கள் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு பொதுவாக உள்ளது.
  • மின்சாரம், தொழிற்சங்கம், பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்கள்.

கூட்டரசு நிதியின் கொள்கைகள்:

1. சுதந்திரம்

2. சமத்துவம்

3. ஒரே மாதிரியான தன்மை

4. போதுமான வளங்களைப் பெற்றிருத்தல்.

5. நிதி வசதி

6. ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுபடுதல்

7. செயல்திறன்

8. நிர்வாகச் சிக்கனம்.

9. பொறுப்புணர்வு

நிதிக்கொள்கை

  • தற்கால அரசுப் பேரினப் பொருளாதாரக் கொள்கையின் முக்கியக் கருவியாக நிதிக்கொள்கை உள்ளது.
  • கீன்சின் புதிய பொருளாதாரம் மற்றும் உலக பெருமந்தம்”ஆகியவற்றால் நிதிக்கொள்கை முக்கியத்துவம் பெறுகிறது என கூறினார்
  • தேசிய வருமானத்தின் மீது விரும்பத்தகுந்த விளைவை ஏற்படுத்தவும் மற்றும் விரும்பதகாத விளைவுகளை தவிர்க்கவும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றிய கொள்கையே நிதிக்கொள்கை என கூறியவர் – ஆர்தர் ஸ்மிதீஸ்

நிதிக்கருவிகள்:

  • வரி விதித்தல் வரிகள் மக்களிடமிருந்து வருமானத்தை அரசிற்கு மாற்றுகிறது. வரி அதிகரிப்பு செலவிடத்தக்க வருமானத்தை குறைக்கிறது.
  • பொதுச்செலவு பணியாளர்களின் கூலி மற்றும் சம்பளங்களை அதிகரிக்கும் போது பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான மொத்த தேவை உயருகிறது.
  • பொதுக்கடன் – அரசு கடன் மூலம் பொது மக்களிடமிருந்து அரசிற்கு பணத்தை மாற்றம் செய்கிறது. பின்னர் மக்களுக்கு திரும்ப வட்டியோடு செலுத்துகிறது.

நிதிக்கொள்கையின் நோக்கங்கள்

1 முழுவேலைவாய்ப்பு

2. விலை நிலைத்தன்மை

3.பொருளாதார வளர்ச்சி

4. சமமான பகிர்வு

5. நாணய மாற்று வீத சமநிலை

6. மூலதன உருவாக்கம்

7 சமி வட்டார வளர்ச்சி.

இருப்பு பணம்

  • இருப்பு பணம் என்பது அரசு பணமாக கருதப்படும். இச்சந்தர்பத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும் அரசாகக் கருதப்படுகிறது.
  • இருப்பு பணம் என்பது பொதுமக்களிடம் உள்ள இருப்புகளையும் மற்றும் வங்கிகளின் ரொக்கங்களையும் குறிக்கும்.

கட்டளை பணம்:

  • புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுக்கள் கட்டளைப் பணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

அருமை பணம்:

  • அருமைப் பணம் என்பது வட்டி வீதம் அதிகமாக இருப்பதையும் பண அளிப்பு குறைந்து போவதையும் குறிக்கும்.

மலிவுப் பணம்:

  • மலிவுப் பணம் என்பது குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதைக் குறிக்கும்.

நன்றி வணக்கம்………

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top