திசுக்களின் அமைப்பு தாவர உள்ளமைப்பியல் | Structure of Tissues – Plant Anatomy

Share This:
  • தாவரத்தின் உள்ளமைப்பு பற்றிய அறிவியல் பிரிவு தாவர உள்ளமைப்பியல் எனப்படும்.
  • தாவர உள்ளமைப்பியல் பற்றிய தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டவர் நெகமய்யா கரு 

இவரே உள்ளமைப்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்

  • தாவரத்தின் அடிப்படை அலகு ‘செல்” எனப்படும். இச்செல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உண்டாவது திசு எனப்படும்.

திசுக்கள் உறுப்புகளாக உருவாகிறது.

  • பல செல் உயிரினங்கள் வழக்கமாக கருமுட்டையிலிருந்து உருவாகின்றன.

இந்த கருமுட்டையானது “மைட்டாசிஸ்” எனும் செல் பகுப்படைதல் நிகழ்ச்சியின் மூலம் இரண்டாக பிளவுபெறுகிறது.

இந்த செல் பகுப்படைதல் தொடர்ந்து நடைபெறுவதால் அதிக எண்ணிக்கையிரல் செல்கள் உற்பத்தியாகின்றன.

கேத்தரின் ஈசா (1898-1997)

  • விதை தாவரங்களின் உள்ளமைப்பியல் என்ற இவரின் நூல் தாவர உள்ளமைப்பியலின் சிறந்த முன்னோடி நூலாகும்.

இவரின் தனித்துவமான அறிவியல் அற்பணிப்புப் பணியை அங்கீகரித்து தேசிய அறிவியலுக்கான பதக்கத்தை 1989 – ல் அமெரிக்க வழங்கியது.

  • தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் தேசிய கல்மரப் பூங்கா அமைந்துள்ளது.
  • இந்திய தாவரவியல் வள ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் – கொல்கத்தா + DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனப்படுவர் – பால் ஹெபர்ட்

தாவர திசுக்கள்:

  • ஒரே மாதிரியான தோற்றம், அமைப்பு மற்றும் செயல்பாடுகள் கொண்ட செல்களின் தொகுப்பு திசுக்கள் ஆகும்.
  • தாவர திசுக்கள் பொதுவாக இரு வகைப்படும்.

1. ஆக்குத்திக

2. நிலையான திக

1. ஆக்குத்திசு:

  • மெரிஸ்டோஸ் (ஆக்குத்திசு) எனும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தையாகும்.

இதன் பொருள் பகுப்படையும் தன்மையுடையது.

இந்த பெயரைச் சூட்டியவர் “நகேலி (1858)

  • தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு ஆக்குத்தில் ஆகும்.
  • தாவரங்களில் ஆக்குதிசுவானது வளர்ச்சி நடைபெறும் இடங்களில் நடைபெறும்.

தண்டின் நுனிப்பகுதி

வேரின் நுனிப்பகுதி

இலை மூலங்கள்

காஸ்குலார் கேம்பியம்

ஆக்குத்திசுக்களின் சிறப்புப்பண்புகள்:

  • உயிர் உள்ள செல்களால் ஆனவை
  • சிறியதாக. முட்டை வடி பல கோண அல்லது கோள வடிவில் உள்ளன.
  • மெல்லிய செல்சுவர், பெரிய நியூக்ளியஸ் அடர்ந்த சைட்டோபிளாசம் மற்றும் சிறிய நுண்குமிழ்களைக் கொண்டுள்ளன.
  • மைட்டாசிஸ் செல் பகுப்புக்கு உட்படக்கூடியது.
  • இது உணவை சேமிப்பதில்லை.
  • இது தாவர உடலுக்கு இயந்திர உதவியையும், நெகிழ்ச்சித் தன்மையையும் அளிக்கின்றன.

1. அமைவிடத்தை அடிப்படையாக கொண்ட ஆக்குத்திகவின் வகைப்பாடு

1. நுனி ஆக்குத்திக

2. இடை ஆக்குத்தி

3. பக்க ஆக்குத்திக

1. நுனி ஆக்குத்திக

  • வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் காணப்படுகின்றது.
  • இவை தாவரத்தில் நீள்போக்கு வளச்சியை ஏற்படுத்துகின்றது.
  • இவை புரோமெரிஸ்டம் மற்றும் முதல்நிலை ஆக்குத்திசுவை உள்ளடக்கியது.

2. இடையாக்குத்திக

  • இடையாக்குத்திசுவானது முதிர்ச்சியடைந்த திசுக்களுக்கிடையே காணப்படுகிறது.
  • இது கணுவிடை நீட்சியினை உண்டாக்குகிறது.
  • இடை ஆக்குத்திக இலையின் அடிப்பகுதியிலோ Ex doதாவரம் ) காணுவிடைப்பகுதியின் அடியிலோ (Ec புறிகள்) காணப்படுகின்றது.

3. பக்க ஆக்குத்திக;

  • இவை தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில், இதன் நீள அச்சுக்கு இணையாகக் காணப்படுகின்றது.
  • இவை பொதுவாக ஆரப்போக்கில் பகுப்படைந்து இரண்டாம் நிலை நிலைத்த திசுக்களைக் கொடுக்கின்றது.
  • இதன் மூலம் தாவரப்பகுதியின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.

ஆக்குத்திசுவின் பணிகள்:

  • இவை தாவரங்களில் நடைபெறும் முதலாம் வளர்ச்சி மற்றும் இரண்டாம் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன.

2. நிலைத்த திசுக்கள்.

  • இவை பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்த திசுக்களாகும்.
  • சில நேரத்தில் அவை பகுதி அல்லது முழு ஆக்குத்திசு வாக மாறுகின்றன.

நிலைத்த திசுக்களின் வகைகள்:

1. எளியதிக

2. கூட்டுத்திக

1. எளியதிசு

  • ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆனதிக எளியதிக ஆகும்.

(எ.கா)

* பாரன்கைமா.

* கோலன்கைமா

* ஸ்கிளிரன்கைமா

பாரன்கைமா

  • இதன் செல்வர் செல்லுலோசால் ஆனது.
  • உயிருள்ள செல்களால் ஆனவை.
  • தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும்.
  • இவை சம அளவுடைய, மெல்லிய செல்சுவர் உடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் காணப்படும்.
  • சதைப்பற்றுள்ள மற்றும் வறண்ட நிலத் தாவரங்களில் பாரன்கைமா நீரை சேமிக்கிறது மேலும் உணவு சேமித்தல், உறிஞ்சுதல், மிதத்தல், சுரத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.
  • உருளைக்கிழங்கில் பாரன்கைமாவின் இடைவெளி முழுவதும் ஸ்டார்ச்சினால் நிரம்பி உள்ளது.
  • ஆப்பிளில் பாரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது.

1. ஏரன்கைமா

  • நீர்த் தாவரங்களில் காணப்படும் பாரன்கைமா எரன்கைமா எனப்படும் 
  • செல்கள் காற்று இடைவெளியுடன் காணப்படும்

குளோரன்கைமா

  • பசுங்கணிகங்களை கொண்ட பாரன்கைமா செல்கள் குளோரன்கைமா எனப்படும். இவை ஒளிச்சேர்க்கை பணியை செய்கிறது.

சேமிப்பு பாரன்கைமா

  • உணவுப் பொருட்களை சேமிக்கும்.(எ.கா) வேர். தண்டு, கிழங்குகள்.

நட்சத்திர (அ) ஸ்டெல்லேட் பாரன்கைமா:

  • இது வாழை, கல் வாழை இலைக்காம்பு பகுதியில் நட்சத்திர வடிவத்தில் காணப்படும்.

2 கோலன்கைமா

  • இவை புறத்தோலுக்கு கீழேயுள்ள உயிருள்ள திசுவாகும்.
  • வேர்களில் காணப்படுவதில்லை.
  • இதன் செல்சுவர் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ் மற்றும் பெக்டிணல் ஆனது.
  • இது தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
  • புரோட்டோபிளாசம் உடையவை

3. ஸ்கிளிரன்கைமா

  • இவை விக்ளினால் ஆன தடித்த செல்சுவரை உடையது.
  • இவை புரோட்டேயிளாசமற்ற இறந்த செல்கள்

இவை இரண்டு வகைப்படும்.

1. ஸ்கிளீளரடுகள்.

2 நார்கள்.

1. ஸ்கிளீரைடுகள்:

  • இவை தாவரங்களின் உடல் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
  • இவை அகன்று ஒற்றையாகளே அல்லது தொகுப்பாகவோ காணப்படும்
  • இவை பழங்கள் மற்றும் விதைகளில் பொதுவாக காணப்படுகின்றன.

நூல் போன்ற ஸ்கிலிரைடுகள் (Fliform sclereids)

இவை ஒலியா யுரோப்பியா இலைத்தாளில் காணப்படும் ஸ்கிலிரைடுகள். ை 1மிக நீளமுள்ள நீண்ட நார்களைப் போன்றவைய

2. நார்கள்:

  • நார்கள் நீண்ட ஸ்கிளிரன் கைமா செல்களால் ஆனவை
  • செல்சுவர் லிகனின் பொருளால் ஆனது
  • சராசரியாக நார்கள் 1 முதல் 3 மி.மீ நீளமுடையவை
  • சில தாவரங்களில் நார்கள் 20 மி.மீ முதல் 500 மி.மீ வரை இருக்கும்.

உதா) லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் – ஆனி

கனபினஸ் சட்டைவா சணல்

கார்கோரஸ் காப்சுலரிஸ் – சணல்

  • சணல் நார்கள், கயிறு மற்றும் ஆடைகளின் உற்பத்திக்கு பயன்படுகின்றன.
  • தாவரசெல்களில் மிக நீண்டது நார்கள். மிக நீண்ட நார்கள் போமிரியா ரேமி நார்கள் ஆகும். இது 55 செ.மீ நீளமுடையது.

II. கூட்டுத்திசு:

  • ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் ஆனவை கூட்டுத்திசுக்கள் ஆகும்.

இவை இரண்டு வகைப்படும்.

1. சைலம்.

2. புளோயம்.

1. சைலம் (சைலோஸ் கிரேக்கசொல் – கட்டை)

  • சைலம் என்ற சொல்லை “நகேலி” என்பவர் அறிமுகப்படுத்தினார்.
  • இது ஒரு கடத்தும் திசுவாகும்.

இது நீர் மற்றும் கனிம் ஊட்டச்சத்துக்களை வேரிலிருந்து தாவரத்தின் இலைப்பகுதிக்கு மேல் நோக்கி கடத்தும்.

  • வாஸ்குலார் திசு தாவரங்களில் நீரைக்கடத்தும் முதன்மையான திசு சைலம் ஆகும்.
  • மேலும் இவை தாவர உடலுக்கு உறுதியை அளிக்கிறது.

சைலம் நான்கு வகையான செல்களால் ஆனவை.

1. சைலம் டிரக்கீடுகள்.

2. சைலக்குழாய்கள்.

3 சையம் நார்கள்.

4 சைலம் பாரன்கைமா.

1. சைலம் டிரக்கீடுகள்:

இவை நீண்ட கூர்முனைகளை உடைய லிக்னின் கொண்டவை

புரோட்டேயிளாசம் அற்ற உயிரற்ற செல்களாகும்.

  • இதன் செல்அறை நார்களை காட்டிலும் அகலமானது
  • இவற்றின் நுனியில் திறவுகள் காணப்படுவதில்லை
  • ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் டெரிடோபைட்டு தாவரங்களில் நீரைக்கடத்தும் முக்கிய கூறுகளாக விளங்குகின்றன.
  • இது மேலும் தாவரங்களுக்கு தாங்கும் வலிமை தருகிறது.

2. சைலம் நார்கள்:

  • சைலம் நார்கள் லிப்ரிஃபார்ம் நார்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த செல்கள் நீண்டவை லிக்னின் பெற்றவை
  • புரோட்டோபிளாசம் அற்ற உயிரற்ற செல்களாகும்.
  • நீர் மற்றும் ஊட்டச்சத்துகளை வேரிலிருந்து கடத்துவது.
  • தாவரங்களுக்கு வலிமையை அளிப்பது இதன் பணியாகும்.

சைலக்குழாய்கள்:

  • இவை நீண்ட உருளை குழாய் வடிவமுடையவை.
  • இவற்றின் செல்சுவர் லிக்னின் கொண்ட உயிரவை
  • புரோட்டோபிளாசம் அற்ற உயிரற்ற செல்களாகும்.
  • இவை ஒன்றன் மீது ஒன்றாக அமைந்துள்ள வரிசையான செல்களைக் கொண்டவை.
  • இதன் செல் அறை டிரக்கீடுகளை விட அகலமானது.
  • டெரிடோஃபைட்டு. காணப்படுவதில்லை. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் சைலக்குழாய்கள்

எஃபிட்ரா நீட்டம், வெல்வெட்ஷியா போன்ற ஜிம்னோஸ்பெர்ம்களில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன்.

வின்டரேஸி.டெட்ராசெண்ட்ரேஸி, ட்ரோகோடெண்ட்ரேஸி போன்ற ஆஞ்சியோஸ்பெர்ம் குடும்பங்களில் சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை.

  • ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக் கடத்தும் முக்கிய கூறுகளாக உள்ளன.
  • இதன் முக்கியபணி நீரையும் கனிம உப்புகளையும் கடத்துவதாகும்.

இது தாவரத்திற்கு வலிமையையும் அளிக்கிறது.

4. சைலம் பாரன்கைமா

  • இவை மெல்லிய செல்சுவரை உடையது.
  • இவை மட்டும் சைலம் திசுவில் உயிருள்ள செல் ஆகும்.
  • இதன் முக்கிய பணி ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளை சேமித்தல்.

II. புளோயம்

  • சைலம் போன்று புளோயமும் ஒரு கூட்டுத்திசு வாகும்.
  • வாஸ்குலார் தாவரங்களில் உணவுப்பொருட்களை கடத்தும் முக்கிய திசுவாகும். 
  • புளோயம் என்ற சொல்லை “நகேலி* அறிமுகப்படுத்தினார்.
  • இது நான்கு வகைப்படும்.

சல்லடைக்குழாய் கூறுகள்.

துணை செல்கள்.

புளோயம் பாரன்கைமா.

v.புளோயம் நார்கள்

1. சல்லடை குழாய் கூறுகள்:

சல்லடைக்குழாய்

கூறுகள்

  • புளோயத்தின் சுடத்தும் அழைக்கப்படுகின்றன.
  •  இவற்றின் முக்கிய பணியானது உணவினை தாவர இலைகளிலிருந்து சேமிப்பு உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்வதாகும்.

இவை 2 வகைப்படும்.

1) சல்லடைச் செல்கள்

2) சல்லடைக்குழாய்கள்.

1) சல்லடைச் செல்கள்:

  • இவை டெரிடோபைட் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் உணவு கடத்தும் தொடக்கநிலை செல்களாகும்.
  • சல்லடைச் செல்களின் பக்கச் சுவர்களில் சல்லடை பகுதிகள் காணப்படுகின்றன.

2) சல்லடைச் குழாய்கள்:

  • இது நீண்ட குழாய்களைப் போன்ற புளோயந்தின் உணவு கடத்தும் கூறுகளாகும்.
  • இவற்றின் அடிப்பகுதி சுவர்களில் துளைகள் உள்ளதால் அவை சல்லடைக்குழாய் தட்டுகள்” என்று அழைக்கப்படுகின்றன.
  • இவை ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மட்டும் காணப்படுகிறது.

 துணை செல்கள்:

  • இவை நீண்ட செல்கள், சல்லடைகுழாய் செல்களின் பக்க சுவரில் ஒட்டி உள்ளன.
  • இது மெல்லிய சுவருடைய பாரன்கைமா செல்கள்ஆகும்.
  • இது ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மட்டும் காணப்படுகிறது.
  • இவை உணவு கடத்தலில் துணை புரிகின்றன.

புளோயம் பாரன்கைமா

  • இச்செல்கள் உயிருள்ளவை இவை சைட்டோபிளாசம் (ம) நியூக்ளியஸை பெற்றுள்ளன. 
  • இதன் முக்கியபணி ஸ்டார்ச்சை சேமித்தல்.

v. புளோயம் நார்கள்:

  • புளோயத்துடன் தொடர்புடைய ஸ்கிளிரன்கைமா செல்கள் புளோயம் நார்கள் என அழைக்கப்படுகின்றன.
  • இந்த செல்கள் நீண்ட லிக்னின் படிந்த இறந்த செல்களாகும்.
  • புளோயம் நார்கள் பாஸ்ட் நார்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • புரோயத்தில் காணப்படுகின்ற நான்கு கூறுகளில் புளோயம் நார்கள் மட்டுமே உயிரற்ற திசுவாகும்.
  • இவை உறுதி மற்றும் ஆதார செல்களாக செயல்படுகின்றன.

திசு அமைப்பியல் (HISTOLOGY):

  • (கிரேக்கம் = ஹிஸ்டாஸ் அறிவியல்) நுண்ணோக்கியின் உதவியுடன் திசுக்கள், அவற்றின் அமைப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உற்றுநோக்கும் படிப்பு ஆகும்.

திசுத்தொகுப்புகள்

  • சாக்ஸ் (1875) என்பவர் தாவரங்களில் உள்ள திசுத்தொகுப்புகளை மூன்று வகைகளாக: வகைப்படுத்தியுள்ளார்.

தோல் திகத்தொகுப்பு அல்லது புறத்தோல் திகத்தொகுப்பு

அடிப்படை அல்லது தளத்திகத் தொகுப்பு

வாஸ்குலார் திசுத்தொகுப்பு

தோல் அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு

  • புறத்தோல் திசத்தொகுப்பில், புறத்தோல், புறத்தோல் துளை மற்றும் புறத்தோல் வளரிகள் ஆகியவை உள்ளன.
  • ஒரு தாவரத்தின் வெளிப்புற அடுக்கு புறத்தோலாகும்.
  • இவற்றில் பல சிறிய நுளைகள் காணப்படுகின்றன.

இவை புறத்தோல்துளை (ஸ்டோமேட்டா) எனப்படும்.

  • இலைகளின் வெளிப்புற சுவரில் கியூட்டிக்கிள் என்ற மெழுகுப்படலம் காணப்படுகிறது. கியூட்டிக்கின் நீராவிப்போக்கினை தடுக்கிறது.
  • புறத்தோலில் பல செல்களாலான வளரிகள் (டிரைகோம்கள்) மற்றும் வேர்த்தூவிகள் காணப்படுகின்றன.

புறத்தோல் திசுவின் பணிகள்

  • புறத்தோல் உட்புறத் திசுக்களைப் பாதுகாக்கிறது.
  • புறத்தோல் துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவுகின்றன.
  • வேர்த்தூவிகள் நீர் மற்றும் களிமங்களை உறிஞ்ச பயன்படுகின்றன.

அடிப்படை அல்லது தளத்திகத் தொகுப்பு

  • புறத்தோலும் வாஸ்குலார் திசுக்களும் இத்திசுத்தொகுப்பில் அடங்கும். இதில் S நீங்கலாக உள்ள அனைத்து திசுக்களும்

1. பரணி

2. அகத்தோல்

3. பெரிசைக்கின்

4. பித் ஆகியவை உள்ளன

வாஸ்குலார் திசுத்தொகுப்பு

  • வாஸ்குலார் திசுத்தொகுப்பில் சைலம் மற்றும் புளோயம் என இரண்டு கடந்து திசுக்கள்

சைவம் நீர் மற்றும் கனிமங்களை தாவரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் கடத்துகிறது.

புளோயம் உணவுப் பொருள்களை தாவரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துகிறது.

மூன்று வகையான வாஸ்குவார் கற்றைகள் உள்ளன.

1) ஆரப்போக்கு அமைந்தவைய

2) ஒன்றிணைந்தவை

3) சூழ்ந்தமைந்தவை

1) ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை

சைலமும் புளோயமும் அடுத்தடுத்து வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ளன. எ.கா வேர்

2) ஒன்றிணைந்த வாஸ்குலார்கற்றை

  • சைகமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன.
  • சைவத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்பட்டால் அவை திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என்றும் (எ.கா இருவிதையிலைத் தாவர தண்டு)
  • சைவத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படவில்லை என்றால் மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என்றும் அழைக்கப்படும் (எ.கா) ஒருவிதையிலைத் தாவர தண்டு)
  • வாஸ்குலார் கற்றையில் சைவத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் புளோயம் காணப்படுகிறது (எ.கா குகர்பிட்டா)

3) சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை

இவ்வகையில் சைவத்தைச் சூழ்ந்து புளோயமோ அல்லது புளோயத்தைச் சூழ்ந்து சைலமோ காணப்படும்.

1. சைகம் சூழ் வாஸ்குவார்கற்றை

சைலம், புளோயத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படும். எ.கா டிாசீனா

2. புளோயம் சூழ் வாஸ்குலார்கற்றை புளோயம், சைலத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது. எ.கா பெரணிகள்

உள்நோக்கிய சைவம் (எண்டார்க்)

  •  புரோட்டோசையம் மையத்தை நோக்கியும் மெட்டா சைலம் வெளிப்புறத்தை நோக்கியும் காணப்படுவது. எ.கா தண்டு

வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்

  • புரோட்டோசைலம் வெளிப்புறத்தை நோக்கியும் மெட்டாசைலம் மையத்தை நோக்கியும் காணப்படுவது எ.கா வேர்.

இருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (அவரை)

  • இருவிதையிலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் காணப்படுகின்றன.

1.எபிபிளமா

  • வேரின் வெளிப்புற அடுக்கு எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ் எனப்படும். ரைசோடெர்மிஸ் அல்லது பைலிபெரஸ் அடுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது

. புறணி

இது பல அடுக்கு செல் இடைவெளிகளுடன், கூடிய நெருக்கமின்றி அமைந்த பாரன்கைமா செல்களால் ஆனது. சேமிக்கிறது. இப்பகுதி நீர் மற்றும் உணவுப் பொருட்களை

அகத்தோல்

புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும். வரிசையில் அமைந்த நெருக்கமான பீப்பாய் வடிவ செல்களால் ஆனது. இச் செல்கள் வழிச்செல்கள் என அழைக்கப்படுகிறது.

புறணியிலிருந்து நீர் மற்றும் இதர பொருட்கள் வழிச்செல்கள் வழியாக சைலத்தை அடைகின்றன.

iv. ஸ்டீல்

அகத்தோலுக்கு உட்புறமாக காணப்படும் அனைத்து பகுதிகளும் ஸ்டீல் எனப்படுகிறது. இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் ஆகியவை அடங்கியுள்ளன.

அ.பெரிசைக்கிள்

அகத்தோலுக்கு உட்புறமாக காணப்படும் செல்களாகும். பக்கவேர்கள் இதிலிருந்து தான் தோன்றுகின்றன. ஒரு அடுக்கு பாரன்கைமா

ஆ. வாஸ்குவார்த் தொகுப்பு

வாஸ்குவார் கற்றைகள் ஆரப்போக்கு அமைவில் உள்ளன.

இளம் வேர்களில் நடுவில் பித காணப்படும். முதிர்ந்த வேர்களில் பித காணப்படுவதில்லை

ஒருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (சோளம்)

ஒருவிதையிலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீழ்க்கண்ட பகுதிகள் காணப்படுகிறது.

1. எபிபினமா அல்லது ரைசோடெர்மிஸ்:

  • ஒரு விதையிலைத் தாவரவேரின் வெளிப்புற அடுக்கு மெல்லிய சுவருடைய ஒரு அடுக்காலான பாரன்கைமா செல்களால் ஆனது.
  • வேர்த்தூவிகள் மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிம உப்புக்களை உறிஞ்சுகின்றன. இவ்வடுக்கு உட்புறத்திசுக்களைப் பாதுகாக்கிறது.

. புறணி

  • புறணி பல அடுக்கு நெருக்கமற்ற பாரன்கைமா செல்களாலானது இவை நீர் மற்றும் உணவினைச் சேமிக்கின்றன.

அகத்தோல்:

புறணியின் கடைசியடுக்கு அகத்தோல் ஆகம் அகத்தோலில் காஸ்பேரியன் பட்டைகள் மற்றும் வழிச் செல்கள் காணப்படுகின்றன. காஸ்பேரியன் பட்டைகள் சூபரின் என்ற பொருளால் ஆன பட்டைகளாகும்.

IV. ஸ்ட

அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த அனைத்து திசுக்களும் சேர்ந்து ஸ்டீல் எனப்படும். இது பெரிசைக்கிள்,வாஸ்குலார்த் தொகுப்புகள், பித் ஆகியவற்றை கொண்டுள்ளது.

அ. பெரிசைக்கிள்:

இது ஓரடுக்கு மெல்லிய சுவருடைய பாரன்கைமா செல்களால் ஆனது. பக்கவாட்டு வேர்கள் இதிலிருந்து தோன்றுகிறது.

ஆ. வாஸ்குலார் திசுக்கள்:

வாஸ்குலார் திசுக்க ஆரப்போக்கு அமைவில் உள்ளன.

மையப்பகுதியில் பித் காணப்படுகிறது. இது செல் இடைவெளிகளுடைய பாரன்கைமா செல்களால் ஆனது சேமிக்கப்பட்டுள்ளன. இந்த செல்களில் தரசம் (ஸ்டார்ச்) போன்ற பொருள்கள்

இருவிதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு (சூரியகாந்தி)

இருவிதையிலைத் தாவரத்தண்டின் உட்புற அமைப்பில் கீழ்கண்ட திசுக்கள் காணப்படுகின்றன.

1. புறத்தோல்:

வெளிப்புற அடுக்காகும். இது ஓரடுக்காலான பாரன்கைமா செல்களாலானது. இதன் வெளிப்புறத்தில் கியூடிக்கிள் படலம் காணப்படுகிறது. உட்புறத்திசுவை பாதுகாப்பதாகும். புறத்தோலின் பணி

2 புறணி

புறணி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

புறத்தோலடித்தோன்

இது 3 முதல் 6 அடுக்குகளால் ஆன கோலன்கைமா செல்களால் ஆனது. இவ்வடுக்கு தாவரங்களுக்கு உறுதியைத் தருகிறது.

. மையப்புறணி:

இது ஒரு சில அடுக்கு குளோரன்கைமா செல்களால் ஆனது. இதில் பசுங்கணிகங்கள் காணப்படுவதால் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கிறது.

i. உட்புற புறணி:

புறணியின் உட்புறப் பகுதியில் பாரன்கைமா செல்கள் சில அடுக்குகள் காணப்படுகிறது. இதன் பணி காற்று பரிமாற்றம் மற்றும் உணவு சேமித்தலாகும்.

v.அகத்தோஸ்

புறணியின் கடைசி அடுக்கு அகத்தோவாகம். இது ஓாடுக்கு பீப்பாய் வடிவ செல்களால் ஆனது இதில் தரசம் (ஸ்டார்ச்) காணப்படுவதால் தரச அடுக்கு எனவும் அழைக்கப்படுகிறது.

3. dodr

அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி ஸ்டீல் ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் காணப்படுகின்றன.

1 பெரிசைக்கின்

அகத்தோலுக்கும் வாஸ்குவார் கற்றைக்கும் இடையில் காணப்படும் பல அடுக்கு பாரன்கைமா செல்களால் ஆன பகுதியாகும். இதில் இடையிடையே

ஸ்கிளிரன் கைமாவால் ஆன திட்டுக்கள் காணப்படுகின்றன. இவை கற்றைத்தொப்பி என்றழைக்கப்படுகிறது.

II. வாஸ்குலார் கற்றை:

வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை. ஒருங்கமைந்தவை. திறந்தவை மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை.

செல் இடைவெளிகளுடன் காணப்படும் பாரன்கைமாவால் ஆன மையப்பகுதி பித் ஆகும். இதன் பணி உணவுப் பொருட்களைச் சேமிப்பதாகும்.

ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு (மக்களாச்சோளம்)

ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் பகுதிகள் உள்ளன. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட

1. புறத்தோல்:

இது வெளிப்புற அடுக்காகும். இது நாடுக்கு பாரன்கைமா செல்களால் ஆனது.

2. புறத்தோலடித்தோல்:

இவ்வடுக்கு சில அடுக்கு ஸ்கிளிரன்கைமா செல்களால் ஆனது. இடையிடையே குளோரன்கைமா தாவரங்களுக்கு உறுதியளிக்கிறது. செல்கள் இப்பகுதியின் ஸ்கிளிரன்கைமா

3. தளத்திக:

புறத்தோலடித்தோலுக்கு உட்புறமாக உள்ள அனைத்து பகுதிகளும் தளத்திசு எனப்படும். இவை அகத்தோல், புறணி, பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படவில்லை.

4. வாஸ்குலார்கற்றை

மண்டை ஓட்டு வடிவ வாஸ்குலார் கற்றைகள் தளத்திசுவில் சிதறிக் காணப்படுகின்றன. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றியும் ஸ்கிளிரன்கைமாவாலான கற்றை உறை உள்ளது.

சைலம்

சையக்குழாய்கள் ஆங்கில எழுத்து ‘Y’ வடிவில் அமைந்துள்ளது.

புளோயம்

புளோயம் சல்லடைக்குழாய் கூறுகள், துணை செல்கள் பாரன்கைமாவினைக் கொண்டது. புளோயம் நார்கள் காணப்படவில்லை. மற்றும்

மையத்தில் பித் காணப்படவில்லை.

இருவிதையிலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள்

மேல்புறத்தோல்:

இரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆனது. மேல்புறத்தோலின் வெளிப்புறத்தில் கியூடிக்கிள் படலம் உள்ளது.

கீழ்புறத்தோல்

வெளிப்புறத்தில் கியூடிக்கிளுடன் ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆன அடுக்கு காணப்படுகிறது. இதில் பல இலைத்துளைகள் உள்ளன. ஒவ்வொரு இலைத்துளையும் பசுங்கணிகத்துடன் கூடிய yoder காப்பு செல்களால்

சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவி புரிகின்றன.

11 இலையிடைத்திக

மேல்புறத் தோலுக்கும் கீழ்புறத்தோலுக்கும் இடையே காணப்படும். தளத்திக இவையிடைத்திக அல்லது மீசோபில் எனப்படும்.

இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை செல்கள்

உள்ளன

அ. பாலிசேட் பரன்கைமா.

மேல்புறத்தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள் அதிக பசுங்கணிகங்களுடன் காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.

ஆ. ஸ்பாஞ்சி பாரன்கைமா

இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோளவடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.

வாஸ்குலார்கற்றைகள்:

வாஸ்குலார் கற்றையில் சைவம் மேல்புறத்தோலை நோக்கியும், புளோயம் கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது.

ஒருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு (இருபுறமும் ஒத்த அமைப்புடைய இலை – புல்)

ஒருவிதையிலைத் தாவர காணப்படுகின்றன. இலையின் உள்ளமைப்பில் கீழ்கண்ட பகுதிகள்

1. புறத்தோல்

மேல்புறத்தோல் மற்றும் கீழ்ப்புறத்தோல் காணப்படுகிறது.

புறத்தோலானது பாரன்கைமா செல்களால் ஆனது. மேல்புறத்தோலின் சில செல்கள் மெல்லிய சுவருடன் பெரிதாக உள்ளது. இவை புல்லிபார்ம் செல்கள் எனப்படுகின்றன. S

1. இலையிடைத்திசு

மேல்புறத்தோலுக்கும் கீழ்புறத்தோலுக்கும் இடையே உள்ள தளத்திசு இலையிடைத்தி எனப்படும்.

இலையிடைத்திசு பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா காணப்படுகிறது என வேறுபாடின்றி

匯 வாஸ்குலார் கற்றைகள்

அளவில் சிறியதும் பெரியதுமான பல வாஸ்குலார் கற்றைகள் காணப்படுகின்றன. வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத்தோலை நோக்கியும் புளோயம் கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது.

சின்சைட்(SYNCYTE)

  • செல்கள் ஒன்றாக இணைந்து உண்டாவது சின்சைட் (கூட்டுசெல்) எனப்படும்.

எடுத்துக்காட்டு

சையக்குழாய்கள் (இறந்த சின்சைட்)

சல்லடை குழாய் (உயிருள்ள சின்சைட்).

அல்புமினஸ் செல்கள்

  • சைட்டேயிளாசத்தில் உட்கரு கோண்ட பாரன்கைமா ஜிம்னோஸ்பெர்ம்களின் சல்லடை செல்களுடன் இணைந்து காணப்படுவது,

கோனிஃபெர்களில் உள்ள அல்புமினஸ் செல்கள் ஆஞ்சியோஸ்பெர்மகளில் உள்ள துணைச் செல்களிலிருந்து வேறுபட்டது. இது ஸ்டிராஸ்பர்கர் செல்கள் எனப்படும்

Share This:

Leave a Comment