சோழர்கள்

Share This:

    முற்காலச் சோழர்கள்:

* சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரமாக உறையூர்”, தற்போதைய திருச்சி, தஞ்சாவூர் இருந்தன.

* சங்ககால சோழர்களில் மிகச்சிறந்த அரசன் – கரிகாலச்சோழன், இவரை ஏழிசை வல்லான் என்றும் அழைப்பர். 

கரிகாலனின் இயற்பெயர்-திருமாவளவன் 

கரிகாலனின் தந்தை -இளஞ்சேட்சென்னி

* வெண்ணிப் பரந்தலை போரில் (தஞ்சை அருகே) சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர் குலத்தலைவர்களை, கரிகாலன் தோற்கடித்தார்.

* வாகை பரந்தவை என்னுமிடத்தில் 9 வேளிர்களை தோற்கடித்தார்.

* காவிரியின் குறுக்கே கல்லணையை கட்டினார், கல்லணையின் மூலம் 69.000 ஏக்கர்

நிலம் பலனடைகிறது.  

பொன்னிக்கு கரைகண்ட பூபதி என்று கரிகாலன் போற்றப்பட்டார்.

* இவரின் வடஇந்திய படையெடுப்பை பற்றி கூறும் நூல் சிலப்பதிகாரம்.

* கரிகாலனின் ஆட்சியின்போது நடைபெற்ற “வணிகத்தை பற்றி கூறும் நூல் பட்டினப்பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)

* சங்ககால சோழர்களின் பட்டப்பெயர்:

1. கிள்ளி

2. வன்

3. செம்பியன்

4. சென்னி

சோழர்களின் துறைமுகம் – பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்)

      பூ    – அத்திப்பூ

      சின்னம் -புலி

* சோழமண்டகம் என்பது ஐரோப்பியர் நாவில் “கோரமண்டல்” என திரிபடைந்தது.

* சோழநாடு சோறுடைத்து என்பது முதுமொழி

* சங்ககால சோழ பேரரசு வீழ்ச்சிக்கு பிறரு உறைபூரில் சிற்றசர்களாக வாழ்ந்தனர்.

பிற்கால சோழர்கள்

கி.பி 9-ஆம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்கள் சிறப்படைய தொடங்கினர்.

கல்வெட்டுச் சன்றுகள்.

1. அன்பில் கல்வெட்டு-சுந்தரசோழன்                                        

2.காமபுகல்வெட்டு-1-பறந்தகசோழன்

                                        வேதபாடசாலை.                                              அமைக்க மானியம்                                         அளித்த செய்தியை.                                         கூறுகிறது.

3.உத்திரமேரூர் கல்வெட்டு-  1- ம் பரணிந்தகசோழன் “குடவோை தேர் தல்” பற்றி கூறும் கல்வெட்டு

4. அணிபூர் கல்வெட்டு- 1-ம் இராஜராஜ சோழனின் ஆட்சியில் வேதங்களையும்,இயக்கணங்களலயும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை பற்றி கூறுகிறது.

5.லெய்டன் செப்பேடு-  

பெரியது 21 – ராராஜசோழன், 

சிறியது 3-1 குயேர்த்துங்கள்

6.கரந்தை செப்பேடு திருவங்காட்டு செப்பேடு- ராஜேந்திரசோழன்

7.திருவாவடுதுறைக் கல்வெட்டு (மருத்துவம் பற்றியது)-வீரராசேந்திரன்

8.திருவிடைக் காலைக் கல்வெட்டு சோழர்கால நூலகம் பற்றி கூறுகிறது

* பிற்காலசோழர்களின் முதல் தலைநகர் “தஞ்சாலூர்” பின்னர் ராசேந்திரசோழனின் ஆட்சிக்காலத்தில் “கங்கை கொண்ட சோழபுரம்” (அரியலூர்) தலைநகரானது

* இலங்கை, மலேய தீபகற்பத்தில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தியதால் பிற்கால சோழர்கள் “பேரரசு சோழர்கள்” என அழைக்கப்பட்டனர்.

விஜயாலசோழன் கி.பி 850 – 871

* பிற்கால சோழ மரபை தோற்றுவித்தவர்.

* கி.பி 859- இல் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி அதனை சோழர்களின் தலைநகராக்கினார்.

* தஞ்சையில் நிகம்ப சூதனிக்கு (துர்க்கை) கோயில் கட்டினார்.

* நார்த்தமலை சோழிஸ்வரர் கோயிலை கட்டினார்.

* நற்கேசரி, பரகேசரி போன்ற பட்டங்களை சூட்டிக் கொண்டார்.

ஆதித்ய சோழன் (கி.பி 871 – கி.பி 907)

* விஜயாலய சோழனின் மகன்

* பல்லவ மன்னன் “அபராஜிதவர்மனை” தோற்கடித்து தொண்டை மண்டலத்தை சோழப்பேரரசோடு இணைத்தார்.

* திருக்கட்டளைக் கோயிலை கட்டியவர்.

* தொண்டைநாடு பரவிய சோழன், கோதண்டராமன் என்ற பட்டப்பெயர்களை சூட்டிக்கொண்டார்.

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-955)

* ஆதித்ய சோழனின் மகன்

* 915 – இல் நடைபெற்ற வெள்ளூர் போரில் இலங்கை, பாண்டிய கூட்டுப்படையை தோற்கடித்தார்.

       1. இலங்கை அரசன் – காசிபன்

       2. பாண்டிய அரசன் -2 ம் ராஜசிம்மன்

* 920 – இல் பாண்டிய அரசன் 2 ம் ராஜசிம்மன் மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றினார். பாண்டிய அரசன் நாட்டைவிட்டு வெளியேறினார்.

* 916 – திருவல்லம் போரில் 2 -ம் கிருஷ்ணரை தோற்கடித்தார்.

* கி.பி 949- இல் நடைபெற்ற தக்கோலம் போரில் ராட்டிடகூட மன்னர் 3- ஆம் கிருஷ்ணரிடம் தோல்வி அடைந்தார்.

* இவர் ஆட்சிக்காலத்தில் கி.பி 919, 921 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உத்திரமேரூர் கல்வெட்டு வெளியிடப்பட்டது.

இக்கல்வெட்டு குடவோலை தேர்தல் பற்றி கூறும் கல்வெட்டு,

* சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு பொற்கூரை வேய்ந்தனர்.

* திருச்சி சீனிவாசநல்லூர் கோரங்கநாதர் கோயிலை கட்டினார்.

இவரின் பட்டப்பெயர்கள்:

1. வீர நாராயனன்

2. மதுரை கொண்டான்

3. ஈழமும் கொண்டான்.

4. பொன்வேய்ந்த சோழன்

வழித்தோன்றல்கள்

1. ராசதித்தன்

2. கண்டராதித்தன்

3. அரிகுல கேசரி

4. உத்தம சீலன்

5. அரிஞ்செயன்

முதலாம் ராஜராஜசோழன் கி.பி 985-1014

இயற்பெயர் -அருள்மொழிவர்மன்

தந்தை –  சுந்தரசோழன் (II-ம் பாரந்தக.                                                         சோழன்)

தாய்–  வானவன் மாதேவி.                   (திருவாலங்காட்டு செப்பேடுகளில் இவர்  உடன்கடை ஏறிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது)

தமக்கை -குந்தவை

மகள்- குத்தவை

மகன் – ராஜேந்திரசோழன்

ஆசான் – கரூர்தேவன்

* சோழமரபின் சிறந்த ஆட்சியாளர் -ராஜராஜசோழன்

வெற்றிகள்:

*ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

* இலங்கை அரசன் 5-ம் மகிந்தனை வென்று இலங்கையின் தலைநகர் “அதூராதபுரத்தில்” சிவன் கோவிலை கட்டினார். (அக்கோயில் சிவ – தேவாலே

எனப்படுகிறது). 

*பின்னர் இலங்கை தலைநகர் அநூராதபுரத்திலிருந்து “பொலநருவா” என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது.

* இலங்கையின் வடபகுதி “மும்முடிச் சோழமண்டலம்” என பெயரிடப்பட்டது.

* காந்தளூர் சாலை (திருவனந்தபுரம்) என்னுமிடத்தில் சேர மன்னன் பாஸ்கரவர்மனின் கடற்படையை முறியடித்தார்.

* மேலை சாளுக்கிய அரசின் (கல்யாணி) மீது 1003 -ல் ராஜராஜசோழனும் 1009 – ல் முதலாம் ராஜேந்திர சோழனும் தொடுத்த போரில் சாளுக்கிய மன்னனான சத்யசராயரிடமிருந்து வெங்கியை கைப்பற்றி சக்திவர்மனுக்கு அளித்தார்கள்.

* இளவரசி குந்தவையை சாளுக்கிய மன்னன் சக்திவர்மனின் சகோதரர் “விமாலாதித்தனுக்கு” திருமணம்செய்து கொடுத்தார்.

* பாண்டிய அரசன் “அமரபுஜங்கன்” தோற்கடிக்கப்பட்டார்.

* மைசூர் பகுதிகளான “கங்கபாடி, தாடிகைபாடி, நுளம்பாடி ஆகிய பகுதிகளையும், ரெய்ச்சூர், தோ -ஆப் பகுதிகளையும் வென்றார்.

* இவர் காலத்தில் சோழப்பேரரசு “துங்கபத்ரா நதி” வரை பரவி இருந்தது

* இவரது கடைசி படையெடுப்பு முந்நீர் பழந்தீவுகள் எனப்பட்ட மாலத்தீவுகளுக்கு எதிரான படையெடுப்பு

சிறப்புப் பெயர்கள்:

1 ஜெயங் கொண்டான்

2) சிவபாத சேகரன்

3) நித்திய வினோதரன்

4) கீர்த்தி பராக்கிரமன்

5) உலகளந்த சோழன்

6) பொன்னியின் செல்வன் (கல்கி இட்டபெயர்)

7) மும்முடிச்  சோழன்

சமயம்:

* சைவ சமயத்தை பின்பற்றினார்

* இவரது காலத்தில்தான் தேவாரம் தொகுக்கப்பட்டது.

தஞ்சை பெரியகோயில் (ராஜராஜசோழன்)

* 1003 – இல் கட்டத் தொடங்கி 1010 -இல் கட்டி முடிக்கப்பட்டது 

இக்கோயிலின் வேறுபெயர்கள்:

1) பிரகதீஸ்வரர் ஆலயம்

2) தட்சிண மேரு 

3) பெருவுடையார் கோயில்

4) ராஜராஜேஸ்வரம்

* தென்னிந்திய கட்டிடக்கலையின் “மணிமுடி”

* சோழர்கால கட்டிடக்கலையின் மணிமகுடம் என்றழைக்கப்பட்டது.

கோயிலின் சிறப்பு:

* கோயில் 13 அடுக்குகளைக் கொண்டது.

* கோபுர உச்சியில் உள்ள கல்லின் எடை 80 டன் ஆகும்.

* சிவலிங்கத்தின் உயரம் – 12 அடி (தமிழ் உயிர் எழுத்து-12)

* சிவலிங்க பீட உயரம் – 18 அடி (தமிழ் மெய் எழுத்து -18)

* கோபுர உயரம் – 216 அடி (தமிழ் உயிர்மெய் எழுத்து -216)

* சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடைப்பட்ட தூரம்  – 247 அடி (தமிழ் மொத்த எழுத்துக்கள் 247)

* இக்கோயிலின் தலைமை சிற்பி – குஞ்சர மல்லன்

* பெரிய கோயிலின் 1000 – வது ஆண்டு விழர் 2010 செப்டம்பர் 25 ஆம் நான் சிறப்பாக நடைபெற்றது.

* இக்கோயிலின் நத்தி ஒரே கல்லால் ஆனது. நந்தி 16 அடி நீளமும். 13 அடி உயரமும் கொண்டது

* இந்தியாவில் உள்ள நந்தி சிற்பங்களில் 2-வது பெரியது.

* முதல் பெரிய நந்தி – லெபாக்ஷிகோவில் நந்தி (ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம்)

* 1987- UNESCO பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

* முதலாம் ராஜராஜசோழனால் மகாதிட்டா (கேரளா) என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில் “ராஜாராஜேஸ்வரம்” என்றழைக்கப்படுகிறது.

* கி.பி 1006 –  இல் ஸ்ரீ விஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த கோயிலைக் கட்டினார். அது ‘சூளாமணி வர்ம விஹாரம்” எனப்படுகிறது.

* மெய்க்கீர்த்திகள் எழுதும் வழக்கம் இவரது காலத்தில் தோன்றியது.

* இவரது மெய்க்கீர்த்திகள் “திருமகள் போல” எனத் தொடங்கும்.

* ராஜராஜசோழன் 1014 – இல் இறந்தார்.

முதலாம் ராஜேந்திர சோழன் கி.பி 1012-1044

இயற்பெயர் – மதுராந்தகன்

தந்தை – முதலாம் ராஜராஜ சோழன்

தாய் – திரிபுவன மகாதேவி

தளபதி – அப்ரமேயன்

மகள் – அம்மாங்காதேவி

* இவரது காலத்தில் கடற்படை வலிமை மிக்கதாக காணப்பட்டது.

வெற்றிகள்:

* இடைத்துறை நாடு (ரெய்ச்சூர், தோ ஆப்)

* வனவாசி (கடம்பர்)

* கொள்ளிப்பாகை (ஹைதராபாத் பகுதி)

* மண்ணைக் கடக்கம் (மால்கெட்)

* இலங்கை, பாண்டிய, சேர அரசர்களைத் தோற்கடித்தார்.

* மேலை சாளுக்கிய மன்னன் “ஜெயசிம்மனை” தோற்கடித்தார்.

வட இந்திய படையெடுப்பு (1023)

* வங்காள மன்னர் முதலாம்  மகிபாலனுக்கு எதிரான படையெடுப்பில் வெற்றி பெற்றார் ராஜேந்திர சோழன்.

இப்போரில், முதலாம் ராஜேந்திரன் “கோதாவரி” ஆறுவரை படைக்கு தலைமை தாங்கி, பின்னர் தனது தளபதியிடம் ஒப்படைத்தார்.

* வட இந்திய வெற்றியின் நினைவாக கி.பி 1025 இல் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை நிறுவினார். அங்கு கி.பி 1030 ல் ராஜேஸ்வர ஆலயத்தைக் கட்டினார். இக்கோயிலின் உயரம் 55 மீட்டர் ஆகும்.

இக்கோயில் 100 அடி அகலம்.340 அடி நீளம், 150 அடி உயரம் விமானம் கொண்டது.

* தஞ்சை பெரிய கோயிலை போலவே கருவறை, இரண்டு அடுக்குகளைக்கொண்டது.

சோழகங்கம் ஏரி:

*கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மேற்கே “சோழகங்கம்” என்ற நீர்பாசன ஏரியை வெட்டினர்.

அந்த ஏரியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் 16 மைல் நீளமுள்ள ஓர் உறுதியான கட்டுமானத்தை ராஜேந்திரன் எழுப்பினார்.

அவர் அந்த ஏரியை “ஜலமயஜெயஸ் தம்பம்” என்று குறிப்பிடுகிறார்.

அதன் பொருள் -நீரில் கிடைத்த வெற்றியின் நினைவாக எழுப்பிய தூண் என்று பொருள்.

* 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பகுதிக்கு வந்த அரேபிய வரலாற்றாசிரியர் அல்பரூனி, இக்கட்டுமான அமைப்பை கண்டு வியந்தார்.

அவர், எங்கள் மக்கள் அதனை கண்டு வியப்படைவார்கள் ஆனால் அவர்களால் விவரிக்க முடியாது. அதுபோன்ற ஒன்றை கட்டவும் முடியாது என்று அல்பருனி பதிவு செய்துள்ளார்.

சான்று: ஜவஹர்லால் நேரு “GUMPSES OF WORLD HISTORY” (உலக சரித்திரம்)

* கி.பி 700 – 1300 இடைப்பட்ட காலத்தில் வளமான பகுதியான ஸ்ரீ விஜயத்தை கைப்பற்றினார்.

கடாரம், நிகோபர் தீவுகள், மலேயா தீபகற்பகம் ஆகியவற்றையும் வென்றார்.

சிறப்பு பெயர்கள்:

*கங்கை கொண்டான்

* கடாரம் கொண்டான்

* முடி கொண்டான்

* பண்டித சோழன்

* மும்முடிச் சோழனின் களிறு

*  பஞ்சவன் மாராயன்

*ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியானது திருமன்னி வளர எனத் தொடங்கும்.

* இவரால் “வாயுக்காக கட்டப்பட்ட கோயில் -காளஹஸ்தி கோயில்”

* வங்காள விரிகுடாவை சோழர்களின் ஏரி என்றழைத்தவர் நீலகண்ட சாஸ்திரி

*ராஜேந்திர சோழனை தொடர்ந்து பதவியேற்ற மூவரும் திறமை வாய்ந்த அரசர்களாக இல்லை.   மூன்றாவதாக பதவியேற்ற வீர ராஜேந்திரன் மகன் அதிராஜேந்திரன்” உள்நாட்டு கலகத்தில் கொல்லப்பட்டார்.

* விஜயாலய சோழனின் வழிவந்த கடைசி அரசர் – அதிராஜேந்திரன்.

* ராஜராஜசோழனின் மகள் குந்தவையை விமலாதித்தன் திருமணம் செய்தார்.

அவர்களின் மகன் – ராசராசநாகேந்திரன்

ராசேந்திர சோழனின் மகள் அம்மாங்கதேவியை ராசராச நாகேந்திரன் திருமணம் செய்தார்.

அவர்களின் மகன் – முதலாம் குலோத்துங்கசோழன்

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1071-1112)

தந்தை – ராசராச நாகேந்திரன்

தாய் –  அம்மாங்க தேவி

* இவர் சாளுக்கிய நாட்டில் இருந்த பொழுது “ராஜேந்திர சாளுக்கியன் என்று அறியப்பட்டார்.

* கலிங்கத்தின் மீது படையெடுத்தார்.

* சாளுக்கிய சோழ மரபை ஒன்றிணைத்தார்.

* இவரது காலத்தில் “இலங்கை” சோழப்பேரரசில் இருந்து விடுதலை பெற்றது.

* ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் நெருங்கிய நட்பு கொண்டார்.

* கி.பி 1077-இல் வணிகக் குழுவை அங்கு அனுப்பினார்.

* சீனாவிற்கு 72- வணிகர்கள் அடங்கிய தூதுக்குழுவை அனுப்பினார்.

ஆதரித்த கவிஞர்கள்

            ஓட்டக்கூத்தர்,

 ஜெயங்கொண்டார் 

புகழேந்திப் புலவர்.

* சுங்கவரியை நீக்கியதால்  “சுங்கம் தவிர்த்த சோழன்” என அழைக்கப்பட்டார்.

* பட்டப்பெயர்கள் – நிலமளந்த சோழன், திருநீற்றுசோழன்

* கும்பகோணம் சூரியணர் கோயிலைக் கட்டினார்

இரண்டாம் குலோத்துங்க சோழன்:

* முதலாம் குலோத்துங்க சோழனின் பேரன்

* இவரின் காலத்தில் சைவ — வைணவ மோதல்கள் அதிகம் ஏற்பட்டன.

* சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை அகற்றப்பட்டதும், வைணவப் பெரியார் இராமானுஜர்  சோழநாட்டை விட்டு கர்நாடகத்தில் உள்ள “மேல்கோட்டைக்கு” சென்றுவிட்டார்.

* இரண்டாம் குலோத்துங்கசோழனை “கிருமி கண்ட சோழன்” என்றும் அழைப்பர்

இரண்டாம் ராசராசன்:

* இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன்

* தாராசுரம் ஐராதீஸ்வரம் கோயிலை கட்டியவர்.

மூன்றாம் குலோத்துங்கன்.

* கி.மி 1205 –  இல் மதுரையை கைப்பற்றி சோழ பாண்டியன்” என்ற பட்டம் சூட்டிக் கொண்டார்.

* திரிபுவன வீரத்தேவன் என்ற பட்டப்பெயரும் உண்டு. (பாண்டியரை வென்றதால்)

*திரிபுவனம் கம்பகேசுவரர் கோயிலைக் கட்டினார்.

* கோயிலின் கோபுர உயரம் 126 அடி

மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி 1246-1279)

* கடைசி சோழ மன்னன்

* இவர்மீது பாண்டிய அரசர்களான முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியனும். இரண்டாம் – ஜடாவர்ம சுந்தர பாண்டியனும், அடுத்தடுத்து போர் தொடுத்து தோற்கடித்து சோழநாட்டை கைப்பற்றினார்.

சோழர் நிர்வாகம்

* சோழ அரசு மரபு வழிப்பட்ட முடியாட்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

* சோழர்கள் அரசராக பட்டம் சூட்டும் விழாவில் பெயருக்கு பின் “தேவன்” என்ற சொல்லை சேர்த்தனர்.

* சோழர்கள் தங்களை கடவுளுக்கு இணையாக பெருமாள்,   பெருமகன் – உலருடைய பெருமாள் நாயனார் என்றெல்லாம் அழைத்துக் கொண்டார்.

* பிற்காலத்தில் சக்கரவர்த்தி (பேரரசர்), திருபுவன சக்ரவர்த்தி (மூன்று உலகங்களுக்கான பேரரசர்) போன்ற பட்டங்களை சூட்டிக் கொண்டார்

* தங்களை கடவுளின் நண்பன் “தம்பிரான் தோழன்” என்று உரிமைக்கோரி அதிகாரத்தை நிலைநிறுத்தினர்.

* அரசரின் மூத்தமகனே வாரிசாக நியமிக்கப்பட்டார். அவர் யுவராஜன் என்றழைக்கப்பட்டார். 

* சோழர்களின் ஆன்மிக வழிகாட்டி அல்லது ராஜகுருக்களாக பிராமணர்களை நியமித்தனர்.

1. ராஜராஜனின் ராஜ குரு – ஈசானசிவன்

2. ராஜேந்திரனின் ராஜகுரு – சர்வசிவன்

சோழர்களின் ஆட்சிமுறை:

* ஊர் – வளநாடு – மண்டலம் – சோழநாடு

* நிர்வாகத்தின் அடிப்படை அலகு – ஊர்.

* ராஜராஜன் ஆட்சியில் சோழ மண்டலங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்பட்டார்.

சோழர் கால 9 மண்டலங்கள்:

1. சோழ மண்டலம் – திருச்சி. தஞ்சை

2. ராஜ ராஜ பாண்டி மண்டலம் –   பாண்டிய நாடு

3. ஜெயங்கொண்ட சோழ மண்டலம் –

தொண்டை நாடு

4. மும்முடி சோழமண்டலம் – இலங்கை

5. முடிகொண்ட சோழ மண்டலம் -கங்கயாடி

6. நிகிரிலி சோழ மண்டலம் – நுளாம்பாடி

7. அதிராஜராஜ சோழ மண்டலம் – 

கொங்குநாடு

8. மலை மண்டலம் – கேரளம்

9. வேங்கை மண்டலம் – கீழை சாளுக்கிய                                                நாடு

* மன்னரின் கீழ் இருந்த அதிகாரிகள் “சிறுதனம், பெருத்தனம்” என அழைக்கப்பட்டனர்.

அதிகாரிகள்:

1.திருவாய் வேள்வி

அரசரின் ஆணைகளை வெளியிடுபவர்.

2. திருமந்தி ஓலை நாயகம் — அரசின் ஆணைகளை இலையில் எழுதுபவர்.

3. கருமவிதிகள் — ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு சேர்ப்பவர்.

4. புரவு வரி திணைக் களத்தார் — நிலவரிக்கழகம்.

5. வரிப்பொத்தகக் கணக்கு —

தணிக்கை அதிகாரி

6. நாடு வகை செய்வார் —  விளைநிலத்தின் தரத்தை பிரிப்பவர்

(நிலம் அளக்க)

7. திருமுகக் கணக்கு — 

அரண்மனைக் கணக்காளர்

8. நாடு காவல் அதிகாரி — 

நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர்

உள்ளாட்சி அமைப்பு:

உள்ளாட்சி நிர்வாகமானது ஊயார் நரைத்தார். நாட்டார் எனும் அமைப்பின் மூலம் தன்னாட்சி உரிமைக் கொன்டாக செயல்பட்டது.

ஊரர் பணி:

* வேளாண் வகை கிராம நில உடைமையாளர்களே  ஊராரின் பிரதிநிதிகள்

* 30 பேர் கொண்ட கிராமசபை 6 வாரிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டது.

* வரி வசூலித்தல், சட்ட ஒழுங்கை பாதுகாத்தல், கோயில் நிர்வாகம் அரசரின் ஆணைகளை நிறைவேற்றுவது போன்ற பணிகளை செய்தனர்.

சபையார்:

* பிரம்மதேய மையமாக விளங்கிய கோயில் மற்றும் அவற்றின் சொத்துக்களை நிர்வகிப்பது

* நிதிதிர்வாகம், நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர்.

* கோயில் நில பாசன குளங்களை பராமரித்தனர்.

நகரத்தார்:

* வணிகர்களின் குடியிருப்பு நகரம்.

* முதலாம் ராஜராஜன் ஆட்சியில் மாமல்லபுரம் “மாநகரம்” என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது.

* சீன வரலாற்று குறிப்புகளில் உள்ளூர் பொருட்கள் நகரங்களில் பரிமாற்றம் செய்யப்பட்டன என்றுள்ளது.

நாட்டார்:

* பிரம்மதேயம் நீங்கலாக பல ஊர்களின் தொகுப்பு நாடு எனப்பட்டது.

* கால்வாய்கள், குளங்கள், போன்ற பாசன ஆதாரங்களை சுற்றி நாடு உருவாக்கப்பட்டிருந்தது.

வேளாண்வகை கிராமங்களின் மன்றம் நாட்டார் எனப்பட்டது.

* சோழ அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக நாட்டார் செயல்பட்டனர்.

* அரச நிர்வாகம், நிதி, நீதித்துறை சார்ந்த பணிகள் மேற்கொண்டனர்.

நாட்டாரின் பட்டங்கள்:

1. ஆசுடையான் (நில உரிமையாளர்)

2. அரையன் (வழி நடத்துவோர்)

3. கிழவன் (தலைவர்)

* நாட்டாரின் நிர்வாகப் பணிகளை ஆவணப்படுத்தியோர், நாட்டுக்கணக்கு நாட்டு வையவன் ஆவார்.

* வேளாளர் என்ற பிரிவில் “உழுகுடி” என்போர்கள் நில உடைமையாளராக இருக்க முடியாது

அவர்கள் பிரம்மதேய வேளாண்வகை நிலங்களில் வேளாண் பணிகளைச் செய்தனர். மொத்த விளைச்சலில் நில உடைமையாளர்கள் மேல்வாரத்தையும் (விளைச்சலில் பெரும் பகுதி) உழுகுடி கீழ்வாரத்தையும் (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர்.

படைகள்:

கல்வெட்டுகளில் 80 படைப்பிரிவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* வில்வீரர் – வில்லாளிகள், வாள்வீரர் வாளிலர், ஈட்டிவீரர் (கொண்டுவால்)

கடற்படை, காலாட்படை, யானைப் படை குதிரைப்படை போன்ற படைகள் செயல்பட்டன

* ராசராசனும், ராசேந்திரனும் மூன்றுவகை மகாசேனை என்ற படைப்பிரிவை கொண்டிருத்தனர் (காலாட்படை, யானைப்படை, கடற்படை)

* மரபுவழிப்பட்ட படைப்பிரிவு –     காலாட்படை, குதிரைப்படை,யானைப்படை

* சோழர்கள் படையில் 60,000 யானைகள் இருந்ததாக 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சீன புவியியலாளர் குறிப்பிடுகிறார்.

* அரசரின் தனிப்படை –  கைக்கோள் பெரும்படை

* படைப்பிரிவின் தலைவர் “நாயகம்” பின்னாளில் “படைமுதலி” என்றழைக்கப்பட்டார்.

* படைத்தளபதி – சேனாதிபதி”, “தண்டநாயகம்” என்றழைக்கப்பட்டார்.

* தலைநகரில் படைகள் முகாமிட்டிருந்த பகுதி – படைவீடு

* புதிதாக சேர்க்கும் பகுதிகளில் அமைக்கும் படைகள் – நிலைப்படைகள்

* இராணுவ முகாம்கள் “கடகங்கள்”  என்றழைக்கப்பட்டன.

* படைவீரர்களின் உரிமை *படைபற்று” ஆகும்.

பொருளாதாரம்:

* வேளாண் செய்பவரை “சித்திரமோழிய பெரிய நாட்டார்” என குறிப்பிட்டனர்.

 நில வருவாய் துறை “புறவி வரித் திணைக்கள்” என்று அழைக்கப்படுகிறது.

* ராஜராஜன் (1001). முதலாம் குலோத்துங்கன் (1086). மூன்றாம் குலோத்துங்கன் (1226) ஆகியோர் காலத்தில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

* நில அளவீடு செய்ய – குழி, மா, வேலி, பட்டி, பாடகம் போன்ற அலகுகள் பயன்பட்டன.

நில அளவீடு பணிகளில் ஈடுபட்டவர்கள் “நாடு வகை செய்கிற” என்று குறிப்பிட்டார்கள் 

* விளைச்சலில் 1/3 பங்கு வரி வசூலிக்கப்பட்டது.

* இறை, காணிகடன், இறைகட்டின காணிகடன், கடமை குடிமை உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்பட்டன

இதில் முக்கியமான வரி, குடிமை வரி நிலத்தை குத்தகை எடுத்து வேளாண் செய்தவர்கள், அரசுக்கும், நிலஉரிமையாளருக்கும் வரி செலுத்துவது குடிமை வரி ஆகும்.

* அரசரும் உள்ளூர் தலைவர்களும் வரசூலிக்கப்பட்ட வரி – ஒப்படி

* விளைபொருள்களுக்கு செலுத்தப்பட்ட வரி “இறைகட்டின நெல்லு” எனப்பட்டது. வரியாக வசூலிக்கப்பட்ட நெல் “களம்” என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. 

1 களம் – 28 கிலோ

1 வேலி (6.5ஏக்கர்) நிலத்திற்கு 100 களம் வரியாக வசூல் செய்யப்பட்டது.

வேலியின் அளவு மண் வளம், போகங்கள் பொறுத்து மாறுபடும்.

* பெண்கள், சிறுபாடு, சிறுசேமிப்பு பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

சோழர் கால நிலக் கொடைகள்:

1. வேளாண் வகை

பிராமணரல்லாத உடைமையாளருக்கு சொந்தமான நிலங்கள்

2. பிரம்மதேயம் – பிராமணர்க்கு

3. சாலபோகம் – கல்வி நிலையங்களை பராமரிப்பதற்கு

4. பள்ளிச்சந்தம் – சமண சமய நிறுவனங்களுக்கு

5. தேவதானம் – கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

* இறையிலி நிலங்கள் எனப்படுவது வரியில்லா நிலங்களாகும்

பாசனம்:

* மழை நீரை சேமித்துவைக்க காவிரி வடிநிலப் பகுதியில் பயன்பட்ட மரபுவழி முறை வாடி வாய்க்கால் ஆகும்.

* வடிகால் என்பது நீர் வடக்கு, தெற்காக ஓடுவதாகும்.  தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவது

*வாய்க்கால் என்பது கிழக்கு, மேற்காக ஓடுவதாகும். இது அனைவருக்கும் சொந்தமானதாகும்.

* பெரிய பாசன ஏரிகள் – சோழ வாரிதி, கலிய நேரி, மதுராந்தகன் எரி பல்லவர்களால் உருவாக்கப்பட்ட “வைரமேக தடாகம்” 

சோழர்கால பாகூர் பெரிய எரி

 ராசேந்திர சோழ பெரேரி

* ஏரிகளை ஊதியமில்லா உழைப்பால் பராமரிப்பவர்கள் – வெட்டி,அமஞ்சி ஆவார்

நீர் மேலாண்மை:

* நீரை பங்கீடு செய்வது “நிர்கின்றவாறு (பங்கீடு செய்யப்பட்ட நீரின் அளவு) என்று குறிப்பிடப்படுகிறது.

* நீர் திறக்கப்படும் வழிகள் -குமிழ் (மதரு). தலைவாய் (தலைமடை)

* பாசனக் குழாய்களை பழுதுபார்க்க  “ஏரிஆயம்” என்ற வரி கிராம சபையால் வசூலிக்கப்பட்டது.

* புயலில் சேதமடைந்த குளங்களை பழுதுபார்த்து புதுப்பித்தவர் அரையன் (உள்ளூர் தலைவன்) ஆவார்.

* கவிநாட்டு கண்மாய் சோழகல்வெட்டு குறிப்புகளுடன் உள்ளது.

மதம்:

* சோழ அரசர்கள் தீவிர சைவர்கள்.

* சைவ சித்தாந்தத்தின் அடிப்படையிலான சிவஞான போதம் எனும் நூலை இயற்றியவர் – மெய்கண்டர்.

* சைவத்தை பரப்ப முதலாம் பராந்தகனும், உத்தமச்சோழனும் நிதியுதவியும் நிலக்கொடையும் அளித்தார்கள்

* இக்காலத்தில் பல்வேறு செயல்பாடுகளின் இணைப்பு மையமாகப் கோயில்களே இருந்தன.

* சிவ வழிபாடு லிங்கோத்பவர் என்ற குறியீட்டு வடிவத்திலும், நடராஜர் என்ற மனித வடிவத்திலும் நடைபெற்றது.

* சிற்பங்கள், ஓவியங்களில் “திரிபுராந்தகன்” (மூன்று உலகை அழித்தவர்) என்ற வடிவில் சிவன் பிரதிபலிக்கப்பட்டு போர் வீரராக கருதப்படுகிறர்.

* நடராஜன் அல்லது ஆடல்வல்லான் (நடனங்களின் அரசன்) ஆகிய வடிவங்களில் சிவன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

* அரசர்கள் புதைக்கப்படும் இடங்களில் கோயில் (பள்ளிப்படை) எழுப்பும் வழக்கம் இருந்தது.

* கோயில்களில் திருமுறைகளை ஓதுபவர்கள் – ஒதுவார், பதிகம் பாடுவோர்

பாடல்களை பாடுவோர் – விண்ணப்பம் செய்வோர் என்றழைக்கப்பட்டனர்.

* சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் ஆகும்.

கோயில் அதிகாரிகள்:

1. கோயிரமர்

2. கோயில் கணக்கு (கோயில் கணக்காளர்) (வரவு,செலவு கணக்கு)

3. தேவ கன்னி (கடவுளின் பிரதிதிதி)

4. ஸ்ரீ வைஷ்ணவர்

5. கண்டேசர் (கோயில் மேலாளர்)

* முதலாம் ராஜராஜசோழனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ராஜராஜ நாடகம் என்ற நாடக நிகழ்ச்சி

தஞ்சை பெரிய கோவிலில் “சித்திரை திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா” ஆகிய விழாக்களில் நடத்தப்படுகின்றன.

* தஞ்சை பெரிய கோவிலில் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ள நடனநிலைகள் – நிருத்யம், கர்னம்.

*குடக்கூத்து, சாக்கை கூத்து போன்ற மரபு நடனங்கள் சிற்ப ஓவிய வடிவங்களாக “கீழப்பழர். திருவொற்றியூர்” கோயில்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

* அணையா விளக்குகளை பராமரிக்க காய்நடைகளை கொடையாக வழங்கியோர் மேய்ச்சல் தொழில் செய்வோர்.

* எண்ணெய் ஆட்டுபவர்கள் “சங்கர பாடியர்” என அழைக்கப்பட்டனர்.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் (கும்பகோணம்)

* **இரண்டாம் ராசராசனால் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கோயிலின் கருவரைச் சுவர்களில் பெரிய புராண நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வழங்கப்பட்டுள்ளன.

* இந்திரனின் யானை வழிபட்ட கடவுள்

* சுந்தரரின் கதையை சித்தரிக்கம் சுவரோவியமும் இங்குள்ளது.

*63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

* ராஜேந்திர சோழன் கல்யாணியை (சாளுக்கியர்) தோற்கடித்து அங்கிருந்து கொண்டு வந்த இரண்டு துவாரா பாலகர் சிலைகள் தற்போது தாராசுரம் கோயிலின் வாயிலில் உள்ளது.

1. சேக்கிழார் பெரியபுராணத்தை அரங்கேற்றிய இடம் – சிதம்பரம் நடராஜர் ஆலயம்

2. கம்பர் கம்பராமயணத்தை அரங்கேற்றிய இடம் – ஸ்ரீ ரங்கம் கோயில்

* கொடும்பாளூர் மூவர் கோயிலை கட்டியவர் இரண்டாம் பராந்தக சோழன் 

* திராவிடக்கலைப்பணியின் முழு வடிவம் பெற்றது.

* சோழர்கால கோயில் தனி சிறப்பு – விமானம்

* முற்காலச் சோழர்களின் கட்டிடக்கலையின் எளிமையான வேலைப்பாடு

(எ.கா)

1) நார்த்த மலை – விஜயாலய சோழிஸ்வரம்

2) கொடும்பாளுர் -ஐவர் கோவில்

3) திண்டிவனத்திற்கு அருகேயுள்ள தாதாபுரத்திலுள்ள கோயில்,

* முற்காலச் சோழர்களின் கோயில்கள் செம்பியன் மகாதேவ பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்.

* கோயில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் (மாடக்குழிகள்) இருந்ததால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம்.

* செம்பியன் மகாதேவி கால முற்காலகோவிலுக்கு எ.கா திரும்புறம்பியம் கோவில்.

சிற்பங்கள்:

* பிரபஞ்ச நடனமாடும் நடராஜர் (சிவன்), சிலை சோழர்கால செப்புச்சிலைகளில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

* முதலாம் ராஜராஜனது சிற்பம் கலைநயம் கொண்டது.

* சிவன், விஷ்ணு, பிரம்மா, எண்கரங்களுடன் காட்சி தரும் துர்க்கை கோயில் அழகு வாய்ந்தவை.

* கும்பகோணம் –  நாகேஸ்வரர் கோயிலில் உள்ள, நடராஜர் அர்த்த நாரீஸ்வரர் ஆலயம் உலோகச் சிலைக்கு எடுத்துக்காட்டு.

* பிரபஞ்ச நடனமாடும் நடராஜர் (சிவன்), சிலை சோழர்கால செப்புச்சிலைகளில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

* செப்புத் திருமேனிகளின் பொற்காலம் – – சோழர்காலம்

ஓவியங்கள்:

இக்கோயிலை சுற்றி சிவன் புலித்தோல் மீது அமர்ந்து கைலாயம் செல்லும் காட்சி மற்றும் சுந்தரர் வெள்ளை யானைமீது அமர்ந்து செல்லும் காட்சியும் உள்ளது

1. தஞ்சை

2. திருமயம்

3. காஞ்சி கைலாசநாதர் கோயில்

4. நார்த்த மலை விஷ்ணு கோயில்

இசை:

இன்றைய “கர்நாடக இசை” சோழர்காலத்தில் அடித்தளமிட்டது.

* “பரத நாட்டியம்” எனும் ஆடற்கலை தோன்றியது.

* இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் -திருத்தாண்டகம்.

* நடனக்கலைக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் –  மாணிக்கம், காவிதி

* நாட்டியக் கலையில் சிறந்த பெண்களுக்கு  தலைக்கோலி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

* கோயிலில் நடனம் பயிற்றுவித்தவன் – நிருத்தப்பேரரையன்

உத்திரமேரூர் கல்வெட்டு (காஞ்சிபுரம்)

* முதலாம் பராந்தக சோழன் காலத்தது.

* குடவோலை தேர்தல் பற்றி கூறும் கல்வெட்டு.

* கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி உள்ளது.

உறுப்பினராவதற்கான தகுதிகள்:

* மொத்தம் 30 குடும்பங்கள், அதில் ஒவ்வொரு குடுப்பத்திற்கும் ஒரு உறுப்பினர். (ஆண்கள் மட்டும்)

* போட்டியிடுபவர் 35-70 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

* கால்வேலி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும்.

* சொந்த நிலத்தில் வீடு மற்றும் வேதங்கள், புராணங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது. அவசியம்.

* ஒருமுறை உறுப்பினராய் இருந்தோர் அடுத்த 5 ஆண்டுக்குப் பிறகே உறுப்பினராக முடியும்.

கிராம சபையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட ஆறு வாரியங்கள் செயல்பட்டன.

கல்வி:

* சோழர்கள் சமஸ்கிருத கல்விக்கு ஆதரவு அளித்தனர்.

* முதலாம் ராசேந்திர சோழன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணயிரத்தில் (விழுப்புரம் மாவட்டம்) வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார்

* இக்கல்லூரியில் 340 மாணவர்கள், 14 ஆசிரியர்கள் பணியாற்றினார்.

எண்ணாயிரம் வேதக் கல்லூரியின் இருப்பிடம் ராசராசன் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்படுகிறது.

* இரு சமஸ்கிருத கல்லூரிகள் 

திருபுவனம் (புதுச்சேரி 1048- இல் திருமுக்கூடல் (செங்கல்பட்டு) 1067 – ல் சோழர்காலத்தில் கட்டப்பட்டது.

இலக்கியம்:

1. ஒளவையார்

– ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி.முதுரை

2. சேக்கிழார் – பெரியபுராணம்

3. கம்பர் – கம்பராமாயணம்

4. திருத்தக்கதேவர் – சீவக சிந்தாமணி

5. ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப் பரணி ( முதலாம் குலோத்தங்கனின் கலிங்க படையெடுப்பு பற்றியது)

6. ஒட்டக்கூத்தர் – 

மூவருக குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்,

தக்கயாக்கப்ரணி

7. புகழேந்திபுலவர் – நளவெண்பா

8. கல்லாடனார் – கல்லாடம் எனும் தமிழ் இலக்கண நூல்

9. அமிர்தசாகரர் (சமணம்) – யாப்பெருங்கலம்

10. பவணந்தி முனிவர் – நன்னூல்

11. புத்தமித்திரர் – வீரசோழியம்

*கச்சியப்ப சிவாச்சியார்– கந்தபுராணம்

* அருத் தந்தி சிவாச்சாரியார் – சிவஞான சித்தியார்.

*ஜெயதேவர் – கீதாகோவிந்தம்

* உமாபதி சிவாச்சாரியரின் 8 நூல்கள்

* வாசீக முனிவர் – ஞானாமிர்தம்

* திருவிய்யலூர் உய்யவந்த தேவநியனார் – திருவுந்தியார்

வணிகம்:

* சோழர்காலத்தில் வணிகம் தலைத்தோங்கியது.

* இக்காலத்தில் செயல்பட்ட இரு வணிகக் குழுக்கள்

1. அஞ்சு வண்ணத்தார் – வெளிநாட்டு வணிகர்

2. மணிகிராமத்தார் – உள்நாட்டு வணிகர்

* பிற்காலத்தில் இந்த இரு வணிக குழுக்களும் ஒன்றாகி ஐநூற்றுவர், திசைஆயிரத்து ஐநூற்றுவர், வளஞ்சியர் போன்ற பெயர்களில் இயங்கினர்.

* இவர்களின் தலைமை வணிகக்குழு செயல்பட்ட இடம் – ஐஹோல்  (கர்நாடகா)

* வளஞ்சியர் குழு வெட்டிய, “ஐநூற்றுவப் பேரேரி” என்ற பாசன ஏரி புதுக்கோட்டையில் (முனைச்சந்தை) உள்ளது.

சோழர் கால விளைவுகள்:

* கி.பி 850 முதல் கி.பி 1279 வரை சுமார் 430 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் காலம் பலதுறைகளில் வளர்ச்சிப் பெற்றது.

நன்றி வணக்கம்…

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top