- பொஆ 300 முதல் 700 வரையியான காலக்கட்டத்தில் அரசு அமைப்பில் ஒரு செவ்வியல் முறை தோன்றி பலபகுதிகளில் பேரரசர் ஆட்சி உருவாக வழிவகுத்தது.
- மௌரியருக்கு பின்னர் பல சிறிய அதோன்றி மறைந்தன.
ஆனாலும் குப்த அரசுதான் துணைக் கண்டத்தின் பெரிய சக்தியாக உருவாகி பெரும்பகுதியை அரசியல் ரீதியாக ஒன்றிணைந்தது.
- இந்தக் காலக்கட்டத்தில் சமஸ்கிருதத்தில் பல பெரிய படைப்புகள் தோன்றின.
- குப்தர்கள் காலம் “இந்தியாவின் பொற்காலம்” ஆகும்.
இவர்களின் காலத்தை பண்பாட்டு மறுமலர்ச்சி காலம், செவ்வியல் கலைகளின் காலம் என்றும் அழைப்பர்.
- குப்த பேரரசின் கலைத்தை விவரிக்க ‘செவ்வியல்” என்னும் வார்த்தையை பயன்படுத்தியவர் பர்ட்டன் ஸ்டெய்ன்
குப்தர்கள் பற்றி அறிய உதம் மூன்று வகையான சான்றுகள்
- இலக்கியச் சான்றுகள்:
1) காளிதாசரின் நூங்கள்
2) விசாகத்தர் எழுதிய தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம்.
3 ) நாரதரின் – நீதி சாஸ்திரம்.
4) காமந்தகரி – நீதிசாரம் என்ற கருமசாத்திரம் (பொ.ஆ. 400 சார்ந்தது. இந்நூல் அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டது)
5)பாணர் – ஹர்ஷ சரிதம் (அரசரின் வாழ்க்கை ரைவாற்றை கூறும்முதல் நூல்)
6) ஹர்ஷர் – ஸ்ரீ நாகநந்தா, பிரியதர்ஷிகா, ரத்னா வனி
7) பராலி – கிருதார் ஜினியம்
8) சூத்ரகர் – மிருஷ் கடிகம் (நகைச் சுவைக்கும், சோகத்திற்கும் பெயர் பெற்றது)
9) விஷ்ணுசர்மா – பஞ்ச தந்திர கதைகள்.
10) தண்டின் –
காவிய தர்ஷா, தாச குமார சரிதம், அவந்தி
சுந்தரி கதாசாரம். தண்டியலங்காரம்
11) அமர சிம்ஹர்
(புத்த அறிஞர்) – அமர கோசம்
12)வாக்பதர்,சரகர். அஸ்ருதர் மருத்துவ மும்மணிகள்
13)வாகிபதர் – அஷ்டாங்க சங்கிரகம் (மருத்துவம்)
14]யுவான் சுவிஸ் – சி.யூ.கி
15)பாகியான் – போகோகி சீனா
- . கல்வெட்டுச் சான்றுகள்:
- சமுத்திர குப்தரின் – அங்காபாத் தூண் கல்வெட்டு
- மொரொலி இரும்புத் தூண், உதயகிரி குகைக் கல்வெட்டு, ராஞ்சி, மதுரா பாறைக் கல்வெட்டு -1- ம் சந்திர குப்தர்
- ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு
- கத்வ பாறைக் கல்வெட்டு
- மதுபான் செப்புப் பட்டயம் (பஞ்சாப்)
- சோன்பட் செப்புப் பட்டயம்
- நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு
- . நாணயச் சான்றுகள்:
- குப்தர்களின் பொற்காசுகள் “தினாரா என்றழைக்கப்படுகிறது.
- நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் – சமுத்திர குப்தர்
- வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் – ம் சந்திர குப்தர்.
குப்த அரசர்கள்:
- குப்த அரசை தோற்றுவித்தவர் ஸ்ரீ குப்தர் (பொஆ. 240 முதல் 280வரை)
இவர் தற்போதைய கோர் வங்காள பகுதிகளை ஆட்சி செய்தார்.
- குப்த நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற அரசர்வரஆவார். இவருக்கு பின் கடோத்கஜர் (பொ.ஆ 280 – 319) அரியணை ஏறினார். இவர்கள் இருவரும் கல்வெட்டுகளில் “மகாராஜா” என்றே அழைக்கப்பட்டனர்.
முதலாம் சந்திர குப்தர் (கி.பி. 319 – 335)
- குப்த பேரரசின் முதல் பேரரசர். குப்தயுகம் என்ற காலக்கணக்கீடு 320 இலிருந்து தொடங்கப்படுகிறது.
- இவர் வலிமை மிருந்த “லிச்சாலி” அரச குடும்பத்தைச் சார்ந்த குமாரதேவியை மணந்தார்.
- லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்றாகும். இப்பகுதி கங்கைக்கும் நேபாளத்திற்கும் இடைப்பட்டதம் இருந்தது.
- இவர் பிரியாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதம். கைப்பற்றியதைப் பற்றி கூறும் கல்வெட்டு அலகாபாத் தூண் கல்வெட்டு
- கலிங்கம் வழியாக தெற்கே பலர்க்கு எதிரான படையெடுப்பை நடத்தினார்.
- மகதம். அலகாபாத் அவ ஆகியவற்றை குப்தர்களின் பகுதிகளாக புராணங்கள் குறிப்பிடுகின்றன
- இவர் வெளியிட்ட தங்கநாணயங்களில் குமாரதேவியின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன பெற்றுள்ளது. அந்நாணயங்களில் விச்சாவையா என்ற வாசகமும் இடம்
- 1500 ஆண்டு துருப்பிடிக்காமல் உள்ள “மெகரொலி இருப்புத்தூண். இவரின் சாதனைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.
- மகாராஜர் மகாராஜாதிராஜர், அதிரா என்ற பட்டத்தை பெற்றார்
படையெடுப்புகள்:
- தென்னிந்திய படையெடுப்புகள் 12 (பல்லவநாட்டு அரசன் தோற்கடித்தார்) விஷ்ணு கோபனை
- வட இந்திய படையெடுப்புகள் 9
- டில்லி (ம) மேற்கு உத்திரபிரதேசத்தின் அரசர்களையும் வென்றார்
- சாகர்களை வென்று உஜ்ஜயினையை கைப்பற்றினார்
- இவரது பேரரசு வங்காளம் முதல் சிந்துநதி வரை, இமயமலை முதல் விந்திய மலை பரவி இருந்தது.
- இவருக்கு தெய்வ புத்திர சாகானுகளும் (குஷணபட்டம்) நப்பம் கட்டினர்
- சமுத்திர குப்தரின் அனைக்காப் புலவர் “ஹரிசேனர்
- “அலகாபாத் தூண் கல்வெட்டு”ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி (பிரசஸ்தி) அத்தூணில் உள்ளது.
சமுத்திர குப்தரின் ஆட்சியை விவரிக்கும் கல்வெட்டு ஆகும்.
இந்த கல்வெட்டு இவரை புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என அழைக்கிறது. இக்கல்வெட்டு 33 வரிகளில் நாகரிக வடிவத்தில் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
- (பிராஸ்தி/மெய்கீர்த்தி) பிராஸ்தி என்பது சமஸ்கிருத சொல் இதன் பொருள் ஒருவரைப் பாராட்டி புகழ்வதாகும்.
- கவிதை பிரியரும், இசைபிரியரும் என்பதால் *கவிராஜா” என்னும் பட்டம் பெற்றார்.
- இவர் வெளியிட்ட தங்கங்களில் “வீணைவாசிப்பது” போன்ற சின்னம் இடம் பெற்றிருக்கும்
சமயம்
- புத்த சமய அறிஞர் வகபந்துவை ஆதரித்தார்.
- இவரின் சமகால இலங்கை அரசன் ஸ்ரீமேகவர்மன் எனும் பௌத்த அறிஞர் “சுயாவில்” ஒரு பௌத்த மடாலயம் கட்ட சமுத்திர குப்தரிடம் அனுமதி கேட்டார்
- சமுத்திர குப்தர்’விஷ்ணு பக்தராவார்.
- போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாக நடத்தப்படும் சடங்கான ‘குதிரைப்பலியிடும் (அசுவமேதயாகம்) வேள்வியை மீண்டும் தொடங்கினார்
இரண்டாம் சந்திரகுப்தர் கி.பி 380-415
- சமுத்திர குப்தரின் மகன்
- விசாகத்தத்தர் எழுதிய ‘தேவி சந்திர குப்தம்” என்ற நூல் இராமகுப்தரை கொன்று 2ம் சந்திர குப்தர் அரியணை ஏறிணர் எனகூறுகிறது.
இவரை “விக்கிரமாதித்யர் (வீரத்தின் சூரியன்) என்று அழைப்பர்.
- சரசு அரசன் “3-ம் ருத்ர சிம்ஹாவை வென்றதால் சாகாரி என்ற பட்டம் பெற்றார்.
இவர் காலத்தில் தலைநகரம் “பாடலிபுத்திரம் ஆகும். குதுப்மினாருக்கு அருகேயுள்ள மெகரெளலி இரும்புத்தூண் விக்கிரமாதித்யனால் உருவாக்கப்பட்டது.
- இவரின் ஆட்சிக் காலத்தில் வருகை புரிந்த சீன பௌத்த அறிஞர் – பாகியான். தென்னிந்திய அரசுகளோடு நட்புறவு பேணினார்.
வாகடக இளவரசருக்கு தன் மகள் பிரபாவதியை திருமணம் செய்து கொடுத்தார்.
- 2-ம் சந்திரகுப்தர் *வெள்ளி நாணயங்கள் வெளியிட்ட முதல் அரசர் இவரின் ஆட்சியில்தான் பேரரசு உச்சத்தை எட்டியது.
பாகியான் (கி.பி. 399 414)
- இவரின் பயணக் குறிப்புகள் போகோகி” எனப்படுகிறது.
அதில் குப்தர் காலத்து மக்களின் சமூக பொருளாதார மத ஒழுக்க நிலைகள் பற்றி கூறியுள்ளார்.
- இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். 6 ஆண்டுகள் குப்தபேரசிலும், 3.ஆண்டுகள் பாடலிபுத்திரத்தில் இருந்தார்.
- இந்தியாவில் “பெலாவர் காசி, கயா போன்ற இடங்களை பார்வையிட்டார்.
- பாகியான மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என் கூறுகிறார்.
- கடுமையான தண்டனைகள் இருந்தன. ஆனால் மரணதண்டனை வழங்கபடவில்லை.
- கயா பாழடைந்திருந்தது. கபிலவஸ்து காடாகியிருந்தது ஆனால் பாடாலிபுத்திரத்தில் மக்கள் செழிப்போடும் செல்வத்தோடும் வாழ்ந்தனர் என்றார்.
- கங்கைச் சமவெளியை “பிராமணர்களின் பூமி” என்றார்.
- மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் வலது கை துண்டிக்கப்பட்டது.
- நவரத்தினங்கள் எனும் 9 நபர்களை கொண்ட அமைச்சரவை 1 – ம் சந்திர குப்தரின் அவையை அலங்கரித்தன.
நவரத்தினங்கள்:
1) தன்வந்திரி – மருத்துவர்
2) காளிதாசர் – சமஸ்கிருத புலவர்
3) ஹரிசேனர் – சமஸ்கிருத புலவர்
4) அமர சிம்ஹர் அகராதியியல் ஆசிரியர்
5) கஜபானகர் – சோதிடர்
6) சன்கு – கட்டிடக்கலை நிபுனர்
7) வராச்சி – இலக்கண ஆசிரியர் (ம) சமஸ்கிருத புலவர்
8) வராக மிகிரர் -வானியல் அறிஞர்
9) விட்டல் பட்டர் – மாய வித்தைக் காரர்.
- 2-ம் சந்திர குப்தரின் இரு மனைவிகள் குபேரநாகா, துருபசுவாமினி ஆவர்.
- 2 -ம் சந்திர குப்தர் காலத்தில் “பஞ்ச மண்டலி” என்ற குழுமத்தை பற்றிய குறிப்புகள் சாஞ்சி கல்வெட்டுகளில் காணலாம்.
- இவர் காலத்தில் ரோமானிய பேரரசின் வணிகத்தால், வளம் பெருகியது.
II-ம் சந்திர குப்தரின் பட்டப்பெயர்கள்:
- விக்கிர மாதியர்
- விக்கிரம தேவராஜர்
- தேவ குப்தர்
- தேவஸ்ரீ
- சிம்ம சந்திரர்
- நரேந்திர சிம்மர்
- நரேந்திர சந்திரர்
குமார குப்தர் (கி.பி. 415 – 455)
- 2-ம் சந்திர குப்தரின் மகன் ஆவார்.
- குமார குப்தர் சக்கராதித்யர் (ம) மகேந்திர ஆதித்யா” என்று அழைக்கப்பட்டார்.
- நாளந்த பல்கலைக் கழகம் (மற்றாவிகா) கட்டியவர் இவரே ஆவார்
- குமார குப்தருக்கு பின் அவரின் மகன் ஸ்கந்த குப்தர்குதே வம்சத்தின் கடைசி பேரரசரானர்
ஸ்கந்த குப்தர் பொ.ஆ. 467 -ல் இறப்பு
- ஸ்கந்த குப்தர் காலத்தில் ஹீனர்களின் படையெடுப்பை சந்திக்க நேரிட்டது. ஹீனர்களின் படையெடுப்பால் குப்த அரசு வீழ்ச்சியானது.
பாலதீத்யர்
- மிகச் சிறந்த குப்த பேரரசர்களில் கடைசி பேரரசரான் பாவதித்யர் முதலாம் நரசிம்ம குப்தர்” என்ற பெயரில் அரியணை ஏறினார்.
- மீனர்களின் தலைவரண மிகிரகுவருக்கு இ கப்பம் கட்டி வந்தார்.
- இவர் பெளந்தத்தை பின்பற்றினார்.
மிகிரருவருக்கு பௌத்த மதத்தின் மீது வெறுப்பை காட்டினார் தன் காரணமாக மிகிரகுலரை கைதுசெய்து சிறை வைத்தார்.
ஆனாலும் மிகிரர் பலத்தியரை வஞ்சகமாக கொலை செய்தார்.
- குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணு குப்தர்.
நாளந்தா பல்கலைக் கழகம்
- முதலாய் குமார குப்தரால் கட்டப்பட்டது.
- பாட்னாவிற்கு தென்மேற்கு சுமார் 95 km தூரத்தில் பிகார் மாநிலம் நகரத்திற்கு அருகே உள்ளது.
- மிகப்பெரிய பௌத்த மடாலயமாகும். (மஹாயான பல்கலைக் கழகம்)
- பொ.ஆ 5-ம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 1200 வரை புகழ்பெற்ற கல்விச் சாலையாக இருந்தது
- இதில் 8 மகாபாடக சாலைகளும், 3 நூலகங்களும் இருந்தன.
- யுனெஸ்கோ 2016ஜூலை 15ல் பாதுகாக்கப்படும் இடங்களில் ஒன்றாக அறிவித்தது.
- நாளந்தர் (மஹாவிஹாரா) என்ற சொல்லுக்கு அறிவை வளர்ப்பவர்” என்று பொருள்.
- காஞ்சிபுரத்தைச் சார்ந்த “தர்மபாலர்* நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக பணியாற்றினர்.
- 3000 மாணவர்கள் தங்கி படித்தனர்- இட்சிங்
- ஹர்ஷரது காலத்தில் ‘புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக * வளர்ச்சி அடைந்தது.
- விக்கிரமாசீலா பல்கலைக் கழகத்தை கட்டியவர் தருமபாலர்
- நாளந்தா (ம) விக்கிரம சீலா பல்கலைக் கழகங்களை இடித்து தரைமட்டமாக்கியவர் “முகமது பின் பக்தியார் கில்ஜி” (குத்புதீன் ஐபக் – இன் படைத் தளபதி)
குப்தர் கால நிர்வாகங்கள்
அரசர்:
- தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினார்.
குப்த அரசர்களின் பட்டங்கள்:
- மகாராஜாதி ராஜா
- பரம – பட்டராக
- பரம -பரமேஷ்வரா
- பரம- தைவத (கடவுளின் பரமபக்தன்)
- பரம – பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரம பக்தன்) போன்ற அடைமொழியால் கடவுளோடும் தம்மை இணைத்துக் கொண்டனர்.
அதிகாரிகள்:
- அமர்த்தியாக்களில் முக முக்கியமான பதவி குமாரமாத்யா, இவர் இளவரசருக்கு இணையான தகுதிபெற்றவர்.
- தனக்கென தனியாக அலுவலகம் (அதிகரணா) உள்ள வருவாய்த்துறை உயரதிகாரி குமாரமாத்யா
- குமார மாத்யா என்ற சொல் ஆறு ‘வைசாலி” முத்திரைகளில் இடம் பெற்றுள்ளன.
- மகாதண்டநாயகர் (உயர் அதிகாரி)துருவபூதியின் புதல்வர் – ஹரிசேனர்.
ஹிரிசேனரின் பட்டங்கள்:
1) குமார மாத்யா
2) சந்தி விக்ரஹிகா
3) மஹாதண்ட நாயக
அமைச்சர்கள்:
- “சபா” என்ற அமைச்சர் குழுப் பற்றி கூறும் கல்வெட்டு அலகாபாத் தூண் கல்வெட்டு
- இக்கல்வெட்டில் 3 மஹாதண்ட நாயகர்கள் குறித்து கூறுகிறது.
1) மஹாசந்தி விக்ரஹா
அமைச்சர்களில் உயர்நிலையில் (அ) (அமைதி (ம) போருக்கான அமைச்சர்) இருந்துள்ளார்.
2) தண்டநாயக மகாதண்டநாயக்
-நீதித்துறை, இராணுவம் ஆகியவற்றிற்கு பொறுப்பு வகித்தவர்.
3) மஹா அஸ்வபதி
– குதிரைப் படைத் தலைவர்
பேரரசின் பிரிவுகள்:
- பேரரசு -> தேசம் (அ) புத்தி எனப்படும் மாநிலங்கள் மாவட்டங்கள் (விஷயபதி) கிராமம்
- மாநிலங்களை நிர்வகித்தோர் உபாரிகா” எனும் ஆளுநர்கள்
- 3 உபாரிகாக்களுக்கு “மகாராஜா” என்ற பட்டம் இருந்ததை பற்றி கூறும் செப்பேடு “தாமோதர் பூர் செப்பேடு” (புத்த குப்தர்)
- குப்த ஆண்டு கி.பி. 165 என்று தேதியிடப்பட்டுள்ள “புத்த குப்தரின் ஈரான் தூண் கல்வெட்டில் காளிந்தி (ம) தர்மதை நதிகளுக்கிடையிலான நிலங்களை ஆட்சி செய்த மகாராஜா சுரஷ் மிசந்திரர்” என்பவரை குறிப்பிடுகிறது.
- லோகபாலா மாநில ஆளுநரைக் குறிப்பதாகும்.
நிர்வாக அலகுகள்:
- மாவட்டத்திற்கு கீழ் – விதி, பூமி, பதகா, போ என்று பலவிதமான நிர்வாக அலகுகள் இருந்தன.
- கிராம அதிகாரிகள் கிராமிகா, கிராம்அதியஷா
- ஆயுக்தா. விதி மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
- மஹாதாரா என்பவர் தலைமையிலான எட்டு உறுப்பினர் கொண்ட குழு (அஷ்டகுல – அதிகாரண) பற்றி கூறும் கல்வெட்டு புத்த குப்தரின் “தாமோதர்பூர் செப்பேடு” என்பதாகும்.
- மஹாதாரா – கிராமத் தலைவர். குடும்பத் தலைவர், கிராம பெரியவர்.
- பஞ்ச மண்டலி (குழும நிறுவனம்) பற்றி குறிப்புகள் சாஞ்சி கல்வெட்டில் உள்ளது (11-ம் சந்திரகுப்தர் காலத்தவைகளில்)
மதம்:
- வேதங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.
- சமுத்திரகுப்தரும், குமாரகுப்தரும் குதிரை பலியிடும் (அஸ்வமேதயாகம்) வேள்விகளை நடத்தினர்.
- குப்தர் காலத்தில் உருவ வழிபாடு தோன்றி சைவ, வைணவ இரண்டு பிரிவுகள் தோன்றின.
- பாகவதம் என்ற பெயரில் மஹாவிஷ்ணு வழிபாடு வட்சுமிம் வழிபாடும் தோன்றின.
- குப்த பேரரசில் இந்து சமயம் இந்தியாவிலிருந்து பாலித்தீவிற்கும் பரவியது.
- கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இந்திய பண்பாடு சிறப்புற்று இருந்ததாக சீனப்பயணி இட்சிங் குறிப்பிடுகிறார்.
இராணுவம்:
- முத்திரைகளிலும், கல்வெட்டுகளிலும் உள்ள ராணுவப் பதவிகளின் பெயர்கள் பாவதிகிரிதா-காலாட்படையின் தளபதி மகாபாலதிகிரிதா – குதிரைப்படையின் தளபதி மஹாபிரதிஹரா-அரண்மனைக் காவலர்கள் தலைவர் கத்யதபகிதா அரச சமையலரை கண்காணிப்பாளர்
- ஒரு வைசாலி முத்திரையில் ராணுவக் கிடங்கின் அலுவலகமான “ரணபந்தகர் அதிகாரணாவைக்” குறிப்பிடுகிறது.
- தண்டபாஷிகா என்பது மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகம்.
- நிர்வாக அமைப்பின் மேல்மட்டத்தில் “அமாத்தியா, சச்சிவர் ஆகியோர் இருந்தார்கள்.
- தூதகர் என்ற ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்புக் காணப்பட்டது.
- சேனாதிபதி என்ற சொல் குப்த கல்வெட்டுகளில் காணப்படவில்லை.
பொருளாதாரம்:
- குப்தர்கள் காலத்தில் “காமந்தகர்” எழுதிய ‘நீதிசாரா” என்ற நூல், மௌரியர் காலத்து நூலாள அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும்.
- நீதிசாரா என்ற நூல் ‘குப்தர்கால அரசு கருவூலத்தின் முக்கிய வருவாய்கள் மற்றும் பல்வேறு மூலவளங்கள் பற்றி குறிப்பிடுகிறது.
- அரசு ஆவணங்களை “அக்ஷபதலதிக்கிருதா” என்ற அதிகாரி பராமரித்தார்.
- “ரணய வெஷ்தி” என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள்.
வேளாண்மையும் வேளாண் அமைப்பும்:
- குப்தர் காலத்தில் நெல் கோதுமை, பார்லி, கடலை, தானியம், பயிறு, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடப்பட்டன.
- பழமரங்கள் வளர்ப்பது குறித்து ‘வராக மிகிரர்” விரிவான அறிவுரைகளைத் தந்துள்ளனர்.
- “பஹார்பூர் செப்பேடு” அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் குறிப்பிடுகிறது.
இச்செப்பேடுகளின் படி “உஸ்தபாலர்” என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தர்
- மிளகு எலக்காய்க்குதென்பகுதி புகழ்பெற்றதை காளிதாசரின் மூலம் அறியலாம்.
குப்தர்காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்:
1 ஷேத்ரா – பயிரிட கூடிய நிலம்
2. கிலா – தரிசுநிலம் சமண பௌத்த சங்கங்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
3 அப்ரகதா – காடு (அ) தரிசு நிலம்
4. வஸ்தி – குடியிருக்கத் தகுந்த நிலம்
5. கபத் சரகா – மேய்ச்சல் நிலம்.
பல்வேறு விதமான நிலக்குத்தகை முறை:
1) நிவி தர்மா – “அறக்கட்டளை” போன்ற அமைப்பின் மூலம் நிலமானியம் இம்முறை வடக்கு, மத்திய இந்தியா (ம) வங்கத்தில் நிலவியது.
2) நிவிதரமஅக்சயனா – நிரந்தரமான அறக்கட்டனை பெற்றவர், அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3) அப்ரதா தர்மா – வருவாயை பயன்படுத்தலாம், ஆனால் அதைப் பிறருக்குத் தானம் செய்ய முடியாது. நிர்வாக உரிமையும் இல்லை
4) யூமி சித்ராயண – தரிசு நிலத்தை முதன்முதலாகர் சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை. குத்தகையியிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. நிலத்திற்கு
ஏனைய நிலக்கொடைகள்:
- அக்ரஹார மனியம் – பிராமணர்களுக்குத் தரப்படுவது. நிரந்தரமானது, பரம்பரையாக வரக்கூடியது. வரி கிடையாது.
- தேவக்கிரஹார மாணியம் – கோயில் மராமத்து வழிபாடு ஆகிய பணிகளுக்கான பிராமணர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் நிலமானியம்
- சமயச் சார்பற்ற மானியம் – குப்தர்களுக்குக் கீழிருந்த நிலப் பிரபுக்களுக்குத் தரப்பட்ட மானியம்
பாசனம்:
- நாரதஸ்மிருதி என்ற நூல் இருவகை அணைக்கரைகள் பற்றி குறிப்பிடுகிறது. அனை
1. வயங்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த அணையின் களர பந்தியா
2 பாசனத்திற்கு உதவிய’கரா’
தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜவநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார்.
3. குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சண ஏபி மிகவும் புகழ்பெற்றதாகும்
பல்வேறு வகை வரிகளின் பட்டியல்:
1. பாகா – விளைச்சலில் 1/6 பங்கு பெறும் வரி
2. போகா – அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்கவேண்டிய பழங்கள், விறகு, பூக்கள் போன்றவை.
3. கார – கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒருவரி (இது வருடாந்திர நிலவரியின் ஒரு பகுதியல்ல)
4. பலி – இது ஒரு ஒடுக்குமுறை வரி (ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரி, பின்னர் கட்டாயமாக்கப்பட்டது)
5. உதியங்கா – இது கூடுதல் வரிதான். காவல் வரி, தீர்வரியாக இருக்கலாம்.
6 . உபரிகரா – இதுவும் ஒரு கூடுதல் வரிதான்.
7. ஹிரண்யா – தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி இது சில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை அரசின் பங்கு பொருளாக அளிப்பதாகும்.
8. வாத – பூதா – காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட வரி
9. ஹலிவகரா – கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்ட வேண்டிய வரி
10. சுல்கா – சுங்க வரி, நுழைவு வரி (வணிகர்களுக்கு)
11. கிளிப்தா. உபகிளிப்தா – நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி.
சுரங்கமும் உலேகவியலும்:
- குப்தர் காலத்தில் மிகவும் செழிந்த தொழில்கள் சுரங்கத் தொழில், உலோகவியல் ஆகியன ஆகும்.
- சுரங்கங்கள் இருந்தது குறித்து அமரசிம்மர், வராஹமிகிரர், காளிதாசர் ஆகியோர். அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.
- இக்காலக் கட்டத்தில் கோரிலிருந்து இரும்பு படிவுகள் ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகள் ஆகியன் பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன.
வணிகமும் வர்த்தகமும்:
- வணிகர்களில்ரண்டு வகை இருத்தனர்
- ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் – “சிரோஸ்தி”
- சார்த்த வா எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றிப் பல்வேறு இடங்களுக்கு சென்று வாணிகம் செய்தவர்கள்.
- மண்டசோர் கல்வெட்டு சான்றின் படி வணிகக் குழுக்கள் வங்கிகளின் பணியை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது.
- வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருத்தது.
- வணிக குழுக்களின் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து விவரிக்கும் நூல்கள் நாரதருஸ்மிருதி, பிகஸ்பதி. ஸ்மிருதி
- வணிகக் குழு உறுப்பினர் தகராறுகளுக்கு வணிகக்குழுக்கள் தீர்ப்பு வழங்கியது குறித்து பிருகஸ்பதி, ஸ்மிருதி கூறுகிறது.
- குப்தர்காலத்தில் மேற்கு கரையில் “கல்யாண், கால் – போர்ட் மங்களூர், மலபார் ஆகிய வணிகத்துறை முகங்களும், மலபார், மங்களூர், சலோபடாண, நயோபடான, பந்தேபடானா ஆகிய வணிகச் சந்தைகளும் இயங்கியுள்ளன.
- வங்கத்தில் “தாமிரலிப்தி’ கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாற்றியான் குறிப்பிடுகிறார்.
- பாஹியான், இத்தியர் சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர்கொள்ள நேரும் இடர்கள் குறித்து குறிப்பிடுகிறார்.
- குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களையும் குறைந்த எண்ணிக்கையில் வெள்ளி, செம்பு நாணயங்களையும் வெளியிட்டனர்.
சமூகம்:
நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ணாசிரம் முறையில் அமைந்திருந்தது. பெண்கள் தந்தை. கணவன் அல்லது மூத்த மகளின் பாதுகாப்பில் இருத்தல் வேண்டும்.
- பலதாரமணம் பரவலாக இருந்தது.
- உடன் கட்டை (சதி) ஏறும் எழுக்கம் பின்பற்றப்பட்டது
- பல வகையான அடிமை முறைகள் இருந்தது.
பண்பாட்டு மலர்ச்சி:
- குப்தர் காயத்தில் நகரம் “திராவிடம் பாணியிலான கலைகள் வளர்த்தன இக்கால் கோயில்கள் 4 வகையான மண்டபங்களைக் கொண்டுள்ளன.
- இந்தியாவில் ஆரம்பகாலத்தில் செங்கற்களால் ஆன கோயில்களை கட்டியவர்கள் குப்தர்கள்.
- குப்தர் காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான கோட்டை- கல்யாண்
குடைவரைக் கோயில்கள்:
1) அருந்தா, எல்வேரா (மகாராஷ்டிரா)
2) பாக் (மத்திய பிரதேசம்)
3) உதயகிரி (ஒடிஷா) குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் கோயில்கள் ஆகும்.
கட்டுமானக் கோயில்கள் பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளன.
- கட்டுமானக் கோயில்களை முதன் முதலில் கட்டியவர்கள் குப்தர்களே திராவிடக்கலைகளை கொண்டுள்ளன
1) தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
2) விமானத்துடன் (இரண்டாவது மாடி) கூடிய தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
3) வளைகோட்டு கோபுரம் (சிகரம்) கொண்ட கோயில்கள்
4) செவ்வகக் கோயில்கள்
5) வட்ட வடிவக் கோயில்கள்
- இரண்டாவது குழுவைச் சேர்ந்த கோயில்கள் திராவிடமுறையின் பல கூறுகளைக் கொண்டவையாக உள்ளன.
கருவரைக்கு மேல் சிகரம் அமைக்கும் புதுமை மூன்றாவது பானியின் சிறப்பு ஆகும்.
கட்டுமானக் கோயில்கள்
- தியோகர் – தசாவதாரக் கோயில் ( மகாவிஷ்ணுவின் 10 அவதாரம்)
- தியோகர் – சாந்தி நாதர் என்ற சமணத்துறவிக்கு கோயில் உள்ளது.
- பூயூமரா என்ற இடத்திலும் ‘நச்சனக் குதாரோ’ என்ற இடத்திலும் நகரப்பாணியில் கோயில்கள் கட்டப்பட்டன.
- கான்பூர் அருகே “பிதார்கள்” என்ற இடத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் குப்தர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது. E
ஸ்தூபிகள்
4. மிகச் சிறந்த ஸ்தூபிகள்
1) சமத் (உத்திரபிரதேசம்)
2) ரத்தினகிரி (ஒடிசா)
3) மிர்பூர்கான் (சித்து). ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
கல் சிற்பங்கள்
- கல் சிற்பக் கலைக்குச் சிறந்த சான்று சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை
- புராணச் சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் வராஹ அவதாரச் சிலை
உலோகச் சிற்பங்கள்:
- நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை.
- சுல்தான் கஞ்ச் (கோர் ஒட்டிய பகுதி) என்னும் இடத்திலுள்ள 7 அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம்.
ஓவியங்கள்:
- பொதுவாகவே குப்தர் காலத்தில் சிற்பக் கலையை விட ஓவியக் கலையில் பலரும் ஈடுபட்டனர்.
- குப்தர்கால சுவரோவியங்கள் அஜந்தா, பாக் பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
- அஜந்தாவின் சுவரோவியங்கள் ஃபிரெஸ்கோ” எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்
ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும் போதே வரையப்படுபவை.
- மத்திய தேர ஓவியப் பள்ளி முறையின் தலைசிறந்த ஓவியங்கள் *அஜந்தா (ம) பாக்கில் காணப்படுகின்றன
சுடுமண் சிற்பங்களும், மட்பாண்டக் கலையும்:
- அச்சிசத்திரா,ராய்கார். ஹிஸ்தினாபூர். பஷார் ஆகிய இடங்களில் குப்தர் கால மட்பாண்டங்கள் கிடைத்துள்ள
- இக்கால மட்பாண்டங்கள் சிவப்பு மட்பாண்டங்கள் ஆகும்.
சமஸ்கிருத இலக்கியம்:
- குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினார்கள்.
- சமஸ்கிருதம் கடவுளின் மொழி.
சமஸ்கிருத இலக்கணம்:
1) பாணினி அஷ்டதியாமி
2) பதஞ்சலி – மஹாபாஷ்யா
இந்த இரண்டு நூல்களில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது.
3)அமரசிம்மர் -அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியத்தை தொகுத்தார்.
4) சந்திரகோமியர் (வங்கத்தை சேர்ந்த பௌத்த அறிஞர்) சத்திரவியாகரணம் (இலக்கண நூல்}
பௌத்த இலக்கியம்.
- தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன. பின்னர் சமஸ்கிருத கலப்பு இருந்தன.
- ஆரிய தேவர்ஆய அசங்கா ஆகியோர் குப்தர்கால குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவர் புத்த கோசர் (இலங்கை) புகழ்பெற்ற புத்த சமய அறிஞர்-
- தர்க்கவியல் சார்ந்த முதல் முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலத்தில் எழுதப்பட்டது
- வசுபந்துவின் சீடர் திக்நாதர்
சமண இலக்கியம்:
- சமணர்களின் மதநூல்கள் தொடக்கத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்டன. பின்னர்தான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
- சமண இராமாயணத்தை எழுதியவர் விமலா
- சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டவர் சித்தசேன திவாகரா
சமயம் சார இலக்கியம்:
- காளிதாசர் “இயற்கை” அழகை எழுதிய கவிஞர். இவர் இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்றழைக்கப்படுகிறார்.
- காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள்
1) சாகுந்தலம்
2) மாளவிகாக்னி மித்ரம்
3) விக்கிரம ஊர்வசியம்
காளிதாசரின் ஏனைய சிறப்பு நூல்கள்.
1) மேகநாதம் காளிதாசரின் முக்கிய கவிதைப்படைப்பு
2) ரகுவம்சம்
3) குமாரவம்சம்
4) ரிது சம்காரம்
- நாடகத்தில் மேட்டுக்குடி கதாபாத்திரங்கள் சமஸ்கிருதத்தில் பேசப்படுகின்றன.
எளிய கதாபாத்திரங்கள் – பிராகிருதத்தில் பேசுகின்றன.
பிராகிருத மொழியும், இலக்கியமும்:
- பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழி.
- பிராகிருத மொழியின் பல்வேறு வடிவங்கள்
1) மதுரா பகுதியில்
சூரசேனி என்ற வடிவமும்.
2) அவத் பண்டல்கண்ட் பகுதிகளில் -அர்த் மாகதி வடிவமும்.
3) நவீன பீகார் பகுதியில் மாதி வடிவமும், வழக்கத்தில் இருந்தன.
கணிதம், வானவியல்:
- பூஜ்ஜியம் குப்தர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பரிணாம வளர்ச்சியாக தசம எண் முறையும் தோன்றின.
- ஆரியபட்டர் எழுதிய நூல்கள்
1) சூரிய சித்தாந்தா – சூரிய சந்திர கிரகணங்களுக்கான உண்மை காரணங்களை விளக்கியுள்ளார்
2) ஆரியப்பைட்டியம் இந்நூலில் கணிதம், கோணவியல், அல்ஜிப்ரா ஆகியவற்றை விளக்குகிறது
புவி தனது அச்சில் சுழல்கிறது என்று கூறிய முதல் இந்தியர்-ஆரியபட்டர்
1 இலிருந்து 9 வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தை (0) பயன்படுத்தும் முறையும் ஆரியப்பட்டரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- பிரம்ம குப்தர் எழுதிய நூல்கள் – பிரும்மஸ்புத சிந்தாந்தா, கண்ட காத்யகா
- பிருஹத் சம்ஹிதா என்னும் நூலை எழுதியவர் வராக மிகிரர்
இந்நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான களைக்களஞ்சியமாகும்
- வராக மிகிரரின் மற்ற படைப்புகள் – பஞ்ச சித்தாந்திகா, பிருஹத் ஜாதகா.
மருத்துவ அறிவியியல்:
- மருத்துவ துறையில் புகழ்பெற்ற அறிஞர் – தன்வந்திரி
- மருத்துவ அறிவியியல் அறிஞர் சரகர்
- அறுவை சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் -சுஸ்ருதர் (அறுவை சிகிச்சை முறையின் தந்தை)
- மருந்துகள் தயாரிக்க உலோகங்களான பாதரம் (ம) இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராகஹாமிகிரர் எழுதியிருக்கிறார்
- நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கும் முறை பற்றி கூறும் நூல் – நவனிதகம்
- பால காப்யா எழுதிய நூலாகும். “ஹஸ்த்யாயுர் வேதா” நூல் விலங்குகளுக்கான மருத்துவ
குப்த பேரரசின் வீழ்ச்சி:
- குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணு குப்தர் (கி.மு) 540 முதல் 550 வரை) இவர்காலத்தில் உள்நாட்டு பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளும் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகும்.
- புத்த குப்தர் என்ற குப்த அரசர் காலத்தில் “மேற்கு தக்காணத்தில் வாகட அரசரான நரேந்திரசேனா ‘மால்வா மேகலா (ம) கோசவா மீது படையெடுத்தார்.
- மற்றொரு வாகட அரசரான குப்தர்களிடமிருந்து கைப்பற்றினார். ஹரிசேனர். மாளவத்தையும், குஜராத்தையும்
- 2ம் சந்திர குப்தரின் பேரன் ஸ்கந்த குப்தரின் ஆட்சிக் காலத்தில் ஹினர்களை தோற்கடித்தார்.
இவர் மீது ஹீனர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். குப்த அரசு வீழ்ச்சி அடைந்தது. (ஹீனர்களின் தலைவர்கள், தோரமானர், மிகிரகுலர்)
- இதனால் பல சிற்றரசுகள் உருவாகின.
1) மாளவத்தின் யசோதர்மன்
2) உத்திரபிரதேசத்தின் முகாரிகள்
3) சௌராஷ்டிரத்தின் மைத்ரகாக்கள்
- பின்னர் மாளவத்தை ஆட்சி செய்த யசோதர்மன். ஹீனர்களை தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
- குப்தர் கால நிலபிரபுத்துவ பண்புகளை பட்டியலிட்டவர் – R.S சர்மா
ஹிணர்கள் என்போர் யார்
- ரோமானிய வரலாற்று ஆசிரியர் “டாசிடாஸின் கூற்றுப்படி அவர்கள் காஸ்பியன் கடல் அருகே வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள்
- ரோமபுரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் அடில்லாவின் தலைமையில் திரண்டனர்.
இவர்களோடு தொடர்புடைய வெள்ளை ஹீனர்கள்* மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர்.
Important questions
1 குப்தப் பேரரசின் தேசிய சின்னம் – கருடன்
2. குப்தர்கள் காலத்தில் வட இந்தியாவில் வாணிபம் நடைபெற்ற துறைமுகம் தாமிரலிப்தி
3. நாளாந்தாவை கட்டியவர் – குமாரகுப்தர்
4. சமுத்திர குப்தர் பற்றி கூறும் கல்வெட்டு -அலகாபாத் கற்றூண் கல்வெட்டு
5. குப்தர்களின் வணிகமையம் – பனராஸ். சௌசாம்பி, பாடலிபுத்திரம்.
6 ஸ்கந்த குப்தர் கால நாணயங்கள் தங்கத்தால் செய்யப்பட்டன
7. அசுவமேத நாணயங்களை இந்தியாவில் வெளியிட்டவர் – சமுத்திரகுப்தர்.
8. சமுத்திகுப்தருடன் தொடர்புடைய கல்வெட்டு -அலகாபாத் துண் கல்வெட்டு, கயா செப்பேடு, ஈரான் தூண் கல்வெட்டு
9. குப்தர்களின் தொடக்ககால காசுகளில் என்ன பெயர் இருந்தன- காசா
10 குப்தர்களின் எழுத்தை கண்டுபிடிக்க துண்டு கோலாக இருந்தவர் சார்லஸ் வில்கின்ஸ்
11. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகளை அலகாபாத் கல்வெட்டில் எத்தனை பிளவுகளாக வகைபடுத்தப்பட்டுள்ளன -4
12 வெள்ளி நாணயம் வெளியிட்ட முதல் குப்த அரசர் – II சந்திரகுப்தர்.
13.பாரதம் என்பதை ஒரு இடமாக தன் படைப்புகளில் முதலில் குறிப்பிட்டவர் – பதஞ்சலி போகரின் நூலை எழுதியவர் பதஞ்சலி
14.தோரமான, மிகிரகுலர் என்போர் ஹினர்கள்
15.மெகரெளலி இரும்புதூணில் முதலாம்சந்திரகுப்தரின் சாதனைகள் பற்றி குறிப்பு உள்ளது.
hi