திட்டமிடல்:
- பொருளாதாரத் திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சிந்தித்து. இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளே ஆகும் – டால்ட்டன்
திட்டமிடலின் வரலாறு
- 1917 ல் நடைபெற்ற ரஷ்ய புரட்சியே பொருனாதார திட்டமிடலுக்கு வழிவகுத்தது.
- உலகபோருக்கு பிறகு ஏற்பட்ட பொருளதார பெருமந்தம் உலகஅளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீள சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய பொருளதார திட்டமிடல் பெரும் வெற்றியை தந்தது.
- சோவியத் ரஷ்யாவே பொருளதார திட்டமிடலை முதன் முதலில் செயல்படுத்தியது.
- பொருளதார திட்டமிடல். சோவியத் ரஷ்யா உலகிற்கு அளித்த நன்கொடை என்றவர் – காரல் மார்க்ஸ்
- அனைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்படுத்தியது -இலயனல் ராபின்ஸ்
- பொது நிர்வாகத்தின் பொருளாதர முன்னுமைகளைத் திட்டவட்டமாகத் தேர்ந்தெடுப்பதே திட்டமிடல்- பார்பரா ஊட்டன்
பொருளாதார திட்டமிடலின் இயல்புகள்
- திட்டமிட்ட பொருளாதாரத்தில் எதை எவ்வளவு உற்பத்தி செய்வது, எப்போது எங்கு உற்பத்தி செய்வது, உற்பத்தியை யாருக்காக பங்கீடு செய்வது போன்றவை அரசு போன்ற மத்திய நிர்வாகத்தால், திட்டகுழுவின் மூலமாக முக்கிய பொருளாதார தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
- முதலாளித்துவ பொருளாதாரத்தில் ( எ.கா. இங்கிலாந்து) பகுதி சார்ந்த திட்டமிடல் காணப்படும்.
- சமத்துவப் பொருளதாரத்தில் முழமையான திட்டமிட்டப் பொருளாதார அமைப்பு இருக்கும் (எ.கா.சோவியத் ரஷ்யா)
- இந்தியா போன்ற கலப்புப் பொருளாதாரத்தில் பொதுத்துறை மற்றும்
தனியார்துறை இரண்டுமே. மிக முக்கிய பங்கினை பொருளாதார திட்டமிடலில் வகிக்கும்
- வளர்ந்த நாடுகளை விட பின்தங்கிய நாடுகளின் திட்டமிடுதல் அத்தியாவசியமானது.
மேலும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகக்கடினமானதாகும்.
இந்தியாவில் திட்டமிடல்:
- சோவியத் ஒன்றியம் திட்டமிடலை 1928 -ல் செயல்படுத்த துவங்கியது.
- சோவியத் நாட்டை வல்லரசு நாடாக மாற்ற காரணம் பொருளாதார திட்டமிடலே ஆகும்.
- 1930 களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் அமெரிக்காவில் வாங்கும் திறனைக் குறைத்து, சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியதால், பொருளாதார திட்டமிடலின் அவசியம் என்னும் கருத்து வலுவடைந்தது.
- இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்க திட்டமிடல்தான் சரியான தீர்வு என்ற சிந்தனை பரவத் தொடங்கியது.
- இந்திய விடுதலைக்குப்பிறகு 1948 -ல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது.
இதில் மையத்திட்டக்குழு மற்றும் கலப்பு பொருளாதார அமைப்பு முறை இரண்டையும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்திய திட்டமிடுதலின் பரிணாம வளர்ச்சி:
- M. விஸ்வேஸ்வரய்யா 1934 ல் இந்தியாவில் திட்டமிடுதலுக்ககான அடித்தளத்தை அமைத்தார்.
இவர் தனது ஆலோசனையாக பத்தாண்டுத் திட்டமொன்றை அவர் எழுதிய “இந்திய பொருளாதார திட்டமிடல்” என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
- 1938 -ல் ஜவஹர்லால் நேரு தேசிய திட்டக்குழுவை உருவாக்கினார். ஆனால் அது வெற்றியடையவில்லை.
- பாம்பே திட்டம் (1940)
மும்பையின் முன்னனி தொழிலதிபர்கள் பாம்பே திட்டம் என்ற திட்டத்தை 1938 ல் முன்மொழிந்தனர். இது பதினைந்து ஆண்டுகளுக்கான தொழில் முதலீட்டுத் திட்டமாகும்
- காந்தியத் திட்டம் (1944) – எஸ். என் அகர்வால்
இது வேளாண்மை மற்றும் கிராமியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டமாகும்.
- மக்கள் திட்டம் (1945) – எம்.என்.ராய்
வேளாண்மை, உற்பத்தி மற்றும் விநியோகத்தை இயந்திரமயமாக்கு வதையும், நுகர்வுப் பொருட்களை அரசே விநியோகம் செய்ய வேண்டும் என்பதையும் இத்திட்டம் வலியுறுத்தியது.
- சர்வோதயா திட்டம் 1950 – ஜெய்பிரகாஷ் நாராயணன்
சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளைக் கொண்டத் திட்டமாகும்.
- மேற்கண்ட ஆறுதிட்டங்களையும் கவனமாக ஆராய்ந்து. திட்டக்குழுவை அமைத்து, ஐந்தாண்டு திட்டங்களாக செயல்படுத்த ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தார்.
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகள்:
1. திட்டமிட்ட பொருளாதாரமே அங்காடிப் பொருளாதாரத்திற்கு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.
2. பின்தங்கிய நாடுகளில் வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மையை அகற்ற திட்டமிடுதல் அவசியமாகிறது.
3. பொருளாதாரத்தில் பல துறை சார்ந்த நடவடிக்கைகள் சரி சம முன்னேற்றத்தை ஏற்படுத்த திட்டமிடுதல் அவசியமாகிறது.
4. திட்டமிடுதலால் அடைகிறது. வேளாண்துறையும். தொழில்துறையும் முன்னேற்றம்
5. பொருளாதார திட்டமிடுதலின் மூலம் கட்டமைப்பு துறையில் முன்னேற்றம் அடைய முடியும்.
6.உறுதியான பணம் மற்றும் மூலதன அங்காடியை உருவாக்க திட்டமிடல் அவசியமாகிறது.
7. திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும்.
- பின்தங்கிய நாடுகளின் தேசிய வருவாயை உயர்த்துவதற்கான வழிகளையும். வழிமுறையையும் கொண்ட ஒரு சாதனம் திட்டமிடல் – ஆர்தர் லூயிஸ்
திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள்:
1. திட்டமிட்ட பொருளாதாரத்தில் சிக்கலான முடிவுகளை மத்திய திட்டக்குழு எடுக்கிறது.
இது நுகர்வோர், உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களை கட்டுப்படுத்துகிறது.
தன் விருப்பம் போல் செயல்பட இயலாது ஹேயக் எழுதிய
“அடிமைத்தனத்திற்கான பாதை” என்னும் நூலில் தெரிவித்துள்ளார்.
2. மையப்படுத்தபட்டத் திட்டமிடலில் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் புதுமைகளை புகுத்துதல் ஆயிவற்றுக்கு ஊக்கமிருக்காது. மையப்படுத்தப்பட்டத் திட்டமிடலில் தனியார் உரிமை இருக்காது.
இது லாப நோக்கத்தை குறைத்து, தொழில் முனைவோர் திறம்படமுடிவு எடுப்பதையும்,இடர் எதிர்நோக்குதலையும் குறைக்கிறது.
3. அதிகமான நிர்வாக செலவு லூயிஸ் இதைப்பற்றி குறிப்பிடும் போது திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமானால் கூடுதலாக திட்டமிடல் நிபுனர்கள் தேவை” என்கிறார்.
4. திட்டமிடுதலை முன்கணிப்பதில் சிரமங்கள் உள்ளன.
திட்டமிடலின் வகைகள்:
a) மக்களாட்சி மற்றும் சர்வாதிகாரத் திட்டமிடல்
- திட்டங்களை தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதல் என அனைத்து நிலைகளிலும் பங்கெடுத்து கொள்ளும் திட்டமிடலே மக்களாட்சி திட்டமிடல் ஆகும்.
- மையத்திட்டக்குழு ஒரு திட்டத்தை கையில் வைத்துக்கொண்டு நாட்டின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தி விரும்பிய திசையில் நடைபெற வைப்பதே “சர்வாதிகாரத் திட்டமிடல் ஆகும்.
b) மையப்படுத்தப்பட்ட திட்டமிடல், பரவலாக்கப்பட்ட திட்டமிடல்
- திட்டம் தீட்டுதல், நோக்கங்களை நிர்ணயித்தல், இலக்குகளைக் கண்டறிதல் ஆகியவற்றை திட்டக்குழுவே செய்தால் அதனை மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் (அ) “மேலிருந்து திட்டமிடுதல்” என்றும் கூறலாம்.
- மைய அமைப்புகளின் கட்டுபாடுகளின்றி உள்ளுர் அமைப்புகள், நிறுவனங்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்தும்.
இது “பரவலாக்கப்பட்ட திட்டமிடல்” அல்லது “கீழிருந்து திட்டமிடல்” எனவும் அழைக்கப்படுகிறது.
c) வழிகாட்டும் திட்டமிடல் மற்றும் தூண்டும் திட்டமிடல்
- திட்டக்குழு வழிகாட்டுதல் வழங்கி, திட்டம் தயாரித்து மேலும் திட்டத்தை ஆணையிடுதல் மூலம் செயல்படுத்தினால் அது “வழிகாட்டுதல் திட்டமிடல் ஆகும்.
- திட்டக்குழு நிர்ணயம் செய்த இலக்குகளை பல்வேறு நிதியியல் மற்றும் பணவியல் வழிமுறைகள் ஊக்கங்கள் மூலம். அளித்து அதன் நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வதே தூண்டும் திட்டமிடல் ஆகும்.
d) சுட்டிகாட்டும் திட்டமிடலும் கட்டாயமானத் திட்டமிடலும்
- திட்டக்குழு இலக்குகளை அடையும் வழிமுறைகளை குறிப்புரைகளாக தயாரித்து, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், நுகர்வோர் குழுக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற துறை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுத்தும் திட்டமிடலே சுட்டிக்காட்டும் திட்டமிடல் ஆகும்.
- அனைத்து வளங்களும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். ஓங்கு நுகர்வோர் இறையான்மை இருக்காது.
- சீனாவும். ரஷ்யாவும் செயல்படுத்துகின்றன. கண்டிப்பானத் திட்டமிடல் முறையை
உதா) ரஷ்யா-ஸ்டாலின் “நமது திட்டம் நமக்கான அறிவுரைகள் திட்டம்
- ஓராண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் “குறுகியகாலத் திட்டங்கள்” அல்லது
கட்டுப்படுத்தும் திட்டம்” “ஆண்டுத் திட்டம்” எனவும் அறியப்படுகிறது.
- மூன்றிலிருந்து ஏழு ஆண்டு காலத்தில் முடிவடையும் திட்டங்கள் நடுத்தரக் காலத்திட்டங்கள் ஆகும்.
- பத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு தீட்டப்படும் திட்டங்கள் நீண்டகாலத் திட்டங்கள் எனவும் முன்னோக்குத் திட்டங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
- நிதித் திட்டமிடல் திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நிதியை பண மதிப்பில் ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல்
- உருவப்பொருள் திட்டமிடல் – என்பது மனித வளம், இயற்கை வளம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பருமப் பொருட்களை ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் ஆகும்.
- சமூக அமைப்பு முறையை மாற்றாமல் வழிகாட்டுதல்கள் மட்டுமே செய்யும் திட்டமிடல் பணிகள் திட்டமிடலாகும்.
- பொருத்தமான மாற்றங்களை செய்து இலக்குகளை அடையும் திட்டமிடலே கட்டமைப்புத் திட்டமிடுதலாகும்.
- அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான திட்டமிடல் விரிவான திட்டமிடலாகும்.
- ஒரு சில துறைகளுக்கு மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்து அதை அடைய தீட்டப்படும் திட்டம் பகுதித் திட்டமாகும்.
திட்டக்குழு
- 1950 மார்ச் 15 ல் தேசிய திட்டக்குழு இந்தியாவில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் – நேரு (இந்திய திட்டமிடுதலின் தந்தை. சிற்பி)
- திட்டக்குழு நிர்வாகத்துறை தீர்மானத்தின் படி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சாராத ஒரு அமைப்பு ஆகும்.
- இந்தியப் பிரதமர் பதவி வழித் இதன் தலைவராக செயல்படுவார்.
துணைத்தலைவர் பிரதமரால் நியமனம் செய்யப்படுகிறார்.
- உறுப்பினர்களின் வரையறுக்கப்படவில்லை. எண்ணிக்கை பதவிக்காலம் போன்றவை
முக்கிய பணிகள்:
- சமமான வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுதல்
- ஐந்தாண்டு திட்டங்களை வகுத்தல்
- நாட்டின் பொருள், மூலதன, மனிதவள ஆதாரங்களை மதிப்பிடுதல்.
- அரசின் பொருளாதார கொள்கைகள். திட்டங்களின் மீது ஆலோசனை வழங்குதல்.
- திட்டகுழுவின் மிக முக்கிய பணி நாட்டுவளங்களை பயனுள்ள மற்றும் சமமாக பயன்படுத்த திட்டங்களை தீட்டுதலே ஆகும்.
- நிதி ஒதுக்கீடு துறைகளை நிர்ணயித்தல்
- நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தினை அளவிடுதல்
- அரசின் பொருளாதார கொள்கைகள், திட்டங்களின் மீது ஆலோசனை வழங்குதல்
இந்திய திட்டமிடுதலின் நோக்கங்கள்
- இந்திய திட்டமிடுதலின் மையநோக்கம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகும்
- வறுமை ஒழிப்பு உற்பத்தியை அதிகரிப்பது. வருமானம் மற்றும் செலவ ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது.
- அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்பத்துவது.
- வளர்ச்சியோடு கூடிய சம உடைமை சமுதாயத்தை உருவாக்குவது.
- தேசிய வருவாய், தனிநபர் வருவாய் ஆகியவற்றை அதிகரிக்க செய்வது.
மாநில திட்டக்குழு:
- மாநிலத்தின் உயர்ந்த திட்டமிடும் அமைப்பு
- முதலமைச்சரை தலைவராகவும், நிதி மற்றும் திட்ட அமைச்சர்கள், சிறு தொழில்நுட்ப வல்லுநர்களை உறுப்பினர்களாகவும் கொண்டது.
- மாவட்ட திட்டக்குழு அலுவலர், அலுவலர் அல்லாதோரையும் உறுப்பினராகக் கொண்டது.
நிதிக்குழு-1951
- இந்திய அரசியலமைப்பு சரத்து 280 -ன் படி நிதிக்குழு உருவாக்கப்பட்டது.
- 1951-ம் ஆண்டு, மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான நிதி உறவை வரையறுப்பதற்காக அமைக்கப்பட்டது.
- நிதி குழு மத்திய மற்றும் சமநிலையின்மையைக் குறைப்பதற்கும். மாநிலங்களுக்கு இடையேயான மாநிலங்களுக்கிடையேயான சமமின்மையைக் குறைப்பதற்கும் முயல்கிறது.
- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகிறது.
- 14-வது நிதிக்குழு 2013 -ல் அமைக்கப்பட்டது அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2015 முதல் மார்ச் 2020 வரை செல்லதக்கதாகும்.
- 15-வது நிதிக்குழு நவம்பர் 2017 -ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
பணிகள்.
- சரத்து 280 (3) பணிகள் பற்றி குறிப்பிடுகிறது.
- மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகரவரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து, மாநிலங்களுக்கு அவற்றிற்குரிய பங்கை பகிர்ந்தளிக்கும்.
- சரத்து 275 (1) ன் படி, மாநிலத்திற்கு வழங்கும் மானிய அளவு மற்றும் தகுதிகள் குறித்தும் குறிப்பிடுகிறது.
- நிதிக்குழுவை நியமிப்பவர் – குடியரசு தலைவர்
தேசிய வளர்ச்சி குழு (NDC)
- தேசிய வளர்ச்சி குழுமம் அல்லது ராஷ்ட்ரிய விகாஸ் பரிஷித் திட்டமிடல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் மற்றும் வளர்ச்சி குறித்து ஆராயும் அமைப்பாகும்.
- ஆகஸ்ட் 6, 1952 ல் அமைக்கப்பட்டது.
- பாராளுமன்ற அமைச்சரவை குழு தீர்மானத்தின் படி உருவாக்கப்பட்டது.
- இதன் தலைவர் பிரதமர்.
- அரசியலமைப்பு சாராத அமைப்பு
- இதன் முக்கிய பணி 5 ஆண்டு திட்டங்களுக்கு இறுதி அங்கீகாரம் அளிக்கும்.
நிதி ஆயோக் (NITI Aayog)
- National Institution for Transforming India என்பதன் சுருக்கமே நிதி ஆயோக் என்பதாகும்.
- திட்டக்குழு என்பதற்கு மாற்றாக 2015 ம் ஆண்டு ஜனவரி 1 ந் தேதி ஏற்படுத்தப்பட்டது.
- தலைவர் – பிரதமர்.
துணை தலைவரை பிரதமர் நியமிப்பார்.
மேலும் முதன்மை செயல் அதிகாரி. வாழ்நாள் உறுப்பினர்கள் பதவியும் இவ்வமைப்பில் அடங்கும்.
- மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்கள் ஆவர்
- முதல் தலைவர் நரேந்திர மோடி.
- முதல் துணை தலைவர் – அரவிந்த் பனகாரியா.
- நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையமாகும்.
- தேசிய சர்வதேச மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும், புதிய கொள்கைகளை ஏற்படுத்தவும். தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும்.
- நீடித்த நிலையான வளர்ச்சியை மேற்பார்வையிடவும். ஒருங்கிணைக்கவும் செயல்படும்.
நன்றி வணக்கம்…………