இந்திய வேளாண்மை – மண்

Share This:

மண்:

  • பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள உதிரியான துகள்கள் (அ) மிகச்சிறிய பாறைத்துகள்களே மண் எனப்படும்.
  • மண் ஒரு இன்றியமையாத புதுப்பிக்கதக்க இயற்கை வளமாகும்.
  • மண்ணில் அதிக அளவு இருக்க வேண்டிய சந்து பொருட்கள் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பேட்டுகள்
  • மண்துகள்கள். களிமண், மணல் மற்றும் மண்மண்டி படிவு என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
  • இந்திய தொலை நுண்ணுணர்வு (IIRS) 2015 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.

மண் வகைகள்:

  • மண்ணின் தோற்றத்தின் அடிப்படையில் மண்ணை மண்டல மண்)(அயண மண்டல) மண் (ம) (உள் மண்டல மண் என வகைபடுத்தலாம்.

1. மண்டல மண்

  • தான் உருவாகிய பரப்பின் காலநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்த மண் மண்டலமண் ஆகும்

மண்டல மண் 3 வகைப்படும்

1. சரளை மண்

  • அதிக வெப்பமும், அதிக மழையும் தரும் அயன மண்டலத்தில் காணப்படுகிறது.
  • அதிக வெப்பம், அதிக மழையால் பாறைகளில் சிதைவுறுதல் நிகழ்கிறது.
  • பாறையிலுள்ள இரும்புச்சத்து வளிமண்டல ஈரப்பதத்தை எடுத்துக் கொள்வதால் இவை சிவப்பு நிறத்தை பெறுகின்றன.

இடங்கள்

  • மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சி மலை, இமயமலை அடிவாரம்.

2. செம்மண்

  • பொதுவாக அயன மண்டல விழிம்பு பகுதிகளில் காணப்படுகின்றது.
  • இவை மிதமான மழை மற்றும் வெப்பம் மிகுந்த பகுதிகளில் காணப்படுகின்றன.
  • செம்மண், தீபகற்ப இந்தியாவில் கிழக்கு (ம) தெற்கு பகுதிகளில் காணப்படுகிறது

3. பாலைவன மண்

  • பாலைவன மண் அயன மண்டலத்தின் வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது.
  • இவை மஞ்சள் நிறம் கொண்டவை.
  • காரணம் இப்பகுதிகளில் நிலவும் குறைவான மழை மற்றும் இம்மண்ணில் காணப்படும் கந்தகத்தில் அரிப்பு குறைவினாலும் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது
  • பாலைவன மண் தார்பாலைவனத்தில் காணப்படுகிறது.

2) அயன மண்டல மண்

  • இவ்வகை மண் அவை காணப்படும் பகுதியின் காலநிலையை வெளிப்படுத்தாத தன்மையை கொண்டதாகும்.
  • ஏனெனில் ஒரு மண்டலத்தில் உருவாகும் மண் அரிப்பு காரணிகளால் கடத்தப்பட்டு, மற்றொரு காலநிலை மண்டவத்தில் படியவைக்கப்படுகிறது. எ.கா வண்டல் மண் (ஆறுகளால் கடத்தப்படுகிறது)
  • பிரம்மபுத்திரா, கங்கை ஆறுகள் உருவாகும் இடத்தில் இருந்து கடலில் சேரும் இடம்வரை கடத்தப்பட்டு படியவைக்கப்படுகின்ற மண், அயன மண்டல மண் ஆகும்.
  • இம்மண் ஆறுகள் கடலில் கலக்கும் டெல்டா பகுதியில் நிலவும் காலநிலையை பெறுவதில்லை.
  • இந்தியாவில் வண்டல் மண்ஆறுகளின் பள்ளத்தாக்கிலும் டெல்டாவிலும் உள்ளது

3)  உள்மண்டல மண்

  • ஒரு சிறு நிலப்பரப்பின் தன்மையை வெளிப்படுத்தும் தன்மையை கொண்ட மண் வகைகள் உள்மண்டல மண் ஆகும்

எ.கா

        1) கரிசல் மண்

        2) மலை மண்

கரிசல் மண்

  • இவ்வகை மண் எரிமலை வெடிப்பினால் உருவானதாகும்.
  • இவை தக்காண பீடமிேயின் வடமேற்கு பகுதியில் காணப்படுகிறது.
  • அதிக இரும்புச் சத்தின் காரணமாக இவை கருமை நிறத்துடன் காணப்படுகிறது.
  • அரியலூர் பகுதியில் காணப்படும் சுண்ணாம்பு பாறை மண் வகை உள்மண்டல மண் வகை ஆகும்.

மலைமண்

  • மலைப்பகுதியில் நிலவும் காலநிலையை வெளிப்படுத்தும் தன்மையை கொண்ட மண்ணாக திகழ்கிறது.
  • இங்கு மரங்களில் இருந்து உதிரும் இலைகள் மக்குவதால் இம்மண் அதிக இலை மக்குச்சத்து கொண்டதாக விளங்குகிறது.

மண்வகைகள்

  • 1853 ல் தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம். இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது அவை

1. வண்டல் மண் 

2. கரிசல் மண்

3. செம்மண்

4. சரளை மண்

5. காடு மற்றும் மலை மண்

6. வறண்ட பாலை மண்

7. உப்பு மற்றம் காரமண்

8. களிமண் (ம) சதுப்பு நில மs

1. வண்டல் மண்

  • வண்டல் மண் ஆற்றுப் படுகைகள், வெள்ளப்பெருக்குச் சமவெளி, டெல்டா (ம) கடற்கரை சமவெளி போன்றவற்றில் ஆறுகளால் படிய வைக்கின்ற படிவுகளாகும்.
  • இம்மண் இந்திய வேளாண் பொருள் உற்பத்திக்கு பெரும் பங்கு வகிக்கிறது.
  • வண்டல் மண்-2 வகைப்படும்

பாங்கர் மண் – களிமண் கூடிய வண்டல் மண்ணாகும்.

காதர் மண் –  மண்ணாகும். புதிதாக மடியவைக்கப்பட்ட வெளிர்திறத்துடன் கூடிய வண்ட

  • வண்டல் மண் துகள்களின் அமைப்பை பொறுத்து மாறுபடுகிறது.
  • பயிரிடப்படும் பயிர் வகை – நெய், கோதுமை, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள்
  • கங்கை, பிரம்மபுத்திரா தாழ்ந்த ஆற்று சமவெளி சணல் பயிரிட பயன்படுகிறது.

காணப்படும் இடங்கள்

  • பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேஷ். கோர், மேற்குவங்கம்.
  • தென்னிந்தியாவில் காவிரி ஆறு (ம) அதன் படுகை

ஆறுகள்

  • சட்லஜ், கங்கை, யமுனை, கண்ட, காக்ரா காவிரி.

2. கரிசல் மண்

  • தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் வகை பாறைகளில் இருந்து உருவானது.
  • தீப்பாறைகள் சிதைவுறுவதாலும் உருவாகிறது.
  • டைட்டானியம் (ம) இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.
  • இம்மண் சுமார் 6 மீ ஆழத்திற்கு படிந்துள்ளது.
  • இம்மண் ஈரப்பதத்தை தன்னுள் தேக்கிவைக்கும் சிறப்புத் தன்மை பெற்றதால் புகையிலை, கடுகு, சூரியகாந்தி, பழங்கள், காய்கறிகள் விளைய ஏற்றதாக உள்ளது.
  • இம்மண்ணில் பாஸ்பரஸ், நைட்ரஜன் (ம) உயிரிப் பொருட்கள் காணப்படுவதில்லை.
  • காணப்படும் ஆறுகள் – நர்மதை, தபதி, கோதாவரி.

காணப்படும் இடங்கள்

குஜராத், மத்திய பிரதேஷ். மகாராஷ்டிரா ஆந்திரா, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள்.

3. செம்மண்

  • பழங்கால படிவுப்பாறைகளான கிரானைட் நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவானவை செம்மண்ணாகும். 
  • இரும்புச்சத்து, மெக்னீசியம் அதிகம் காணப்படுகிறது.
  • இரும்புச்சத்து அதிக அளவு காணப்படுவதால் செம்மண் சிவப்பு நிறமாக உள்ளது.
  • நைட்ரஜன். பாஸ்போரிக் காணப்படுகின்றது. அமிலம், சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக
  • செம்மண் நுண்துகள்களை உடையதால் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள முடிவதில்லை
  • பயிரிடப்படும் வகை – கோதுமை, நெல், பருத்தி, கரும்பு, பகுப்பு வகை.

காணப்படும் இடங்கள்:

  • தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்கண்ட்

4) சரளை மண்

  • வெப்பம் (ம) குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண் சுவரல் காரணமாக உருவாகிறது.
  • அதிக வெப்பம், அதிக மழை, வறண்ட காலநிலை கொண்ட தீபகற்ப பீடபூமியில் பெருமளவு காணப்படுகிறது.
  • இருப்பு (ம) அலுமினியத்தின் ஆக்சைடுகளால் உருவானது
  • இம்மண் கடின அமைப்பை கொண்டதாகவும், இரும்பு ஆக்ஸைடு இருப்பதாலும் சிவப்பு நிறமாக காணப்படுகிறது.
  • உயரமான மலைப் பகுதிகளில் அதிக அமிலத்தன்மையுடனும், தாழ்வான பகுதிகளில் குறைவான அமிலத்தன்மையுடனும் உள்ளது.
  • பொதுவாக சரளை மண் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வதில்லை.
  • சரளை மண் நுண்துகள்களை கொண்டிருப்பதால் வேதிமுறையில் சிலிகா நீக்கப்படுகிறது.
  • விளையும் பயிர்கள் – காபி, இரப்பர், முந்திரி, மரவள்ளி கிழங்கு.
  • காணப்படும் பகுதிகள் அஸ்ஸாம் குன்றுகள்.

கேரளா,கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகள்

ஒடிசா (ம) கிழக்கு தொடர்ச்சி மலைகள்

5. காடு மற்றும் மலை மண்

  • பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உண்டாகிறது.
  • இம்மண்ணில் இலைச்சத்தும், சாம்பல் சத்தும் அதிகம் காணப்படுகிறது.
  • காரத்தன்மை கொண்டதாக உள்ளது.
  • பொட்டாஷ், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் குறைவாக காணப்படுகிறது.

விளையும் பயிர்கள்

  • தேயிலை, காபி,  இரப்பர்,  நெல், மக்காச் சோளம், பார்லி, வெப்பமண்டல பழவகைகள்,
  • தேயிலை பயிரிடுவதில் அஸ்ஸாமும் மேற்கு வங்கமும் முதன்மை வகிக்கின்றன.

காணப்படும் பகுதிகள்

ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலை.

6. வறண்ட பாலைவண மண்

  • வறண்ட கால நிலை. அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது.
  • இம்மண் இயற்கையாகவே மணலாகவும், காரச்சத்தை பெற்றதாகவும், நுண்துளை கொண்டதாகவும் உள்ளது.
  • தாவரங்கள் இல்லாமையால் இவை மக்கு சத்து குறைவாக காணப்படுகிறது.
  • இம்மண் வளமில்லாத மண்ணாக இருந்தாலும், நீர்பாசன வசதியுடன் சில பகுதிகளில் வேளாண்மை நடைபெறுகிறது.

விளையும் பயிர்கள்:

பார்லி பருத்தி, சோளம், பருப்பு வகைகள்

காணப்படும் பகுதிகள்:

இராஜஸ்தான், குஜராத்தின் வட பகுதி பஞ்சாப் மாநிலத்தின் தென்பகுதி.

7. உப்பு மற்றும் காரமண்

  • வடிகாலமைப்பு இல்லாமையால் நீர்பிடிப்பு காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள், நுண்புழை காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது.

இதனால் இம்மண் உப்பு (ம) காரத்தன்மையுடன் காணப்படுகிறது.

  • சோடியம், மெக்னீசியம், கால்சியம், சல்பூரிக் அமிலம் காணப்படுகிறது.

காணப்படும் பகுதிகள்.

ஆந்திரா, கர்நாடகா, பீகார், உத்திரபிரதேஷ், ஹரியானா, பஞ்சாப் இராஜஸ்தான்.

8. களிமண் (ம) சதுப்புநிலம்

  • அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது.
  • இவ்வகை மண் கருமை நிறம் கொண்டது.
  • அதிக காரத்தன்மை கொண்டது.
  • பொட்டாஷ் (ம) பாஸ்பேட் சத்துக்கள் குறைவாகவும், உயிரினப் பொருட்கள் 10 – 40% வரை காணப்படுகிறது.

காணப்படும் பகுதிகள்

கேரளாவில் கோட்டயம், ஆலப்புழை, ஒடிசா, தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகள். மேற்கு வங்கத்தின் கந்தரவனப் பகுதிகள்.

மண் அரிப்பு:

  • இயற்கை (ம) மனிதனின் செய்பாடுகளால் மண் நீக்கப்படுவது மண் அரிப்பு எனப்படும்.
  • இந்திய தொலை நுண்ணுணர்வு (IIRS), 2015 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.
  • மண் அரிப்பால் அதிக சேதம் அடையும் பகுதிகள் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தக்காண பீடபூமி

மண் அரிப்பை பாதுகாக்கும் வழிகள்

  • படிக்கட்டு வேளாண்மை
  • காண்டூர் எனப்படும் சம உயரமுள்ள இடங்களுக்கு ஏற்ப மண் அணைகளை கட்டுதல்.
  • மரம், புற்கள், புதர்கள் வளர்த்தல் அணைகள் கட்டுதல்.

நிலைநிறுத்தக்கூடிய வளர்ச்சி

  • சுற்றுப்புற சூழ்நிலையை சீரழிக்காமல் வளர்ச்சியை மேற்கொள்வதுடன் தற்கால தேவையினை பூர்த்தி செய்வதன் பொருட்டு எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பாதிக்காமல் இருப்பதே ஆகும்.

நீர்ப்பாசனம்

     3 வகைப்படும்.

1. கால்வாய் பாசனம் -24%

2. கிணற்று நீர் பாசனம் – 62%

3 ஏரிப்பாசனம் – 14%

1) கால்வாய் பாசனம்

  • இந்தியாவின் இரண்டாவது நீர்பாசன ஆதாரமாகும்.
  • மொத்த பாசன பரப்பில் 24%
  • 2 வகை

1. வெள்ளப் பெருக்கு கால்வாய்

  • மலைக்காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.
  • இவ்வகை கால்வாய்களில் ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் இன்றி தண்ணீர் கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது.

2) வற்றாத கால்வாய்

  • இவ்வகை கால்வாய்களை வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகும்.
  • 2014 ன் படி இந்தியாவில் சுமார் 15.8 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் கால்வாய் பாசன வசதியை பெற்றுள்ளன.
  • கால்வாய் பாசனத்தில் 60% வட இந்திய சமவெளிகளில் காணப்படுகிறது.

2) கிணற்றுப் பாசனம் (62%)

  • நாட்டின் மலிவான நீர்பாசனம்.
  • இரண்டு வகைப்படும்

1. திறந்த வெளி கிணறுகள்

2. ஆழ்துளைக் கிணறுகள்

1. திறந்த வெளி கிணறுகள்

  • நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகின்றது.
  • இப்பாசனம் கங்கை சமவெளி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

2. ஆழ்த்துளைக் கிணறு

  • ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின் மிகை பகுதிகள் மற்றும் மென்பாறைகள் கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
  • குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது.
  • 2017 புள்ளிவிவரப்படி கிணற்று பாசனத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம்

1 உத்திரப்பிரதேசம் (26.6%)

2 மத்திய பிரதேசம் (146%)

3. இராஜஸ்தான் (13.1%)

3) ஏரிப்பாசனம்

  • இந்தியாவின் மிகப்பழமையான பாசன முறை
  • 2017படி ஏரிப்பாசனத்தில் முதலிடம்.

1. தமிழ்நாடு (3.78 வட்சம் ஹெக்டேர்)

2. ஆந்திரா (3.40 லட்சம் ஹெக்டேர்

3 மத்திய பிரதேஷ்

4. தெலுங்கானா

நவீன நீர்ப்பாசன முறைகள்

சொட்டு நீர்ப்பாசனம்

  • நீர்ப்பாசனம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இடுநீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் 70 சதவிகித நீர் சேமிக்கப்படுகிறது.

தெளிப்பு நீர்ப்பாசனம்

  • இது மிகவும் எளிமையான மற்றும் சுலபமான நீர்ப்பாசன வகையாகும். இவ்வகை பாசனத்தை சமனற்ற நிலப்பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.

வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம்

  • இவ்வகை நீர்ப்பாசனத்தில் நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படுகிறது.
  • 4 மீட்டர் உயரம் வரை உள்ள பயிர் வகைகளுக்கும் இவற்றின் மூலம் நீர் பாசனம் செய்யலாம்.
  • கரும்பு மற்றும் சோளப் பயிர்களுக்கும் பாசனம் உதவிகரமாக உள்ளது

மையத் தெளிப்பு தீர்ப்பாசனம்

  • இவை வட்டச் சக்கர நீர்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இவற்றிற்கான உபகரணத்தின் மையப்பகுதியில் உள்ள கருவி கழன்று அவற்றைச் சுற்றியுள்ள பயிர்களுக்கு நீர்ப் பாசனத்தை அளிக்கிறது.

பிரதான் மந்திரி கிரஷி சிஞ்சாயி யோஜனா

  • குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம்.
  • நுண்நீர் பாசனத் திட்டத்தில் 5 மாநிலங்கள் மட்டுமே 78% நீர்பாசன வசதியை பெற்றுள்ளன.

அவை

1.ஆந்திரா

2. கர்நாடகா

3. குஜராத்

4. மகாராஷ்டிரா

5. தமிழ்நாடு

இந்திய வேளாண்மை

  • இந்தியா வேளாண்மை மூலம் 50% வேலைவாய்ப்பும், நாட்டின் மொத்த வருமானத்தில் 25% அளிக்கிறது.

வேளாண் தொழிலை நிர்ணயிக்கும் காரணிகள்

1. வேளாண் உற்பத்தியை அதிகரித்து தரும் வண்டல் மண் நிறைந்த சமவெளிகள்

எ.கா : கங்கை, காவிரி ஆற்று சமவெளி

2. இந்தியா வெப்பமண்டல பருவக்காற்று காலநிலையை பெற்றுள்ளது. கோதுமை பயிருக்கு மித வெப்பம் தேவை – பஞ்சாப்

  • நெற்பமிற்கு அதிக வெப்பம் தேவை -தமிழ்நாடு
  • வண்டல் மண் – நெல், கரும்பு
  • கரிசல் மண் – பருத்தி
  • இந்தியா சமச்சீரற்ற மழைபெறும் பருவக்காற்று நாடு.

வேளாண்மையின் வகைகள்எ

  • இந்தியாவில் பலவகையான வேளாண்மை முறைகள் பின்பற்றப்படுகிறது.

1. பழமையான வேளாண்மை (அ) இடம்பெயர்வு வேளாண்மை

  • அதிக மழை பெறும் காடுகளில் பின்பற்றப்படுகிறது.
  • இவ்வகை வேளாண்மை பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களை அகற்றி சாகுபடி செய்யப்படுகிறது.
  • காட்டின் ஒருபகுதி வேளாண்மைக்காக சுத்தம் செய்யப்பட்டு இரண்டு (அ) மூன்று ஆண்டுகள் பயிர் செய்த பின் வேறிடம் சென்று பயிர் செய்வர்.
  • இவை வெட்டுதல்’ மற்றும் ‘எரித்தல்’ வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.

அஸ்ஸாம் – ஜீம்

ஒடிசா, ஆந்திரா – பொடு

மத்திய பிரதேசம் – மாசன்

கேரளா – பொன்னம்

பெண்டா,பீரா – மத்தியபிரதேஷ்

2. தன்னிறைவு வேளாண்மை

  • இந்திய வேளாண்மையில் அதிகம் இடம்பெறும் வேளாண்மை வகை
  • இயந்திரங்கள், நவீன யுத்திகள் பயன்படுத்தப்படுவதில்லை
  • பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்படுகிறது.
  • பாரம்பரிய விவசாய முறையாதலால் குறைவான உற்பத்தியை அளிக்கிறது.
  • இம்முறையில் வேளாண் பொருட்களின் உற்பத்தியில் பாதியளவு குடும்ப தேவையை நிறைவு செய்வதால் மீதி சந்தைகளில் விற்கப்படுகிறது.
  • தன்னிறைவு வேளாண்மையில் நெல் (ம) கோதுமை தானியங்களையே அதிகமாக விளைவிக்கின்றனர்.
  • தென் இந்தியாவில் முக்கிய உணவான அரிசி 44 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் விளைவிக்கப்படுகிறது.
  • 1977-ம் ஆண்டே இந்தியா அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டது
  • உயர்தர பாசுமதி அரிசி குறைந்த அளவு ஏற்றுமதி செய்யப்பட்டது

காணப்படும் இடங்கள்

வட கங்கை சமவெளி, தென் காரி கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி சமவெளி பஞ்சாப், இராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் சில பகுதிகள்.

3. தீவிர வேளாண்மை

  • தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் (ம) பல்வேறு நவீன யுகதிகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவது.
  • உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மூலம் குறைந்த நிலத்தில் அதிக விளைச்சலை பெறுவது இதன் நோக்கம்.
  • பசுக்கள், பன்றிகள், கோழிகள் போன்ற விலங்குகளை பெரிய பண்ணைகள் மூலம் வளர்க்க வழிவகை செய்கிறது.
  • இந்தியாவில் பஞ்சாப். இராஜஸ்தானின் சில பகுதிகள், உத்திரபிரதேசம், மத்திய பிரதேச பகுதிகளில் இத்தீவிர வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது.

4. வணிக வேளாண்மை (அ) பரந்த வேளாண்மை

  • வணிக வேளாண்மையில் பயிர் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அந்திய செலாவணியை ஈட்டி தருவதற்காக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • வணிக ண்மைப் பயிர்கள், வேளாண் அடிப்படை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.

எ. கா: தானியங்கள், பருத்தி, கரும்பு, சணல்

காணப்படும் இடங்கள்

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் பஞ்சாப்

5. தோட்ட வேளாண்மை

  • தோட்ட வேளாண்மையில் மிகப்பரந்த நிலத்தில் ஒரே ஒரு பயிர் மட்டும் விளைவிக்கப்படுகிறது.
  • பயிரிடப்படும் இப்பகுதி பெரும்பாலும் தனியாருக்கு சொந்தமானது
  • தோட்ட பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்

காணப்படும் இடங்கள்.

வடகிழக்கு மாநிலங்களின் குன்று பகுதிகள், மேற்குவங்கம், தென்னிந்தியாவில் நீலகிரி, ஆனைமலை, ஏலமலைச் சரிவுகள்.

6. வறண்ட நில வேளாண்மை

  • நீர்பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் இவ்வகையான வேளாண்முறை பின்பற்றப்படுகிறது.
  • இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் வறட்சியை தாங்கக் கூடியவை.
  • பெரும்பான்மையான பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு ஒரு பயிர் மட்டுமே பயிரிடப்படுகின்றது.
  • விளைச்சல் குறைவாகவே இருக்கும்.

காணப்படும் இடங்கள்:

இராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தின் வறண்ட பகுதிகளில் நடைபெறுகிறது.

7. கலப்பு வேளாண்மை

  • விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.
  • கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

8. படிக்கட்டு முறை வேளாண்மை

  • இவ்வேளாண்மை முறையானது மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படுகிறது.
  • இந்தியாவில் பஞ்சாப், மேகாலயா, ஹரியானா, உத்திரபிரதேசம், இமாச்சலப்பிரதேசம். உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.

நன்றி வணக்கம்………

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top