ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிகள் (இந்திய தேசிய இயக்கம்)
- 18-ம் நூற்றாண்டின் இறுதி, 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக பழங்குடியினர், விவசாயிகள் புரட்சியில் ஈடுபட்டனர்.
- ஆங்கிலேய ஆட்சியில் நூற்றுக்கணக்கான விவசாய கிளர்ச்சிகள் நடந்தன.
அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்:
பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்துவதற்கான கிளர்ச்சிகள்.
2. சமய இபக்கங்கள்:
இவ்வகை இயக்கத் தலைவர்கள் சமய சிந்தனைகளின் அடிப்படையில், சமூகத்தை சீரமைத்து உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.
3. சமூகக் கொள்கைகள்:
இவ்வகை இயக்கத் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும், உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர்.
4. மக்களின் கிளர்ச்சி:
தலைவர்கள் இல்லாமல் திடீரென எழுந்த புரட்சி இயக்கங்கள்.
பிற காரணங்கள்
1. வருவாய் முறையில் மாற்றங்கள்
- இந்தியா முழுவதிலும் செயல்பாட்டில் இருந்த முகலாய வருவாய் அமைப்பை, கிழக்கிந்திய கம்பெனி மறுசீரமைத்ததையடுத்து, விவசாயிகளின் நிதிச்சுமைகள் பெரிதும் அதிகரித்தன.
- ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் தனிச்சொத்துரிமை பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
2. நிலத்தைக் கீழ்க்குத்தகைக்கு விடுவது
- நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும், கீழ்க்குத்தகைக்கு விடுவதும் விவசாய உறவுகளைப் பெரிதும் சிக்கலாக்கியது. ஜமீன்தாரர்கள் தன்னிடம் இருந்த நிலத்தைப் பெரும்பாலும் தன்னைச் சார்ந்திருந்த நிலப்பிரபுக்களுக்கு கீழ்க்குத்தகைக்கு விட்டனர்.
பதிலுக்கு நிலப்பிரபு, விவசாயிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்துக் கொடுப்பார். இதனால் விவசாயிகள் மீதான வரிச்சுமை அதிகரித்தது
விவசாயிகளின் கிளர்ச்சி
- 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விவசாயிகள் கிளர்ச்சி ஆரம்பித்தது.
- விவசாயிகள் தொடக்கத்தில் கம்பெனி அரசாங்கத்திற்கு புகார் அனுப்பினார்கள்.
ஆனால் அவர்களின் கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் போனபோது, அவர்கள் அணி திரண்டு நேரடி நடவடிக்கையில் இறங்கினர்.
- விவசாயிகள் உள்ளூர் கச்சேரி (வருவாய் வசூலிக்கும் அலுவலகம்)களைத் தாக்கினார்கள். தானியச் சேகரிப்புக்கிடங்குகளைக் கொள்ளையடித்தார்கள். வரியைச் செலுத்த மறுத்தார்கள்.
- 1840களிலும் 1850 களிலும் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் மலபார் கிளர்ச்சியாக வெளிப்பட்டது.
- இவர்கள் இப்பகுதியில் குடியேறி, மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் (மாப்பிள்ளைகள்)ஆவர்.
- படிப்படியாக மாப்பிள்ளைமார்கள் விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும், நிலமற்ற உழைப்பாளர்களாகவும். சில்லறை வணிகர்களாகவும், மீனவர்களாகவும் மாறினர்.
- 1792 இல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
- நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது. அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும்.
ஃபராசி இயக்கம்
- துவங்கப்பட்ட ஆண்டு – 1818
- துவங்கியவர் ஹாஜி ஷரியத்துல்லா.
- துவங்கப்பட்ட இடம் வங்காளத்தின் கிழக்குப்பகுதி
- இவ்வமைப்பின் உறுப்பினர்கள் இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
- 1839 இல் ஹாஜி ஷரியத்துல்லா மறைந்த பிறகு அவரது மகன் டுடு மியான் புரட்சிக்குத் தலைமை தாங்கினார்.
- சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்தியவர்- டுடு மியான்
- கொள்கை:
பொதுமக்கள் நிலத்தையும், அனைத்து வளங்களையும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும்.
- டுடு மியான் நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என அறிவித்தார்.
- வாடகை வசூலிப்பது (அ) வரி விதிப்பது ஆகியன இறைச் சட்டத்துக்கு எதிரானது என்றார்.
- 1840-1850 முழுவதும் ஜமீன்தாரர்கள், விவசாயிகள் மத்தியில் கடுமையான மோதல்கள் நடைபெற்றன
- 1862 இல் டுடு மியான் மறைந்த பிறகு, 1870களில் நோவா மியான் என்பவரால் இந்த இயக்கம் மீண்டும் உயிர்ப்பெற்றது.
வஹாபி கிளர்ச்சி
- தொடங்கப்பட்ட ஆண்டு – 1827
- தொடங்கியவர் இஸ்லாமிய மதபோதகர் டிடுவீர்
- இடம் வங்காளத்தின் பரசத் பகுதி
- வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும். நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டதாகும்.
- ஜமீன்தாரி முறையால் ஒடுக்கப்பட்ட இசுலாமிய விவசாயிகள் மத்தியில் இக்கிளர்ச்சி எழுச்சி பெற்றது.
- 1831 நவம்பர் 6இல் புரீனியா நகரில் முதல் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஆங்கிலேயர்களால் 50 வீரர்களுடன் டிடுமீர் கொல்லப்பட்டார்.
இண்டிகோ கலகம் (1859-60)
- வேறு பெயர் -அவுரி புரட்சி (அ) கருநீலச்சாய புரட்சி
- நடைபெற்ற இடம் – வங்காளம்.
- இந்திய விவசாயிகள் அவுரி செடியை விளைவிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- வங்காளத்தின் நாதியா மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், இனி இண்டிகோ பயிரிடப்போவதில்லை என மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- செப்டம்பர் 1859ல் திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ் ஆகியோரால் நாதியா மாவட்டத்தில் கலகங்கள் நடைபெற்றன.
- இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகள் இந்த கிளர்ச்சியில் பங்கேற்றனர்.
- குடங்கள் மற்று உலாகத் தட்டுக்களை ஆயுதங்களாக ஏந்தியபடி பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
- ஐரோப்பிய தொழிற்சாலைகள் எரிக்கப்பட்டு கலகங்கள் வேறு இடங்களுக்கு பரவியது.
- நிலைமையை சமாளிக்க ஆங்கில அரசு 1860-ல் அவுரி ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி 1862 சட்டம், பாகம் ஆறினை உருவாக்கியது.
- ஐரோப்பிய பண்ணையாளர்களின் அடக்கு முறைக்கு பயந்து வங்காளத்தின் அவுரி விவசாயிகள், பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தில் குடியேறினர்.
- இந்து, தேசபக்தன் போன்ற செய்தித்தான்கள் சாகுபடியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்தின.
- தீனபந்து மித்ரா என்பவர், வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர. நீல் தர்பான் (இண்டிகோவின் கண்ணmg) என்ற நாடகத்தை எழுதினார்.
- 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயற்கை நீலச் சாயங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
பாப்னா கலகம் (1873-76)
- பாப்னா விவசாய எழுச்சி என்பது விவசாயிகளால் நடத்தப்பட்ட ஜமீன்தாரர்களின் அடக்கு முறைக்கு எதிரான இயக்கம்
- இடம் வங்காளத்தின் பாப்னா
- துவக்கியவர்கள் – யூசப்சாகி (பாப்னா) மற்றும் கேசப் சந்திரா ராய் (பர்கானா)
- முதன்மை நோக்கம் சட்டத்தை எதிர்ப்பது.
- ஜமீன்தாரர்களால் பாதிக்கப்பட்ட விவசயிகளின் போராட்டம் பாப்னா முழுவதும் பரவி பின் கிழக்கு வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது.
- போராட்டத்தின் வாயிலாக விவசாயிகள் சட்ட விழிப்புணர்வு, சட்ட உரிமைகளை மேம்படுத்தினர்
தக்காண கலகம் (1875)
- துவங்கப்பட்ட இடம் – பூனா
- விவசாயிகள் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருந்த உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்கு முறையை எதிர்த்து புரட்சி செய்தனர்.
- 1875 மே மாதத்தில் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன் முதலாக புரட்சி ஆரம்பித்தது.
இதுவே தக்காண காலகம் எனப்பட்டது.
பின்னர் இப்புரட்சி 33 (அ) 30 கிராமங்களுக்கு பரவியது. வியது
- பெரும்பான்மையான கலவரங்கள் குஜராத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோரை குறிவைத்து நடத்தப்பட்டன.
- விவசாயிகள் மார்வாரி சகோதரர்களின் சொத்துகளை கொள்ளையடித்தனர். இராணுவம் வரவழைக்கப்பட்டு இப்புரட்சி கட்டுப்படுத்தப்பட்டது.
- இப்புரட்சியின் விளைவாக தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன் மூலம் விவசாயிகளின் குறைகள் களையப்பட்டது.
பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் (1890-1900)
- நகர்ப்புற வட்டிக்காரர்களிடம் கடனைப் பெற்று, கடனை திருப்பி செலுத்தத் தவறிய விவசாயிகள் மேற்கொண்டனர். வட்டி கடைக்காரர்கள் ஒடுக்கு நடவடிக்கைகளை மேறகொண்டனர்.
- இதை தடுக்கும் பொருட்டு பஞ்சாப் விவசாமிகள் புரட்சியில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் இப்பகுதியில் புரட்சியை விரும்பவில்லை.
இதனால் பஞ்சாப் விவசாயிகளை பாதுகாப்பதற்காக, 1900-ல் பஞ்சாப் நில உரிமை மாற்றுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
- பிறகு இச்சட்டம் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி பஞ்சாப் மக்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டனர்.
கேத்லீன் கௌ கூற்று
- ஆங்கிலேய ஆட்சி விவசாயிகள் மத்தியில் முகலாயர்களின் காலத்தில் இருந்ததை விட வேதனையை தந்தது.
ரணஜித் குஹா கூற்று
- விவசாயிகளின் பிரச்சனைகள் உள்ளூர் கலவரங்களில் தொடங்கி, பல மாவட்டங்களில் பரவி 19ம் நூற்றாண்டின் இறுதி வரை நீட்டித்தது.
பழங்குடியினர் கிளர்ச்சி
- காலனி ஆட்சியின் கீழ், இந்திய வரலாற்றில் முதன் முறையாக அரசு வனங்கள் குறித்த நேரடித் தனியுரிமை வேண்டும் என்று கோரியது
- வனங்களை வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆங்கிலேய ஆட்சியில் ஊக்கம் கிடைத்ததன் காரணமாகப் பாரம்பரிய பழங்குடியின நடைமுறை தனது கட்டுக்கோப்பை இழந்தது.
இதனால் பழங்குடியினப் பகுதிகளில் பழங்குடியினரல்லாதோரான வட்டிக்குப்பணம்
கொடுப்போர். வர்த்தகர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்
போன்றோர் ஊடுருவுவதற்கு அது வாக்கம் தந்தது.
- இதனால் ஆதிவாசிகள் நிலத்தின் பெரும்பகுதியை இழந்து அவர்கள் தாங்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழ நேர்ந்தது.
- அமைதியான பழங்குடியினர் வாழ்க்கையில் மாற்றங்களை அறிமுகம் செய்தோர் அல்லது பழங்குடியின மக்களின் அப்பாவித்தனத்தைத் தேவையின்றி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியோருக்கு எதிரானதொரு பதில் நடவடிக்கையே பழங்குடியினக் கிளர்ச்சியாகும்.
- பழங்குடியினர் இடம்பெயர்வு வேளாண்மை முறையை பின்பற்றினர்.
கோல் கிளர்ச்சி (1831-1832)
- மிகப் பெரிய பழங்குடியின கிளர்ச்சி
- தலைமை – பிந்த்ராய்,சிங்ராய்.
- இடம் -ஜார்கண்ட், கோர். ஒரிசாவின் சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் பகுதி
- சோட்டா நாக்பூர் பகுதியின் அரசர் வருவாய் வசூலிக்கும் பணியை, வட்டிக்குப் பணம் கொடுப்போரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார்.
- சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்கு குத்தகைக்கு விட்டதே கோல்களின் கிளர்ச்சிக்கு உடனடிக்காரணமாகும்.
- சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள், திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்.
- அதிக வட்டிக்கு கடன் கொடுத்தல், கட்டாய வசூல் மூலம் பாதிக்கபட்ட கோல் இனத்தவர் புரட்சியில் ஈடுபட்டனர்.
- கோல்கள் உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
- கொள்ளையடிப்பதும், சொத்துகளுக்குத் தீவைப்பதும் அவர்களது கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தன.
- 1831 டிசம்பர் 20 ஆம் நாளில் சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர், பர்கானா எழுநூறு கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கரையாக்கப்பட்டது.
- மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார்.
- கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19 ஆம் நாள் சரணடைந்ததும், கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.
- கோல் கிளர்ச்சியாளர்கள் அரசின் அரண்மனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுதந்திர அரசை கொண்டு வந்தனர்.
- ஆங்கிலேய அரசு பெரிய அளவிலான வன்முறை மூலம் இந்தக் கிளர்ச்சியை அடக்கியது.
சந்தால் கலகம் (1855-56)
- 1855-56ல் விவசாயிகளின் எழுச்சியாகப் கருதப்பட்ட முதலாவது கலகம்.
- சந்தாலர்கள் பீகார், வங்காளம், ஒரிசா ஆகிய காட்டு பகுதிகளில் பரவலாக வாழ்ந்தனர்
- சந்தாவர்கள் மஞ்சி என்றும் அழைக்கப்பட்டார்கள்
- தங்களின் தாய்மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள், ராஜ்மகல் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி, அதை டாமின் இகோ (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள்
- பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும், வட்டிக்கடைக்காரர்களக்கும் குத்தகைக்கு விடப்பட்டதால், சந்தால்கள் படிப்படியாகக் கையறுநிலையில் வாழ வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள்.
- அவர்கள் உள்ளூர் காவல்துறையினராலும், அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள்.
- டிக்குகளின் (வெளியிலிருந்து வந்தோர்) இத்தகைய ஊடுருவல் சந்தால் சமூகத்தை நிலை தடுமாறச் செய்தது. 1இது அவர்கள் இழந்த பகுதியை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வைத்தது.
- பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.
- ஜமீன்தாரர்களாலும் ஆங்கிலேய ரயில்வே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகளால் வனப்பகுதியைவிட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.
இதனால் சாந்தலர்கள் வாழ்வாதாரத்திற்காக வட்டிக்குப் பணம் கொடுப்போரைச் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டனர்.
- 1854ல் பீச்சிங் ஜமீன்தாரர்கள் வர்த்தகங்களுக்கு எதிராக கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதனல் ஜமீன்தாரி நீதிமன்றத்தில் பீரசிங் அவமானப்படுத்தப்பட்டார். இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் சாந்தவர்களை மேலும் ஆத்திரமூட்டியது.
- தமது கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன்தார்கள். வட்டிக்கடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
- தொடக்கத்தில் சித்தோ, சந்தால்களின் தலைவராக இருந்தார்.
அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கனு கிளர்ச்சியை நடத்தினார். கிளர்ச்சியின் பிற்பகுதியில் விவசாயிகளும் சேர்ந்துகொண்டார்கள்.
- ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள்.
இதன் விளைவாக, கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேயர் தரப்பிலிருந்து மிருகத்தனமான நடவடிக்கைகள் தொடங்கின.
- 1855ல் சித்து மற்றும் கணு என்ற இரண்டு சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்தினர். அவர்கள் தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்.
- சந்தேலர்கள் 10000 பேர் இவர்களின் தலைமையில் கூடினர்.
- 1855 ஜூன் 30ல் இவர்கள் கூறியது
கடவுள் தங்களுக்கு தரோக்களை கொன்று குவிக்கவும். ஜமீன்தார்கள், வர்த்தகர்களை அழிக்கவும்.
எதிரிகளின் குண்டுகள் நீராக மாறிவிடும் என்று கடவுள் உத்தரவிட்டதாக தெரிவித்தனர்.
- சந்தேலர்கள் நடத்திய கூட்டத்தின் போது இரண்டு தரோக்கள் (காவல்துறை அதிகாரிகள்) கொல்லப்பட்டனர்.
- 1856 ஜூலை மாதம் வெளிப்படையான கிளர்ச்சிகள் உருவானது. இவர்கள் வில், விஷம் தடவிய அம்புகளை சந்தியவாறு ராஜ்மகால், பாகல்பூர் நோக்கி கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டப்போவதாக பேரணியாகச் சென்றனர்.
- இறுதியாக ஆங்கிலேயர்களால் கிளர்ச்சி அடக்கப்பட்டது.
இதில் 15000 முதல் 25000 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1855ல் சந்தேலர் பகுதிகளை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டம் இயற்றப்பட்டது.
- இச்சட்டத்தின் மூலம் சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலம் உருவாக்கப்பட்டது.
முண்டா கிளர்ச்சி (அ) உலுகுலன் கிளர்ச்சி (அ) பெரிய கலகம் (1899-1900)
- நடைபெற்ற இடம் – ராஞ்சி
- பழங்குடியினக் கிளர்ச்சிகளில் மிக முக்கியமானது.
- முண்டாக்கள் பீகார் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர்.
- ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொதுநில உரிமை முறை அழிக்கப்பட்டது.
- முண்டாக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஜாகீர்தார்களும் திக்காடர்களும். (பெரும் விவசாயி) வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக்கொண்டனர்.
- கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு குண்ட்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர் பெற்றவர்கள்.
- வர்த்தகர்கள், வட்டிக்கு பணம் கொடுப்போர் மூலம் முண்டா இனமக்கள் கொத்தடிமைகளாக வலுக்கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- 1890ல் பழங்குடியினத் தலைவர்கள் எதிர்க்க ஆரம்பித்தனர்.
- பிர்சாமுண்டா குத்தகைக்குப் பயிரிடும் விவசாயிகளின் குடும்பத்தில் 1874 ல் பிறந்தார்.
- ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதன் என அவர் தன்னை அழைத்துக்கொண்டார்.
- பிர்சா முண்டா தம்மை கடவுளின் தூதர் என அறிவித்தார். தனக்கு இறைத்தொடர்பு இருப்பதாகவும் மக்களின் அரசை நிறுவப்போவதாகவும் அறிவித்தார்.
- பழங்குடிகளின் நிலங்களைப் பழங்கடி அல்லாதோர் ஆக்கிரமிப்பதை இவரது தலைமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள்.
- முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார்
- பிரசா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார்.
- 1889 கிறிஸ்துமஸ் நாளில் வன்முறையை தொடங்கினர். ஆங்கிலேயர்களால் புரட்சி கட்டுபடுத்தப்பட்டது.
- 1900இல் பிரசா முண்டா கைது செய்யப்பட்டார்.
- சாயில் ரகப் என்னுமிடத்தில், முண்டா சமூகத்தைச் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள் சேர்ந்த பெண்கள்
- சாயில் ரகப் படுகொலை. பிரசா ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
- ஆங்கிலேய அதிகாரிகள் பிரசாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள்.
- இத்தனைக்குப் பிறகும் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்வதைக் காண முடிகிறது.
- ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900 ஆம் ஆண்டு ஜூன் 9ம் நாளில் தியாகி ஆனார்.
- 1908 இல் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது இதன் மூலம் பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது
தமிழக கிளர்ச்சிகள்
பாளையக்காரர்கள் கிளர்ச்சி (1755-1801)
- பாளையம் என்ற சொல் ஒரு பகுதியையோ, ஒரு இராணுவ முகாமையோ (அ) ஒரு சிற்றரசையோ குறிப்பதாகும்.
- பாளையக்காரர்கள் என்ற தமிழ் சொல் இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது.
- அரசருக்குத் தேவையானபோது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும். பெரும் நிலப்பரப்பையும் வைத்திருப்பவரையே. பாளையக்காரர் என்ற சொல் குறிக்கிறது.
- இந்த முறை தோன்றுவதற்கு முன்னால் சேர்வைக்காரர்களும், தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர்.
- பாளையமுறை அறிமுகமான பிறகு. பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள். தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.
- பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் போலிகார் என்று குறிப்பிட்டனர்.
- வாரங்கல்லை சார்ந்த பிரதாபருத்ரனின் ஆட்சிக்காலத்தில் காகதீய அரசில் இப்பாளையக்காரர் முறை அறிமுகம்.
- 1529 இவ் விஸ்வநாத நாயக்கரின் அமைச்சரான அரியநாதரின் உதவியோடு தமிழகத்தில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை “படிக்காவல்” என்றும் ‘அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது.
- நாயக்கர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பாளையக்காரர்கள் உதவி புரிந்தனர்.
- 17 மற்றும் 18 ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் அரசியலில் பாளையக்காரர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
- நாயக்க மன்னர்களால் 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன.
- 17.18ம் நூற்றாண்டுகளில் பாளையக்காரர்கள் செல்வாக்கோடு காணப்பட்டனர்.
- 200 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கோடு இருந்தனர்.
- தமிழகத்தில் விஜயநகர ஆட்சி விரிவுபடுத்தப்பட்டபோது பாளையக்காரர் முறை வளர்ச்சி பெற்றது.
- பாளையங்கள் (முகாம்கள்) 2 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
1. மேற்கு பாளையம் (முகாம்)
திருநெல்வேலி மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் மறவர்கள் மரவர்களின் தலைவர்-பூவித்தேவர்
உதாரணம் – ஊத்துமலை, தலைவன் கோட்டை நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி. சேத்தூர்
2. கிழக்கு பாளையம் (முகாம்) – தெலுங்கு பாளையக்காரர். திருநெல்வேலிக்கு கிழக்குபகுதியில் வாழ்ந்தவர்கள். தலைவர் கட்டபொம்மன்.
உதாரணம் : சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலக்குறிச்சி:
- இந்த இரண்டு பாளையக்காரர்களும் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- பாளையத்தை பெற்றதற்கு ஈடாக இராணுவ ரே சவையும். ஆண்டு கப்பமும் பாளையக்காரர் மன்னருக்கு செலுத்த வேண்டும்.
- ஆற்காடு நவாப் கர்நாடகப் போருக்கு ஆங்கிலேயரிடம் பெற்ற கடனுக்காக பாளையக்காரரிடமிருந்து வரிவசூல் செய்யும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார். (1792 கர்நாடக உடன்படிக்கை)
- 60 தலைமுறையாக நிலத்தின் மீது உரிமை உள்ளதாக கூறி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு வரிசெலுத்த மறுத்தனர்.
- பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும். மூன்றில் ஒரு பங்கினை இராணுவ செலவிற்கும் மீதியை சொந்த செலவிற்கும் வைத்துக் கொண்டனர்.
பூலித்தேவர் புரட்சி (1755 – 1767)
- தமிழகத்தில் ஆங்கில ஆட்சியை முதலில் எதிர்த்தவர்.
- ஆட்சிப் பகுதி – திருநெல்வேலிக்கு அருகில் இருந்த நெற்கட்டும் செவ்வல்.
ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு பூலித்தேவரால் ஏற்பட்டது.
- இவருடைய ஆட்சி காலத்தில் ஆற்காடு நவாப்பான முகமது அலிக்கும். ஆங்கிலேயர்களுக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்க தொடங்கினர்.
- 1755/இல் மாபூஸ்கான், கர்னல் ஹெரான் தலைமையிலான படையை கொண்டு திருநெல்வேலி சென்று பின் மதுரையை எளிதில் வீழ்த்தினார்
- பின் பூலித்தேவரை வீழ்த்த ஹெரான் நியமிக்கப்பட்டார்.
- மாபூஸ்கான் ஆற்காடு நவாப் அன்வாருதின்கானின் சகோதரர்.
- மதுரை. திருநெல்வேலி பகுதிகளில் பணிபுரிந்த சந்தாசாகிப்பின் முகவர்கள் மியானா முடிமையா, நகோன் கட்டாக்.
அவர்கள் ஆற்காடு நவாப்பான முகமது அலிக்கு எதிராக மேற்கு பாளையக்காரர்களை ஆதரித்தனர்.
- பூலித்தேவர் சிவகிரிப் பாளையக்காரருடன் கூட்டமைப்பினை உருவாக்கினார். இணைந்து பாளையக்காரத்
- எட்டயபுரமும். பாஞ்சாலங்குறிச்சியும் இக்கூட்டமைப்பில் இணையவில்லை. ஆங்கிலேயர்கள் இராமநாதபுரம், புதுக்கோட்டை மன்னர்களின் ஆதரவை பெற்றனர்.
- ஹைதர் அலி மராத்தியருடன் போரிட்டதால் பூலித்தேவருக்கு உதவ முடியவில்லை.
களக்காடு போர் (திருநெல்வேலி)
- திருநெல்வேலி சென்ற மாபூஸ்கானின் படைகளுக்கு ஆற்காடு நவாப் 600 வீரர்களையும், ஆங்கில கம்பெனி 1000 சிப்பாய்களையும் அனுப்பி படைகளை வலுப்படுத்தியது
- திருவிதாங்கூரின் 2000 வீரர்கள், பூலித் தேவரின் படைகளோடு இணைந்தனர்.
- களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
- இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர்.
- திருநெல்வேலி மன்னரின் ஆதரவோடு 1756 1763 வரை பூலித்தேவர் தலைமையிலான திருநெல்வேலி பாளையக்காரர்கள் நவாப்பின் அதிகாரத்தைஎதிர்பதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.
- பூலித்தேவரோடு போரிட யூசப்கான் என்கிற கான்சாகிப், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் நியமிக்கப்பட்டார்.
- கான்சாகிப் மதமாற்றத்திற்குப் பின் மருதநாயகம் என அழைக்கப்பட்டார். மருதநாயகம் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
- 1759 ல் யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் சேவலைத் தாக்கின.
- அந்தாநல்லூரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
- 1760 செப்டம்பரில் பீரங்கி படைகள் வந்தவுடன் யூசுப்கான் நெற்கட்டும் செவலை தாக்கினார்.
- 1761 மே 16 ல் பூலித்தேவரின் மூன்று கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.
1. நெற்கட்டும்செவ்வல்
2. வாசுதேவ நல்லூர்
3. பனையூர்
- பாண்டிச்சேரியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால் பிரெஞ்சு உதவி கிடைக்காது என்பதை உணர்ந்த திருவிதாங்கூர் சேத்தூர் வஊத்துமலை, சுரண்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
- கம்பெனியின் நிர்வாகத்திற்கு முறையான தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதற்காக யூசுப்கான் 1764 இல் தூக்கிலிடப்பட்டார்.
- 1764 இல் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை மீண்டும் கைப்பற்றினார்.
- மீண்டும் 1767 இல் காலின் கேம்பல் என்பவரால் நெற்கட்டும் செவல் மீண்டும் கைப்பற்றப்பட்டது
- பின்னாளில் பூலித்தேவர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார்.
ஓண்டிவீரன்
- பூலித்தேவரின் படைப் பிரிவுகளுக்கு தலைமையேற்றவர்.
- பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப்படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.
- செவிவழிச் செய்தியின்படி ஒரு போரில் அவரது கை துண்டிக்கப்பட்டதாகவும், அதனால் பூலித்தேவர் பெரிதும் வருத்தியதாகவும் தெரிகிறது.
- ஆனால் ஒண்டிவீரன், எதிரியின் கோட்டையில் தான் நுழைந்து பல தலைகளைக் கொய்தமைக்காகத் தமக்கு கிடைத்தப் பரிசு என்று கூறியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் கலகம் (1790-1799)
- 1761 ல் பிறந்தார்.
- 1790 ல் தனது 30 வது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பெற்றார்.
- கட்டபொம்மனின் முன்னோர்கள் 11 ம் நூற்றாண்டில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குடி பெயர்ந்தனர்.
- பாண்டிய பேரரசின் கீழ் கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் வீரபாண்டிபுரத்தை ஆட்சி செய்தார்.
- நாயக்கர் காலத்தில் இவர் பாளையக்காராராக செயல்பட்டார்.
- இவர் மறைவிற்கு பின் வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரர் ஆனர்.
- வீரபாண்டிபுரத்தின் தலைநகர் பாஞ்சாலங்குறிச்சி
- கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை, செவத்தையா. மனைவி – ஜக்கம்மாள் அமைச்சர் -சிவ சுப்ரமணியபிள்ளை.
- 1792 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியுடன், ஆற்காடு நவாப் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படி, வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர்.
- வசூலிக்கப்பட்ட வரியில் 6 இல் 1 பங்கு நவாப்பிற்கு வழங்கப்பட்டது.
- இதன் மூலம் பாஞ்சாலங்குறிச்சியின் குறிச்சியின் வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்.
- இராமநாதபுர ஆட்சியர் காலின் ஜாக்சன் 1798 மே 31 கணக்குப்படி கட்டபொம்மன் கட்டவேண்டிய நிலுவைத்தொகை 3310 பகோடாக்கள் (பகோடா -ரூபாய்) என்றார்.
- கட்டபொம்மன் பஞ்சம் காரணமாக வரி செலுத்த இயலாத சூழ்நிலையை விளக்கி கடிதம் எழுதினார்.
- 1798 ஆகஸ்ட் 18 ம் தேதி தம்மை இராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு ஆணையிட்டார்.
- இராமநாதபுரம் மட்டுமல்லாமல் குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கட்டபொம்மனை சந்திக்க ஜாக்சன் மறுத்தார்.
- கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19 ஆம் நாள் இராமநாதபுரத்தில் கலெக்டரைச் சந்தித்தார்.
- இறுதியாக 1708 செப்டம்பர் 19 அன்று இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்திக்க அனுமதி கிடைத்தது.
- ஜாக்சன் முன்பு கட்டபொம்மன் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்.
- கைது செய்யப்படுவதை உணர்ந்த கட்டபொம்மன் அமைச்சர் சிவசுப்ரமணியத்துடன் தப்பிச் செல்ல முயன்றார்.
- தம்பி ஊமைத்துறை உதவியோடு கட்டபொம்மன் தப்பி சென்றார்.
- அமைச்சர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார்.
- கட்டபொம்மன் சென்னை கவுன்சிலுக்கு ஜாக்சன் தன்னை அவமதித்ததை குறித்து கடிதம் எழுதினார்.
இதன் அடிப்படையில் 1798 டிசம்பர் 15 அன்று வில்லியம் ஓரம். வில்லியம் ப்ரௌனபரிசன
ஜான் காஸாமேஜர் அடங்கிய குழு முன் ஆஜராகும்படி கட்டபொம்மனை கேட்டு கொண்டனர்.
- இதற்கிடையில் ஆங்கில அரசு சிவசுப்ரமணியத்தை விடுதலை செய்தது.
- சென்னை ஆளுநர் எட்வர்ட் கிளைவால் ஜாக்சன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
- புதிய ஆட்சியராக S.R லூஷிங்டன் நியமிக்கப்பட்டார்
- கட்டபொம்மன் நிலுவைத் தொகையில் 1080 பகோடாக்களை தவிர பிற நிலுவைத் தொகையை செலுத்தினார்.
- இச்சமயத்தில் சிவகங்கையின் மருதுபாண்டியர், திண்டுக்கல் கோபால் நாயக்கர், ஆனைமலையின் யதுல் நாயக்கர் ஆகியோரோடு இணைந்து தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கினார்.
இதன் தலைவர் -மருது பாண்டியர்
இந்த அமைப்பு திருச்சிராப்பள்ளி அறிக்கையை வெளியிட்டது.
- கட்டபொம்மன் இக்கூட்டமைப்பில் இணைந்தார்.
இந்த கூட்டமைப்பில் இணைய மறுத்த சிவகிரி பாளையக்காரர் (கம்பெனிக்கு வரி கட்டுபவர்) மீது போர் அறிவித்தார்.
- மே 1799 இல் வெல்லெஸ்லி பிரபுவின் உத்தரவுபடி திருச்சி தஞ்சை.மதுரைப் படைகள் திருநெல்வேலி நோக்கிச் சென்றன.
- 1799 செப்டம்பர் 1 அன்று கட்டபொம்மனை சரணடைய கோரப்பட்டது.
- 1799 செப்டம்பர் 5 அன்று திருவிதாங்கூர். பிரிட்டிஷ் படைகளுக்கு தலைமையேற்ற மேஜர் பானர்மேன் கல்லார்பட்டி என்னுமிடத்தில் பாளையக்காரர்களை தோற்கடித்தார்.
- கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணில் கட்டப்பட்டிருந்தது.
- ஆங்கிலபடை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அனைத்து செய்தி தொடர்புகளையும் துண்டித்தது. கள்ளார்பட்டியில் நடந்த சண்டையில் சிவசுப்பரமணியம் கைது செய்யப்பட்டார்.
- கட்டப்பொம்மன் வீரர்கள் கம்பிரத்துடனும் வீரத்துடனும் போரிட்டார்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
- கர்னல் வெல்ஷ் என்பவர் தனது நினைவு குறிப்புகளில் கட்டபொம்மனது படைவீரர்களின் வீரத்தைப் பதிவிட்டுள்ளார்.
- பிடிப்பட்ட சிவசுப்ரமணியம் செப்டம்பர் 13 ல் நாகலாபுரத்தில் துக்கிலிடப்பட்டார்.
- பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ரகசியங்களை கூறியவர் ராமலிங்க முதலியார்.
- புதுக்கோட்டை களப்பூர் காட்டில் ஒளிந்திருந்த ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் தொண்டைமான்(எட்டையபுர அரசர்) கட்டபொம்மனை பிடித்து -புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத
- பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தபிறகு. பானர்மேன் கைதிகளை பாளையக்கரர்களின் அவைக்கு அழைத்து சென்று, ஒரு விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தார்.
- நாகலாபுரத்தில் சிவசுப்பிரமணியம் சிரைச்சேதம் செய்யப்பட்டார்.
- 1799 அக்டோபர் 16 ல் பாளையக்காரர் அவையில் விசாரணை நடத்தி 1799 அக்டோபர் 16 ல் கயத்தாரில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
- தமிழகத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்குஎதிரான முதல் கலகம் 1799 பாளையக்காரர் கலகம்.
குறிப்பு
- விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது.
- ஐரோப்பிய வணிகர்களை இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது
- திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது.
- பகோடா மரத்தை உலுக்குதல் என்ற சொலவடை இங்கிலாந்து மக்களிடையே நிலவியது. ஒருவரை அதிர்ஷ்டாாலி ஆக்கும் வாய்ப்புகள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன என்ற ஐரோப்பியர்களின் அக்கால மனநிலையை இதன் மூலம் நாம் உணரலாம். தமிழில் இதனை வராகன் என்பர்.
தென்னிந்திய புரட்சி (1800-1801 வரை)
- தென்னிந்திய புரட்சி, மக்களிடையே இருந்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான வெறுப்பின் வெளிப்படாக அமைந்தது.
- மருது சகோதரர்களின் கலகம் தென்னிந்திய புரட்சி என அழைக்கப்படுகிறது. (2 வது பாளையக்காரர் போர்)
மருதுபாண்டியர்
- மூக்கையா பழனியப்பன், பொன்னாத்தாள் இவர்களின் மகன்கள்
1) பெரிய மருது – வெள்ளை மருது
2) சின்ன மருது – மருது பாண்டியன்
சிவகங்கை சிங்கம்
தென்னிந்திய புரட்சியின் கதாநாயகன்
- சின்ன மருது சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடைய தேவரிடம் (1750 -1772) பணிபுரிந்தார்.
1772 ல் ஆற்காடு நவாப்பின் படைகள் சிவகங்கையை கைப்பற்றி முத்துவடுகநாதரை (பெரிய உடைய தேவர்) கொன்றனர்.
போர் நடைபெற்ற இடம் – காளையார் கோவில்
- சிவகங்கை மருது சகோதரர்களால் மீட்கப்பட்டு, முத்துவடுகநாதர் வேலு நாச்சியர் ஆகியோரின் மகளான வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர், மருதுசகோதரர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றானர்.
- 1772 முதல் 1780 வரை வேலு நாச்சியர். வெள்ளச்சி நாச்சியர் கோபாலநாயக்கரின் அடைக்கலத்தில் விருப்பாச்சியில் இருந்த போது பெரிய மருது அரசரக நியமிக்கப்பட்டார். சின்ன மருது அவரது ஆலோசகராக செயல்பட்டார்.
மருதுபாண்டியர்கள், ஆங்கிலேயர்கள் மோதலுக்கான காரணங்கள்
- கட்டபொம்மனின் இறப்பிற்கு பின், அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் மற்றவர்களும் சிவகங்கைக்குத் தப்பினர். அங்கு அவர்களுக்கு மருது சகோதரர்கள் பாதுகாப்பளித்தனர்.
மேலும் சிவகங்கை வியாபரிகள், தங்களது உள்நாட்டு கொள்கையில் கம்பெனியின் தலையீட்டை விரும்பவில்லை.
இந்த இரண்டு கரணங்களுக்காகவே, கம்பெனி சிவகங்கைக்கு எதிராக போர் புரிந்தது.
ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்படுத்திய கூட்டமைப்புகள்
சிவகங்கை – மருது பாண்டியர்
திண்டுக்கல் – கோபால நாயக்கர்
மலபார் – கேரள வர்மா
மைசூர் – கிருஷ்ணப்பா, துண்டாஜி
திருநெல்வேலி – நாகலாபுரம் மன்னர்
இவர்கள் 1800 ஏப்ரலில் விருப்பாட்சியில் உருவாக்கினர். தென்னிந்திய கூட்டமைப்பினை உருவாக்கினர்.
இதற்கு மருதுபாண்டியன், வேலப்பன் தலைமை தாங்கினர்.
- கோயம்புத்தூரில் ஜூன் 1800 ல் ஏற்பட்ட எழுச்சி அதிவேகமாக இராமநாதபுரம், மதுரைக்கும் பரவியது.
உடனே ஆங்கிலேயர்கள் மைசூரின் கிருஷ்ணப்பா மீதும் மலபாரின் கேரளவர்மா மீதும் போர் அறிவித்தனர்.
- ஆங்கிலேயர்களால் கோயம்புத்தூர், சத்தியமங்கலம். தாராபுரம் பாளையக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
- கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமைத்துரையும், செவத்தையாவும் 1801 பிப்ரவரியில் பாளையக்கோட்டை சிறையிலிருந்து தப்பி கமுதியில் பதுங்கியிருந்தனர்.
அவர்களை சின்ன மருது தமது தலைமையிடமான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.
- 1801 பிப்ரவரியில் ஊமைத்துரையும் அவருடன் பாஞ்சாலங்குறிச்சியை கைப்பற்றினர்.
மருதுபாண்டியரால் அனுப்பி வைக்கப்பட்ட மதுரை, ராமநாதபுரத்தை சேர்ந்த 3000 பேர் பாஞ்சாலங்குறிச்சி படைகளுடன் இணைந்து கொண்டனர்.
- ஏப்ரலில் காலின் மெக்காலே தலைமையில் ஆங்கிலப் படைகள் மீண்டும் கோட்டையை கைப்பற்றி கோட்டையை தரைமட்டமாக்கினர்.
- ஊமைத்துரையும், செவத்தையாவும் மருது சகோதரர்களிடம் அடைக்கலமானார்கள்.
இதையடுத்து கர்னல் அக்னியூவும், கர்னல் இன்னம் சிவகங்கையை நோக்கி படையெடுத்துச் சென்றனர்.
- மருது சகோதரர்கள் ஜூன் 1801 ல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்தி திருச்சிராப்பள்ளி.பிரகடனம் (சுதந்திர பிரகடனம்) வெளியிட்டனர்.
- 1801 பிரகடனமே ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது.
- இந்த பேரறிக்கை ஒட்டப்பட்ட இடங்கள்
1) திருச்சியில் உள்ள நவாப்பின் கோட்டைசுவர்
2) ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோவிலின் சுற்றுசுவர்
- சின்ன மருது 20000 வீரர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்று திரட்டினார்.
- ஆங்கிலேயர்கள் வங்காளம், சிலோன், மலேசியா ஆகிய இடங்களில் இருந்து படைகளை வரவழைத்தனர்.
மேலும் புதுக்கோட்டை எட்டயபுரம், தஞ்சாவூர் அரசர்கள் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர்.
- 29 மே 1801 ல் தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை ஆங்கிலேயர்கள் தாக்கினர். இப்போர் சோழபுரம் போர் எனப்பட்டது
மேலும் திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் பிரான்மலை, காளையார் கோவிலுக்கு சென்ற கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
- கிளர்ச்சி தோல்வியுற்றதால் 1801 ல் சிவகங்கை ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்டது.
- 1801 அக்டோபர் 24 ல் மருது சகோதரர்கள் இராமநாதபுரத்தின் அருகில் உள்ள திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
- சிங்கம்புணரி காட்டில் மறைந்திருந்த மருதுபாண்டியரை ஆங்கிலேயரிடம் பிடித்து கொடுத்தவர் -புதுக்கோட்டை அரசர்
- வத்தலகுண்டில் பிடிப்பட்ட ஊமைத்துரை, செவத்தையா 1801 நவம்பர் 16 ல் பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டனர்.
- 73 கிளர்ச்சியாளர்கள் மலாயாவின், பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர். பின்னாளில் வேல்ஸ் இளவரசர் தீவு என அழைக்கப்பட்டது.
- ஜூலை31. 1801 ல் செய்து கொள்ளப்பட்ட கர்நாடக உடன்படிக்கையின்படி தமிழ்நாட்டின் மீது ஆங்கிலேயர்கள் நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றனர்.
இதனால் பாளையக்காரர் முறை முடிவுக்கு வந்தது. ஜமீன்தாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த பகுதிகளில்
- கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்றாலும் தமிழ் மண்ணில் தேசியம் என்ற விதையை விதைத்த முன்னோடிகளாவர்.
வேலுநாச்சியார் (1730-1796)
தந்தை – செல்லமுத்து சேதுபதி. (இராமநாதபுர அரசர்)
கணவர் – முத்துவடுக நாதர் (சிவகங்கை
மன்னர்)
மகள் – வெள்ளச்சி நாச்சியார்
- வளரி, சிலம்பம். குதிரையேற்றம், வில்வித்தையில் திறமையானவராக விளங்கினார்.
- ஆங்கிலம், பிரெஞ்சு உருது மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
- 16 வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.
- 1772 ல் ஆற்காடு நவாப் கர்னல் பான்ஜோர் தலைமையிலான ஆங்கில படைகள் இணைந்து காளையார் கோவில் அரண்மனையைத் தாக்கினர். இதில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்.
- வேலுநாச்சியார் தனது மகளோடு தப்பிச்சென்று திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் 8 ஆண்டுகள் வாழ்ந்தார்.
- விருப்பாட்சியின் பாளையக்காரர் கோபால நாயக்கர் கோபால நாயக்கரை தலைவராக கொண்ட திண்டுக்கல் கூட்டமைப்பில் இடம்
பெற்றவர்கள்
1. மணப்பாறையை சார்ந்த லெட்சுமி நாயக்கர்
2. தேவதானப்பட்டியின் பூஜை நாயக்கர்
திப்பு சுல்தானால் ஈர்க்கப்பட்டவர்
- கோயம்புத்தூரை மையமாக கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார்
- கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையோடு இணைந்து உள்ளூர் விவசாயிகளின் ஆதரவோடு ஆனைமலையில் போர் புரிந்தார்.
ஆனால் பிரிட்டிஸ் படைகளால் 1801 ல் தோற்கடிக்கப்பட்டார்.
- வேலுநாச்சியாரின் தளவாய் (இராணுவ தலைவர்) தாண்டவராயனார். ஹைதர் அலிக்கு எழுதிய கடிதத்தில் ஆங்கிலேயரை எதிர்க்க 5000 குதிரைப்படையும் அனுப்பும்படி உதவி கோரினார். காலாட்படையும். 5000 வேலுநாச்சியார் உருது மொழியில் ஆங்கிலேயரை எதிர்ப்பதை பற்றி தெளிவுபடுத்தினார்.
- ஹைதர் அலி தனது திண்டுக்கல் கோட்டை படைத் தலைவரான செயதிடம் வேண்டிய இராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
- ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கின் மீது வேலுநாச்சியார் தனது படைத்தளபதி குயிலி மூலம் தற்கொலை தாக்குதலுக்கு (1780) ஏற்பாடு செய்தார்.
குயிலி என்பவர் உடையாள் என்ற பெண்கள் பிரிவை தலைமையேற்று நடத்தினார்.
உடையாள் என்பவள் குயிலி பற்றி தகவல் சொல்ல மறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் செய்த பெண்.
- கோபால நாயக்கர் (ம) ஹைதர் அலியின் இராணுவ உதவியோடு 1780 ல் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றினார்.
- மருது சகோதரர்களின் உதவியோடு இராணியாக முடிசூட்டிக் கொண்டார்.
- இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெணமன்னர்- வேலுநாச்சியார்.
- தமிழர்களால் வீரமங்கை எனவும் தென்னிந்தியாவின் ஜான்சிராணி எனவும் அழைக்கப்படுகிறார்.
தீரன் சின்னமலை (1756-1805)
பிறந்த ஊர் – ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு அருகில் உள்ள மேலப்பாளையம்,
இயற்பெயர் – தீர்த்தகிரி
சிறப்பு பெயர் – பழையக்கோட்டை மன்றாடியார்.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர்
கொங்கு நாடு என்பது சேலம், கோவை, கரூர், திண்டுக்கல் பகுதிகளை உள்ளடக்கி நாயக்க அரசின் பகுதியாக உருவாக்கப்பட்டது.
ஆனால் இப்பகுதி மைசூர் உடையார்களால் இணைக்கப்பட்டது.
- மைசூர் உடையார்கள் வீழ்ந்த பிறகு மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டது.
- திப்புவின் திவான் முகமது அலி என்பவரால் இங்கு வரி வசூலிக்கப்பட்டது. திப்புவின் திவான் மைசூருக்கு கொண்டு சென்ற வரிப்பணத்தை தீர்த்தகிரி வழிமறித்து பறித்து கொண்டார்.
- இவர் முகமது அலியிடம் சிவமலைக்கும், சென்னிமலைக்கும் இடையேயுள்ள “சின்னமலையே” வரிப்பணத்தை பிடுங்கியதாக போய் சுல்தானிடம் சொல் என்றார். அதன் பிறகே இவர் தீரன் சின்னமலை என அழைக்கப்பட்டார்.
- பின் திவானின் படைகளும், சின்னமலையின் படைகளும் நொய்யல் ஆற்றங்கரையில் மோதிக்கொண்டன.
இதில் தீரன் சின்னமலை வெற்றி பெற்றார்.
- தீரன் சின்னமலை பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார்.
- திப்புசுல்தானோடு இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர்புரிந்து வெற்றிபெற்றார்.
- நான்காம் மைசூர்போர் விளைவாக கொங்குநாடு ஆங்கிலேயர் வசமானது.
- திப்புசுல்தான் இறந்த பிறகு ஒடாநிலையில் ஆங்கிலேயரை எதிர்த்து போராட ஒரு கோட்டையைக் கட்டினார்.
- கோயம்புத்தூரில் ஆங்கிலேயரை தாக்க மராத்தியர், மருது சகோதரர்களின் உதவியை நாடினார்.
- உதவி கிடைக்காத நிலையில் இவரின் படைகள் மட்டும் கோயம்புத்தூரை தாக்கின. படை தோற்கடிக்கப்பட்டது.
- அங்கிருந்து தப்பித்து சின்னமலை, காவேரி, ஓடாநிலை, அரச்சலூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கில படைகளை தோற்கடித்தார்.
சின்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று
- 1 ) 1801 ல் காவிரிக்கரையில் நடைபெற்ற போர்
- 2 ) 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையில் நடந்த போர்
- 3 ) 1804 இல் நடந்த அரச்சலூர் போர்
- அவரது இறுதிப் போர் 1805 ல் நடைபெற்றது.
- இறுதியாக தனது சமையல்காரர் நல்லப்பன் என்பவரால் தீரன் சின்னமலை காட்டிக் கொடுக்கப்பட்டார்.
- 1805 ஜூலை 31 அன்று சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
வேலூர் புரட்சி (1806)
- கிழக்கிந்திய கம்பெனி 1792 இல் திப்பு சுல்தானுடன் ஏற்பட்ட ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி சேலம், திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களை பெற்றது.
- 1798 ல் தஞ்சாவூர் அரசர் இறையாண்மையை விட்டுக்கொடுத்து கப்பம் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
- 1799 ஆங்கிலேய மைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது.
- ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாப்பை விசுவாசமற்றவர் என கூறி 1801 ல் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
இவ்வொப்பந்தப்படி ஆற்காடு நவாப், வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சிராப்ள்ளி, மதுரை. திருநெல்வேலி ஆகியவற்றை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். நிர்வகிக்கும் அதிகாரங்களை
- நான்காம் மைசூர் போருக்கு பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பணியாளர்கள், வீரர்கள் 3000.பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனால் அவர்கள் வேலூருக்கு குடிபெயர்ந்தனர்.
ஆங்கிலேயர் மீது வெறுப்புணர்வுடன் காணப்பட்டனர்.
- வேலூர் கோட்டையில் பெருமளவு இந்திய வீரர்கள் காணப்பட்டனர். அதில் ஒரு பகுதியினர் 1800 ல் நடைபெற்ற திருநெல்வேலி பாளையக்காரர்கள் கிளர்ச்சியில் பங்கு பெற்றவர்கள்.
- வேலூர் கோட்டையானது தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாக திகழ்ந்தது.
- 1805 ல் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக பல சிப்பாய்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன.
- வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னர் – வில்லியம் பெண்டிங் பிரபு
- வேலூர் புரட்சியின் போது இந்திய கவர்னர் ஜெனரல் – ஜார்ஜ் பார்லோ
- வேலூர் புரட்சியின் போது தலைமை ராணுவ தளபதி – ஜான் கிரடாக்
- 1803 ல் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் (1803-1806) சென்னை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
காரணங்கள்
- 1803 ல் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் என்பவர் சென்னை மாகாண கவர்னரானார். அவரது காலத்தில் (1805-1806ல்) சிலகட்டுப்பாடுநியமிக்கப்பட்டார் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அதனை பின்பற்ற வேண்டுமென இராணுவ வீரர்கள் சென்னை மாகாண படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவரால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- ஜான் கிரடாக் அறிமுகம் செய்த ராணுவ சீர்திருத்தங்கள் வேலூர் புரட்சிக்கு வித்திட்டது.
- சமய அடையாளத்தை நெற்றியில் அணிதல், காதுகளில் வளையம் (கடுக்கன்) அணிதல் ஆகியன தடைசெய்யப்பட்டன.
- முஸ்லீம்கள் தங்களுடைய தாடி மீசைகளை குறிப்பிட்ட அளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
- சிப்பாய்கள் அதனை தங்களை அவமானப்படுத்த ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது எனக்கருதினர்.
- கடுமையான கட்டுப்பாடுகள், புதிய ஆயுதங்கள், புதிய முறைகள் மற்றும் சீருடைகள் என அனைத்தும் சிப்பாய்களுக்கு புதிதாக இருந்தன.
- ஆங்கிலேயர்கள், இந்திய சிப்பாய்களை தாழ்வாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் சிப்பாய்களிடையே இனபாராபட்சமும் காட்டினர்.
உடனடிக் காரணம்.
- 1806 ஜூன் இல் இராணுவத் தளபதி அக்னியூ, ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். அது அக்னியூ தலைப்பாகை என அழைக்கப்பட்டது.
- இந்து, முஸ்லிம் வீரர்கள் ஒன்றாக இதனை எதிர்த்தனர்.
இதற்கு காரணம் இந்த தலைப்பாகையில் இடம் பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம்.
அதன் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் ஆகும்.
இது மிருகத் தோலில் செய்யப்பட்டிருந்தது.
- தலைப்பாகையை அணிய மறுத்தால் 500 முதல் 900 சாட்டை அடியோடு பதவியிலிருந்தும் விலக்கப்பட்டனர்.
- 1806 ஜூன் 17 அன்று, முதல் படைப்பிரிவை சேர்ந்த முஸ்தபாபெக் எனும் சிப்பாய் உயர் அதிகாரியான கர்ணல் போர்ப்ஸிடம் ஆங்கிலேயர்களை அழிப்பதற்கான திட்டம் தீட்டப்படுகிறது. என்றார்.
- வேலூர் கலகத்திற்கு முன் பதே ஹைதர் அலி (திப்புவின் மகன்) மராத்திய, பிரெஞ்சு கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.
- பதே ஹைதர் அலி இரகசிய தகவல்களை முகமது மாலிக் என்பவர் மூலம் பெற்றுக் கொண்டார்.
- வேலூர் புரட்சிக்கு பதே ஹைதர் அலி, மொய்சுதீன் இருவரும் திட்டம் தீட்டினர்.
- 1806 ஜூலை 9 அன்று திப்புவின் மகள் திருமண நிகழ்ச்சிக்காக வேலூர் கோட்டையில் கூடிய சிப்பாய்கள் ஜூலை 10 அன்று கலகத்தை தொடங்கினர்.
- 1806 ஜூலை 10 ம் நாள் முதல், 23 ம் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
- முதல் பலி கர்னல் பான்கோர்ட் (கோட்டை காவல் பிரிவு)
- 2 வது பலி கர்னல் மீக்காரஸ் (23 வது படைப்பிரிவு)
- 3 வது பலி – மேஜர் ஆம்ஸ்ட்ராங்
- 12 ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் லெப்டினெட் எல்லியும், பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவை சேர்ந்தவர்கள்.
- பதே ஹைதர் அலியை அரசராக அறிவித்து ஆங்கில கொடி இறக்கப்பட்டு புலி உருவம் பொறித்த திப்புவின் கொடி ஏற்றப்பட்டது.
- கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படை தளபதியான கர்னல் ஜில்லஸ்பியிடம் காலை 7 மணிக்கு தகவல் கொடுக்க, 9 மணிக்கு வேலூர் கோட்டையை அடைந்தார்.
- குதிரைப்படைக்கு தலைமை வகித்தவர் – கேப்டன் யங்
- கர்னல் ஜில்லஸ்பியால் வேலூர் கலகம் ஒடுக்கப்பட்டது.
- கலகத்தில் 13 ஐரோப்பியர்கள், 350 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
- கோட்டையில் 800 இந்திய சிப்பாய்கள் இறந்து கிடந்தனர். திருச்சியிலும், வேலூரிலும் 600 வீரர்கள் விசாரனைக்காக சிறையிலடைக்கப்பட்டனர்.
- நீதிமன்ற விசாரணைக்குப் பின்
6 நபர்கள் பீரங்கியால் சுடப்பட்டும்
5 நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும்
- ன8 நபர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.
- திப்பு கல்தானின் குடும்பத்தினர் கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர் (6 வருடங்களுக்கு மேல்)
- கலகத்தை அடக்கிய கர்னல் ஜில்லெஸ்பிக்கு 7000 பகோடாக்கள் வெகுமதி அளிக்கப்பட்டது.
சென்னை கவர்னர் – வில்லியம் பெண்டிங்
- தலைமை தளபதி ஜான் கிரடாக்
- உதவி தனபதி -அக்னியூ
ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டனர்.
- புரட்சிக்கான ஏற்பாடுகளை 23 ம் படைப்பிரிவி 2 வது பட்டாளத்தை சேர்ந்த 2 சுபேதர்கள் மற்றும் ஷேக் ஆடமும், ஷேக் ஹமீது, ஜமேதார் ஷேக் ஹீஸைன் ஆகியோரும் 1 ம் படைப்பிரிவின் 1 ஆம் பட்டாளத்தை சேர்ந்த இரு சுபேதார்களும். ஜமேதார் ஷேக் காலிமும் சிறப்பாக செய்தனர்.
- 1806 வேலூர் புரட்சியானது பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு. நந்திதுர்க்கம், சங்கரி துர்க்கம் ஆகிய இடங்களிலும் எதிரொளித்தது.
வேலூர் கலகத்தின் விளைவுகள்
- புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
- வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் புரட்சியினை
- 1857 புரட்சியின் முன்னோடி என்றவர் – V.D. சவார்க்கர்.
- இதனை மறுத்தவர் -K.K. பிள்ளை
- இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடி என்றவர் -N சஞ்சீவி
- மருதுபாண்டியர் போராட்டத்தின் தொடக்கமே வேலூர் புரட்சி என கூறியவர் – ராசப்பன்
வேலூர் புரட்சியின் தோல்விக்கான காரணம்
1) இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை.
2)கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை
3)ஆங்கிலேயர்களின் பிரித்தாளும்கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.
4) கதேச அரசுகள் ஆதரவின்மை
5) நன்கு திட்டமிடாமை
முதல் இந்திய சுதந்திரப் போர் (1857)
- 1857 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக்கு பெரும் சவால் ஏற்பட்டது.
- தொடக்கத்தில் வங்காள மாகாணத்தில் சிப்பாய் கலகமாக உருவெடுத்த இந்த கலகம் பின்னர் குறிப்பாக விவசாயிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றதை அடுத்து நாட்டின் இதர பகுதிகளக்கும் பரவியது.
- இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடத்திய முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.
- இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.
- கிழக்கிந்திய கம்பெனியின் பணியினை புரட்சி முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், இந்திய துணைக்கண்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆங்கில மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
- முதல் இந்திய சுதந்திரப் போரின் போது கானிங் பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார்.
- ஆங்கில வரலாற்று அறிஞர்கள் இப்புரட்சியை சிப்பாய் கலகம், இராணுவக் கலகம். இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர்.
- சர் ஜான் லாரன்ஸ் இக்கலகத்தை வெறும் ராணுவப்புரட்சி என்றும், பிரிட்டிஸ் ஆட்சியை தூக்கியெறிய நடத்தப்பட்ட சதி அல்ல என்றும் கூறுகின்றார்.
- வங்காளப் படையின் ஆங்கிலத் தளபதி கர்னல் மல்லீசன் தனது “வங்காளப்படையின் உருவாக்கம்” (The Making of the Bengal Army) எனும் நூலில் இராணுவ வீரர்களின் கலகம், விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக்கொண்டு தேசிய எழுச்சியாக மாறியது என்றார்.
- எட்வர்டு ஜான் தாம்சன் உண்மையான விடுதலைப் போராட்டம் என கூறினார்.
- 1857 புரட்சியை V.D. சவார்க்கர் முதல் இந்திய சுதந்திரப் போர் எனக் கூறினார்.
- 1909 இல் சவார்க்கர் எழுதிய நூல் இந்திய விடுதலைப் போர் (The war of Indian Independence)
ஆங்கிலேயர்களால் இராணுவப்புரட்சி என அழைக்கப்படும் இந்நிகழ்வு உண்மையில் அமெரிக்க சுதந்திரப் போரைப் போன்ற ஒரு விடுதலைப் போர் என்றார்.
- 1857 கலகத்தை ஆய்வு செய்தவர்கள் R.C. மஜிந்தார். S.N சென்
S.N. சென் கூற்று – 1857 கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி
R.C. மஜிம்தார் கூற்று 1) 1857 ம் ஆண்டுக்கு முன்பு கலகங்கள் ஆங்காங்கே நடைபெற்றது எனவும் அவை 1857 ல் உச்ச வடிவம் பெற்றது என்றார்.
2) 1857 புரட்சியை முதலும் அல்ல, நாடு முழுவதும் அல்ல, முதல் இந்திய சுதந்திர போரும் அல்ல என்றார்.
புரட்சிக்கான காரணங்கள்
1) அரசியல் காரணங்கள்
- வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத்திட்டம் இந்திய அரசர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
- டல்ஹௌசி பிரபுவின் நாடு இணைக்கும் கொள்கை இந்தியர்களிடையே பலத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியது.
- 1840 – 50 களில் இரண்டு கொள்கைகள் மூலம் நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.
1) மேலதிகாரக் கொள்கை
- ஆங்கிலேயர்கள் தங்களை உயர் அதிகாரம் கொண்டவர்களாக கருதி. உள்நாட்டு ஆட்சியாளர்கள், ஊழல்வாதிகள் மற்றும் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.
2) வாரிசு இழப்புக் கொள்கை
- முதலில் இணைக்கப்பட்ட பகுதி – சதாரா (1848)
- 1854 ல் ஜான்சி, நாக்பூர் பகுதிகள் இணைக்கப்பட்டன.
- அவம், சம்பல்பூர், பஞ்சாப் எனும் பகுதியையும் இணைத்துக் கொண்டனர்.
- அயோத்தி நவாப் ஆங்கிலேயருடன் ஒரு நூற்றாண்டு காலம் நட்பு கொண்டிருந்த போதிலும், நல்லாட்சி இல்லையென கூறி 1856 ல் அயோத்தியை இணைத்தார்.
- பிரிட்டிஷ் பகுதியுடன் இணைத்து கொள்ளப்பட்ட பரிமா, அஸ்ஸாம், குடகு, சிந்து, பஞ்சாப் பகுதிகளில் எதிர்ப்புணர்வு அதிகமாக காணப்பட்டது காணப்பட்டது
- முகலாய வம்சத்தின் கடைசி பேரரசரான இரண்டாம் பகதூர் ஷாவிற்கு பிறகு அவரது வாரிசுகள் அரண்மனை. செங்கோட்டையை ஆங்கில அரசிடம் ஒப்படைக்க வற்புறுத்தப்பட்டனர்.
- மராட்டிய தலைவர் இரண்டாம் பாஜிராவின் மரணத்திற்கு பிறகு அவரது வளர்ப்பு மகன் நானாசாகிப்பிற்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.
- முஸ்லீம்கள் ஆங்கில ஆட்சியில் தாங்கள், தங்கள் அதிகாரத்தை இழந்து விட்டதாக கருதினர்.
- முஸ்லீம் பெரும்பாலும் அரசுப் பணிகளையே சார்ந்திருந்தனர். நீதிமன்றங்கள், பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழிகளின் பயன்பாடு ஒடுக்கப்பட்டதால், அரசுப்பணியில் முஸ்லிம்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் குறைந்தது.
2) நிர்வாக காரணங்கள்
- நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் புகுத்தப்பட்டது.
- ஆங்கிலேயரின் நீதி வழங்கும் முறை அதிக செலவு, இயந்திரத்தன்மை. காலவிரயம் கொண்டதாகவும் இருந்தது.
- குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த கமிஷன் – இனாம் கமிஷன் (1852)
- இக்கமிஷனின் அறிக்கைப்படி 21000 தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ஆங்கில நிர்வாகத்தில் அதிகப்படியான பாதிப்பினை ஏற்படுத்தியது நிலவரி முறையாகும். குடியானவர்களும், நிலப்பிரப்புக்களும் அதிகமாக செலுத்த வேண்டிய வரி -நிலவரி.
- அரசியலிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுக்கப்பட்டன.
- நன்றாக கல்வி கற்ற இளைஞர்கள் ஆங்கில வணிகக்குழு நிர்வாகத்தில் நல்ல வேலை கிடைக்குமென்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.
3) பொருளாதாரக் காரணங்கள்
- இந்தியக் கைத்தொழில், நெசவுத் தொழில் அழிவு ஆகியவற்றால் மக்களின் வழ்க்கைத்தரம் பாதிப்பிற்குள்ளாகி, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
- இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்தில் அதிக காப்பு வரியும், ஆங்கில பொருட்களுக்கு இந்தியாவில் குறைந்த இறக்குமதி வரியும் விதிக்கப்பட்டன.
- வங்காள நில குத்தகைச் சட்டத்தை பெண்டிங் பிரபு கொண்டு வந்தார். இதன் மூலம் குத்தகை சுதந்திரம் கொண்ட நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டி கொண்டு வரப்பட்டன.
- கி.பி 19 ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தொடர்ந்து இந்தியாவில் 7 பஞ்சங்கள் ஏற்பட்டன.
- 1833 ல் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நிலம் வாங்குவதற்கான புதிய பண்ணை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- வங்காளம், பீகார் பகுதிகளில் அவுரிச்செடி பண்ணைகளில் இருந்த குடியானவர்கள் இந்த பண்ணை முறையில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
4) சமூக மற்றும் சமயக் காரணங்கள்
- இருப்பு பாதை அறிமுகம், தபால், தந்தி, மேலைநாட்டு கல்வி போன்றவற்றின் மூலம் ஆங்கிலேயர்கள் தங்களை கிறித்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்யவே இந்தியர்கள் கருதினர்.
- ஒவ்வொரு ஆங்கிலேயரும் ஒரு இந்தியரையாவது கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்ய வேண்டும் என்றவர் – R.D. மேங்கல்ஸ்
- 1829 டிசம்பர் 4 விதிமுறை 17 ன்படி வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் வங்கத்தில் ஒழிக்கப்பட்டது
- பெண்சிசுக் கொலை தடுப்பு, விதவை மறுமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்துக்கள் தங்களின் சமய, பழக்கவழக்கங்களில் ஆங்கில அரசு தலையிடுவதாக கருதினர்.
- 1824 ல் கல்கத்தா அருகே பாரக்பூரில் சிப்பாய்கள் கடல்வழியாக பர்மா செல்ல மறுத்தனர்.
- கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று நம்பினார்கள்.
- 1850 இல் இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி சட்டம், கிறித்துவர்களாக மாறியவர்களுக்கும். தங்களின் முன்னோர் சொத்தில் உரிமை வழங்கப்பட்டது.
- கோயில்களுக்கும். மசூதிகளுக்கும் சொந்தமான நிலங்கள் மீது அதிகவரி விதிக்கப்பட்டது.
5) இராணுவக் காரணங்கள்
- இந்திய வீரர்கள் தாடி, மீசைகளை ஒழுங்குபடுத்தி கொள்ள வேண்டும் எனவும், சமயக் குறிகளை நெற்றியில் இடக்கூடாது எனவும், தோலினால் ஆன தலைப்பாகையை அணிய வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.
- இராணுவத்தில் இந்தியபடை வீரர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பதவி – சுபேதார்
- 1856 ம் ஆண்டு கானிங் பிரபு கொண்டு வந்த பொதுப்பணியாளர் சட்டம்.
- இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை ஆங்கில படை வீரர்களை விட 5 மடங்கு அதிகம்.
- வெளிநாட்டு பணியின்போது சிப்பாய்களுக்கு வழங்கப்படும் இரட்டைபடி முறை நீக்கப்பட்டது.
- போர் முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, அலகாபாத் இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- இந்திய சிப்பாய்கள், ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்பட்டனர்
- ஆங்கில வீரர்களைக் காட்டிலும் இந்திய வீரர்கள் குறைவான ஊதியம் பெற்றனர்.
உடனடிக் காரணம்
- இந்திய இராணுவத்தில் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய புதிய என்பீல்டு துப்பாக்கிகளில் பன்றி கொழுப்பு அறிமுகப்படுத்தப்பட்டன.
இதுவே புரட்சிக்கு உடனடி காரணமாக அமைந்தது.
- 1857 மார்ச் 29 ம் நாள் கல்கத்தாவிற்கு அருகிலுள் பாரக்பூர் என்ற இடத்தில் இருந்த 34 வது காலாட்படை பிரிவை சேர்ந்த மங்கள் பாண்டே (வங்காள படைப்பிரிவு) என்ற இளம் பிராமண வீரர் கொழுப்பு தடவிய தோட்டாவை தொடமறுத்து தனது மேலதிகாரியை சுட்டுக் கொன்றார்.
இதுவே புரட்சியின் முதல் பொறி
- பாரக்பூரிலிருந்த காலாட் படைப்பிரிவு மீரட்டிற்கு மாற்றப்பட்டது.
- அம்பாலா, லக்னோ, மீரட் இராணுவக் குடியிருப்புகளில், கீழ்படிய சிப்பாய்கள் மறுத்தனர்.
- 1957-மே மாதம் மீரட் நகரில் தோட்டாக்கள் பெற வேண்டிய 90-வீரர்களில் 5 பேர் மட்டுமே உத்தரவிற்கு அடிபணிந்தனர்.
மீதமுள்ள 85 சிப்பாய்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
- 1857 மே 10 நாள் மீரட்டின் 3ம் குதிரைப்படை பிரிவை சார்ந்த சிப்பாய்கள் சிறையை உடைத்து வீரர்களை விடுதலை செய்தனர்.
உடனே அவர்கள் 11 வது, 20வது காவல்படை பிரிவுடன் இணைந்து டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.
- இதனை மீரட்டின் தளபதி ஹிவுட் என்பவரால் தடுக்க முடியவில்லை.
- புரட்சி மிக வேகமாக பரவியது
லக்னோ, கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார் பைசாபாத் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கலகங்கள் ஏற்பட்டன.
- புரட்சியாளர்களுள் பலர், நிழக்கிழார்களிடம் தாங்கள் கொடுத்த பத்திரங்களை எரிக்க. இதனை ஒரு நல்வாய்ப்பாகக் கருதினார்.
- ஆங்கில அரசு பலருடைய பட்டங்கள். ஓய்வூதியங்களை நீக்கியதால் ஆங்கில அரசை பழிவாங்குவதற்காக புரட்சியில் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லி
- டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் 1857 மே 11 ல் டெல்லியை கைப்பற்றி 2ம் பகதூர்ஷாவை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர் (ஷாஹின்ஷா -இ – ரஹிந்துஸ்தான்) இதனால் டெல்லி 1857 புரட்சியின் மையமாகவும் பகதூர் ஷா அதன் அடையாளமாகவும் விளங்கினார்.
- டெல்லியில் இருந்த லெப்டிணன்ட் வில்டாஷ்பி என்பவரால் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
- டெல்லி கைப்பற்றப்பட்ட உடன் வடமேற்கு மாகாணம், அயோத்தி பகுதிகள் கைப்பற்றபட்டன.
- வட இந்தியாவில் பஞ்சாப், வங்காளத்தை தவிர ஆங்கிலேய ஆட்சி மற்ற பகுதிகளில் காணாமல் போனது.
- முதலாவது உள்நாட்டு கிளர்ச்சி வெடித்த பகுதிகள் – வடமேற்கு மாகாணம், அயோத்தி
- டெல்லியில் பகதூர்ஷா பெயரளவே தலைமை வகித்தார்
உண்மையில் பகத்கான் என்ற தளபதி கலகக்காரர்களை வழி நடத்தினார்.
- கானிங்பிரபு சென்னை, பம்பாய், இலங்கை, பர்மாவிலிருந்து படைகளை வரவழைத்தார்.
- தனது சொந்த முயற்சியின் மூலம் சீனாவிலிருந்து ஆங்கிலப்படைகளை கல்கத்தாவிற்கு வரவழைத்தார்
- விசுவாசமான சீக்கிய பஞ்சாப்படைப்பிரிவு நிக்கல்சன் தலைமையில் வில்சன், லாரன்ஸ் ஆகியோருடன் டெல்லியை நோக்கி சென்றது.
4 மாதத்திற்கு பின் 1857 செப்டம்பர் 20 ல் டெல்லியை மீட்டனர்.
- 2ம் பகதூர் ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அங்கு 1862 ல் தனது 87 வது வயதில் இறந்தார்.
ரோஹில்கண்ட் புரட்சி
- ரோகில்கண்டின் தலைநகர் – பரெய்லி
- ஜூன் மாதத்தில் கிளர்ச்சி ரோஹில்கண்ட் பகுதிக்கு பரவியது.
- பந்தேல்கண்ட் பகுதியும், ஆற்றிடைப்பகுதி முழுவதிலும் உள்ள கிராமங்களும் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது.
- கான் பகதூர் கான் தன்னை பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டார்.
கான்பூர்
- மராத்திய பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் புதல்வனான நானாசாகிப் கான்பூரில் புரட்சியை வழி நடத்தினார்.
- நானாசாகிப் தன்னுடைய படைத்தளபதியான தாந்தியோதோப் மற்றும் அசிமுல்லா என்பவர் உதவியுடன் கான்பூர் கோட்டையைக் கைப்பற்றிக் தன்னை பீஷ்வாவாக அறிவித்து கொண்டார்.
- 1857 ஜூன் 27 அன்று கான்பூர் தளபதி ஹக் வீலர் (பிரிட்டிஷ் தளபதி) சரணடைந்தார்.
கான்பூர் படுகொலை
- கான்பூரில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட 125 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் கிணற்றுக்குள் வீசப்பட்டன. இதுவே கான்பூர் படுகொலை (அ)
- கான்பூரில் சரணடைந்த ஆங்கில வீரர்கள் அலகாபாத்திற்கு திரும்பி செல்ல பாதுகாப்பான வழி அமைக்கப்பட்டது.
அப்போது அவர்கள் பயணம் செய்த பட்டுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால் தளபதி ஹக் வீலர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். இதுவே கான்பூர் படுகொலை.
- கான்பூர் படுகொலைக்கு அடுத்த நாளே கர்னல் ஹாவ்லாக் (ம) கர்னல் ஓநெயில் அடங்கிய படை நாணாசாகிப்பை தோற்கடித்தது.
நானாசாகிப் நேபாளத்திற்கு தப்பி ஓடினார். அவரது நெருங்கிய நண்பர் தாந்தியோதோப்
மத்திய இந்தியவிற்கு தப்பித்து சென்றார். தப்பிய அவர் தூங்கும் பொழுது கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
- 1858 ல் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையார் வில்லியம் ஹோவர்ட் ரஸ்ஸல் கூற்று அலகாபாத்திலிருந்து கான்பூர் வரை கர்னல் நீலின் ஆனைப்படி சென்ற படையினர், 2 நாட்களில் 42 பேரை சாலை ஓரங்களில் தூக்கிலிட்டனர்.
மேலும் கான்பூர் படுகொலைக்கு காரணமான அனைவரும் கொல்லப்பட்டனர்.
- சென்னை மௌண்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த கர்னல் நீலின் சிலையை. ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.
- லக்னோவில் நடைபெற்ற தெருச்சண்டையில் கர்னல் நீல் கொல்லப்பட்டார்.
- நவம்பர் மாதம் கான்பூரை தாந்தியோதோப் மீண்டும் கைப்பற்றினார்.
- பிரிட்டிஷ் தளபதி காலின் கேம்பல் என்பவரால் கான்பூர் மீட்கப்பட்டது (நவம்பர் மாதம்)
- கான்பூர் மீட்பு ராணுவ நடவடிக்கைகள், லக்னோ மீட்பு நடவடிக்கைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.
லக்னோ
- அயோத்தி நவாப் வாஜித் அலியின் மனைவி ஹஸ்ரத் மஹால் கலகக்காரர்களுடன் இணைந்து புரட்சிக்கு தலைமை தாங்கினார்.
அவத் (அ) அயோத்தியில் தாலுக்தார்களும் விவசாயிகளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது.
- ராஜா ஜெய்லால் சிங்கின் தலைமையில் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு லக்னோவைக் கைப்பற்றினர்.
- ஹஸ்ரத் மஹால் தன் மகன் பிர்ஜிஸ் காதரை அவத்தின் அரசராக அறிவித்தார்.
- புரட்சியில் ஹென்றி லாரன்ஸ். கர்னல் நீல் என்ற இரு ஆங்கில தலைமை ஆணையர்கள் கொல்லப்பட்டனர்.
- இறுதியாக காலின் கேம்பல் என்பவரால் 1858 மார்ச் மாதம் லக்னோ மீட்கப்பட்டது. (அ) ஆங்கிலப் படைத்தளபதி ஆட்ராம் (ம) ஹாவ்லாக் என்பவரால் லக்னோ மீட்கப்பட்டது.
- அயோத்தி பேகம் ஹஸ்ரத் மஹால் நேபாளம் சென்று மறைந்து வாழ்ந்தார்.
மத்திய இந்தியா
- மத்திய இந்தியாவில் நடைபெற்ற புரட்சிக்கு ஜான்சிரானி இலட்சுமிபாய்.
கான்பூரிலிருந்து வந்த தாந்தியோதோப் ஆகியோர் தலைமை தாங்கினார்.
- இராணி லட்சுமிபாய் இந்தியாவின் மாபெரும் தேசபக்தர்களுள் இவரும் ஒருவர்.
- டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்புத் கொள்கையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்.
- சர் ஹக் ரோஸ் தலைமையிலான ஆங்கிலப்படை ஜான்சி கோட்டையை முற்றுகையிட்டபோது கல்பிக்கு தப்பி ஓடினார்
- பிறகு தாந்தியோதோப் உதவியுடன் குவாலியர் கோட்டையை கைப்பற்றினர். குவாலியர் அரசர் சிந்தியா தப்பி ஓடினார். மீண்டும் குவாலியரை ஆங்கிலேயர் மீட்டனர்.
- ஜான்சிரானி இலட்சுமிபாய் 1858 ஜூன் மாதம் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்.
- தப்பி சென்ற தாந்தியோதோப் கைது செய்யப்பட்டார்.
கிளர்ச்சியில் ஈடுபட்டது. கான்பூர் படுகொலை ஆகிய குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார் (1858 ஏப்ரல்)
- 1857 புரட்சியின் சிறந்த புரட்சியாளர் என ஹக்ரோஸ் கூறியது ஜான்சிராணி லஷ்மிபாய்.
பீகார்
- பீகாரில் உள்ள ஆராவில் ஜகதீஷ்பூரின் நிலப்பிரபுவும். 80 வயது நிரம்பிய கன்வர்சிங் தலைமை தாங்கினார்.
- இவர் மேற்கு பீகாரின் மிகச்சிறந்த இராணுவ தளபதி
- 1858 ல் அவரின் இறப்பிற்கு பிறகு அவரது சகோதரர் அமர்சிங் புரட்சிக்கு தலைமை தாங்கினார்.
புரட்சியின் தோல்விக்கான காரணங்கள்
- புரட்சியின் தோல்விக்கு முதல் மற்றும் முக்கிய காரணம் ஒற்றுமையின்மை
- புரட்சி நாடு முழுவதும் இன்றி வட இந்தியாவில் மட்டுமே நடைபெற்றது.
- வட்டிக்கு கடன் கொடுப்போர். வியாபாரிகள், படித்த இளைஞர்கள் இப்புரட்சியை ஆதரிக்கவில்லை.
- நவீன கல்வி கற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சி மட்டுமே இந்திய சமுதாயத்தை சீர்திருத்தி நவீனப்படுத்த முடியும் என நம்பினர்.
- வங்காளம், பம்பாய், சென்னை, மேற்கு பஞ்சாப் மற்றும் இராசஜபுதனம் ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்த கொள்ளவில்லை.
- சீக்கியர்கள், ஆப்கானியர்கள், கூர்க்கா படையினர் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்தனர்.
- புரட்சியை அடக்க கூர்க்கா படையினர் ஆங்கிலேயருக்கு உதவினர்.
- தபால், தந்தி, இரயில்வே துறை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தது.
- புரட்சியாளர்களிடையே ஒருமித்த குறிக்கோள் இல்லை
இஸ்லாமியர் -முகலாய அரசு, இந்துக்கள் – மராத்திய அரசு
- ஆங்கில தளபதிகளான லாரன்ஸ், நிக்கல்சன், ஹாவ்லாக் போன்றவர்களுக்கு நானாசாகிப், தாந்தியோதோப் போன்றோர் ஈடானவர்கள் அல்ல.
- 1857-மே 31 ல் துவங்குவதாக திட்டமிடப்பட்ட புரட்சி, முன்கூட்டியே துவங்கியதால் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
- ஆங்கிலேயர் பிரித்தாளும் கொள்கையை கையாண்டனர்.
- இந்தியரிடையே ஒற்றுமையின்மை, தொழில்நுட்பமின்மையால் புரட்சி தோல்வியடைந்தது.
புரட்சியின் விளைவுகள்
- 1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
நிர்வாக முறை மற்றும் அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்ட வழிகோலியது
- கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆங்கில அரசின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
- 1858 ல் கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி கட்டுப்பாட்டு குழுவும், (Board of Control) இ.யக்குநர் குழுவும்(Board of Director) கலைக்கப்பட்டன.
இதற்கு பதில் இந்திய நிர்வாகத்தை கவனிக்க இந்திய செயலாளரும், அவருக்கு உதவி செய்ய 15 உறுப்பினர்களை கொண்ட இந்தியக் குழுவும் அமைக்கப்பட்டது.
- இந்திய தலைமை ஆளுநர் இந்திய வைசிராய் என்று அழைக்கப்பட்டார். வைசிராய் என்பதன் பொருள் – அரசப்பிரதிநிதி
- இந்திய மன்னர்களுக்கு தத்து எடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.
- ஆங்கிலேயர்கள் நாடுபிடிக்கும் கொள்கையை கைவிட்டனர்.
- பீரங்கிப்படை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
- இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான விதை இப்புரட்சியின் மூலம் விதைக்கப்பட்டது.
- இந்தியர்களுக்கு முழு சமய சுதந்திரம் வழங்கப்பட்டது.
- இராணுவத்தில் இந்திய வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
- கிழக்கிந்திய கம்பெனியின் படை கலைக்கப்பட்டு இங்கிலாந்து அரசின் படைகளோடு இணைக்கப்படும்.
- 1853 ம் ஆண்டு சட்டமன்றம் ஐரோப்பிய உறுப்பினர்களை மட்டுமே கொண்டது.
இதனால் 1861 ல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என கூறப்பட்டது.
- காலாட்படையின் கட்டுப்பாட்டை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டன. காலாட்படையில் கூர்காக்கள், சீக்கியர்கள், பதான்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.
- பிரித்தல் மற்றும் எதிர் தாக்குதல் என்ற கொள்கை ஆங்கில இராணுவக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தியது.
விக்டோரியா மகாராணி பேரறிக்கை (1858)
- 1858 நவம்பர் 1 ம் தேதி இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும். முதலாம் வைசிராயுமான கானிங்பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார்.
இது இந்திய மக்களின் மகாசாசனம் (உரிமை சாசனம்) எனப்பட்டது.
இவ்வறிக்கையின்படி இங்கிலாந்து அரசிற்கு பதிலாக அவரது பிரதிநிதி இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
- பெருங்கலகத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ததால் கருணையுள்ள கானிங் என அழைக்கப்பட்டார்.
- 1857 புரட்சி தேசிய இயக்கம் தோன்ற காரணமாக அமைந்தது.
- V.D. சவார்க்கர் தனது “முதல் இந்திய சுதந்திர போர்* என்ற நூல் 1857 புரட்சி ஒரு திட்டமிட்ட தேசிய சுதந்திர போர் என்றார்.
- 1857 சென்னை, மும்பை, கல்கத்தா பல்கலைக்கழகங்கள் தோற்றவிக்கப்பட்டது.
- 1859 டல்ஹௌசியின் வாரிசு இழப்பு கொள்கை திரும்ப பெறப்பட்டது.
- 1859 ல் ஐரோப்பிய படையினர் வெள்ளை புரட்சியில் ஈடுபட்டனர்.
- 1860 ல் இந்திய குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- முதல் சட்ட கமிஷன் தலைவர் மெக்காலே பிரபு
நன்றி வணக்கம்.........
************************************************