இஸ்லாமின் தோற்றம்:
- இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபிகள் நாயகம். முகம்மது நபி மெக்கா நகரில்” பிறந்தார். காலம் (கி.மி 570 632) இஸ்லாம் மதம் அரேபியாவிலுள்ள “மெக்காவில்” தோன்றியது.
- கி.பி 622 இல் நபிகள் மெதினா சென்றார். இந்த ஆண்டிலிருந்து ‘முஸ்லிம் சகாப்தமான” “ஹஜிரா முஸ்லீம் நாட்காட்டி தொடங்குகிறது.
- இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும். மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டதால் அவ்வரசு “கலீஃபா” என்றழைக்கப்பட்டது.
- கலீஃபா என்னும் சொல்லுக்கு இறைத்தூதர் முகம்மது நபிகளின் பிரதிநிதி என்று பொருள்.
- உமையதுகள். அப்பாசிதுகள் தொடக்கால கலீஃபாக்களாகும்.
- இஸ்லாம் சமயம் முதன் முதலில் பாலைவன நாடுகளில் வளர்ந்தது.
- அரேபியர் முதன் முதலில் இஸ்லாம் சமயத்தை பின்பற்றினர். ஆசியாவில் வலிமைமிக்க சமயமாக அரேபியர் மாற்றினர்.
அரேபியர் படையெடுப்பு
இந்தியாவை நோக்கி வர காரணம்:
- அரேபியர் பழங்காலந்தொட்டே இந்தியாவுடன் வணிகங்கள் செய்து கொண்டிருந்தனர். இந்தியாவின் செல்வங்களை பற்றி தெரிந்துக் கொண்டு அதனை கைப்பற்றி, தம் பகுதிகளை வளம் மிக்க பகுதியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
- தென்னிந்தியாவில் மேற்கு (மலபார்). கிழக்கு (கோரமண்டலம்) (சோழ மண்டலம்) கடற்கரையில் குடியேறினர்.
- மலபார் பெண்களை திருமணம் செய்து, அங்கேயே குடியமர்ந்த அரேபியர் “மாப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டனர்.
முகமது பின் காசிம்:
- கலிபா வாலித்(உமையது) என்பவர் காலத்தில் ஈராக் ஆளுநராக இருந்தவர்
அல் ஹஜாஜ் – பின் யூசுப்
அவரின் மருமகன் முகமது பின் காசிம்.
- சிந்துவின் கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி, சிந்து
அரசர் தாகிரை எதிர்த்து தரைவழி, கடல்வழி என இரு தனிப்படை பிரிவுகளை அனுப்பினார். இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன.
- பின்னர் கலிபாவின் அனுமதியுடன் முகமது பின் காசிம் 17-வயதில் சிந்துவின் மீது கி.பி 712-இல் படையெடுத்தார்.
- சிந்துவின் அரசர் தாகிர் (மனைவி ராணிபாய் (பிராமணர்), ஜவ்ஹர் முறையில் இறப்பு)
- சிந்துவின் தலைநகர் – அரோர்
- சிந்துவில் அதிகமாக பிராமணர்கள் இருந்தனர்.
- இப்பகுதியை தாகிரின் முன்னோர்கள் பொத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி நடத்தி வந்தனர்.
- முகமது பின் காசிம் இன் படை பிராமணபாத் வந்து சேர்ந்த நேரத்தில், தாகிரின் முதன்மை அமைச்சர் உதவவில்லை. எனவே காசிம் பிராமணாபாத்தை எளிதில் கைப்பற்றினார். பின்னர் காசிம் -இன் படையால் ரோஹ்ரியில்” தாகிர் கொல்லப்பட்டார்.
- சிந்து வெற்றி பயனற்ற வெற்றி என்றவர் லேன்பூல்
- சிந்துவின் தேபல் துறைமுகத்தை 3 நாளில் கொள்ளையடித்தது. காசிம்படை பின்னர் சிந்துமக்களை சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.
- அடுத்து முல்தான் பகுதியின் மீது படையெடுத்து வெற்றி பெற்றார். இங்கு நிறைய செல்வங்களை காசிம் பெற்றமையால் முல்தான் ‘தங்க நகரம்” என அழைக்கப்பட்டது.
- கொள்ளையடித்ததில் 1/5 பங்கு கலிபாவுக்கு அனுப்பி வைத்தார். காசிம், எஞ்சியதை தனது படைவீரர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.
- இந்துக்களுக்கு சிம்மிகள்” என்ற பாதுகாக்கப்படும் மக்கள் (அ) “இரண்டாந்த அந்தஸ்து” வழங
- அரேபிய பயணிகள் சிந்துவிற்கு வந்தனர். அவர்கள் மூலம் இந்திய எண்முறை ஐரோப்பாவிற்கு சென்றது.
முகமது பின் காசிம் படைகள்:
- 6000 சிரிய நாட்டு குதிரைகள்
- 6000 ஒட்டகங்கள்
- 3000 பாக்டீரிய நாட்டு ஒட்டகங்கள்
- 2000 காலாட்படை
- பாறைகளை எறியும் இயந்திரம் 5
- 25,000 வீரர்கள்
நிர்வாகம்:
- சிந்து முல்தானை நிர்வகிக்க “மாவட்டங்கள் எளிப்படும் இகதார்களாக பிரித்தார். இக்தார்களின் தலைவர்கள் தமது படை அதிகாரிகள்.
முகமது பின் காசிம் முடிவு
- கலிபா வாலித் என்பவருக்கு பின் “சுலைமான் கலிபா என்பவர் பதவிக்கு வந்தார்.
- இவர் ஈராக்கின் ஆளுநர் அல்ஹஜாஜின் எதிரி
- தாகிரின் மகள்களான சூரியதேவி, பரிமளதேவி ஆகிய இருவரையும் காசிம் கைது செய்து அரேபியாவுக்கு அனுப்பிவைத்தார்.
- தாகிரின் மகள்கள் செய்த சூழ்ச்சியால் சுலைமான் கலிபா, முகமது பின் காசிம்மை பதவியிலிருந்து நீக்கி, கைது செய்தார். பிறகு ‘மெசபடோமியா க்கு நாடுகடத்தப்பட்டு அங்கேயே கொல்லப்பட்டார்.
அரேபிய படையெடுப்பின் தாக்கங்கள்:
- “பிரம்ம குப்தர்” எழுதிய “பிரம்ம சித்தாந்தம்” எனும் சமஸ்கிருத நூல் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
- அரேபிய நூல்களில் இந்திய அறிவியலாளர்களான பற்றலா, மானகா, சிந்துபாத் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றன.
- பாக்தாத் நகரின் (ஈராக்கின் தலைநகரம்) மருத்துவமனையில் தலைமை மருத்துவராக “தாணா” என்ற இந்தியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
- கலீபா ஹாருல் குணப்படுத்தினார். அல் ரஷித் என்பவருக்கு இருந்த ஆபத்தான நோயை “மானகா” குணப்படுத்தினார்.
- 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டனர். அதுவரை பூஜ்ஜியத்தின் பயன்பாட்டை அறியவில்லை.
- அரேபியர் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
துருக்கியர் படையெடுப்பு
- கி.பி 8 (ம) 9 -ம் நூற்றாண்டுகளில் பாக்தாத், கலீபாக்களிடம் துருக்கியர்கள் செல்வாக்குடன் இருத்தனர்.
- அரேபியர்களை விட தீவிரமான ஆக்கிரமிப்பு கொள்கை உடையவர்கள்.
- கி.மி 9 – நூற்றாண்டின் இறுதியில் அப்பாசிதுகளின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
இதனிடையே மத்திய ஆசியாவில் அரேபிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பல மாகாணங்கள் தங்களை சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டன.
அதில் ஒன்றுதான் சாமானித் பேரரசு. பிறகு இப்போரசும் உடைந்து பல சுதந்திர அரசுகள் தோன்றின.
- சாமானித் பேரரசில் குரசன் பகுதியில் ஆளுநராக இருந்த துருக்கிய அடிமை அலப்டிஜின் கி.பி 963 -இல் கிழக்கு ஆப்கானில் கஜினிநகரை கைப்பற்றி சுதந்திர அரசாக்கினார், அவரை தொடர்ந்து வாரிசாக வந்த மூவரின் தோல்வியால் உயர்குடிகள் சபுக்டிஜினுக்கு முடிசூட்டினார்.
- சபுக்டிஜின் ஷாகி அரசர் ஜெயபாலரை தோற்கடித்து அம்மாகணத்தில் தம் மூத்தமகன் முகமதுவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
- கி.பி 997-இல் சபுக்டிஜின் இறந்தபோது, கஜினிமுகமது குரசனில் இருந்தார். இதனால் அவரின் இளைய மகன் இஸ்மாயில் என்பவரை வாரிசாக அறிவித்தார்.
- கஜினி முகமது. இஸ்மாயிலை தோற்கடித்து கி.பி. 996 – இல் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
முகமது கஜினி (அ) முகமது ஜாபூலி:
- 971 அக்டோபர் 2 – இல் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கஸ்னா என்ற நகரில் பிறந்தார். யாமினி வம்சத்தை சார்ந்தவர்.
- முகமது கஜினி பதவியேற்பில் அங்கியை அளித்தும், யாமினி -உத்-தவ பேரரசின் வலது கை) என்ற பட்டத்தை வழங்கியும், கலீபா அவரை அங்கீகரித்தார்
முகமது கஜினியின் படையெடுப்புகள்:
- 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினி முகமது 17 முறை இந்தியா மீது படையெடுத்தார்.
- சர் ஹென்றி எலியட் என்பவர் எழுதிய இந்திய வரலாறு என்னும் நூலில் 17 படையெடுப்புகள் பற்றிய செய்தி உள்ளன.
படையெடுப்பின் நோக்கம்:
- இந்துக் கோயில்களை கொள்ளை அடிப்பது, கோயில்களை இடிப்பது சிலைகளை தகர்ப்பது. பிற மதத்தினரை வெட்டிக் கொல்லுவது
- ஆனால்,மக்களை இசுலாம் மதத்திற்கு மாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. S
- கைப்பற்றிய பகுதிகளில் ஆட்சியும் செய்யவில்லை.
1) கஜினி முகமதுவின் முதல் படையெடுப்பு:
1001 இல் சாகி அரசர் ஜெயபாலரை வென்றார். (சாகி அரசு பஞ்சாப் முதல் கழல் வரை பரவியிருந்தது) தோல்விக்குப் பிறகு ஜெயபாலர் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
2) ஜெயபாலரின் மகன் ஆனந்தபாலர் முகமது கஜினிக்கு எதிராக படையெடுத்தார். அவரை 1008 ஆம் ஆண்டு பெஷாவருக்கு (பாகிஸ்தான்) அருகேயுள்ள வைகிந்த் என்னுமிடத்தில் முகமது கஜிவி தோற்கடித்தார்.
3) முல்தான் அரசர் தாவூத் (ஷியா பிரிவு) முகமது கஜினியை முல்தான் நகரை கடக்கவிடாமல் தடுத்தார். தாவூத் மீது கஜினி படையெடுத்து முல்தானை கைப்பற்றினார்
4) நாகர்கோட் (பஞ்சாப்) கோட்டையில் இந்துக்கள் நிறைய செல்வங்களை வைத்திருந்தனர். கிபி 1011 இல் அக்கோட்டையை கைப்பற்றி அனைத்து செல்வங்களையும் கொள்ளையடித்தார்.
5) 1014 -இல் தானேஸ்வரத்தை (டெல்லி) கைப்பற்றி அங்குள்ள சக்கரசுவாமி ஆலயத்தை அழிந்து அதிலுள்ள பொருட்களை கொள்ளையடித்தார்.
6) புனித நகரமான மதுரா மீது கி.பி 1018 இல் படையெடுத்து கைப்பற்றினார்.
7) கன்னோரி மீது கிபி 1019 இல் படையெடுத்தார். அப்பகுதியின் ஆட்சியாளர் ராஜ்யயாலர் கன்னோசியை விட்டு வெளியேறினார்.
(8) கலிஞ்சார் படையெடுப்பு: ராஜியபாலர் இஸ்லாமியருக் அடிபணிந்தது இந்துக்களுக்கு மிகப்பெரிய அவமானம் என்று கருதிய கலிஞ்சரின் சந்தேல் இனத்தைச் சார்ந்த மன்னர் கண்டா குவாலியர் மன்னருடன் சேர்ந்து ராஜ்யயாலர் மீது படையெடுத்தார். பின்னர் முகமது கஜினி கலிஞ்சர் மீது படையெடுத்து கைப்பற்றினார்.
9) சோமநாதபுர படையெடுப்பு கி.பி 1025
- குஜராத் கடற்கரையிலுள்ள கோயில் நகரமான சோம்நாத் (சிவன் கோவில்)
- சோமநாதபுர பகுதியின் மன்னர் சோலாங்கி அரசர் முதலாம் பீமதேவன்.
- முகமது கஜினி 1024 இல் முல்தானிலிருந்து புறப்பட்ட பொழுது ராஜபுதனத்தின் குறுக்கே படையெடுத்து வந்தவரி 1 ம் பீமதேவன்.
கஜினி அவரை தோற்கடித்து அன்கில்வாட் நகரை சூறையாடினார். சோமநாதபுரத்தின் புகழ் மிக்க ஆலையம் தாக்கப்பட்டது.
இப்படையெடுப்பில் 20 இலட்சம் தினார் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றார் (அ) 2 கோடி தினார் பொருட்களை அள்ளிச் சென்றார். இதுவே இந்தியாவின் மீதான அவரின் இறுதி படையெடுப்பாகும்.
- ரோமில தாபர் என்ற வரலாற்று அறிஞர் சோமநாதபுர படையெடுப்பு 13 ஆம் நூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழிப் பதிவுகளில் காணப்படுகின்றன. ஆனால் அதன் சமகால சமணமதச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்தவில்லை என்கிறார்.
- 1029 இவ் ரேய் என்ற ஈரானிய நகரை சூறையாடியதில் கஜினி முகமதுவிற்கு 5,00,000 தினார் மதிப்புள்ள ஆபரணங்கள். 2. 60, 000 தினார் மதிப்புடைய தங்கம், 30,000 தினார் மதிப்புடைய வெள்ளிப்பாத்திரங்கள் கிடைத்தாக கூறப்படுகிறது.
- ஆசிய பகுதிகளில் ஆட்சிசெய்த வலிமை மிக்க இஸ்லாமிய மன்னர்களில் முகமது கஜினியும் ஒருவர்.
- கி.பி 1030 ல் மலோரியா, TB. வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களின் காரணமாக இறந்தார்.
- தான் கொள்ளையடித்ததில் பெரும்பங்கை கல்விக்காகவும். கலைக்காகவும் செலவிட்டார்.
- இவரின் அவைப்புலவரான உட்பி, கிதாப் உத்யாமினியை எழுதினார்.
- கஜினியில் பல்கலைக்கழகம். மற்றும் நூலகத்தையும் அமைத்தார்.
- முகமதுவை இஸ்லாமிய நாயகன்” என இடைக்கால வரலாற்று ஆசிரியர்கள் புகழந்தனர்
- முகமது கஜினிக்கு பிறகு இப்ராகிம் என்பவர் 42 ஆண்டுகளும் பிறகு அவரது மகன் மசூத் 17 ஆண்டுகளும் ஆட்சி செய்தார்.
- வடக்கே கோரிகளிடமிருந்தும். மேற்கே செலிஜிக் துருக்கியரிடமிருந்து ஆட்சிக்கு நிரந்தர அபாயம் இருந்து வந்தது.
- இதனால் கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் லாகூர் பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது. இதுவும் கூட 30 ஆண்டுகளே நீடித்தது.
- முகமது கோரி, லாகூர் பஞ்சாப்யை கைப்பற்றினார். கஜினி வம்சத்தின் கடைசி அரசர் “குரவ் ஷா” 1192 இல் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார், அவரது மரணத்துடன் கஜினி அரசு முடிவுக்கு வந்தது.
- முகமது கஜினியின் அவையில் இருந்த அறிஞர்கள்
1)பிர்தௌசி ஷாநாமாவை எழுதினார்.
2) அப்பருனி கிதாப் உல் ஹிந்த் (அரபு மொழியில் எழுத்தப்பட்ட இந்திய வரலாறு மற்றும் பண்பாடு பற்றியது)
அல்பருனி:
- முகமது கஜினியோடு இந்தியா வந்தார்.
- இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையே பாலமாக இருந்தவர்.
- கணிதம், தத்துவம், வானியல், வரலாறு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.
இந்துமத தத்துவ நூல்களைக் கற்றார்.
- இவர் 10 ஆண்டுகள் இந்தியாவில் தங்கினார்.
- தாகுயூக் கற்றார் உல் தஹிந்த் என்னும் நூலை இயற்றுவதற்கு முன்பாக சமஸ்கிருதம் கற்றார்.
- சோமநாதபுர படையெடுப்பை பற்றி துல்லியமாக தகவல்களை கொடுத்துள்ளார்.
- யூக்ளிடின் கிரேக்க நூலை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- ஆரியபட்டர் கூரிய புவி தன் அச்சில் சுழல்வதால் இரவு பகல் ஏற்படுகிறது என கூறிய செய்திகளை மேலைநாடுகளுக்கு தெரிவித்தார்.
முகமது கோரி கி.பி 1173-1206:
- இயற்பெயர் மொய்கதீன் முகமது
- இந்தியாவில் படையெடுத்த 3 முஸ்லிம் படையெடுப்பாளர்களில் கோரியும் ஒருவர்.
- இந்தியாவில் நிலையான பேரரசை ஏற்படுத்துவது இவரின் நோக்கமாகும்.
- கோரி என்ற இடம் ஹீரட் கஜினிக்கு நடுவே அமைந்த மலைப்பகுதி ஆகும்.
கோரி என்ற இடத்தை ஆட்சி செய்ததால் முகமது கோரி எனப்பட்டார்.
கஜினிக்கு கப்பம் கட்டிய குறுநிலத் தலைவரான கோரி, கஜானாவியப் பேரரசின் வீழ்ச்சியை சாதகமாக்கிக் கொண்டு, முகமது கோரி கஜினியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
- 1175-இல் முல்தான்மீது படையெடுத்து கைப்பற்றினார்.
- 1179- நடைபெற்ற போரில் கோரிமுகமதுவை தோற்கடித்தனர். குஜராத்தின் சாளுக்கியர் அபுமலையில்
- 1186-இல் பஞ்சாப் அரசர் குன்ருமாலிக்கை தோற்கடித்து பஞ்சாப்பை முழுமையாக கைப்பற்றினார்.
முதல் தரைன் போர் கி.பி 1191
- அஜ்மீர் சௌகான்களின் இணுவ முக்கியத்துவம் வாய்ந்த தபர்ஹிந்தா (பதிண்டா) கோட்டையை முகமதுகோரி தாக்கினார்.
- அஜ்மீர் அரசர் பிருத்திவிராஜ் (ராசபுத்திரர்). சௌகான் முகமது கோரி இடையே தானேஸ்வரத்திற்கு அருகே உள்ள தரைன் என்னுமிடத்தில் கி.பி 1191 இல் நடைபெற்ற போரில் முகமதுகோரி தோற்கடிக்கப்பட்டார்.
- போரில் காயமடைந்த கோரியை குதிரைவீரன் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றார்.
- இப்போரை பிருத்திவிராஜ் எல்லைப்புறச் சண்டையாக கருதியதால் அங்கே தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.
இரண்டாம் தரைன் போர் கி.பி 1192
- 1-ம் தரைன்போரில் தோல்வியுற்ற முகமதுகோரி மீண்டும் அஜ்மீர் மீது படையெடுத்தார். கிமி 1192 இல் நடைபெற்ற இரண்டாவது தரைன் போரில் முகமதுகோரி வெற்றிப்பெற்றார்.
- பிருத்திவிராஜ் தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
கோரிக்கு எதிராக சிறியபடை குழுவிற்கு தலைமையேற்று சென்றார். இந்தியாவில் முதல் முஸ்லீம் அரசு அஜ்மீரில் (ராஜஸ்தான்) நிறுவப்பட்டது.
- இந்திய வரலாற்றில் முதன் முறையாக துருக்கிய முஸ்லிம் அரசுகள், இந்திய பகுதியில் நுழைய இரண்டாம் தரைன்போர் வழி அமைத்துக் கொடுத்தது.
- முகமதுகோரி தான் வென்ற இந்தியப் பகுதிகளை நிர்வகிக்க “குத்புதின் ஐபக் என்பவரை நியமித்தார்.
பிருத்திவிராஜ் சௌகானின் மறைவிற்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு “சந்தபரிதை எனும் கவிஞர் பிருதிவிராஜஹாசே” எனும் பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். பிருதிவிராஜனின் மனைவி – சம்யுக்தா சம்யுக்தாவின் தந்தை – ஜெயசந்திரன். |
சந்த்வா போர் (கி.பி 1194)
- முகமது கோரி கனோஜ் பகுதியை ஆண்ட இராஜபுத்திர மன்னர் ஜெயச்சந்திரனுக்கு எதிராக போரிட்டார்.
- காதவாலா அரசின் ஆட்சியாளர் ஜெயச்சந்திரன்.
- சந்த்வா என்ற இடத்தில் நடைபெற்ற போரில், எங்கிருந்தோ வந்த அம்பு ஜெயச்சந்திரனின் கண்ணை துளைத்ததால் ஜெயச்சந்திரன் தோல்வி அடைந்தார்.
- பிருத்திவிராஜ். ஜெயச்சந்திரன் மகளை கடத்தி சென்றதையொட்டி இவருவருக்குமிடையே பகை இருந்தது. இதனால் தனிமைப்பட்டு நின்ற ஜெயச்சந்திரனை எளிதாக கோரி வென்றார்.
வங்காளம், பீகார் படையெடப்பு:
- முகமது கோரியின் படைத்தளபதி “முகமது பின் பக்தியார் கில்ஜி”
- இவர் கி.பி 1202-1203 இல் நாளந்தா (ம)விக்ரம சீல பல்கலைக்கழகங்களை இடித்தார்.
- வங்காளத்தில் உள்ள நடியா (ம) பீகார் பகுதியையும் கைப்பற்றினார்.
முகமது கோரியின் இறப்பு:
- மத்திய ஆசியாவில் உள்ள தனது எதிரிகளை அடக்க முகமதுகோரி கஜினிக்கு திரும்பினார்.
- ஒரு நாள் மாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, ஷியா பிரிவைச் சேர்ந்த புரட்சியாளர்களும் கோகர்களும் சேர்ந்து 1206 மார்ச் 25 இல் அவரை கொலை செய்தனர்.
- இந்திய மண்ணில் துருக்கிய பேரரசை உறுதியாக நிறுவியவர் முகமது கோரி.
- தரைன்போரும். சந்த்வா போரும் இந்தியாவில் துருக்கியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழிவகுத்தன.
- கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் வட்சுமியின் உருவத்தையும் தன் பெயரையும் பொறிக்கச் செய்தார்.
இந்து அரசுகளின் தோல்விக்கான காரணங்கள்:
- அரசியல் ஒற்றுமையின்ம்ை
- ராஜபுத்திரர்கள் போர்ப் பாரம்பரியம் கொண்டவர்கள், துருக்கியரும் ராஜபுத்திரரும் ஒரே மாதிரியான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.
எனினும் படை ஒழுங்கிலும் பயிற்சியிலும் ராஜபுத்திரர்கள் கவனமின்றி இருந்தனர்.
- துருக்கிய குதிரைப்படை, இந்திய குதிரைப்படையை விட மேம்பட்டதாய் இருந்தது.
- ராஜபுத்திர படை யானைகளை மையப்படுத்தி இருந்தது. யானைகளை ஒப்பிடுகிறபோது குதிரைகள் பன்மடங்கு வேகம் கொண்டவை ஆகும்.
இடைக்கால வரலாற்று நூல்கள்:
- தபகத் – அராபியச் சொல்” இதற்கு தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
- தஜிக்-பாரசீகச் செயல்” இதற்கு சுயசரிதை எனப்பொருள்.
- தாரிக் அல்லது தாகுயூக் “அராபியச் சொல்”. இதன் பொருள். “வரலாறு” என்பதாகும்.
நூல்கள்:
1) மின்கஜ் உஸ் சிராஜ் தபகத்-இ-நாசிரி,
இந்நூல் முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1260 வரையிலான் நிகழ்வுகள் குறித்த செய்திகளை கூறுகிறது. (மற்றும்) அரபு மொழியில் எழுதப்பட்ட
- நசிரி என்பது -நஸ்ருதின் முகமதுவை குறிக்கும் (அடிமை வம்சம்)
2) ஹசன் நிசாமி: தாஜ்-உல்-மா-அசிர்
- ஹசன் நிசாமி இல்துமிஷின் இறுதிகாலத்தில் கஜினியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தார்.
- குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது.
- டெல்லி சுல்தானிய வரலாற்றைக் கூறும் நூல்
- அரசின் அனுமதி பெற்ற முதல் நூலாகும்.
3) ஜியா உத்தின் பரணி – தாரிக் – இ-பெரோஸ் ஷாற்றி (1357)
- முகமது பின் துக்ளக் -இன் வரலாற்றாசிரியர்
- இந்நூல் பால்பன் முதல் பெரோஷ் துக்ளக்கின் தொடக்கக்கால ஆட்சிவரை விளக்குகிறது.
4) பெரிஷ்டா – தாரிக் இ -பெரிஷ்டா (16-ஆம் நூற்றாண்டு)
- முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கிறது.
- இந்நூலின் வேறுபெயர் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீகமொழி
5) அல்பருணி – தாரிக் அல் – தபிந்த் (அ) தாகுயூக்-இ-ஹிந்த
- அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்
6) அமிர் குஸ்ரு
- மிஃப்தா உல்ஃபுது – ஜலாலுநீன் கில்ஜியின் வெற்றிகள்
- கஜைன் உல்ஃபுது அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் (பாரசீகம்)
- துக்ளக் நாமா -பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு
7) சம்ஸ் -இ- சிராஜ் அஃபிஃப் – தாரிக் இஃபெரேஸ் ஷாகி
- தில்லி சுல்தானியம் பற்றிய பாரசீக மொழியிலுள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது
8) குலாம் யாஹ்யா பின் அஹ்மத் தாரிக் இ முபாரக் ஷாஹி
- சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீகமொழியில் எழுதப்பட்டது
9) பதானி – தாரிக் இ-பதானி (பதானியின் வரலாறு)
- இந்நூல் 1595 இல் வெளியிடப்பட்டது.
- 3 தொகுதிகளைக் கொண்டது.
- அக்பரின் ஆட்சியைப் பற்றி பேசுகிறது.
10) நிஜாமுதின் அமைத்தபகத் -இ-அக்பரி
- அபுல்பாசலின் மிகைப்படுத்திக் கூறும் பாங்கினை கொண்ட நூல்களைக் காட்டிலும் இந்நூல் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நன்றி வணக்கம்.........