- தாவரங்களை பற்றிய அறிவியல் பிரிவு – தாவரவியல் (அ) Flora
- தாவரவியலின் தந்தை – தியோப்ரஸ்டஸ். (அரிஸ்டாட்டிலின் மாணவர்)
- அரிஸ்டாட்டில் என்பவர் ஒரு கிரேக்க தத்துவ மற்றும் சிந்தனையாளர். இவர் 2400
ஆண்டுகளுக்கு முன்வு வாழ்ந்தவர். இவர் உருவாக்கிய தொகுப்பு இவர் இறந்து 2000 வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தது.
இவர் அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் எனப் பிரித்தார்.
இவர் விலங்குகளை இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப் பிரித்தார்.
- இறுதியாக விலங்குகளை இடப்பெர்ச்சியின் அடிப்படையில் நடப்பவை. பறப்பவை. நீந்துபவை என மூன்று தொகுதிகளாகப் பிரித்தார்.
- முதன்முதலில் மருத்துவ பண்பின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தியவர் அரிஸ்டாட்டில்.
சிறப்பியல்புகள்:
- தாவரங்கள் அனைத்தும் சுயஜீவிகள் தற்சார்பு ஊட்டமுறை.
வளர்நுனிகளை பெற்றுள்ளன.
வரம்பற்ற வளர்ச்சி உடையவை.
செல்கணிகங்கள் உண்டு.
சென்ட்ரோசோம் இல்லை.
- உணவை திரவ நிலையில் எடுத்து கொள்ளும் – ஹோலோஃபைட்டிக்.
உணவை திட நிலையில் எடுத்து கொள்ளும் – ஹோலோஃசோயிக்
- தாவரங்கள் இடம் பெயரும் தன்மை அற்றவை (கிளாமிடோமோனஸ் தவிர)
- தாவரங்களின் சேமிப்பு உணவு ஸ்டார்ச்.
விலங்குகளின் சேமிப்பு உணவு – கிளைகோஜன்,
- பகலில் ஒளிச்சேர்க்கையின்போது CO, வை எடுத்துக்கொண்டு 0, வை வெளியிடும்.
இனப்பெருக்கம்
1. உடல இனப்பெருக்கம்
2. பாலிலா இனப்பெருக்கம்
3. பால் இனப்பெருக்கம்
தாவர வகைப்பாட்டியல் (Taxonomy)
- வகைப்பாடு என்பது Taxis – வகைப்படுத்து (or) முறைப்படுத்துதல் Nomas-விதிமுறைகள் என்ற இரு இலத்தின் சொற்களை கொண்டது.
- வகைப்பாட்டியல் எனும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் அகஸ்டின். பைரமிஸ் டி கேண்டோல்
- இருசொற் பெயரிடுதல் முறையை காஸ்பர்டு பாகின் என்பவர் 1623 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
இம்முறையை லின்னேயஸ் 1753ல்தனது ஸ்பீசிஸ் பிளான்டாரம் புத்தகத்தில் நடைமுறைப்படுத்தினார்.
இவரே “நவீன வகைப்பாட்டியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
- தாவர வகைப்பாட்டியலின் தந்தை – கார்ல் லின்னேயஸ் (ஸ்வீடன்) நவீன தாவரவியலின் தந்தை – கார்ல் லின்னேயஸ்.
- மருத்துவத்தின் தந்தை – ஹிப்போகிரேட்டஸ். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை சாரக்.
- இருசொற்பெயரிடுமுறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் ICBN (அகில உலக தாவரவியல் பெயர் சூட்டும் சட்டம்) அமைப்பில் உள்ளது. தற்போது இது ICN (அகில உலக பெயர் சூட்டும் சட்டம்) என அழைக்கப்படுகிறது.
- இந்தப் பெயர் மாற்றம் July 2011 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தாவரவியல் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது. ICN என்பது பாசிகள். பூஞ்சைகள், தாவரங்களக்குரிய சர்வதேசப் பெயர்சூட்டு சட்டமாக விளங்குகிறது.
இரு சொல் பெயரிடுமுறை: அடிப்படை விதிகள்:
- அறிவியல் பெயர்கள் இலத்தின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- பேரினம் மற்றும் சிற்றினங்கள் என்ற இரண்டு சொற்களால் அழைக்கப்பட வேண்டும்.
- பேரினம் முதல் எழுத்து பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்.
- சிற்றினத்தின் முதல் எழுத்து சிறிய எழுத்துகளில் எழுத வேண்டும்.
- இரு சொற்பெயர்களை அச்சிடும்போது சாய்வாக அச்சிடவேண்டும்.
- கையினால் எழுதும்போது அடிக்கோடு போட வேண்டும்.
உதா) மாமரத்தின் இருசொற்பெயர் பேரினம் – மாஞ்சிபெரா மாஞ்சிபெரா இண்டிகா suc சிற்றினம் – இண்டிகா
இருசொற் பெயரிடுதல்
பொதுப் பெயர் அறிவியல் பெயர்
மனிதன்
ஹோமோ சேப்பியன்ஸ்
வெங்காயம்
எலி
புறா
அல்லியம்சட்டைவம்
ரேட்டஸ் ரேட்டஸ்
கொலம்பா லிவியா
புளிய மரம்
டேமரின்டஸ் இண்டிகா
எலுமிச்சை
சிட்ரஸ் அருண்டிஃபோலியா
வேப்ப மரம்
அசாடிரேக்டா இண்டிகா
தவளை
ரானா ஹெக்சா டாக்டைலா
தேங்காய்
காக்கஸ் நியூசிபெரா
நெல்
ஒரைசா சட்டைவா
மீன்
கட்லா கட்லா
ஆரஞ்சு
சிட்ரஸ் சைனன்ஸிஸ்
இஞ்சி
ஜிஞ்சிபர் அஃபுஸினேஸ்
காரிகா பப்பாய
பேரிச்சை
ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா
- பிரிவுகளின் படிநிலை என்பது வகைப்பாட்டியல் பிரிவுகளை மற்ற உயிரினங்களோடு அவற்றிற்குள்ள தொடர்பினை இறங்குவரிசையில் அமைக்கும் முறையே ஆகும். இந்த முறை லின்னேயஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் இது லின்னேயஸ் படிநிலை என்று அழைக்கப்படுகிறது.
வகைப்பாட்டின் படிநிலைகள் -7
1. உலகம்
2 பிரிவு
3. வகுப்பு
4. துறை
5. குடும்பம்
6. பேரினம்.
7. சிற்றினம்
- வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு – சிற்றினம்.
சிற்றினம்என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் – ஜான்ரே
- கார்ல் லின்னேயஸ் எழுதிய நூல்கள்
1. சிஸ்டமா நேச்சுரே (1758)
2. ஜெனிரா பிளாண்டாரம் (1737)
3. ஸ்பீசிஸ் பிளாண்டாரம் (1753)
- ஸ்பீஷிஸ் பிளாண்டாரம் என்ற நூலில் 4200 விலங்கு சிற்றினங்களையும் விவரித்தார்.
- செயற்கை முறை வகைப்பாட்டை கூறியவர் கார்ல் லின்னேயஸ்.
இயற்கை முறை வகைப்பாட்டை கூறியவர் ஹிக்கர் ஜியார்ஜி பெந்தம், ஜோசப் டால்டன்
மரபு வழி வகைப்பாட்டை கூறியவர் அடால்ப் எங்ளர், கார்ல் பிராண்டல்
- இரண்டு உலக வகைபாட்டை கூறியவர் – கரோலஸ் லின்னேயஸ்.
மூன்று உலக வகைபாட்டை கூறியவர் – எர்னெஸ்ட் ஹெக்கேல். நான்கு உலக வகைபாட்டை கூறியவர் – கோப்லேண்ட் ஐந்து உலக வகைபாட்டை கூறியவர் R.H விக்டேக்கர் (1969) அண்மைக்கால வகைப்பாட்டை கூறியவர் -ஆர்தர் கிராங்விஸ்ட்.
ஐந்து உலக வகைபாடு
1. மொனிரா
2. புரோடிஸ்டா.
3. பூஞ்சைகள்
4. தாவர உலகம்.
5. விலங்கு உலகம்.
1. மொனிரா-9000 க்கும் அதிகமான சிற்றினங்கள்
- தெளிவான உட்கரு இல்லாத ஒரு செல் உயிரிகள்.
- செல்சுவர் உண்டு (பெப்டிடோகிளைக்கான்)
- புரோகேரியாட் உயிரிகள் அனைத்தும். புவியில் முதன் முதலில் உருவான செல் புரோகேரியாட்டிக்
உதா) எக்ஸெரிச்சியா கோலை பாக்டீரியா, வைரஸ், நீலப்பசும்பாசிகள்
2. புரோடிஸ்டா-59950 உயிரினங்கள் – ஒரு செல் உயிரினங்கள்.
- தெளிவான உட்கரு உடைய ஒரு செல் உயிரிகள். (எ.கா) அமீபா, யூக்ளினா, கிளாமிடேமோனஸ்,
- அமீபா – ஹோலோசோயிக் ஊட்டமுறை. யூக்ளினா -கலப்பு ஊட்டமுறை
- நீரில் வாழும் அனைத்து ஒரு செல் தாவரங்களும் பைட்டோப்ளாங்கிட்டன் எனவும்.
அனைத்து ஒருசெல் விலங்குகளும் சூப்ளாங்டன் எனவும் அழைக்கப்படுகிறது.
சூப்ளாங்டன்கள் கொன்று தின்னும் வகையை சார்ந்தவை.
- தாவர வகை புரோட்டிஸ்டுகள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தயாரிப்பவை
2. பூஞ்சைகள் 100000 உயிரினங்கள்
- பச்சையமற்ற ஒரு செல், பல செல் உயிரிகள்.
- பக்சீனியா போன்ற பூஞ்சை ஒட்டுண்ணிகளாகவும். ரைசோபஸ் போன்ற பூஞ்சைகள் மட்குண்ணிகளாகவும் உள்ளன.
- செல்சுவர் கைட்டின் என்ற பொருளால் ஆனது
- இவை தனக்குத் தேவையான ஊட்டப் பொருள்களை உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுதல் மூலம் பெறுகின்றன.
உதா ) மோல்டுகள், மில்டீயூஸ், நாய்க்குடைக் காளான்கள், ஈஸ்டுகள்.
3. தாவர உலகம் -289.640 மேற்பட்ட தாவரங்கள்
- பல செல்களால் ஆன அனைத்து நிலவாழ், நீர்வாழ்த்தாவரங்கள் ஆகும். (எ.கா) ஆல்கா, பிரையோபைட்டா, பெரிடோபைட்டா, ஆஞ்சியோஸ்பெர்ம்கள். ஜிம்னோஸ்பெர்ம்.
தாவர உலகம்:
1. பாசிகள் (அ) ஆல்கா – 40.000 சிற்றினங்கள்
2 பிரையோபைட்டுகள் – 24,000 சிற்றினங்கள்
3. டெரிடோபைட்டுகள் 10,000 சிற்றினங்கள்
4. ஜிம்னோஸ்பேர்ம்கள் – 640 சிற்றினங்கள்.
5. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் 2.55,000 சிற்றினங்கள்.
சில தாவரங்கள் பிறசார்பு ஊட்டமுறை – எ.கா கஸ்குட்டா (ஒட்டுண்ணி) நெப்பந்தஸ் & டிராஸிரா பூச்சியுண்ணும் தாவரங்கள்.
4. விலங்கு உலகம்(அனிமாலியா)
- பல செல்களால் ஆன யுகேரியாட்டிக் உயிரிகள். இவை மெட்டோசோவின்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- நரம்பு செல்கள் காணப்படுவதால் உணர்வுகளைக் கடத்தும் திறன் பெற்றவை.
- அனைத்து விலங்குகளும் பிறசார்பு ஊட்டமுறையை உடையவை
- விலங்கினங்கள் ஒட்டுண்ணிகளாக காணப்படுகின்றன.
(எ.கா) தட்டைப்புழு, உருளைப்புழு.
- ஐந்துலக வகைபாட்டின் குறைகள். முக்கியத்துவம் தரப்படவில்லை. வைரஸ்களுக்கு இந்த வகைபாட்டில்
- அணமைக்கால வகைப்பாட்டை கூறியவர் ஆர்தர் கிராங்விஸ்ட்
தாவரங்களின் வகைப்பாடு:
- தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத் தாவரங்கள் என இரு பெரும் கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- பூவாத் தாவரங்கள் விதைகளை உருவாக்குவதில்லை. விதைகளை உருவாக்குகின்றன. பூக்கும் தாவரங்கள்
- பூவாத் தாவரங்கள் அவற்றின் உடல் அமைப்பினைப் பொருத்து மேலும் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவை ஆல்காக்கள், மாஸ்கள் மற்றும் பெரணிகள் ஆகும்.
1. தாலோஃபைட்டா
- வேர். தண்டு, இலை போன்ற வேறுபாடு அற்ற அமைப்பு காணப்படும். இதற்கு தாலஸ் என்று பெயர்
(எ.கா) ஆல்காக்கள், பூஞ்சைகள்.
ஆல்காக்கள் (அ) பாரிகள்
- இந்திய பாசியியலின் தந்தை -. M. பார்த்தசாரதி
- பாசிகளைப் பற்றிய பாடப்பிரிவு (அ) பைக்காலஜி.ஆல்காலஜி அல்லது பாசியியல் எனப்படும்.
- ஆல்கா என்பது ஒரு லத்தீன் வார்த்தையாகும் (ஆல்காக்கள் கடல் பசிகள்)
- உடலமானது வேர், தண்டு, இலை என்ற வேறுபாடற்றது.
- பச்சையம் உள்ள தாலோஃபைட்டா – பாசிகள்.
பச்சையம் அற்ற தாலோஃபைட்டா – பூஞ்சைகள்.
- ஒரு செல் ஆல்காக்கள் (எ.கா) ஸ்பைருலினா கிளாமிடோமோனஸ். குளோரெல்லா,
பல செல் இலைகளால் ஆன ஆல்கா ஸ்பைரோகைரா. இதன் வேறுபெயர் (Pond Silk (or) Pond Scum) S
- ஒரு செல்லால் ஆன மிகப்பெரிய ஆல்கா – அசிட்டாபுளேரியா.
- காலணி அமைவு கொண்ட ஆல்கா வால்வாக்ஸ்.
- நீலப்பசும் பாசிகளை தவிர மற்ற அனைத்து ஆல்காவும் யூகேரியாட்டிக் உயிரிகள்.
- வேர், தண்டு அமைப்பை பெற்றிருக்கும் பாசி காலர்பா, சர்காஸம்.
- கடல் களைகள் எனப்படுபவை – பழுப்பு பாசி (எ.கா) சர்காஸம்.
- ஆல்காக்களின் சேமிப்பு உணவு ஸ்டார்ச்.
- தன்னிச்சையாக நீரில் நீந்தும் (அ) மிதக்கும் நுண்ணிய ஆல்காக்கள் – பைட்டோ ஃபிளாங்க்டன்கள்.
- கடல்கள், ஏரிகள், ஆழமற்ற கரையோரப் பகுதிகளில் அடியில் ஒட்டி வாழும் ஆல்காக்கள் பெந்திக்
மற்ற தாவரங்களின் மீது ஒட்டிவாழும் ஆல்காக்கள் – எபிபைட்ஸ் பாறைகளில் ஒட்டி வாழும் ஆல்கா லித்தோஃபைட்ஸ்.
- பூஞ்சைகளில் பரிணாம வளர்ச்சி முறை
சொமட்டோகேமி >ஐசோசேமி அனைசோகேமி >ஊகேமி.
- ஆல்காக்களில் காணப்படும் 3 வகையான ஒளிச்சேர்க்கை நிறமிகள்.
1. குளோரோபில் – பச்சையம்.
2. கரோட்டினாய்டு ஆரஞ்சு, சிவப்பு, நீலம்.
3. பிலிபுரதங்கள் – சிவப்பு, நீலம், ஊதா.
- நீரில் கரையும் பிலி புரதங்கள் – பைக்கோ எரித்ரின் (சிவப்பு நிறம்), பைக்கோ சயனின் (நீலநிறம்)
இனப்பெருக்கம்
1. உடல இனப்பெருக்கம் – துண்டாதல் முறையில் நடைபெறும்.
(எ.கா) ஸ்பைரோகையா
2. பாலிலா இனப்பெருக்கம் ஸ்போர்கள் மூலம் நடைபெறும்.
(எ.கா) கிளாமிடோமோனஸ், குளோரெல்லா.
சூஸ்போர்கள் -நகரும் தன்மை உடையது.
ஏபிளானோஸ்போர்கள் நகரும் தன்மை அற்றது.
ஏகைனேட்டுகள் தடிந்த உறை, நகரும் தன்மையற்றது.
3. பால் இனப்பெருக்கம்
- ஏணி இணைவு (ம) பக்க இணைவு (எ.கா) ஸ்பைரோகைரா
- இரு கேமிட்டுகள் இணைகின்றன.
இணையும் இரு கேமிட்டுகள் ஒரே தாலஸில் இருந்து தோன்றினால் அது ஹோமோதாலிக்
வெவ்வேறு தாலஸில் இருந்து தோன்றவது ஹெட்டிரோதாலிக்
- அமைப்பு, செயல், இரண்டிலும் ஒத்த அமைப்புடைய இரு கேமிட்டுகள் இணைவது ஐசோகேமிட் எனப்படும்.
வேறுபட்ட இரு கேமிட்டுகள் இணைவது – ஹெட்டிரோகேமிட்
- ஆல்காக்களின் ஆண் இன உறுப்பு – ஆந்திரிடியம் ஆல்காக்களின் பெண் இன உறுப்பு – ஊகோனியம்(அண்டம்)
- இரு கேமிட்டுகள் இணைந்து உருவாகும் செல் சைகோட்
ஆல்காக்களின் பயன்கள்
- ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பாசிகளை மக்கள் உணவாக உட்கொள்கின்றனர்.
(எ.கா) அல்வா, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை
- சில பாசிகள் வீட்டு விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. (எ.கா) லேமினேரியா, அஸ்கோஃபில்லம்.
- ஆஸில்லடோரியா, அசோலா, அன்பினா, நாஸ்டாக் போன்ற நீலப்பசும்பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்வளத்தை அதிகரிக்கின்றன.
- கிராசிலேரியா, ஜெலிடியம் போன்ற சிவப்பு ஆல்காக்களிலிருந்து அகார் பெறப்படுகிறது.
பாக்டீரியம், பூஞ்சைகளை ஆய்வகங்களில் வளர்க்க வளர்தளமாக அகார் பயன்படுகிறது. அகார்
- லேமினேரியா (கெல்ப்) எனப்படும் பழுப்பு ஆல்காக்களில் இருந்து அயோடின் பெறப்படுகிறது.
பழுப்பு ஆல்காக்களில் இருந்து பெறப்படும் அல்ஜீனிக் அமிலம் ஐஸ்கிரீம், அழகு சாதனப் பொருட்கள் பற்பசைகளில் நிலைபடுத்தும் பொருளாக பயன்படுகிறது.
- டையேட்டம் (கிரைசோஃபைசி) என்ற ஆல்காவில் இருந்து தயாரிக்கப்படும் டயாட்டமைட் தீயில் தாக்கப்படாத பொருட்கள் உருவாக்க பயன்படுகிறது.
- குளோரெல்லா ஃபைரினாய்டோசா ஆக்ஸைடை பயன்படுகிறது. விண்வெளி பயணத்தின்போது கார்பன்டை அகற்றுவதற்கும். மனித கழிவுகளை மட்கச் செய்வதற்கும்
- குளோரெல்லின் என்ற நுண்ணுயிர் கொல்லி குளோரெல்லாவில் இருந்து பெறப்படுகிறது.
- கழிவுநீர்தொட்டிகளில் பயன்படும் ஆல்கா – குளோரெல்லா கழிவுப் பொருளில் அடங்கியுள்ள தூய்மைப்படுத்துகின்றன.
- தனிசெல் புரதம் எனப்படுவது – குளோரெல்லா, ஸ்பைருலினா இவை புரத உற்பத்திக்கு பயன்படுகிறது.
- லித்தோபில்லம், கேரா, மியுகஸ் – உரங்களாக பயன்படுகிறது.
ஆல்காக்களின் தீமைகள்
ஆல்கல் ப்ளும் (Algal Bloom)
- மனித நடவடிக்கைகளால் நீர்மாசுபட்டு அதில் அதிக ஆல்காக்கள் வளர்ந்து நீரில் ஆக்ஸிஜன் குறையும் நிலை.
யூட்ரோபிகேசன்
- கரிம கழிவுகளால் நீர் மாசுபட்டு அதில் அதிக ஆல்காக்கள் வளர்ந்து நீரில் ஆக்ஸிஜன் அளவு குறையும் நிலை.
- செபலூரஸ் வைரசென்ஸ் காஃபி தாவரத்தில் சிவப்புதுருநோய்.
- கடல்பனை என்பது போஸ்டிலியா பால்மிபார்மிஸ் எனும் பழுப்பு பாசியாகும்.
- உலகில் மிக வேகமாக வளரும் கடல் பாசி – கலிபோர்னியா இராட்சத கெல்ப் (பழுப்பு நிற கடல்பாசி)
பூஞ்சைகள்
- இந்திய பூஞ்சையியலின் தந்தை -EJ பட்லர்.
- பூஞ்சைகளை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு மைக்காலஜி
- பச்சையமற்ற தாலோபைட்டா -பூஞ்சைகள்
- ஒரு செல் பூஞ்சை – ஈஸ்ட்
பல செல் பூஞ்சை – ரைசோபஸ், அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ்
இவற்றின் உடலம் மைசீலியம் எனப்படும் ஹைப்பாக்களால் ஆனது.
பூஞ்சையின் செல் சுவரானது கைட்டின் என்ற வேதிப்பொருளால் ஆனது.
பூஞ்சைகளின் சேமிப்பு பொருள் – கிளைக்கோஜன்.
ஒரு சில பூஞ்சைகள் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அவை ஹாஸ்டோரியா எனப்படும் உறிஞ்சு உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவைப் பெறுகின்றன.
(எ.கா) செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா இது வேர்க்கடலைச் செடியைப் பாதித்து,
டிக்கா நோயை உருவாக்குகிறது.
- ஒட்டுண்ணி பூஞ்சைகள் – பக்சீனியா, அல்புகோ பூஞ்சை, பாலிபேரஸ், செர்க்கோ
சாறுண்ணி பூஞ்சைகள் -அகாரிகஸ், ரைசோபஸ்.
கூட்டுயிரி பூஞ்சைகள் – லைக்கன்கள், மைக்கோரைசா.
- தாவரங்களின் வேரில் வாழும் பூஞ்சைகள் மைக்கோரைசா.
- பூஞ்சைகள் ஊடுறுவதற்கும்.உறிஞ்சுவதற்கும் பயன்படும் சிறப்பு உறுப்புகள் ஹிஸ்டோரியங்கள் (அ) ரைசாய்டுகள்.
- கருப்பு ரொட்டி காளான் எனப்படுவது – ரைசோபஸ். மியூக்கா.
பூஞ்சைகளின் வகைப்பாடு
கூட்டுயிரி பூஞ்சைகள்(இணைப்பயிரிகள்)
1. லைக்கன்கள்
- ஆல்கா மற்றும் பூஞ்சைகளுக்கு இடையே காணப்படும் கூட்டுயிரி வாழ்க்கை.
- இதில் ஆல்கா ஒளிச்சேர்க்கை மூலம் உணவை உற்பத்தி செய்யும் பூஞ்சை நீர் (ம) கனிமங்களை உறிஞ்சுவதில் உதவும்.
- ரோசெல்லா மெட்டாய்க்னர் தயாரிக்கப்படுகிறது.
- லைக்கன்கள் காற்று மாசுபடுத்துதலை உணர்த்தும் காற்றில் 50, இருப்பதை சுட்டிக்காட்டும்.
2 மைக்கோலைசர்
- பூஞ்சைகளுக்கும் சில உயர் தாவர வேர்களுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை.
- பூஞ்சைகள் மரத்திலிருந்து ஊட்டங்களை பெறுகின்றன. அதற்கு பதிலாக மண்ணில் மட்கி காணப்படும் புரதத்தை அமினோ அமிலமாக சிதைத்து தாவரங்களுக்கு அளிக்கின்றன.
(எ.கா)பூக், ஓக் போன்ற ஊசியிலை தாவரங்கள்.
பூஞ்சையின் இனப்பெருக்கம்
1. உடலே இனப்பெருக்கம் – துண்டாதல் முறையில்.
2. பாலிலா இனப்பெருக்கம் – ஸ்போர்கள் மூலம்.
சூஸ்போர்கள்-நகரும் தன்மை உடையவை.
ஸ்போராஞ்சியோஸ்போர்கள். கொனிடியோஸ்போர்கள் அற்றவை. நகரும் தன்மை
3. பால் இனப்பெருக்கம்
- ஆண் பெண் பால் உறுப்புகள் ஒரு தாலஸில் தோன்றுவது ஹோமோதாலிக் எனப்படும். ஹெட்டிரோதாலிக் எனப்படும். வெற்வேறு தாலஸில் தோன்றுவது
- பூஞ்சை உடலத்தின் ஒரு பகுதி மட்டும் இனப்பெருக்க உறுப்புகளை தோற்றுவிப்பது யூகார்பிக்
- முழு உடலமும் இனப்பெருக்க உறுப்பாக மாறுவது ஹோலோகார்பிக் எனப்படும்.
பூஞ்சைகளின் பயன்கள்
- பென்சிலியம் நொட்டேட்டம், பென்சிலியம் கிரைசோஜீனம் போன்ற பூஞ்சையிலிருந்து பென்சிலியம் பெறப்படுகிறது.
- ‘பெனிசிலின்’ மருந்துகளின் அரசி என்று கூறுப்படகிறது. இதை சர் அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங் 1928 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
இவர் 1945ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
- பென்சிலியம் கிரிசியோ புல்வம் என்ற பூஞ்சையிலிருந்து தேமல் (ம) சேற்று
புண்ணுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.
- செபலோஸ்போரின் போன்ற நுண்ணுயிரிக் கொல்லிகள் பூஞ்சைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
- பகற்கனவை தூண்டும் பூஞ்சை – கிளாவிசெப்ஸ் பர்ப்பூரியா (உளவு பூஞ்சை)
இரத்தக் குழாயினை சுருங்க வைக்கும் மருந்தாக பயன்படுகிறது.
- குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது -ஆஸ்பர்ஜில்லஸ்.
கிளாவிசெப்ஸ் பர்ப்பூரியா உற்பத்தி செய்யும் எர்காட் ஆல்கலாய்டு (எர்காட்டமைன்)
ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பது -கிளாடோஸ்போரியம்.
- மரபியல் ஆய்வில் பயன்படும் பூஞ்சைநியூரோஸ்போரா
- உண்ணக்கூடிய பூஞ்சை இனங்கள்(அகாரிகஸ்- பொத்தான் காளான்)
அகாரிகஸ் பைஸ்போர்do
அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
வால்வேரியெல்லா வால்வேசியே
வால்வேரியெல்லா டைஸ்போரா
லென்டினஸ் எடோடஸ்.
- பாலாடைகட்டி உற்பத்தி செய்ய பயன்படும் பூஞ்சைகள்
பெனிசிலியம் ராக்கிபோர்ட்டை
பெனிசிலியம் காமம்போட்டி
- வைட்டமின் B, (அ) B தயாரிப்பில் பயன்படுவது -ஆஸ்பியா கோஸ்பி. எதிமோதீசியம் ஆஸ்பியி
- வைட்டமின் B தயாரிப்பில் பயன்படுவது- ஈட்
- ஈஸ்ட் போன்ற சில பூஞ்சைகள் இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகளைக் கொண்டுள்ளன. மாற்றுகின்றன. அவை சர்க்கரைக் கழிவை நொதிக்கச் செய்து எத்தனாலாக
- ரொட்டி தயாரிப்பிலும் ஈஸ்ட் பயன்படுகிறது.
- ஆஸ்பெர்ஜில்லஸ் ஒசைசே. ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் ஆகியவை லாக்டேஸ். அமைலேஸ் நொதிகளை தயாரிக்க பயன்படுகிறது.
- நொதித்தல் மூலம் பெறப்படும் பொருட்கள்
ஒயின் – திராட்சை ரசம்.
பீர் முளைக்கும் ஒட்ஸ்.
கள் – மஞ்சரித் தண்டின் ரசம்.
ரம் – சர்க்கரை ஆலை கழிவுப்பாகு-
பூஞ்சைகளால் எற்படும் தீமைகள்
தாவர நோய்கள்
1. பருத்தி – வாடல் நோய் -ஃபியூசேரியம் ஆக்ஸிஸ்போரம்.
2. கடலை -இலைப்புள்ளி (டிக்கா) – செர்கோஸ்போரா பெர்சொனேட்டா
3. கரும்பு – சிவப்பு அழுகல் நோய் – கொலிட்டோடிரைக்கம் பல்கேட்டம்.
4. நெல் – பிளாஸ்ட் நோய் -பைரிகுலேரியா ஒரைசே.
5. முள்ளங்கி – வெண்துருநோய் அல்புகோ கேண்டிலா.
மனிதர்களில் பூஞ்சை நோய்கள்
1. தேமல், வண்ணான்படை மைக்கோசிஸ் Ringwarm
2 கால் பாத தடிப்பு நோய் – மனியா பெடிஸ்.
3. பொடுகு -மைக்கோஸ்போரம் ஃபர்ஃபர்
4. சேற்றுப்புண் – எபிடெர்மோபைட்டான் பிளாக்கோசம்.
5. மாட்டு கொம்பு (அ) முடிமீது வளருவது – கரோட்டினோபிலஸ்
- ஜிப்பெரெல்லா புயூஜிகுரை எனும் பூஞ்சையை உற்பத்தி செய்யும் ஜிப்ரெல்லின் தாவரங்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
- M.O. பார்த்தசாரதி அவர்கள் வால்வகேல்ஸ் பற்றி தனிக்கட்டுரை வெளியிட்டுள்ளார். ஃபிரிட்சியல்லா, எகிபல்லோசிஸ்டாப்சிஸ். கேராசைஃபான், சிலிண்ட் சோகேப்சோப்சிஸ் ஆகிய புதிய பாசி இனங்களைக் கண்டறிந்தார்.
- மிகத் தொன்மையான ஆல்கா கிரிப்பேனியா என பதிவு குறிப்பில் உள்ளது.
இது ஏறத்தாழ 2100 மில்லியன் ஆண்டுகள் பழமையானது வடக்கு மிச்சிகனில் இரும்பு
படிம தோன்றல்களில் கண்டறியப்பட்டது.
- குளோரோஃபைசி பொதுவாக பசும்பாசிகள்’ என அழைக்கப்படுகிறது.
- ஃபியோஃபைசி வகுப்பைச் சார்ந்த பாசிகள் ‘பழுப்புப்பாசிகள்’ என அறியப்படுகின்றன.
- ரோடோஃபைசி பொதுவாக ‘சிவப்புப்பாசிகள்’ என அறியப்படுகின்றன.
- பாட்ரியோகாக்கஸ் பிரோனி எனும் பசும்பாசி உயிர் எரிபொருள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. அரோக்கியத்தை காப்பதில் இராட்சத கடற்பாசிகள் அயோடின் நிறைந்த ஆதாரப் பொருட்களாகும்.
- குளோரெல்லா தனி செல் புரதமாக பயன்படுத்தப்படுகிறது. உப்பளங்களில் வளரும் டுனாலியல்லா சலைனா எனும் பாசி உடல்நலத்திற்கு தேவையான கரோட்டினைத் தருகிறது.
- கப்பாபைகஸ் ஆல்வர்ஜே. கிராசிலேரியா எடுலிஸ், ஜெலிடியெல்லா ஏசரோசா போன்ற பாசிகள் பாசிகூழ்மங்கள் அறுவடைச் செய்ய வணிகரீதியில் வளர்க்கப்படுகின்றன.
- கடல்பனை என்பது போஸ்டிலியா பால்மிபார்மிஸ் எனும் பழுப்பு பாசியாகும்.
- சிவ் ராம் காஷியாப் இந்தியப் பிரைலோலஜியின் தந்தை என அறியப்படுகிறார்.
இவர் ‘லிவர்வொர்ட்ஸ்’ ஆப் வெஸ்டர்ன் ஹிமாலயாஸ் அண்ட் பஞ்சாப் பிளெயின்ஸ் என்ற நூலை வெளியிட்டார்.
அட்ச்சின்சோனிஸல்லா, சாச்சியா சிவார்டியெல்லா மற்றும் ஸ்டீபன் சோனியெல்லா போன்ற புதிய பேரினங்களை இவர் கண்டுபிடித்துள்ளார்.
பிரையோபைட்டா
- மேம்பாடு அடையாத நிலவாழ்த் தாவரம்.
- முதல் நிலத்தாவரம் (First land plant) என அழைக்கப்படுகிறது.
- சைலம், புளோயம் அற்ற கிரிப்டோகேம்கள் திசுக்கள் அற்ற கிரிப்டோகேம்கள்) பிரையோபைட்டுகள் {வாஸ்குலார்
- உண்மையான வேர், தண்டு, இலை கிடையாது, உடலம் தாலஸ் எனப்படும்.
- தண்டு, இலை போன்ற வேறுபாடு உடைய பிரையோபைட்டு வகுப்பு – மஸ்ஸை.
- நிலத்தை ஆக்கிரமித்த முதல் தாவரம் – பிரையோஃபைட்டு,
- தாவர உலகின் நீர்நில வாழ்வன(இருவாழ்விகள்) பிரையோபைட்டுகள்.
- வேரின் வேலையை தூவி போன்ற வேரிகள் (ரைசாய்டுகள்) செய்கின்றன.
பிரையோபைட்டுகள் 3 முக்கிய வகுப்புகளை உடையது.
1. ஹெப்பாட்டிக்கே (ஈரல் வடிவம்) -(எ.கா) (ரிக்ஸியா.
2 ஆந்தோசெரோட்டே (கொம்பு வடிவம் ) – (எ.கா) ஆந்தோசெராஸ்.
3. மஸ்ஸை (மாஸ்கள்) – (எ.கா) பியூனேரியா.
இனப்பெருக்கம் 2 முறை
1 பால் இனப்பெருக்கம்.
2. பாலிலா இனப்பெருக்கம்.
- இவை நீரின்றி இனப்பெருக்கம் செய்ய இயலாது (இருவாழ்விகள்).
- பிரையோபைட்டுகளில் மட்டும் கேமிட்டுகள் உருவாவதற்கு மூன்று மைட்டாசிஸ் பகுப்பு:நடைபெறும்.
- பிரையோபைட்டுகளில் ஆண் இனப்பெருக்க உறுப்பு ஆந்திரிடியம் (அ) ஆந்த்ரோசுலாய்டுகள்.
- பெண் இனப்பெருக்க உறுப்பு – ஆர்க்கிகோணியம் (அ) அண்டம்.
- பக்ஸ்பாமியா ஏபில்லா, கிரிப்டோ தாலஸ் மிராபிலிஸ் போன்றவை சாற்றுண்ணி வகை பிரையோஃபைட்களாகும்.
பிரையோபைட்டுகளின் பயன்கள்
- மண் அரிப்பினை தடுக்கின்றனன் .
- ஸ்பேக்னம் அதிக அளவு நீரை உறிஞ்சுவதால் நாற்றங்கால்களில் பயன்படுகிறது.
வெட்டப்பட்ட தாவர பகுதியை ஈரமாக வைத்துக்கொள்ள ஸ்பேக்னம் பயன்படுகிறது. மேலும் ஸ்பேக்னம் புரை தடுப்பானாகவும், உறிஞ்சு பொருளாகவும்
மருத்துவமனைகளில் பயன்படுகிறது.
- பீட் என்பது நிலக்கரியைப் போன்ற விலை மதிப்புடைய எரிபொருளாகும். இது ஸ்பேக்னம் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
பீட் விலை மதிப்புற்ற எரிபொருள் (அழுத்தப்பட்ட தொல்லுயிர்)
- மலைபிரதேசங்களில் மாஸ்கன் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
- மாஸ் பாலிமார்பாவிலிருந்து எலும்புருக்கி நோய்க்கு மருந்து கிடைக்கிறது.
மாஸ்கள்:
- தாவர உடலானது உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகள் என வேறுபாடற்றுக் காணப்படுகிறது.
- இவை நீரை விரும்புபவை. வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய இவற்றிற்கு ஈரப்பதம் அவசியமாகிறது. எனவே இவை இருவாழ்வி தாவரங்கள் அழைக்கப்படுகின்றன.
டெரிடோஃபைட்டுகள் (பெரணிகள்)
- வாஸ்குலார் திசுவுடைய பூவாத் தாவரமாகும். (சைலம் + புளோயம் )
- வேர், தண்டு, இலை போன்ற வேறுபாடு காணப்படும்.
- முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனை பெற்ற பூவாத்தாவரங்கள்.
இவை நிழலான ஈரப்பதம் மிகுந்த மற்றும் குளிர்ந்த பகுதிகளில் வாழ்பவை.
(от.л)
செலாஜினெல்லா, நெப்ரோலெப்பீஸ் – பெரணி தாவரம்.
அடியாந்தம் – மங்கையர் கூந்தல் பெரணி. மார்சிலியா நீர் பெரணி,
ஈகியுசிட்டம் – குதிரைவால் பெரணிகள்
- டெரிடோஃபைட்டுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன அவை
1. சைலாப்சிடா (எ.கா. சைலோட்டம்)
2. லைக்காப்சிடா (எ.கா. லைக்கோபோடியம்)
3. ஸ்பீனாப்சிடா (எ.கா. ஈகுசீட்டம்)
4. மராப்சிடா (எ.கா நெஃரோலைப்பிஸ்)
- ‘லைக்கோபோடியம்’, கிளப் மாஸ் எனப்படுகிறது ஈக்விசிட்டம் குதிரைவால் எனப்படுகிறது.
- விதை தாங்கும் தாவரங்களின் முன்னோடி – செலாஜினெல்லா. செலாஜினெல்லாவின் சிறப்பு பண்பு – ரைசோபோர்.
- பெரணிகளின் இளம் இலைகள் சுருண்டு காணப்படும் அமைவு சர்ச்சினேட் தளரிலை அமைவு.
- ஸ்போரகங்களை உடைய இலைகள் – ஸ்போரேயில்கள்
- டெரிடோஃபைட்டுகளின் ஸ்போர்கள் ஒரே அளவிலும், வடிவத்திலும் இருந்தால் ஹோமோஸ்போரஸ் எனப்படும்.
அளவிலும் வடிவத்திலும் வேறுபாடு இருப்பது ஹெட்டிரோஸ்போரஸ் எனப்படும்.
- டெரிடோஃபைட்டுகளின் சைலத்தில் ட்ரக்கீடுகள் மட்டுமே உண்டு. சைல்க்குழாய்கள் Σούσιου
- புளோயத்தில் சல்லடை செல்கள் காணப்படும், துணைச்செல்கள் இல்லை.
பயன்கள்
- பெரணிகள்அழகுத் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன.
- மார்ஸிலியா (நீர்பெரணி) ஆதிவாசிகளால் உண்ணப்படுகிறது.
- ட்ரையாப்டெரிஸ் வயிற்று பூச்சி (நாடாப்புழு) அகற்றியாக பயன்படுகிறது.
- லைகோபோடியம் மருந்தாக பயன்படுகிறது.
- உயிரி உரமாக பயன்படுவது – அசோல்லா.
பூக்கும் தாவரங்கள் (பெனரோகேம்கள்)
- பூக்கும் தாவரங்கள் அவை உண்டாக்கும் கனியுறுப்பைப் பொருத்து ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதை தாவரம்)
- ஜிம்னோ -திறந்த, ஸ்பெர்ம் – விதை (கிரேக்கச் சொல்)
- வேர், தண்டு, இலை வேறுபாடு உடைய தாவரம்.
- பல்லாண்டு வாழ் தாவரங்கள் கட்டைத் தன்மை உடையவை, பசுமை மாறாதவை மற்றும் உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகளை உடையவை.
- வாஸ்குலார் கற்றைகள் உடையவை. சைலத் திசுக்கள் சைலக்குழாய்கள் மற்றும் புளோயத்திகக்கள் துணை செல்கள் இன்றியும் காணப்படுகின்றன.
- சூல்கள் திறந்தவை. மற்றும் சூற்பை அற்றவை. எனவே இவை கனிகளை உண்டாக்குவதில்லை. திறந்த விதைகளை உடையவை (எ.கா) பைனஸ், சைகஸ்
- மகரந்தசேர்க்கை காற்றின் மூலம் நடைபெறும் (அனிமோபில்லி)
- ஆஞ்சியோஸ்பெர்ம்மை ஒத்து காணப்படும் ஜிம்னோஸ்பெர்ம் – நீட்டம்.
- நன்கு வளர்ச்சி அடைந்த சைலம். புளோயம் திசுக்கள் உள்ளன.
- சைகஸ் தாவரத்தில் காணப்படும் பவழவேர்கள் நீலப்பசும் பாசிகளுடன் கூட்டுயிர் வாழ்க்கை நடத்துகிறது.
- பைனஸ் தாவரத்தின் வேர்கள் மைக்கோரைசா பூஞ்சையுடன் கூட்டுயிர் வாழ்க்கை நடத்துகிறது.
- ஒருபால் வகை தாவரங்கள் சைகஸ்
இருபால் வகை தாவரங்கள் – பைனஸ்
- ரோஸ் கட்டை – பால்பெர்ஜியா
சிவப்பு கட்டை ஜிம்னோஸ்பெர்ம். செக்கோயா (364 அடி உயரம்) மிக உயரமாக வளரும்
- துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தாவரம் ஜிங்கோ பைலோபா.
- பைனிட்டிஸ் சக்ஸினிஃபெரா என்ற ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் ஆம்பரை உற்பத்தி செய்கின்றது.
ஆம்பர் அழிந்துபோன உயிரினங்களை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
- மலர் போன்ற அமைப்பு கொண்ட ஜிம்னோஸ்பெர்ம் -நீட்டம், எபிட்ரா
ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாடு:
- ஜிம்னோஸ்பெர்ம்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அவை
1. சைக்கடேல்ஸ்
2. ஜிங்கோயேல்ஸ்
3. கோனிஃபெரேல்ஸ்
4. நீட்டேல்
சைக்கடேல்:
- இவை பனைமரம் போன்று நேராகவும் கிளைகள் இல்லாமலும் வளரும் – சிறிய தாவரங்கள்.
லிங்கோயேல்ஸ்
- இவை விசிறி வடிவ இலைகளை உடைய பெரிய தாவரங்களாகும். இந்தத் தொகுப்பிலுள்ள ஒரே வாழும் தாவரம் ஜிங்கோ பைலோபா ஆகும். இந்தத்தாவரம் துர்நாற்றத்தை ஏற்படுத்தப்கூடியது.
கோனிஃபெரேல்ஸ்
- இவை கூம்பு வடிவ பசுமை மாறாத் தாவரங்கள். இவற்றில் ஊசி போன்ற அல்லது செதில் போன்ற இலைகள் காணப்படுகின்றன. விதைகள் இறகு வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும். இவை பெண் கூம்பினுள் உருவாகின்றன. எ.கா பைனஸ்
நீட்டேல்ஸ்
- இவை சிறிய வகைத் தொகுப்புத் தாவரங்கள். இவை ஆஞ்சியோஸ்ஃபெர்மகள் போன்ற உயர் பண்புகளைக் கொண்டுள்ளன எ.கா. நீட்டம்
பயன்கள்
- காகித உற்பத்தியில் பயன்படுவது – செட்ரஸ் அகாத்திஸ்
- அழகு தாவரமாக பயன்படுவது – அரக்கேரியா (குரங்கின் புதிர்)
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – டாக்ஸஸ் பிரிவிஃபோலியா
- ஆஸ்துமா (ம) சுவாச கோளாருகளுக்கு பயன்படுவது – எஃபிட்ரைன்.
- சல்பர் மழை (அ) மஞ்சள் மழையை தோற்றுவிப்பது தூள்கள். பைனஸ் தாவரத்தின் மகரந்த
பைனஸ்தாவரத்தின் ரெசினிலிருந்து டர்பன்டைன் பெறப்படுகிறது.
- பைன். செங்கட்டை ஃபிச் மற்றும் செட்ரஸ் போன்றவை மரச்சாமான்கள் பென்சில் மற்றும் தீக்குச்சிகள் தயாரிக்க பயன்படுகின்றன.
- பைனிலிருந்து மாங்கட்டை எண்ணெய், ரெசின் போன்றவை கிடைக்கின்றன. ரெசின்கள் வண்ணங்கள், பயன்படுகின்றன. ஆயின்ட்மெண்டுகள் வார்னிஸ்கள் தயாரிக்கப்
- நீட்டம் -மூட்டு வாதத்தைக் குணப்படுத்துகிறது.
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவம்
- ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது காகிதத் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்குப் பயன்படுகிறது எ.கா பைனஸ்.அகாத்திஸ்
- ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத்திற்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப் பலகைகள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன. எ.கா. செட்ரஸ், அகாதிஸ்
- பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன் எண்ணெய் வண்ணப் பூச்சு தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் பிற வலிகளுக்கான நிவாரணியாகவும் பயன்படுகிறது.
- பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்கு பயன்படக்கூடியவை.
- அராவ்கேரியா பிட்வில்லி ஒரு அழகுத் தாவரம்.
ஆஞ்யோஸ்பெர்ம்கள் (பெனரோகேம்கள்)
- பூக்கும் தாவரங்களின் ஒருமிகபெரியதொரு தொகுதியாக ஆஞ்சியோஸ்பெர்ம்கள் உள்ளன.
- ஆஞ்சியோஸ்பெர்ம் (Angiosperms) என்னும் சொல்லானது ஆஞ்சியோ மற்றும் ஸ்பெர்மா எனும் இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்.
ஆஞ்சியோ என்பதன் பொருள். பெட்டி அல்லது மூடிய பெட்டி எனப்படும்.
ஸ்பெர்மா என்பதன் பொருள் விதை எனப்படும்.
இவை வளரியல்பின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1.சிறு செடிகள் (சொலானம் மெலாஞ்சினா – சுந்தரிச் செடி).
2புதர்ச்செடிகள் (ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ் செம்பருத்தி)
3 மரங்கள் (மாஞ்சிஃபெரா இன்டிகா – மாமரம்)
- தாவர உடலானது உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகள் என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது.
- புல்லி வட்டம், அல்லி வட்டம். மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் என நான்கு அடுக்குகளைக் கொண்ட மலர்களை உருவாக்குவதால் இவை பூக்கும் தாவரங்கள் எனப்படுகின்றன.
- பெண் இனப்பெருக்க உறுப்பான சூலகம் கனியாகவும், சூல்கள் விதைகளாகவும் உருவாகின்றன.
- வாஸ்குலார் திசுவான சைலம், சைலக் குழாய்களையும் மற்றும் புளோயம் துணை செல்களையும் கொண்டுள்ளன.
- இக்குழு ஏறக்குறைய 2.60,000 உயிர்வாழ் தாவரங்களை கொண்டது.
- இரண்டாம் நிலை வளர்ச்சி உள்ளது.
இருவகை
1. ஒருவித்திலை தாவரம் (மோனோகாட்டிலிடனே)
2. இருவித்திலை தாவரம் (டைகாட்டிலிடனே)
ஒரு வித்திலை தாவரம்
- சல்லி வேர்த்தொகுப்பு காணப்படும்.
- முடிய வாஸ்குலார் கற்றை உடையது.
- சைலம். புளோயம் இடையே கேம்பியம் திசு இல்லை.
- இலைகள் இணைப்போக்கு நரம்பமைவு உடையவை.
- இருபுறமும் ஒத்த அமைப்புடைய ஐசோபைலேட்ரஸ். ஒரு வித்திலை தாவர (எ.கா) நெல்,புல், கோதுமை, மக்காச்சோளம். இலை
2. இரு வித்திலை தாவரம் (டைகாட்டிலிடனே)
- ஆணிவேர்த் தொகுப்பு காணப்படும்.
- திறந்த வாஸ்குலார் கற்றை உடையவை.
- சைலம், புளோயம் இடையே கேம்பியத்திசு உண்டு
- இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவு உடையவை.
- இருபுறமும் ஒத்த அமைப்புடைய இருவித்திலை தாவர இலை டார்சி வென்ட்ரல்.
- இவற்றில் கருவுருதலுக்கு பின் சூற்பை கனியாகவும், சூல் விதையாகவும் மாறும். (எ.கா)மா, புளி, அவரை. CCE
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் பயன்கள்
1. காபிய அராபிக்கா(காப்பி தாவரம்)
புத்துணர்ச்சியூட்டும் தன்மையுடைய காபின் என்ற ஆல்கஹால் கிடைக்கிறது. இதன்விதை பொடியாக்கப்பட்டு காபியுடன் கலக்கப்படுகிறது.
2. ஹீலியாந்தம் ஆனுலஸ் (சூரியகாந்தி)
விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் இதய நோயாளிகளுக்கு பயன்படுகிறது.
அகாலிஃபா இண்டிகா (குப்பைமேனி )
இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றுகிறது
4. ஏகில் மார்மிலோஸ் (வில்வம்) தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதியை குணப்படுத்துகிறது.
5. சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை )
காசநோய் (ம) ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
6. பில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)
முழுத்தாவரமும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
7. அலோவெரா (சோற்றுக் கற்றாழை)
மூலநோய் மற்றும் தோலில் தோன்றும் அழற்சியை குணப்படுத்தும்.
ஜாட்ரோபாட்காட்டு ஆமணக்கு) விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் Blo Diesel தயாரிக்க பயன்படுகிறது.
ஹீலியா பிரேசிலியன்ஸிஸ் (இரப்பர் தாவரம்)
லேட்டெக்ஸ் என்ற பால் போன்ற திரவத்திலிருந்து இரப்பர் பெறப்படுகிறது.
10. அல்லியம் சட்டைவம் (பூண்டு ) ஆஸ்துமா, இருமல், மலச்சிக்கலை குணப்படுத்த பயன்படுகிறது
11. காக்கஸ் நியூஸிபோரா (தென்னை) சுல்ப் விருட்சம் எனப்படுகிறது.
இதன் எண்டோஸ்போரிலிருந்து தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
12 நிக்கோட்டியானா பொபாக்கம் (புகையிலை)
இதன் இலையிலிருந்து நிக்கோட்டின் பெறப்படுகிறது.
- அல்லியம் சீபம் (வெங்காயம்)
இதிலிருந்து அல்லிசின் என்ற ஆல்கலாய்டு பெறப்படுகிறது.
- அட்ரோப்பா பெல்லடோனா (வேலமரம்) இதிலிருந்து அட்ரோபின் என்ற ஆல்கலாய்டு பெறப்படுகிறது.
- பறவைகளின் சொர்க்க மலர் எனப்படுவது – ஸ்டெரிலிட்சியா ரெஜினே.
- பைரித்ரின் என்ற பூச்சி மருந்து தயாரிக்க பயன்படுவது – கிரைசாந்திமம்.
ஹெர்பேரியம் (உலர் தாவர தொகுப்பு)
- தாவரங்களைச் சேகரித்து, உலர்த்தி, அழுத்தி ஒரு அட்டையின் மீது ஒட்டி, ஏற்றுக்கொள்ளப்பட்ட எதாவது ஒரு வகைபாட்டின்படி வரிசைப்படுத்தும் முறை ஹெர்பேரியம் எனப்படும்.
- இந்திய தாவரவியல் சுற்று ஆய்வு நிறுவன ஹெர்பேரியம் -கோவை
- ரெப்பிநெட் ஹெர்பேரியம் திருச்சி(TN)
- இந்திய தாவரவியல் தோட்ட ஹெர்பேரியம் – கொல்கத்தா
- அரசு தாவரவியல் தோட்ட ஹெர்பேரியம் – கீயூ லண்டன் (இங்கிலாந்து)
- உலகிலேயே மிகப் பெரிய தாவரவியல் தோட்டம் இங்கிலாந்து நாட்டில் கியூ
என்னுமிடத்தில் அமைந்துள்ள அரச (அ) ராயல் தாவரவியல் தோட்டமாகும்.
இது 1760 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1841 -ல் திறக்கப்பட்டது.
- 2009 ஆம் ஆண்டில் கியூ ஹெர்பேரியம் மூலம் உலகின் மிகச் சிறிய நீர் அல்லி நிம்பேயா தெர்மாரம் (Nymphaea thermarum) அழியும் நிலையில் இருந்து விதை வளர்ப்பு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
அகாலிஃபா இன்டிகா(குப்பைமேனி) – யூஃபோர்பியேசி குடும்பம்
- இதன் இலையை அரைத்துப் பெறப்படும் பசை. தோலில் உள்ள தீக்காயத்திற்கு மருந்தாகும்.
- இந்த இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும். ES
ஏகில் மார்மிலோஸ் (வில்வம்) – ரூட்டேசி குடும்பம்
- இதன் காயானது செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.
- இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை) -சொலனேசி குடும்பம்
- இதன் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
- இது காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)- யூஃபோர்பியேசி குடும்பம்
- இதன் தாவர உடலம் முழுவதும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- இது கல்லிரலுக்கு வலிமையைக் கொடுத்து, கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அலோ வெரா (சோற்றுக் கற்றாழை) – லில்லியேசி குடும்பம்
- இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோல் பகுதியில் தோன்றும் அழற்சியைக் குணப்படுத்துகின்றன.
- இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகும்.