- உயிரினங்கள் ஊட்டப்பொருட்களைத் தங்கள் உடலுக்குள் ஏற்றுக் கொள்வது உணவூட்டம் எனப்படும்.
- உணவு எடுத்துக் கொள்ளும் முறையில் உயிரினங்கள் வேறுபடுகின்றன.
தாவரங்களின் உணவூட்டம் இரண்டு வகைப்படும்.
1. தற்சார்பு ஊட்டமுறை
பிறசார்பு ஊட்டமுறை
1. தற்சார்பு ஊட்டமுறை:
- தாவரங்கள் தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரிக்கிறது.
- தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் தாவரங்கள் தற்சார்பு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.
ஒளித்தற்சார்பு உயிரிகள்
- அனைத்துப் பசுந்தாவரங்கள் ஒளிச்சார்பு உயிரிகள் ஆகும்.
- இவ்வுயிரிகள் உணவு தயாரிப்பதற்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
(எ.கா) அனைத்து பசுந்தாவரங்கள், சில பசும் கந்தக பாக்கரியா ஊதா கந்தக பாக்டீரியா.
வேதித்தற்சார்பு உயிரிகள்:
- கரிம கூட்டுப் பொருட்களை தயாரிப்பதற்காக வேதி ஆற்றவைப் பயன்படுத்தும் உயிரிகள் வேதிதற்சார்பு உயிரிகள் எனப்படும்.
+ அம்மோனியாவை ஆக்சிஜனேற்றம் செய்து நைட்ரைட்டாக மாற்றுகிறது (எ.கா) நைட்ரோசோமோனாஸ்.
- H2O-ஐ ஆக்சிகரணம் செய்து சல்ஃபர் மற்றும் நீர் உருவாகிறது. (எ.கா) பெக்கிய டோவா
வேதிச்சேர்க்கை பிற ஊட்ட உயிரிகள்:
- வேதிச்சேர்க்கை பிற ஊட்ட உயிரிகளுக்கு எடுத்துக்காட்டுகள் பூஞ்சைகள், பெரும்பாலான பாக்டீரியங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்கள்.
- தற்சார்பு ஊட்டத் தாவரங்களில் தொற்று தாவரங்கள் சற்று வித்தியாசமானவை.
தொற்றுத் தாவரங்கள் ஒட்டுண்ணியாக இருப்பதில்லை.
இவை ஆதார தாவரத்தை வாழிடமாக மட்டுமே பயன்படுத்துகின்றன.
- இருவகையான வேர்களை கொண்டுள்ளன.
அவை
1. ஆகாய வேர்கள்
2. பற்றுவேர்கள்.
- பற்றுவேர்கள் தொற்றுத்தாவரங்கள் பற்றிக்கொள்வதற்கு பயன்படுகிறது.
- ஆகாய வேர்களில் காணப்படும் வெலமன் என்ற பஞ்சு போன்ற திசு காற்றிலுள்ள ஈரத்தையும், மழை நீரையும் உறிஞ்சுகின்றன.
(எ.கா) மாண்டா.
1. பிறசார்பு ஊட்டமுறை:
- சில உயிரினங்களால் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாங்களே தயாரிக்க முடிவதில்லை.
இவை தங்கள் உணவுக்காக மற்ற உயிரினங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துள்ளன.
- பிறச்சார்பு ஊட்ட முறை இரு வகைப்படும்.
சாறுண்ணிவகை ஊட்டமுறை
b. ஒட்டுண்ணிவகை ஊட்டமுறை
சாறுண்ணி (மட்குண்ணி):
- இறந்த அல்லது உயிரற்ற கரிமக் கூட்டுப் பொருள்களிலிருந்து உணவைப் பெறும் தாவரங்கள் சாறுண்ணித் தாவரங்கள் எனப்படும்.
உதாரணம்:
பூஞ்சை -மியூக்கர்,
பாக்டீரியா பேசில்லஸ் சப்டிலிஸ்,
ஆஞ்சியோஸ்பெர்ம் – மானோட்ரோபா
b ஒட்டுண்ணி வகை ஊட்டமுறை:
- ஓர் உயிரினம் தனக்குத் தேவையான உணவை மற்ற உயிரியின் (ஓம்புயிரி) உடலிருந்து பெற்றுக் கொள்கிறது.
இத்தகைய தாவரங்கள் ஒட்டுண்ணித் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்:
விஸ்கம், கஸ்க்யூட்டா
ஹாஸ்டோரியாக்கள்.
- ஒட்டுண்ணிகள் ஓம்புயிரியைத் துளைத்து உணவு நீர் கனிமங்கள் உறிஞ்சுவதற்குச் சில சிறப்பான அமைப்புகளை பெற்றுள்ளன.
இந்த அமைப்புகளுக்கு “ஹாஸ்டோரியாக்கள்” என்பர். (எ.கா) பாக்மரியா -சாந்தோமோனாஸ் சிட்ரி.
பூஞ்சை – செர்க்கோஸ் போரா வெர்சனேட்டா
ஆஞ்சியோஸ் பெர்ம் -கஸ்குட்டா, வீனஸ் ஃபிளைட்ராப்
- ஒட்டுண்ணி ஆஞ்சியோஸ்பெர்ம்கள் இருவகைப்படும். அவை முழு ஒட்டுண்ணி (ம) பகுதி ஒட்டுண்ணிகள் ஆகும்
முழு ஒட்டுண்ணிகள்.
- தாவரங்கள் உணவு, நீர், கனிம உப்புகள் ஆகியவற்றுக்காக ஓம்புபிரித்தாவரங்களை முழுமையாக சார்ந்துள்ளன. (எ.கா) கஸ்குட்டா
கஸ்குட்டாவின் வேறுபெயர் – அம்மையர் கூந்தல், சடதாரி, தங்கக்கொடி
பகுதி நேர ஒட்டுண்ணிகள்:
- சில தாவரங்கள் ஓம்புயிரி தாவரத்திலிருந்து நீரையும், கனிம உப்புகளையும் மட்டும் உறிஞ்சுகின்றன.
- இவை பசும் இலைகளை கொண்டிருப்பதால் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.(எ.கா) விஸ்கம்.
கூட்டுயிரி உணவூட்டமுறை:
- இவ்வகை ஊட்டமுறையில் இரண்டு வேறுபட்ட உயிரினங்கள் சேர்ந்து வாழ்கின்றன.
- இது ஒன்றாக சேர்ந்து வாழும் போது, இது ஊட்டப்பொருட்களைப் பரிமாறிக் கொள்கின்ற.
- மேலும் இரண்டும் பரஸ்பரமாகப் பயனடைகின்றன.
(எ.கா) லைக்கான், மைக்கோரைசா, ரைசோபியம், சயோனோ பாக்டீரியா மற்றும் பவள வேர்கள்.
பூச்சியுண்ணும் தாவரம்:

- நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் இவ்வகை தாவரங்கள் நைட்ரஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பூச்சிகளின் உடலில் இருந்து நைட்ரஜன் சத்துக்களை பெறுகின்றன.
( கா) நெப்பந்தஸ் Picher plant யுட்ரிகுலேரியா Bladder wort ட்ரர Sundew plant.
தாவரங்களில் அசைவுகள்
- தாவரங்கள் ஒரே இடத்தில் அவற்றின் வேர்கள் மூலம் நிலத்தில் ஊன்றிக் காணப்படுகின்றன.
நகரும் திறன் இவற்றுக்கு இல்லை
- ஒளி, நீர், வேதிப்பொருள்கள், தொடு உணர்வு போன்ற சில புறத்தூண்டல்களினால் தாவரங்களின் குறிப்பிட்ட பாகங்கள் அல்லது உறுப்புகளில் அசைவுகள் ஏற்படும்.
தாவரங்களின் சார்பசைவு
தூண்டலுக்கேற்ப தாவரத்தின் ஒரு பகுதியோ அல்லது முழுத் தாவரமோ ஒரு திசையை நோக்கி தன் இயக்கத்தைச் செலுத்துவது சார்பசைவு ஆகும்.
சார்பசைவின் வகைகள்
- தூண்டல்களின் தன்மையைப் பொறுத்து சார்பசைவு பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
ஒளிசார்பசைவு
- ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரப் பாகத்தில் ஏற்படும் அசைவு ஒளிச்சார்பசைவு. S
(எ.கா) தண்டு – எப்போதும் சூரிய ஒளியை நோக்கி வளரும்.’
புவிச்சார்பசைவு
- புவி ஈர்ப்புத் திசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவு புவிச்சார்பசைவு. (எ.கா) தாவர வேர் பகுதி
நீர்ச்சார்பசைவு
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர உறுப்பு வளைதல் நீர்ச்சார்பசைவு எனப்படும். (எ.கா) தாவரத்தின் வேர்கள் எப்போதும் நீரை நோக்கிச் செல்கின்றன
தொடு சார்பசைவு
தொடுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல், (எ.கா) கொடி பற்றி படர்தல்.
வேதிசார்பசைவு
- வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்றார்ப்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிச்சார்பசைவு எனப்படும்.
(எ.கா) ஒரு சர்க்கரைப் பொருளினால் தூண்டப்பட்டு மகரந்தக்குழல் சூழ் பகுதியை
நோக்கி வளர்தல்
நேர்சார்பசைவு
தாவரத்தின் வளர்ச்சி (அ) அசைவு தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது நேர்சார்பசைவு
எதிர்சார்பசைவு
- தாவரத்தின் வளர்ச்சி அல்லது அசைவு தூண்டலின் திசைக்கு எதிராக இருந்தால் அது எதிர்சார்பசைவு ஆகும்.
குறிப்புகள்:
- தாவரத் தண்டானது எப்பொழுதும் சூரிய ஒளியை நோக்கி வளர்வதால், நேர் ஒளிச் சார்பசைவு உடையது என்றும் வேர்கள் எப்பொழுதும் சூரிய ஒளிக்கு எதிர் திசையில் வளர்வதால் வேரானது எதிர் ஒளிச் சார்பசைவு உடையது என்றும் கருதப்படுகிறது.
- பொதுவாக தண்டானது நேர் ஒளி சார்பசைவாகவும், எதிர் புவி சார்பசையாகவும். வேரானது எதிர் ஒளி சார்பசைவாகவும்,நேர் புவி சார்பசைவாகவும் உள்ளது.
- சில உவர்தாவரங்கள் எதிர் புவிச்சார்பசைவு உடையவை. அவை 180 கோணத்தில் செங்குத்தான வேர்களைக் கொண்டவை.
- ரைசோபோரா, சுவாச வேர்கள் திசை சாரா தூண்டல் அசைவு
- திசையை நோக்கி நடைபெறாத தாவர பகுதியின் அசைவுகளுக்கு திசை சாரா தூண்டல் அசைவு என்று பெயர்.
- தூண்டல்களின் தன்மைக்கேற்ப திசை சாரா தூண்டல் அசைவுகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தபடுகின்றன.
அவை
ஒளியுறு வளைதல்.
நடுக்கமுறு வளைதல்
ஒளியுறு வளைதல்:
- தாவரத்தின் ஒரு பகுதி ஒளிக்கேற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது ஒளியுறு வளைதல் எனப்படும்.
- டாராக்சம் அஃபிசினேல் (டான்டிலியான்) என்ற தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும்,மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும்.
- ஐபோமியா ஆல்பா (நிலவு மலர்) என்ற தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடிய நிலையிலும் காணப்படும்.
நடுக்கமுறு வளைதல்:
- ஒலி ஒருவகையான ஆற்றல் ஆகும்.
வெப்பமுறு வளைதல்
- தாவரத்தின் ஒரு பகுதி வெப்பநிலைக்கேற்ப தன் துலங்கலை வெளிப்படுத்துவது ஒளியுறு வளைதல் எனப்படும். எ.கா: டூலிப் மலர்கள்
தாவரங்களில் கடத்தும் முறைகள்
- செல்களின் உள்ளே மற்றும் வெளியே பொருட்கள் கடத்தப்படுவது இரண்டு முக்கிய முறைகளில் நடைபெறுகின்றன. அவை பரவல், மற்றும் ஆற்றல் சார்ந்த கடத்துதல்
(செயல்மிகு கடத்துதல்)
பரவல்
- திட, திரவ, வாயுப் மூலகூறுகள் செறிவு அதிகமுள்ள பகுதியிலிருந்து செறிவு குறைவான பகுதிக்கு எவ்வித ஆற்றலின் உதவியின்றி இடம் பெயரும் நிகழ்ச்சியே பரவல் எனப்படும். இது ஒர் ஆற்றல் சாரா கடத்தல் நிகழ்ச்சியாகும்.
செயல்மிகு கடத்துதல் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்)
- ஆற்றல் சார்ந்த கடத்துதலில் ஆற்றலைப் பயன்படுத்தி மூலக்கூறுகள் செறிவு வாட்ட சரிவிற்கு எதிராக கடத்தப்படுகின்றன.
- இவ்வகை புரதங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி செல் சவ்வின் வழியாக மூலக்கூறுகளை செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு கடத்துகின்றன (phl movement)
சவ்வூடு பரவல் (ஆஸ்மாஸிஸ்)
- சவ்வூடு பரவல் என்பது திரவங்களில் காணப்படும் ஒரு சிறப்பான பரவுதல் ஆகும்.
- ஒரு அரை கடத்து சவ்வின் வழியாக கரைப்பான் அல்லது நீர் மூலக்கூறுகள் அதன் செறிவு அதிகமாக உள்ள பகுதியிலிருந்து செறிவு குறைந்த பகுதிக்கு கடத்தப்படுவதாகும். இந்நிகழ்ச்சியானது செறிவு சமமாகும் வரை நடைபெறும்.
- சவ்வூடு பரவல் நீர் அல்லது கரைப்பான் மூலக்கூறின் ஆற்றல் சாரா கடத்தல் நிகழ்ச்சியாகும்.
பிளாஸ்மா சிதைவு (உயிர்மச் சுருக்கம் – Plasmolysis)
- ஒரு தாவரச் செல்லை ஹைபர்டானிக் கரைசலில் (உயர் உர்வு கரைசல்) வைக்கும்போது செல்லிலிருந்து நீர் வெளியேறுவதால் புரோட்டோபிளாசம் செல் சுவரை விட்டு விலகி சுருங்கி விடுகிறது. இதற்கு பிளாஸ்மா சிதைவு என்று பெயர்.
உள்ளீர்த்தல்
- தாவரப் பொருட்கள் நீரில் வைக்கப்படும்போது நீரினை உறிஞ்சி உப்புகின்ற நிகழ்ச்சி உள்ளீர்த்தல் எனப்படும்.
எடுத்துக்காட்டாக உலர் விதைகள் மற்றும் உலர் திராட்சை நீரை உறிஞ்சி உப்பிவிடும். ஆனால் நீரில் கரையாது.
உள்ளீர்த்தல் என்ற நிகழ்ச்சி முளைக்கும் விதைகளில் நடைபெறவில்லை என்றால் இளம் நாற்றுக்கள் விதைகளிலிருந்து வெளிவர இயலாது.
உறிஞ்சப்பட்ட நீர் வேரில் செல்லும் பாதை
- நீரானது வேர்த்தாவியினுள் சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூலியில் அதிகமாக உள்ளது.
ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது.
வேர் செல்களில் நீர் செல்லும் வழிமுறைகள்
- வேர்த்தூவியின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது வேரின் உட்புற அடுக்கிற்கு இரண்டு தனித்தனி வழிகளில் செல்கின்றன. அவை
1. அப்போபிளாஸ்ட்வழி
2. சிம்பிளாஸ்ட் வழி
1. அப்போபிளாஸ்ட் வழி
- அப்போபிளாஸ்ட் வழியில் நீரானது முழுக்க முழுக்க செல்சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியாகச் செல்கிறது.
இவ்வகை கடத்துதலில் நீரானது எவ்வித சவ்வினையும் கடக்காமல் செல்கிறது. 15ந்த வகை கடத்துதல் செறிவின் அடிப்படையில் அமைந்துள்ளது.
2. சிம்பிளாஸ்ட் வழி
- இம்முறையில் நீரானது செல்லின் வழியாக செல்கிறது.
அதாவது செல்லின் பிளாஸ்மா சவ்வில் நுழைந்து சைட்டோபிளாசத்தினை கடந்து பிளாஸ்மொடெஸ்மேட்டா வழியாக அருகிலுள் செல்களுக்கு செல்கிறது.
செல்சவ்வின் வழியாக நீர் செல்வதால் இவ்வகை கடத்துதல் மெதுவாக நடைபெறுகிறது. சிம்பிளாஸ்ட் வகை கடத்துதல் செறிவு சரிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன
வேர் அழுத்தம்
- மண்ணிலுள்ள கனிமங்கள் வேரில் கடத்தும் திசுக்களுக்கு ஆற்றல்சார் கடத்தலின் மூலம் செல்லும் போது அதனுடன் சேர்ந்து நீரும் கடத்தப்படுகிறது.
- இதனால் சைவத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகிறது. இந்த அழுத்தமே வேர் அழுத்தம் எனப்படும் தள்ளப்படுகிறது. இதன் காரணமாக நீரானது தண்டில் சிறிது உயரம்
கனிம அயனிகள் கடத்தப்படுதல்
- சில தாவரங்களில் மூப்படைந்த உதிரும் நிலையிலுள்ள இலைகளில் உள்ள தனிமங்கள் இளம் இலைகளுக்கு இடம் பெயர்கின்றன. இந்நிகழ்ச்சி இலையுதிர் தாவரங்களில் நடைபெறுகிறது.
- பாஸ்பரஸ், சல்பர், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மிக விரைவாக இடம் பெயரும் தனிமங்களாகும்.
- கால்சியம் எளிதில் இடம் பெயர்வதில்லை.
- சிறிதளவு. தனிமங்கள் கொள்ளப்படுகின்றன. சைவம் மற்றும் புளோயத்தினிடையே பரிமாறிக் S
சுக்ரோஸ் இடம்பெயர்தல்
- சுக்ரோஸ் தோற்றுவாயிலிருந்து தேக்கிடத்திற்கு இடம்பெயர்வது அழுத்த மாறுபாட்டு கோட்பாட்டின்படி நடைபெறுகிறது.
- ஒளிச்சேர்க்கையின் மூலம் உருவான குளுக்கோஸ் சுக்ரோஸாக மாற்றப்படுகிறது சுக்ரோஸ் முதலில் புகோயத்தின் துணை செல்களுக்கு கடத்தப்படுகிறது. ஆற்றல்சாரி கடத்தல் மூலம் சல்லடைக் குழாயிலுள் செல்கிறது. பின்பு
சாறேற்றம் (Ascent of sap)
- வேர்களின் மூலம் உறிஞசப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள், மேல் நோக்கிய நடத்துதல் மூலம் தாவரங்களின் பிறபகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும்.
- சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன. சாறேற்றம் பின் வரும் படி நிலைகளில் நடைபெறுகிறது.
1. வேர் அழுத்தம்
- மண்ணில் உள்ள நீர் கேர்த்தூவிகளுக்கு சவ்வூடு பரவலின் காரணமாகச் செய்கிறது. வேர் அழுத்தத்தின் காரணமாக நீரானது வேரிலிருந்து மேல் நோக்கி தண்டின் அடிப்பகுதிக்குச் செல்கிறது.
2. நுண்துளை ஈர்ப்பு விசை (தந்துகிக்குழாய் விசை)
- நீர் அல்லது எந்த ஒரு திரவமும் நுண்துளைக் குழாய்களில் இயற்பியல் விசையின் காரணமாக மேவேறுகிறது. இதற்கு நுண் துளை ஈர்ப்பு விசை என்று பெயர்.
அதே போல் தண்டிலும் நீரானது குறிப்பிட்ட உயரம் வரை நுணதுளை ஈர்ப்பு விசையின் காரணமாக கடத்தப்படுகிறது.
3. நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
- கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு விசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின். காரணமாக நீரானது சைலத்தில் ஒரு தொடர்ச்சியான நீர்த்தம்பமாக உள்ளது.
- அதிகாலைப் பொழுதில் புற்களின் மேல் பனித்துளிகள் போல நீர்த்துளிகளைப் பார்த்திருப்போம்
- தாவரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நீராவிப்போக்கின் வீதம் குறையும். உறிஞ்சப்படும் நீர் தாவரத்தின் வேரில் ஒரு அழுத்தத்தை உருவாக்கும். இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. இதற்கு நீர் வடிதல் (guttation) எனப்படும். இவ்வாறு நீர் வடிதல் ஒரு சிறப்பான துளை வழியாக வெளியேறுகிறது. இத்துளை நீர்சுரப்பி அல்லது ஹைடதோடு எனப்படும்.
4. நீராவிப்போக்கின் இழுவிசை
- இலைத்துளையின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கின் காரணமாக ஒரு வெற்றிடம்
உண்டாகும். இதனால் ஒரு இழுவிசை (suction) உண்டாக்கப்படுகிறது. இந்த விசையே
- நீராவிப் போக்கின் இழுவிசை எனப்படும்.
- நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக சைலத்தினுள் உள்ள நீர்த் தம்பமானது மிக உயர்ந்த தாவரங்களிலும் மேலேறுகிறது.
ஹார்மோன்கள்
- கிளர்ச்சி” என்ற பொருள்படும் “ஹார்மன்” என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து ‘ஹார்மோன்” என்னும் சொல் உருவாகியது.
- தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் சில வேதிப்பொருட்கள் தாவரங்களில் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளைச் செய்கின்றன. இவை தாவர ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தாவர ஹார்மோன்கள்
- தாவரங்களில் குறைவான செறிவில் உற்பத்தி செய்யப்படும் கரிம மூலக்கூறுகளே தாவர ஹார்மோன்கள் ஆகும் இம்மூலக்கூறுகள் புறத்தோபுறத்தோற்றம், செயலியல் மற்றும் உயிர் வேதியியல் பதில் விளைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.
தாவர ஹார்மோன்களின் வகைகள்
- ஐந்து வகையான முக்கிய தாவர ஹார்மோன்கள் உள்ளன.
அவையாவன
1. ஆக்சின்கள்
2. சைட்டோகைனின்கள்
3. ஜிப்ரல்லின்கள்
4. அப்சிசிக் அமிலம் (ABA)
5. எத்திலின்
- இவற்றுள் ஆக்சின்கள், சைட்டோகைனின்கள் மற்றும் ஜிப்ரல்லின்கள் போன்றவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
- அதே வேளையில் அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின் போன்றவை தாவர வளர்ச்சியைத் தடை செய்கின்றன.
ஆக்சின்கள்
- தாவர ஹார்மோன்களில் முதன்முதல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆக்சின்கள் (Gk auxein = to gro
- ஆர்சின் என்ற சொல்லை கால் மற்றும் ஹாஜன் ஸ்மித் (1931) ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
- ஆக்சின்கள் வேர் மற்றும் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து அவை நீட்சிப் பகுதிக்கு நகர்கின்றன.
- சார்லஸ் டார்வின் (1880) கேனரி புல் (ஃபலாரிஸ் கமரியன்ஸிஸ்) தாவரத்தில் முளைக்குருத்து உறையானது ஒளியின் திசையை நோக்கி வளர்வதையும், வளைவதையும் கண்டறிந்தார்.
- அவர் முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து அடிப்பகுதிக்கு ஒருவிதமான ஆதிக்கப் பொருள்” கடத்தப்படுகிறது என்ற முடிவுக்கு வந்தார்.
- இந்த ஆதிக்கப்பொருள்” தான் ஆக்சின் என பின்னர் வெண்ட் என்ற அறிஞரால் அடையாளம் காணப்பட்டது.
வெண்ட் இன் ஆய்வுகள்
- ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் (1903 – 1990) என்ற டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கினார்.
- அவர் அவினா முளைக்குருத்து உறையில் வரிசைக்கிரமமான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
- இவர் தனது முதல் ஆய்வில் ஓட்ஸ் (அவினா) தாவரத்தின் முளைக்குருத்து உறையின் நுனியை நீக்கினார்.
- தன்னுடைய ஆய்வுகளில் இருந்து முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து. ஊடுருவிய வேதிப்பொருளே வளர்ச்சிக்குக் காரணம் என்று வெண்ட் முடிவு செய்தார். அந்த வேதிப்பொருளுக்கு “ஆக்சின்” என்று பெயரிட்டார். அதன் பொருள் “வளர்ச்சி” என்பது ஆகும். S
ஆக்சின்களின் வகைகள்
- இயற்கை ஆக்சின்கள் மற்றும் செயற்கை ஆக்சின்கள் என்று ஆக்சின்கள் இரண்டு வகைப்படும்.
1. இயற்கை ஆக்சின்கள்:
- தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் இயற்கை ஆக்சின்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
இன்டோல் -3- அசிட்டிக் அமிலம் (AA) பினைல் அசிடிக் அமிலம் (PAA) இண்டோல் 3 அசிடோ நைட்ரைல் (IAN)
2. செயற்கை ஆக்சின்கள்;
- ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
24 D(2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்)
இண்டோல் 3 பியூட்ரிக் அமிலம் (IBA) இண்டோல் புரோப்பியானிக் அமிலம்.
நாப்தலின் அசிடிக் அமிலம் (NAA)
2,4,5-T(24.5 – ட்ரை குளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்
சைட்டோகைனின்கள்

- தாவர செல்களில் செல் பகுப்பு அல்லது சைட்டோகைனசில் நிகழ்வை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன்களே சைட்டோகைனின்கள் (சைட்டோஸ் – செவ் கைனலிஸ் பகுப்பு) ஆகும்.
- இவை முதலில் ஹெர்ரிங் மீனின் விந்து செல்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. சியாட்டின் என்பது சியா மெய்ஸ் (மக்காச்சோளம்) பிரித்தெடுக்கப்பட்ட சைட்டோகைனின் ஆகும். தாவரத்தில் இருந்து
- சைட்டோகைனின் தேங்காயின் இளநீரில் அதிகமாகக் காணப்படுகிறது.
சைட்டோகைனின்களின் வாழ்வியல் விளைவுகள்
1. ஆக்சின்கள் இருக்கும் போது (சைட்டோகைனசிஸ்) தூண்டுகின்றன. சைட்டோகைனின்கள் செல்பகுப்பைத்
2. சைட்டோகைனின்கள் செல்களை நீட்சியடையச் செய்கின்றன.
3. திசு வளர்ப்பு முறையில் காலாபில் இருந்து புதிய உறுப்புகள் தோன்ற ஆக்சின்களும் சைட்டோகைனின்களும் தேவைப்படுகின்றன. (உருவத்தோற்றவியல்)
4. நுனி மொட்டு இருக்கும் போதே பக்கவாட்டு மொட்டின் சைட்டோகைனின்கள் ஊக்குவிக்கின்றன. வளர்ச்சியை
5. சைட்டோகைனின்களைப் தாமதப்படுத்தப் படுகிறது. பயன்படுத்தும்போது தாவரங்கள் இதற்கு ரிச்மாண்ட் வாங்கி வி ை(Richmond Lang effect) என்று பெயர். முதுமையடைவது
ஜிப்ரல்லின்கள்
- ஜிப்ரல்லின்களே அதிக அளவு காணப்படும் தாகர ஹார்மோன்களாகும்.
- குருசோவா (1926) நெல் பயிரில் “பக்கானே நோய்* அல்லது ‘கோமாளித்தன நோயை கண்டறிந்தார்.
- நெய்லின் கணுவிடைப் பகுதியின் இத்தகைய நீட்சி ஜிப்ரில்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்டது.
இதற்குக் காரணமான செயல்திறன் வாய்ந்த பொருள் ஜிப்ரல்லிக் அமிலம் என அடையாளம் காணப்பட்டது
ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகள்
- தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது, அது கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது.
(எ.கா) மக்காச்சோளம் மற்றும் பட்டாணி.
- நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும், அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (Bolting) என்று பெயர்.
- ஜிப்ரல்லின்கள் இருபாலிணைந்த தாவரங்களில் (ஓரில்லத் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன (வெள்ளரி)
ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
- விதைகளற்ற கனிகளைக் (கருவுறாக்கனிகள் கருவறுதல் நடைபெறாமலேயே கணிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆச்சின்களைவிட ஜிப்ரல்லின்கள் திறன் மிக்கவை (எ.கா) தக்காளி
அப்சிசிக் அமிலம்
- அப்சிசிக் அமிலம் (ABA) உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஆகும்.
- இது பல்வேறு வன இறுக்க நிலைகளுக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
- எனவே இது ‘பிறுக்கநிலை ஹார்மோன்’ என அழைக்கப்படுகிறது.
- தாவரங்களின் பகங்கணிகங்களில் இந்த ஹார்மோன் காணப்படுகிறது.
வாழ்வியல் விளைவுகள்
1.ABA உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவை கிளையிலிருந்து தனித்து உதிர்ந்து விடுவது) ஊக்குவிக்கிறது.
2 நீர் றுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் ABA இலைத் துளையை மூடச் செய்கிறது.
3. ABA இலைகளில் பச்சையத்தை இழக்கச் செய்து மூப்படைவதை ஊக்குவிக்கிறது.
4 குளிர்காலங்களின் போது பிரச் போன்ற மரங்களில், ABA மொட்டு உறக்கத்தைத் தூண்டுகிறது.
5. தக்காளி தாவரத்தில் ABA பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியைத் தடைசெய்யும் வீரியமிக்க வளர்ச்சி அடக்கி ஆகும்.
எத்திலின்

- எத்திலின் ஒரு வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன்
- இது ஒரு வளர்ச்சி அடக்கி ஆகும்.
- இது பொதுவாக கனிகள் முதிர்ச்சியடைவதிலும் பழுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
- ஆப்பிள், வாழை, தர்பூசணி, போன்ற தாவரங்களில் கனிகள் பழுக்கும் போது அதிக அளவு எத்திலின் உற்பத்தியாகிறது. S
எத்திலினின் வாழ்வியல் விளைவுகள்
1. எத்திலின் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது. (கா) தக்காளி, ஆப்பிள், மா, வாழை,
2. எத்திலின் இருவிதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடைசெய்கிறது.
3. எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது.
4. எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதைத் தூண்டுகிறது. இதனால் இவை முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்து விடுகின்றன.
5. எத்திலின் மொட்டுகள், விதைகளின் உறக்கத்தை நீக்குகிறது.
ஆக்சின் எதிர்பொருள் (Anti axin)
- ஆக்சின் எதிர்பொருட்களைத் தாவரத்தின் மீது தெளிக்கும்போது ஆக்சின் விளைவுகளைத் தடைசெய்கிறது. எடுத்துக்காட்டு பென்சாயிக் அமிலம் (TIBA) மற்றும் நாய்நலமைன். 2. 4. 5 ட்ரை அயோடின்
ஏஜென்ட் ஆரஞ்சு (Agent Orange)
- வியட்நாம் போரில், வனப்பகுதியில் இலைகளை நீக்க 2, 4 0 மற்றும் 2, 4, 5 – T னோக்ஸி களைக்கொல்லிகள் கலந்த கலவை USA வால் பயன்படுத்தப்பட்டது இதற்கு ஏஜென்ட் ஆரஞ்சு எனப் பெயரிடப்பட்டுள்ளது.